லேபிள்கள்

ஞாயிறு, 29 மே, 2011

இரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும்


இரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும்

டாக்டர் A. ஷேக் அலாவுதீன் 
MD., (Chin.Med), A.T.C.M (CHINA)
Zhejiang University, Hangzhou, (China) 
(Chinese Traditional Medicine).
 இதயம்: இதற்காக மனிதன் எதையும் இழக்க தயாராகின்றான். அதனால் தானே என்னவோ இன்று பார்க்கும் இடமெல்லாம் ஹார்ட் ஸ்பெசலிஸ்டுகளின் போர்டுகள் தென்படுகின்றன. எந்த பத்திரிக்கையைப் பார்த்தாலும் என் மகனுக்கு ஹார்ட் ஆபரேசன் செய்ய 5 லட்சம் தேவை, உதவி செய்யுங்கள். என் கணவருக்கு ஹார்ட் ஆபரேசன் செய்ய வேண்டும் உதவி செய்யுங்கள் என்று விளம்பரங்கள் வருகின்றன. வரும் விளம்பரங்கள் உண்மை தான் என்பதில் எமக்கு சந்தேகம் இல்லை. அவர்களுக்கு மருத்துவம் பார்த்த டாக்டர்கள் ஆபரேசன் தான் தீர்வு என்று சொல்கிறார்களே அது தான் உண்மையா?இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.
ஹார்ட் ஸ்பெசலிஸ்ட் என்று சொல்லிக் கொள்ள தகுதி உள்ளவன் இறைவன் மட்டுமே. 1942-ல் இந்திய மருத்துவ சட்டம் ஸ்பெசலிஸ்ட் என்று யாரும் போர்டு போட கூடாது என்று தடை விதித்தது. இச் சட்டம் இயற்றிய பிறகும் இவர்கள் ஸ்பெசலிஸ்டுகள் என்று போர்டு போட்டுக் கொண்டு மக்களை ஏமாற்றுவது மன்னிக்க முடியாத குற்றம். அது மட்டுமல்ல அவர்களுக்கு ஆபரேசன் தான் தீர்வு என்று தவறாக வழி காட்டி அவர்களின் பொருளாதாரத்தை நாசம் செய்து குடும்பத்தை நடுத்தெருவிற்கு கொண்டுவருவதை மனசாட்சி உள்ள எந்த மனிதனும் ஏற்றுக் கொள்ள மாட்டான். ஏழ்மை நிலையில் உள்ள பாமரனிடம் கூட இரக்கமில்லாமல் 5 லட்சம் கொண்டு வா, 10 லட்சம் கொண்டு வா இல்லை என்றால் உன் மகன் இறந்து விடுவான் என்ற அச்சத்தை உண்டாக்கி அவன் உடமைகளை நாசம் செய்து அவனை கடன்காரனாகவும் பிச்சைக்காரனாகவும் மாற்றி ஆபரேசன் வெற்றியடைய வேண்டும், நலம் பெற வேண்டும் என்று வந்தவனை நடைபினமாக மாற்றி வாழ்நாளெல்லாம் மருந்து மாத்திரைகளோடு வாழ்வை நாசம் செய்யும் கொடுமை இந்த நவீன மருத்துவத்தில் தான் உள்ளது.
