லேபிள்கள்

ஞாயிறு, 29 மே, 2011

இரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும


இரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும

டாக்டர் A. ஷேக் அலாவுதீன் 
MD., (Chin.Med), A.T.C.M (CHINA)
Zhejiang University, Hangzhou, (China) 
(Chinese Traditional Medicine).
உடல் உறுப்புக்களில் உண்டான சரி செய்து நன்மையை உண்டாக்கச் செல்லும் அதிகப்படியான இரத்த ஓட்டத்தையே ஆங்கில மருத்துவத்தின் தவறான அணுகுமுறைப்படி இரத்த அழுத்தம் என்று நம்பி மாத்திரைகள் சாப்பிடுவதால் எந்த அளவுக்கு உடல் மோசமாகின்றது என்பதை இதற்கு முன்புள்ள தொடர்களில் பார்த்தோம். அப்படி உடல் உறுப்புக்கள் பாதிப்படையும் போது எந்தெந்த உறுப்புக்கள் பாதிப்படைந்தால் என்னென்ன வியாதிகள் வரும் என்பதை சுருக்கமான இந்தத் தொடர்களில் காண்போம். இன்ஷா அல்லாஹ்!

நுரையீரல் (LUNG)

மூச்சுத் திணறல், இருமல், சளி, ஆஸ்துமா, கைகளில் கட்டை விரல் ஆரம்பித்து மார்பு மேல் முடியும் வலி, Frozen Shoulder என்னும் கைகளை அசைக்க முடியாத நிலை (பெண்களுக்கு அதிகம் வரும்), உடம்பில் உள்ள மூடி கொட்டுதல் (தாடி, மீசை, புருவம் உள் உறுப்புக்கள் மார்பகம் அடைத்தது போல் பாரமாக இருப்பது, தொண்டை காய்ந்து போதல், பேச முடியாத நிலை, டான்சில் கோளாறுகள், தோள்பட்டை வலிகள், தோல் வியாதிகள், அலர்ஜி, அக்குள், கழுத்து, தொடை பகுதிகளில் வியர்வை, 3 மணிக்கு வழிப்பு வந்து விடும், தூக்கத்தில் நெஞ்சை அடைப்பது போன்று மூச்சு முட்டுவது போல் இருக்கும், உட்கார்ந்து சாய்ந்தபடி தூங்குவார்கள், கைகளை அகற்றி வைத்து குப்புறப்படுத்துக் கொண்டு தூங்குதல்.

பெருங்குடல் (Large Intentine)

அடிவயிற்றுவலி, மலச்சிக்கல், வயிற்றுப் பொறுமல், பல்வலி, வயிற்றுப் போக்கு, உதடு வறட்சி, நாக்கு வறட்சி, மூச்சுவிடச் சிரமம், தொப்புளைச் சுற்றிலும் வலி, தோல் வியாதிகள், இருமல், மூக்கு வழியாக இரத்தம் கசிதல், முகவாதம், தோள்பட்டை வலி, இடுப்புவலி, சைனஸ், நெஞ்சு எரிச்சல், புட்டமும் இடுப்பும் சேருமிடத்தில் சதை ஏற்படும் இன்னும் பல..

வயிறு (Stomach)

அல்சர், வாய்வுத் தொல்லை, நாக்கு மஞ்சளாக மாறும், பற்களில் இரத்தக் கசிவு, கால் வலி, வாந்தி, முகவாதம், தொண்டை வறட்சி, இரத்தக் கசிவு நோய், கண் கீழ் இமை துடிப்பு, முகத்தில் தோன்றும் நரம்புவலி, வயிற்றுப் பொறுமல், பசியின்மை, கெட்ட கனவுகள், உணவிருந்தும் சாப்பிட முடியாமல் போவது போலவும் கனவுகள் உண்டாகும் இன்னும் பல..

