லேபிள்கள்

திங்கள், 16 மார்ச், 2026

நின்று கொண்டு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள்.

நம்முடைய உடல் அமைப்புகளின் இயக்கம் சீராக இருப்பதற்கு தண்ணீர் மிக அவசியம்.

நீரை குடிக்காமல் எந்தவொரு மனிதனாலும் உயிர் வாழ முடியாது.

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 முதல் 10 டம்ளர் வரை தண்ணீர் குடிக்க வேண்டியது மிக அவசியம். அதாவது குறைந்தபட்சம் ஒன்றரை முதல் இரண்டு லிட்டர் வரை குடிக்க வேண்டியது கட்டாயம்.

நமது உடலில் உள்ள எல்லா அமைப்புகளும் தண்ணீரின் செயல்பாட்டைப் பொறுத்தே உள்ளன.

இருப்பினும் தண்ணீரை நின்று கொண்டு குடிக்க கூடாது, அப்படி தொடர்ச்சியாக குடித்தால் உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் என்று கூறப்படுகின்றது.

அந்தவகையில் தற்போது அவற்றை தெரிந்து கொள்வோம்.

தண்ணீரை நின்று கொண்டு குடித்தால் அது வயிற்று உட்பகுதிக்குள் சென்று தெளித்து சிதறுகிறது. இதனால், நம் வயிறும், இரைப்பையும் கடுமையாக பாதிக்கும்.

நரம்பு பிரச்னை, வயிறு செரிமான பிரச்சனை போன்றவைகளும் தண்ணீரை நின்று கொண்டு குடித்தால் வர அதிக வாய்ப்பிருக்கிறது.

நின்று கொண்டு தண்ணீர் அருந்தினால், உடல் திரவங்கள் பாதிக்கப்பட்டு நமது கால் மூட்டு பகுதியை பாதித்து வலியை ஏற்படுத்தும்.

நெஞ்செரிச்சல், அல்சர் போன்ற நோய்களுக்கும் இது வழி வகுக்குமாம்.



--

கருத்துகள் இல்லை:

நின்று கொண்டு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள்.

நம்முடைய உடல் அமைப்புகளின் இயக்கம் சீராக இருப்பதற்கு தண்ணீர் மிக அவசியம். நீரை குடிக்காமல் எந்தவொரு மனிதனாலும் உயிர் வாழ முடியாது. ...

Popular Posts