நம் வீட்டிலோ, நம் தெருவிலோ அல்லது நம் ஊர்களிலோ பலரை இது போல் சந்தித்துக் கொண்டு தான் இருக்கின்றோம். ஆபரேசன் தான் தீர்வு என்ற டாக்டர்களின் தவறான முடிவை கேட்டு பல லட்சம் பணம் திறட்ட முடியாமல் கதி கலங்கி நிற்கும் எத்தனையோ பேரை நாம் தினமும் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம். வாழ வேண்டிய வயதில் இதயத்தைக் காரணம் காட்டி கணவன், மனைவி இருவரையும் சேரவிடாததால் பல குடும்பங்கள் மவுனமாக அழுவது நம் காதுகளுக்கு கேட்காமலில்லை. இவைகளை பார்க்கும் போதும் கேட்கும் போதும் நம் மணம் தவிக்காமலில்லை. வேறு வழி தெறியாத காரணத்தால் நவீன மருத்துவத்தின் அவலங்களை சகித்துக் கொண்டு வாய் பொத்தி மவுனமாய் நிற்கின்றோம். இனி இந்த நிலை தொடர கூடாது நம் மக்கள் தெளிவடைந்து மாற்று வழிமுறைகளை தெரிந்துக் கொண்டு தன்னை காத்துக் கொள்ள வேண்டும் என்று உங்களைப் போன்று நினைக்கும் உங்களில் ஒருவனுடைய முயற்சியே இந்த தொடர். இதய நோயைக் காரணம் காட்டி மோசடி செய்தவர்களின் முகத் திரையை கிழித்து இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையூட்டி அவர்களுடைய வாழ்வை வசந்த மாக்கும் முயற்சியே இந்த இதயமே………இதயமே, இன்ஷா அல்லாஹ்.
இதயமே இதயமே
இதயம், இதன் அழகிய துடிப்புகளே உயிருக்கு அறிமுகம். துடிப்புகளின் ஏற்ற இறக்கமே நோய்களின் விளக்கம். துடிப்புகளின் மவுனம், அதுதான் மரணம். இறைவனின் படைப்புகளில், ஓர் அற்புத தொழிற்சாலை. இதை உச்சரிக்காத உயிரும் இல்லை, பாடாத கவிஞனும் இல்லை.
ஹார்ட் அட்டாக், இரத்த அழுத்தம், நெஞ்சு வலி மற்றும் படபடப்பு இன்னும் இது போன்ற வியாதிகளின் கதாநாயகனே இந்த இதயம் தான். இதில் ஹார்ட் அட்டாக் பற்றி விரிவாக ஆராய்வோம்.
இதயம் அது தானாக இயங்குவதில்லை, உடல் உறுப்புகள் பாதிப்பு அடையும் போது அவை தன் நிலையை மூளைக்கு தெரிவிக்க மூளை இதயத்திற்கு உத்தரவிடுகின்றது. இதயம் தன் இரத்த ஓட்டம் மூலம் பாதிக்கப்பட்ட உறுப்பிற்கு சக்தி அளித்து அதன் சக்தியை சமநிலைப்படுத்தி உறுப்பை சீராக இயங்க வைக்கின்றது. ஆனால் நவீன மருத்துவம் இதயம் தானாக இயங்குவதாக நினைத்து அதன் வேகத்தைக் குறைக்க மருந்து மாத்திரைகள் கொடுத்து இதயத்தின் இயக்கத்தை கெடுத்துவிடுகின்றனர்.
உடல் உறுப்புகளில் முக்கியமானவை இதயம், சிறுகுடல், நுரையீரல், பெருங்குடல், வயிறு, மண்ணீரல், சிறுநீரகம், சிறுநீர் பை, பித்தப் பை, கல்லீரல் போன்றவை. இவைகள் மிக முக்கியமானவை. மற்றவைகள் எல்லாம் இந்த உறுப்புகளைச் சார்ந்தவையே. இனி இந்த உறுப்புகள் எவ்வாறு இதயத்தோடு சம்பந்தப்படுகின்றது என்பதைப் பார்ப்போம்.