மண்ணீரல் (Spleen)

உடம்பில் அதிக எடை கூடுதல், அடிவயிற்று வலி, நாக்கில் ஏற்படும் விறைப்பு, மற்றும் வலி, வாய்வுகளால் ஏற்படும் வலி, மஞ்சள் காமாலை, வாந்தி, உடல் பலவீனம், உடல் பாரமாகத் தெரிதல், கால் பகுதிகளில் ஏற்படும் வீக்கம், வலி, காலை 10 மணிக்கு தூக்கம் வந்து அசத்தும், சாப்பிட்டவுடன் தூங்கச் சொல்லும் சோம்பேறித்தனத்தைக் கொடுக்கும், தூக்கத்தில் இருமல் வந்து தூக்கத்தைக் கெடுக்கும், இடுப்பில் பக்க வாட்டில் மடிப்புகளுடன் சதை உண்டாகும் இன்னும் பல..

இதயத்தின் மேலுறை (Pericardium)

இதயத்தை தனியாகவும் அதன் மேலுறையை தனியாகவும் கணக்கிட்டு சிகிச்சை அளிக்கும் மருத்துவம் உலகில் ஒன்று தான் இருக்கின்றதென்றால், அது 5000 வருடங்களுக்கு முற்பட்ட அக்குபஞ்சர் மருத்துவமே. அதனால் தான் இதய நோய்களை அக்குபஞ்சர் எளிதாகத் தீர்க்க முடிகின்றது. பைபாஸ் சிகிச்சையைக் கூடத் தேவையற்றதாக்கி விடுகின்றது.
இதயத்தில் மேல்உறை பாதிப்புக்கு உள்ளாகும் போது நெஞ்சுவலி, படபடப்பு, மார்பு நெஞ்சுப் பகுதி அடைத்தது போலிருத்தல், மன அமைதியின்மை, முழங்கையில் ஏற்படும் வலி, உள்ளங்கையில் சூடு பரவுதல், கைகளில் ஏற்படும் தசைவலி, கடுமையான நெஞ்சுவலி, (இதயத் தசைகளில் இரத்தக் கசிவினால் ஏற்படும் நெஞ்சுவலி வலது முழங்கை வரை கடுமையாக இருக்கும்.) தலைவலி, தூங்கும் போது நெஞ்சு பாரமாக இருப்பது போல் உணர்வு, யாரோ அமுக்குவது போன்று உணர்வு இதனால் தூக்கத்தில் எழுந்து விடுதல் இன்னும்பல..

இதயம் (Heart)

நெஞ்சுவலி, இதயத்திற்கு மேல் பகுதி தோள்பட்டை பகுதியில் ஏற்படும் வலி, மாரடைப்பு, போலியோ, அதிகமாக தாகம் எடுத்தல், சிறுநீர் மஞ்சள் நிறம், கை சுண்டு விரலில் உள்பக்க சைடில் ஆரம்பித்து அக்குள் வரை செல்லும் வலி, மஞ்சள் காமாலை, உள்ளங் கையில் சூடு அதிகமாகுதல், மனதில் பயம், நாக்கின் மேல் பகுதி சிகப்பு நிறமாகுதல், ஞாபக சக்தி குறைவு, மார்பு பகுதியில் தோன்றும் புண், மூச்சுவிட சிரமம், திடீர் வியர்வை, தூக்கமின்மை படபடப்பு, மணிக்கட்டு வலி, விரைவாகக் களைப்புத் தோன்றுதல், தூக்கத்தில் தொடர் கனவுகள், தூங்க ஆரம்பித்தவுடன் கனவும் ஆரம்பித்து விடும், நெருப்பு சம்பந்தப்பட்ட கனவுகள் தான் அதிகம் வரும் இன்னும் பல..

மூவெப்ப மண்டலம் (Triple Warmer)

உடம்பில் சில பகுதிகள் சூடாகவும் சில பகுதிகள் குளிர்ச்சியாகவும் இருப்பதற்கு இந்த தான் காரணம். உடம்பு முழுவதும் வெப்பத்தை சீர்படுத்தும் உறுப்பு. இது பாதிப்படைந்தால், காது மந்தம், காது செவிடு, காது இரைச்சல், கண்ணத்தில் வீக்கம், காதுகளில் வலி, முழங்கை வலி, தொண்டை வறட்சி, உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை அல்லது அதிக சூடு அல்லது அதிக குளிர்ச்சி ஏற்படுதல், தலை மிகவும் சூடாக இருப்பது. ஆடை மூடிய பகுதிகள் சூடாக இருப்பது, வயிறு உப்புதல், காற்று அடைத்தது போல் தசைகளில் வீக்கம், (விரல் கொண்டு அழுத்தினால் பள்ளம் ஏற்படும்), சிறுநீரை அடக்க முடியாமை, தூக்கத்தில் சிறுநீர் கழித்தல், நீர் கடுப்பு, வெளிச்சத்தில் தூங்க இவர்களுக்கு மிகவும் பிடிக்கும், சிறு வெளிச்சம் இவர்களுக்குத் தேவை.

