லேபிள்கள்

ஞாயிறு, 29 மே, 2011

மூளைக்கு சுய அறிவில்லை


மூளைக்கு சுய அறிவில்லை

டாக்டர் A. ஷேக் அலாவுதீன் 
MD., (Chin.Med), A.T.C.M (CHINA)
Zhejiang University, Hangzhou, (China) 
(Chinese Traditional Medicine).
கோமா என்னும் சுய நினைவு இல்லாமல் இருக்கும் ஒரு நோயாளியைப் பற்றி டாக்டரிடம் விவரம் கேட்டால் அவர் சொல்லும் பதில் மூளை செயல்படவில்லை என்பது தான். அதன் பொருள் மூளை செயல்படவில்லை அதனால்தான் அவர் கோமா நிலைக்கு வந்துவிட்டார் என்பதாகும்.
மூளை செயல்படவில்லையே அப்படியானால் அதை உடலை விட்டு அகற்றிவிடலாமா என்று கேட்டால்? பல உறுப்புக்களை அறுத்து எறியும் இவர்கள் அதற்கு துணிவதில்லை. காரணம் மூளையை அப்புறப்படுத்தினால் அடுத்தது மரணம் தான். செயல்படாத மூளையை அப்புறப்படுத்தினால் மரணம் ஏன் ஏற்படுகின்றது?
கோமாவிற்கு அர்த்தம் தவறாக புரிந்துக் கொண்டு செயல்படுவதால் தான் இந்த குழப்பம். மூளை செயல்படாத காரணத்தினால் தான் கோமாவா?
மூளைக்கு ஒன்றும் தெரியாது. கண்ணை மூடி உட்கார்ந்திருக்கிறீர்கள் ஒருவர் உங்கள் கையை கிள்ளுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். இந்த சம்பவத்தில் என்னென்ன நடக்கின்றது! மூளைக்கு கிள்ளுவதால் ஏற்படும் சிரமத்தை செல்கள் மூலம் தெரிவிக்கப்படுகின்றது. மூளை உடனே கண்களுக்கு கட்டளை இடுகின்றது திறந்து பார்க்கச் சொல்லி.கண்கள் பார்த்தவுடன் ஒருவர் கிள்ளுவதை மூளைக்கு தகவல் அனுப்புகின்றது. மூளை உடனே அடுத்த கட்டளையை பிறப்பிக்கின்றது. சூழ்நிலைக்கு தகுந்தார் போல் அதாவது மீண்டும் கிள்ளும்படியோ, தட்டிவிடும்படியோ அல்லது அலட்சியப்படுத்தும்படியோ.
நன்றாக தூங்கிக் கொண்டு இருக்கின்றீர்கள்.AK47 உடன் உங்கள் அருகில் ஒருவன் தயாராக இருக்கின்றான். இது உங்களுக்கு தெரியுமா? தெரியாது. தப்பியோட முயற்ச்சி செய்வீர்களா?செய்ய மாட்டீர்கள். ஏன் இதை உங்கள் கண்கள் பார்த்து மூளைக்கு தகவல் அனுப்பினால் மட்டுமே மூளை அடுத்த கட்டளையை பிறப்பிக்கும் தப்பி ஓடு அல்லது எதிர்த்து தாக்கு என்று.
கண்ணை மூடி படுத்திருக்கிறீர்கள் மல்லிகை வாசம் உங்கள் மூக்கை துளைக்கின்றது, தகவல் மூளைக்கு பறக்கின்றது, மூளை கட்டளையிடுகின்றது கண்களுக்கு. கண்கள் திறந்து அழகான பெண்.கண்கள் மூலம் மீண்டும் தகவல் விறைகின்றது மூளைக்கு. மீண்டும் மூளை கட்டளையிடும்.
அந்த கட்டளை அந்த பெண்ணைப் பற்றி கவிதை எழுதவும் சொல்லலாம், கட்டிலுக்கு கூப்பிடவும் சொல்லலாம், பாவம் துரோகம் என்று ஒதுங்கவும் சொல்லலாம் (இது அந்த மூளையின் யோக்கியத்தைப் பொறுத்தது).