நுரையீரல்:
நுரையீரல் பாதிப்படைந்து, பாதிப்படைந்த நுரையீரல் அனுப்பும் தகவல் இதயத்திற்கு கிடைக்காமல் போனாலோ, தகவல் கிடைத்து இரத்த ஓட்டத்தை அனுப்பும் போது தடங்கல் ஏற்பட்டாலோ ஏற்படும் அட்டாக் நுரையீரல் சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக்காகும். இந்த ஹார்ட் அட்டாக் அதிகமாக அதிகாலையிலேயே ஏற்படும். அதுவும் அதிகாலை 3 மணியிலிருந்து 5 மணிக்குள் ஏற்படும். அதிகாலையில் ஏற்படும் ஹார்ட் அட்டாக் எல்லாம் நுரையீரல் சம்பந்தப்பட்டவைகளாகவே இருக்கும். அதிகாலையில் ஏற்படும் இந்த ஹார்ட் அட்டாக் சில நேரங்களில் வாய் விட்டு சிரிக்கும் போதும், வேகமாக ஓடும் போதும் ஏற்படும். வாய் விட்டு சிரிக்கும் போதும் வேகமாக ஓடும் போதும் நுரையீரலுக்கு அதிகமாக சக்தி தேவைப்படுகின்றது. அதிக சக்தியை இதயத்தால் ஈடு செய்ய முடியாத போது இது போன்ற ஹார்ட் அட்டாக் ஏற்படுகின்றது. நுரையீரல் இதயத்திற்கு மிகவும் ஒத்துழைப்பு கொடுத்து அதன் இயக்கத்திற்கு பெரிதும் உதவும் உறுப்பாகும். நுரையீரல் பாதிப்பு பலவிதத்தில் இதயத்தை பாதிக்கவே செய்யும்.
சிகரட் புகைப்பவர்களே ஜாக்கிரதை, சிகரட் புகைப்பவர்கள் நுரையீரலை பாதிக்கச் செய்து, இதயத்தைக் கெடுத்து தன்னைத் தானே அழித்தும் கொள்கின்றார்கள். நுரையீரலும் பெருங்குடலும் ஜோடி உறுப்புகளாகும். அதாவது காற்று சம்பந்தப்பட்டவை. இது போன்று வரும் ஹார்ட் அட்டாக்குகளை ஒரு திறமையான அக்கு பஞ்சர் மருத்துவர் எளிதாக சரியாக்கிவிட முடியும். அதுவும் சில நிமிடங்களில். என்ன ஆச்சரியமாக இருக்கின்றதா. இதயமும் நுரையீரலும் சந்திக்கும் இடத்தை தேர்வு செய்து சிகிச்சையளிக்கும் போது நோயாளி சில நிமிடங்களில் பூரண நிவாரணம் பெறுவார்.
சிறுநீரகம் சிறுநீர் பை:
நீர் என்னும் மூலப் பொருளோடு சம்பந்தப்பட்ட சிறுநீரகம் பாதிபடைந்து பாதிபடைந்த சிறுநீரகத்தின் தகவலைப் பெற்று சக்தியை சரிப்படுத்த இதயத்தால் இரத்த ஓட்டத்தை அனுப்ப முடியாத போது ஏற்படும் ஹார்ட் அட்டாக் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக்காகும். இந்த அட்டாக் சிறுநீர்பை சம்பந்தப்பட்டிருந்தால் மாலை 3 மணியிலிருந்து 5 மணிக்குள்ளும், சிறுநீரகம் சம்பந்தப்பட்டிருந்தால் மாலை 5 மணியிலிருந்து 7 மணிக்குள் ஏற்படும். குறிப்பாக மாலை 5 மணிக்கு முன்பும் பின்பும் ஏற்படும். இந்த நேரம் தான் அணைவருக்கும் சிறுநீர் போக தூண்டுதல் அதிகம் உள்ள நேரம். இதயமும் சிறுநீரக சக்தி நாளங்களும் சந்திக்கும் இடத்தை தேர்வு செய்து சிகிச்சையளிக்கும் போது இந்த அட்டாக்கிலிருந்து நோயாளியை உடன் காப்பாற்றிவிடலாம்.