சிறுகுடல (Small Intenstine)

அடிவயிற்று வலி, காது பிரச்னைகள், கன்னம் வீக்கம், தொண்டைப் புண், மலச்சிக்கல், மலத்துடன் இரத்தம், கழுத்தில் சுளுக்கு, வயிறு உப்புசம், வாய்வுத் தொந்தரவு, அடிக்கடி ஏப்பம், வயிறு மந்தம், நெஞ்செரிச்சல், வாயில் புண்கள், வயிறு பெறுத்தல், சிறு குடலில் ஏற்படும் அஜீரணமே கெட்ட வாய்வுக்கு மூலகாரணம். மதியம் சாப்பிட்டவுடன் தூங்க நினைப்பவர்கள், சிறிது நேரமாவது மதியம் சாப்பிட்டவுடன் தூங்கியே ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் சிறுகுடல் பாதிக்கப்பட்டவர்களே. அக்குள், அக்குள் மடிப்புகளிலும் மார்புப் பக்கவாட்டிலும் இவர்களுக்கு சதை விழும், இன்னும்பல..

பித்தப்பை (Gall Bladder)

அதிகமாகக் கோபம் வரும், ஒரு பக்கத்தலைவலி, கண்களில் எரிச்சல், பித்தப்பையில் கல், வாய்வுப் புண், வாந்தி, வாய் நாற்றம், காதுவலி, அடிக்கடி ஏற்படும் ஜுரம், தொடையில் வெளிப்பக்கத்தில் ஆரம்பித்து கால் சுண்டு விரல் வரை வரும் வலி அதனால் நடக்க இயலாமை, வாயில் கசப்புச் சுவை, கிறுகிறுப்பு, காது அடைத்தல், மசலா அதிகம் சாப்பிடுபவர்களுக்கு பித்தப்பை பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்புண்டு, உடம்பில் ஏற்படும் எரிச்சலோடு கூடிய வலி, துணி உடம்பில் பட்டால் கூட எரிச்சல் உண்டாகும். கால் கைகளை படுக்கைக்கு வெளியே நீட்டி விட்டுக் கொண்டு தூங்குவார்கள் இன்னும் பல..

கல்லீரல (Liver)

கண் நோய்கள், பசியின்மை, தலைவலி, கோபம், மஞ்சள் காமாலை, வயிற்றுவலி, மலச்சிக்கல், குழந்தைகளின் வளர்ச்சி பாதித்தல், வாந்தி, மன அழுத்தம், முதுகுவலி, சிறுநீர் பிரியாமை, ஹெரனியா, அடிவயிற்று வலி, இரவு 1 மணிக்கு தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு பிறகு 3 மணிக்கு மீண்டும் தூங்க ஆரம்பித்தல், தூக்கத்தில் ஏற்படும் அரிப்பு, அலர்ஜி இன்னும் பல..

சிறுநீர்ப்பை (Urinary Bladder)

சிறுநீர் பிரியாமை, சிறுநீர் அடக்க முடியாமை, இரு கண்களுக்கு நேர்மேல் பக்கமாக ஏற்பட்டு பின்னால் போகும் தலைவலிகள், கண் நோய்கள், இடுப்புவலி, முதுகுவலி, கழுத்துவலி, வேட்கையான மன வலி, சிறுநீர்ப் பையில் கல், முழங்கை வலி, குதிகால் வலி, உடம்பு அசதி, பய உணர்ச்சி, இரண்டு புட்டங்களிலும் அதிகமான சதை போடுதல், தொடைகளின் பின்புறம் அதிக சதை போடுதல், அடிக்கடி மலம் கழித்தல், தூக்கத்தில் மாறி மாறி புரண்டு கொண்டிருத்தல், இவர்களின் கழுத்துக்குப் பின்புறம்சதை போடும் இன்னும் பல..