மேற்கண்ட உதாரனங்கள் போல 1000-ம் உதாரனங்களை கூறிக் கொண்டே போகலாம். இதிலிருந்து என்ன தெரிகின்றது. மூளைக்கு சுயமாக இயங்க அறிவதில்லை. தகவல் கிடைத்தாலே செயல்படும். தகவல் கிடைக்காவிட்டால் அதனால் செயல்பட முடியாது.
உடல் உறுப்புக்கள் அனைத்தும் தகவல் தராமல் செய்யும் ஸ்டிரைக் தான் கோமா. மூளைக்கும் மற்ற அனைத்து உறுப்புக்களுக்கும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டால் ஏற்படும் நிலையே கோமா. மூளை செயல்பட காத்திருந்தும் தகவல்கள் வராத காரணத்தினால் உடலில் அனைத்து இயக்கங்களும் பாதிக்கப்படும் நிலையே கோமா.
இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். மூளை செயல்படாத காரணத்தினால் தான் கோமா என்று சொல்வது எந்த அளவுக்கு உண்மைக்குப் புறம்பானது என்று. கோமாவில் பாதிக்கப்பட்டிருப்பவருக்கு சிகிச்சை என்ற பெயரில் மூளை ஸ்கேன், MRI ஸ்கேன் என்று எடுத்து நேரத்தை பொருளை வீனாக்குவதை விட்டு விட்டு பழங்கால அக்குபஞ்சர் முறையில் நாடி பிடிப்பதன் மூலம் விவரம் அறிந்து சிகிச்சை அளித்தால் நோயாளி விரைவில் குணம் பெறலாம் இன்ஷா அல்லாஹ்.
மூளையில் பிரத்தியோகமாக விபத்தினாலோ அல்லது வேறு காரணத்தினாலோ நேரிடையாக சேதம் ஏற்பட்டு அதனால் பாதிப்பு ஏற்பட்டால் ஒழிய வேறு காரணங்களுக்காக மூளையை காரணமாக்கி தப்பித்துக் கொள்ள பார்ப்பது உண்மையான மருத்துவம் ஆகாது. உணர்ச்சியின் பாகுபாடுகள் கூட உடல் உறுப்புகளின் பிரதிபலிப்பே, அதற்கு மூளை காரணமல்ல. உதாரணமாக ஒருவனுடைய இதயம் நன்றாக இருந்தால் அடிக்கடி பாட்டு வரும், விசில் வரும். எப்போதும் சந்தோஷமாக இருப்பான்.
சந்தோஷம் இதயம் சம்பந்தப்பட்டது (இப்போது புரிகிறதா காதலில் இதயம் சம்பந்தப்பட்ட விஷயம்). ஒரு பையனை பயம் காட்டினால் அவன் உடனே சிறுநீர் கழித்துவிடுபான். பயம்-சிறுநீரகம் (சிறுநீர் பை) சம்பந்தப்பட்டது. குடிகாரனுக்கு கோபம் அதிகம் வரும். காரணம் குடித்து குடித்து கல்லீரல் கெட்டுப் போயிருக்கும். கல்லீரல் கெட்டதனால் கோபம் அதிகம் வரும், பித்தம் அதிகமானாலும் வரும். கோபம்-கல்லீரல் பித்தப்பை சம்பந்தப்பட்டது. நன்றாக பசியோடிருப்பீர்கள், அப்போது உடனே சாப்பிட வேண்டும் போலிருக்கும். அந்த நேரத்தில் துக்கமான செய்தி வருகின்றது. உடனே பசி மறந்து போகும். துக்கம்-வயிறு மண்ணீரலோடு சம்பந்தப்பட்டது.
நானம், கூச்சம், வெட்கம் இவைகள் நுரையீரல்-பெருங்குடல் சம்பந்தப்பட்டவை. ஒவ்வொரு உறுப்புகளும் ஒவ்வொரு குணாதியசங்களை தாம் பெற்று தனித் தனி டிபார்ட்மென்டுகளாக செயல்படுகின்றது. இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தி நிர்வகிக்கும் தலைமையகமே மூளை.