சிறுநீரகத்தில் பிரச்சினை உண்டாகும் போதும் சிறுநீரகம் செயல்பட தவறும் போதும் (KIDNEY FAILURE) திழுரென்று இந்த அட்டாக் ஏற்படலாம். அதிகமான மருந்துகளையும், மாத்கிரைகளையும், டானிக் பாட்டில்களையும் கண்ணை மூடி பயன்படுத்தினால் நிச்சயம் சிறுநீரகம் பாதிப்படையும். விரைவாக உணவை உட்கொண்டாலும் சிறுநீரகம் பாதிப்படையும். அக்கு பஞ்சர் மருத்துவம் கிட்னியை மிகவும் பாதுகாக்கின்றது. நவீன மருத்துவம் மருந்து மாத்திரைகளால் சிறுநீரகங்களை மிகவும் பாதிப்படையச் செய்கின்றது. மருந்து மாத்திரை பிரியர்களே எச்சரிக்கை.
கல்லீரல் பித்தப்பை:
சுமார் இரவு 12 மணிக்கு முன்பும் பின்பும் ஏற்படும் ஹார்ட் அட்டாக் அநேகமானவை கல்லீரல் பித்தப்பை சம்பந்தப்பட்டபையாகவே இருக்கும் வயிறு எரிச்சல், நெஞ்சு எரிச்சல் போன்றவைகளால் இவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். இரவில் குளிர்ந்த நீரை குடித்தாலும் இந்த எரிச்சல் நிற்காது. இவைகள் கல்லீரல், பித்தப்பை பாதிக்கப்பட்டதின் முன்னரிவிப்புகள். நாக்கில் வெண்மை படர்ந்திருக்கும். பித்தப் பையும் கல்லீரலும் மரம் என்னும் மூலப் பொருளைச் சார்ந்தவை. இவையிரண்டும் இணை உறுப்புகள். பித்தப்பை பாதிக்கப்பட்டால் வரும் ஹார்ட் அட்டாக் இரவு 11 முதல் 1 மணிக்குள்ளும் கல்லீரல் பாதிக்கப்பட்டால் வரும் ஹார்ட் அட்டாக் இரவு 1 மணி முதல் 3 மணிக்குள்ளும் வரும். சரியான அக்குபஞ்சர் புள்ளிகளை தேர்ந்தெடுத்து சக்தியை தூண்டும் போது சில நிமிடங்களில் மாயமாய் மறைந்து விடும்.
(நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்;;. மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன. அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க” – அத்தியாயம் 13:28
நடு இரவில் மட்டும் தான் இந்த ஹார்ட் அட்டாக் வரும் என்றில்லை, தூங்காமல் அடிக்கடி கண் விழித்துக் கொண்டிருந்தாலும், பல நாள் தூக்கமில்லாமல் இருப்பவர்களுக்கும் வரும். மதிப்பிற்குறிய நமது குடிகாரர்களுக்கும் வரும். மதுவிற்கு அடிமையானவர்களே இனியாவது எச்சரிக்கையாக இருங்கள். கண் விழித்து T. V. சீரியல் பார்க்கும் சகோதரிகளே கவணம். விடுமுறை நாட்களில் வீடியோ கேசட்டுகளை விடிய விடிய பார்க்கும் சகோதரர்களே கவனம். நமக்காக குடும்பம் காத்திருக்கின்றது. பித்தப்பை, கல்லீரல் சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக் நடு இரவில் தான் வரும் என்றாலும் குடிகாரர்களுக்கும் கண் விழிப்பவர்களுக்கும் எந்த நேரத்திலும் வரலாம்.
அப்படி எந்த நேரத்தில் வந்தாலும் சம்பந்தப்பட்டவர் குடிகாரராகவோ, கண்விழித்தவராகவோ இருந்தால் நிச்சயம் அவர் பித்தப்பை கல்லீரல் சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக்கினாலேயே அவர் பாதிக்கப்ப்டடிருகிகின்றார் என்று உடன் முடிவு செய்து சிகிச்கையளிக்க வேண்டும். உதாரனமாக சொல்ல வேணடுமானால் ஒருவருக்கு மாலை 5 மணிக்கு ஹார்ட் அட்டாக் வருகின்றது என்று வைத்துக் கொள்வோம். உடனே நாம் மாலை 5 மணி அப்படியானால் இது சிறுநீரக சம்பந்தப்பட்ட ஹார்ட அட்டாக் என்று முடிவு செய்யக் கூடாது. சம்பந்தப்பட்டவரின் குனாதிசயங்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் (இது பற்றி விரிவாக வரும் தொடர்களில் பார்ப்போம்).