சிறுநீரகம (Kidney)

பயம், சிறுநீரகக் கல், மூட்டு வலி, கால்களில் வீக்கம், முகத்தில் வீக்கம், முகம் கருப்பாக மாறுதல், பிறப்பு உறுப்பில் வலி, பல் வலி, கால் பாதங்கள் சூடாக இருப்பது, முதுகு வலி, நாக்கு உலர்ந்து விடுதல், தொண்டைப் புண், வீக்கம், மலச்சிக்கல், மூச்சுத் திணறல், தசைகள் சுருங்குதல், சிறுநீரகங்களில் ஏற்படும் வலி, தலைமுடி கொட்டுதல், மாதவிடாய்ப் பிரச்னைகள், ஆண்மைக் குறைவு, மனநோய், இரவில் வியர்த்தல், விதைகளில் ஏற்படும் வலி மற்றும் வீக்கம், கர்ப்பப்பை இறங்குதல், டான்சில், மார்பக அழற்சி, கழுத்தில் முன்புறம் சதை போடுதல், மாலை நேரத்தில் 5 மணிக்கு மேல் உடல் சோர்ந்து விடுதல், உடல் மிகவும் பலவீனமாய் மாறுதல், கைகள் நடுக்கம், இவர்கள் குப்புறப்படுத்துத் தான் தூங்குவார்கள். அப்போது தான் இவர்களுக்கு தூக்கம் வரும்.
மேற்குறிப்பிட்ட நோய்கள் மட்டும் தான் ஒவ்வொரு உறுப்பிலும் வரும் ஒன்றில்லை. அதற்க மேலும் உண்டு இருந்தாலும் முக்கியமானவைகள் மட்டும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
ஒரு உறுப்பு பாதிக்கப்பட்டால் சில நோய்கள் வரும், அதே வேளையில் அந்த உறுப்போடு மற்ற உறுப்புகள் பாதிக்கப்பட்டால் இருக்கும் நோய் தீவிரமாவதுடன் மேலும் பல புதிய நோய்கள் வரவும் வாய்ப்பு ஏற்பட்டு விடும். சில நேரங்களில் நோய் என்னவென்றே கண்டுபிடிக்க முடியாமல் ஆங்கில மருத்துவம் திண்டாடுவது இது போன்ற நேரங்களில் தான்.

பெருங்குடல் பாதிப்பால் இடுப்பு வலி

பெருங்குடல் பாதிப்படையும் போது சில வியாதிகள் வரும். அதே வேளையில் சிறுநீர்ப் பையும் பாதிக்கப்பட்டால் 99 சதவீதம் இடுப்பு வலி வர வாய்ப்பு இருக்கின்றது. இந்த இடுப்பு வலி சிறுகச் சிறுக ஆரம்பித்து இறுதியில் உட்கார முடியாத அளவுக்கு வேதனையைக் கொடுக்கும். இதற்கு ஆங்கில மருத்துவத்தில் டிஸ்க் டிஸ்லோகஷன் அதாவது, டிஸ்க் விலகியதாகக் கூறி அறுவைச் சிகிச்சை செய்யச் சொல்வார்கள். ஆனால் அக்குபஞ்சர் மருத்துவத்தில் பெருங்குடலையும் சிறுநீர்ப்பையையும் சில சிகிச்சை முறைகளில் சரி செய்து, அறுவைச் சிகிச்சைக்கு அவசியமில்லாமல் செய்து விடலாம்.