தனக்கு கீழே உள்ள உறுப்புகளின் ஒத்துழைப்பு இல்லாமல் மூளையால் செயல்பட முடியாது. மூளைக்கு தனியாக இயங்க அறிவு கிடையாது.
பிறந்த குழந்தைக்கு தாய் யார் தந்தை யார் என்று தெரியாது. நாம் பல முறை சொல்லிக் கொடுத்து செவி மூலமும் விழி மூலமும் தகவலை அனுப்பி பதிய வைப்பதன் மூலமே மூளைக்கு தெரிகின்றது. இது போன்றதே ஒவ்வொரு தகவலும். ஒரு குழந்தை நல்லவனாகவும் கெட்டவனாகவும் மாறுதல் பதிய வைக்கும் தகவலைப் பொறுத்ததே.
ஒரு சில பெண்கள் குதிரை போல நிமிர்ந்து கொஞ்சம் கூட நானம் இல்லாமல் ஆண்களைப் போன்று நடை, பேச்சு இருக்கும் (பாரதியின் புதுமைப் பெண் என்று இவர்களுக்கு வேறு வேற பெயர். இது வியாதி என்பதே உண்மை). இதற்கு எதிர்மறையாக சில ஆண்களின் பேச்சு, சிரிப்பு இவற்றையெல்லாம் பார்த்தால் பெண்களைப் போல் தோன்றும். இதற்குக் கூட மூளை காரணமல்ல.
நானிருக்கும் மெடிக்கல் கன்சல்டன்ட் மருத்துவ மனையில் பல் மருத்துவ பகுதியில் வேலை செய்யும் 22 வயது இந்திய இளைஞன் மாலை நேரத்தில் என்னை மருத்துவமனையில் சந்தித்தான். மிகவும் தயக்கம். என்னைப் பார்த்து பேச வெட்கப்பட்டான். சிரிப்பைப் பார்த்தால் பெண்மையின் சாயல். சேரில் முழுவதும் உட்காராமல் அதன் நுனியில் அமர்ந்து பேசினான். நான் அவனிடம் விசயத்தை கேட்டதில் அவனை எல்லா நர்சுகளும் பெண் என்று கின்டல் செய்வதாகவும் என்னை ஆண்களைப் போல நடத்துவதில்லை என்றும் கூறினான்.
நான் அவனுக்கு தைரியம் கூறி கவலைப்படாதே இதை மிகவும் சரியாக்கிவிடலாம். இது அக்குபஞ்சர் டிரிட்மென்டுக்கு அல்வா சாப்பிடுவது போன்ற விசயம் என்று சொல்லி மறுநாள் காலை டிரிட்மென்டுக்கு வரச் சொன்னேன்.
மறுநாள் நாடி பார்த்ததில் எதிர்பார்தபடியே நாடியில் வித்தியாசம் பிடிபட்டது.

    நாணம் - நுரையீரல்
    பயம் - சிறுநீரகம்
    நாணம் + பயம் ஸ்ரீ பெண்மை
தெளிவானது உண்மை. 15 நாள் இடைவெளி விட்டு மூன்று சிகிச்சையில் அவனது பயம் போனது, நாணம் மாறியது. முகத்தைப் பார்த்து பேசினான்.பெண்மையின் சாயல் கொண்டு அடிக்கடி வரும் அந்த சிரிப்பு கானாமல் போய்விட்டது. இன்று அவன் ஹீரொ கிண்டல் செய்தவர்கள் "0".
இன்ஷா அல்லாஹ் மீண்டும் சந்திப்போம்.
- -

கருத்துகள் இல்லை:

கேஸ் சிலிண்டரை சேமிக்க சிறந்த வழி முறைகள்.

' மாதம் பிறந்தா இதுக்கு அழுதே ஆகணும்னு... ' ஒரு பட்டியல் இருக்கும். அதில் ஒன்ற காஸ் ...

Popular Posts