இதயம் சிறுகுடல்:
பிரியமானவர்களுக்காக மிகவும் பிரியமானவர்கள் குளிர்ச்சியாக என் இதயத்தை உனக்கு தருகின்றேன் என்ற வசனங்கள் பேசுவது அக்குபஞ்சர் மருத்துவத்திற்கு எதிரானது. இதயம் நெருப்பு என்னும் மூலப் பொருளால் ஆனது. இதன் இனை உறுப்புகளும் சிறுகுடலும் நெருப்பு என்னும் மூலப் பொருளால் ஆனதே. இதயம் தன்னைத் தானே இயக்க சக்தி பெறாமல் போகும் போதும் அல்லது மற்ற உறுப்புகளின் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் தினறும் போதும் இதயம் சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக் வருகின்றது.
காலை 11 மணியிலிருந்து 1 மணிக்குள் வரும் ஹார்ட் அட்டாக் எல்லாம் இதயம் சம்பந்தப்பட்டவையே (நவீன மருத்துவம் எமர்ஜென்சியை ரெடியாக திறந்து வைத்திருந்து காத்திருக்கும் நேரமும் இது தான்). இதயத்திற்கு சக்தியளிக்கும் புள்ளியை தூண்டும் போது வந்த இடம் தெரியாமல் மறைந்து போய்விடும் இந்த ஹார்ட் அட்டாக்.
வயிறு மண்ணீரல்:
சாப்பிட்டுக் கொண்டிருந்தார், திழுரென்று இறந்து விட்டார் என்று கேள்விப்பட்டிருப்போம். சாப்பிடும் போது வரும் ஹார்ட் அட்டாக் வயிறு மண்ணீரல் சம்பந்தப்பட்டவையே. காலை 7 மணியிலிருந்து 9 மணிக்குள் வருவது வயிறு சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக். காலை 9 மணியிலிருந்து 11 மணிக்குள் வருவது மண்ணீரல் சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக்காகும். பொதுவாக காலை 9 மணிக்கு முன்பும் பின்பும் வருபவை வயிறு சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக்கே. வயிறு போதுமான சக்தியோடு இயங்கினால் இந்த அட்டாக் வராது. காலை 7 மணி முதல் 9 மணிக்குள் சாப்பிடும் பழக்கத்தை கடைபிடியுங்கள். காலையில் அதிகம் சாப்பிடுங்கள், இரவு சாப்பாட்டை குறையுங்கள். நன்றாக மென்று சாப்பிடுங்கள். காலையில் பட்டினி கிடக்காதீர்கள். காலை உணவே நாள் முழுவதும் உழைப்பதற்கு தேவையான சக்தியை தருகின்றது. எனவே காலை உணவிற்கு முக்கியத்துவம் கொடுங்கள். இரவு உறங்குவதற்கு நமக்கு சக்தி தேவையில்லை. அந்த நேரத்தில் அதிகம் சாப்பிடாதீர்கள். வாகனத்தை ஓட்ட ஆரம்பிக்கும் போது தான் பெட்ரோல்ஃழுசல் தேவை. பயணம் முடிந்து வாகனத்தை நிறுத்தும் போது பெட்ரோல்ஃழுசல் தேவையில்லை. இதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இது போன்று கவனத்தை செலுத்தினால் வயிறு சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக்கை தவிர்க்கலாம்.