நுரையீரல் பாதிப்படைந்தால் ஆஸ்துமா

நுரையீரல் பாதிப்படைந்து ஆஸ்துமா உருவாகலாம். இப்படி ஒரே ஒரு ஆஸ்துமா மட்டும் தான் இருக்கின்றது என்று ஆங்கில மருத்துவம் நினைத்து, ஒருவரைக் கூட நலமாக்க இயலாமல் நோயை மட்டுப்படுத்துவதாகக் கூறி பலரின் வாழ்வை வீணாக்கிக் கொண்டிருக்கின்றது. ஆனால் அக்குபஞ்சர் ஆஸ்துமாவை அணுகும் விதமே மிகவும் அழகானது. ஒருவருக்கு.
  • மாலை 5 மணியிலிருந்து 7 மணிக்குள் ஆஸ்துமா ஆரம்பித்தாலோ அதிகரித்தாலோ அது சிறுநீரகத்தின் சக்தியின்மை காரணத்தினால் ஏற்படும் ஆண்துமாவாகும்.
  • காலை 9 மணியிலிருந்து 11 மணிக்குள் ஆஸ்துமா ஆரம்பித்தாலோ அல்லது அதிகரித்தாலோ அது மண்ணீரல் சம்பந்தப்பட்ட ஆஸ்துமாவாகும்.
  • அதிகாலை 3 மணியிலிருந்து 5 மணிக்குள் ஆரம்பித்தாலோ அல்லது அதிகரித்தாலோ அது நுரையீரல் செயல்பாட்டில் ஏற்பட்ட பாதிப்பால் உண்டான ஆஸ்துமாவாகும்.
இவ்வாறு ஆஸ்துமா எந்த உறுப்பு செயல்பாட்டின் பாதிப்பால் உருவாகின்றது என்பதை நாடி மூலம் கண்டறிந்து சம்பந்தப்பட்ட உறுப்பின் பாதிப்பை சரி செய்வதன் மூலம் ஆஸ்துமாவை நிரந்தரமாக குணப்படுத்த முடிகின்றது. இந்த அணுகுமுறை இல்லாத காரணத்தால் ஆங்கில மருத்துவம் ஆஸ்துமாவை குணப்படுத்த முடியாது. ஆனால் கட்டுப்பாட்டில் வைக்கலாம் என்று சொல்லிக் கொண்டு காலம் காலமாய் அத்துடன் போராடி பல உயிர்களை வீணடிக்கின்றது. ஆஸ்துமா நோயாளிகளின் சந்தோஷத்தை ஸ்டிராய்டு போன்ற பக்க விளைவுகள் அதிகமுள்ள மருந்துகளை கொடுத்து சாகடிக்கின்றது.
நோயின் பெயரை கேட்டு நாம் அச்சப்பட தேவையில்லை. நோய்க்கு பெயர் வைத்தது, யாராக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். வல்லரசு நாடுகள் என்று சொல்லிக் கொண்டு அநியாயங்களை செய்பவர்கள் வைத்த பெயராகக் கூட இருந்து விட்டுப் போகட்டும். அதைப்பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. நோய்க்குக் காரணமான உறுப்பை நாடி மூலம் கண்டறிந்து அதை சரி செய்வதன் மூலம் நோயை நிரந்தரமாக குணமாக்கி மக்களை வாழ வைக்கலாம். இல்லையென்றால் அந்நிய மருத்துவத்தின் அடிப்படையில் உறுப்பைப் பற்றிக் கவலைப்படாமல் நோயைச் சரி செய்வதாகச் சொல்லி அவர்களை நிரந்தர வாடிக்கையாளர்களாக மாற்றி, வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வைத்து மக்களை வீணடிக்கலாம்.
5000 வருடங்களுக்கு மேலாக அக்குபஞ்சர் மருத்துவம் கம்பீரமாக நிற்பதின் காரணம் தற்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ஆயிரம் நோய்களுக்கும் இனி கண்டுபிடிக்கப் போகும் பல ஆயிரம் நோய்களுக்கும் தீர்வு இப்போதே தயார் என்று அடக்கத்துடன் ஆர்ப்பாட்டமில்லாமல் கூறும்; அழகிய மருத்துவம் தான் அக்குபஞ்சர். இறைவன் மனித குலத்துக்கு வழங்கிய மாபெரும் பொக்கிஷம் தான் அக்குபஞ்சர்.

கருத்துகள் இல்லை:

குழந்தைகளின் உடல் பருமன் குறித்து கவலைப்படும் பெற்றோரா?

குழந்தை பருவத்தில் உடல் எடை பிரச்சனையை எதிர் கொள்வோரின் எண்ணிக்கை உலகளவில் வெகுவாக அதிகரித்து...

Popular Posts