இதுவரை:
இதுவரை நாம் ஹார்ட் அட்டடாக் எப்படியெல்லாம் வரும், எப்படிப்பட்டவருக்கு வரும், எந்த உறுப்புகள் பாதிக்கப்பட்டால் வரும். எந்தெந்த நேரத்தில் வரும் என்பதையெல்லாம் சுருக்கமாக பார்த்தோம். ஒருவருக்கு ஹார்ட் அட்டாக் வருகின்றது என்றால் ஓர் உண்மையான அக்குபஞ்சர்
மருத்துவரின் மிக விரைவான நாடி பரிசோதனை மூலம் எந்த உறுப்பு பாதிக்கப்பட்டிருக்கின்றது என்பதை தெரிந்துக் கொண்டு, நபரின் குனாதிசயங்கள் (குடிகாரரா, கண் விழித்தவரா), அப்போதைய சுழ்நிலையை (ஓடிவந்தவரா, சாப்பிட்டுக் கொண்டிருந்தவரா) கவனத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட நேரத்தையும் மனதில் கொண்டு சிகிச்சையளித்தால் விலை மதிக்க முடியாத பல உயிர்களை காப்பாற்றுவதுடன் (இன்ஷா அல்லாஹ்) பல குடும்பங்களை சந்தோரூத்தில் வாழ வைக்கலாம்.
இதில் எதையுமே கவனத்தில் கொள்ளாமல் உடனே E.C.G. எடுத்து I.C.U. வைத்துவிட்டு நிற்கும் டாக்டரிடம் நோயாளியின் நிலையை குடும்பத்தினர் கேட்கும் போது அந்த பொறுப்புள்ள டாக்டர் சொல்லும் பதில் என்ன தெரியுமா?எங்களால் தற்போது ஒன்றும் சொல்ல முடியாது 1 நாள் போக வேண்டும் அல்லது 48 மணி நேரம் கழித்து தான் எதையுமே சொல்ல முடியும். என்ன அறிவு பூர்வமான பதில்? 48 மணி நேரம் கழித்து இவர் என்னத்தை சொல்வது?நாங்களே தெரிந்துக் கொள்கிறோம். உயிரோடு இருக்கின்றார் என்று, இல்லையென்றால், இறந்து விட்டார் என்று.
என்று நாம் ஆங்கிலம் படித்தவன் எல்லாம் அறிவாளி என்று நினைத்தோமே அன்றே நமது சுய சிந்தனையை இழந்து விட்டோம். அதோடு அறிவு பூர்வமான பல நமது சொந்த மருத்துவத்தையும் நாம் மறந்து விட்டோம்.
உண்மையைச் சொன்னால் நவீன மருத்துவத்திற்கு ஹார்ட் அட்டாக்கிற்கான காரணம் எதுவும் தெரியாது. அப்படியானால் சிலர் எப்படி பிழைத்துக் கொள்கிறார்கள் என்கிறீர்களா?அது இவர்கள் செய்யும் டிரீட்மென்டால் அல்ல. உடலே தன்னைத் தானே சீர்படுத்திக் கொள்ளும் போது சிலர் இறையருளால் பிழைத்துக் கொள்கிறார்கள். மற்றபடி சிறப்பாக செய்வதெல்லாம் I.C.U-வில் வைத்துவிட்டு அழகாக பில் போடுவது தான்.
வாய்வு தொல்லையால் பாதிக்கப்பட்ட பலருக்கு மூச்சு தினறல், நெஞ்சு எரிச்சல் வரும். E.C.G. எடுத்துப் பார்த்தால் ஹார்ட்டில் பிரச்சினைப் போல் காட்டும். உடனே I.C.U.-வில் சேர்த்துவிடுவார்கள். வாய்வு தொல்லையா (GAS TROUBLE), ஹார்ட் அட்டாக்கா?என்று பகுத்தறிந்து பார்க்கத் தெரியாத ஒரு மருத்துவம் தான் நவீன மருத்துவம்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்
- -

கருத்துகள் இல்லை: