லேபிள்கள்

ஞாயிறு, 29 மே, 2011

ஆண்மைக்குறைவு மற்றும் பெண்மைக் குறைவு


ஆண்மைக்குறைவு மற்றும் பெண்மைக் குறைவு

டாக்டர் A. ஷேக் அலாவுதீன் 
MD., (Chin.Med), A.T.C.M (CHINA)
Zhejiang University, Hangzhou, (China) 
(Chinese Traditional Medicine).
உடலில் முக்கிய உறுப்புக்கள் அனைத்தும் சிறப்பாக சீரான இயங்குமானால் அது ஓர் ஆரோக்கியமான உடல். அதில் ஆண்மைக் குறைவு, பெண்மைக் குறைவு என்ற பேச்சுக்கே இடமில்லை. இறைவன் நாடியதைத் தவிர!
ஏதாவது ஒரு உறுப்பு பாதிக்கப்படும் போது தான் அதைச் சரி செய்வதற்காகத் தேவைப்படும் இரத்தப் பற்றாக்குறையை சரி செய்ய ஆண் பெண் பிறப்பு உறுப்புக்களுக்கும் மூளைக்கும் செல்லும், இரத்தம் திசை திருப்பப்படுகின்றது என்பதை முன்பே விளக்கயிருக்கின்றோம்.
பாதிக்கப்பட்ட உறுப்பு எது என்பதை நாடி பரிசோதனை மூலம் கண்டறிந்து அக்குபஞ்சர் சிகிச்சை மூலம் கண்டறிந்து அக்குபஞ்சர் சிகிச்சை மூலம் அவ்வுறுப்பின் இயக்கத்தன்மையை சமநிலைப்படுத்தும் போது உடலில் இரத்த ஓட்டம் சீரான நிலையை அடைந்து தடைபட்டுப் போன ஆண் பெண் உறுப்புக்களுக்கும் செல்ல ஆரம்பித்து இயல்பு நிலையை அடைகின்றது. இதனால் பிறப்புக்கள் தன் இயற்கை தன்மையுடன் செயல்பட முடிகின்றது.
இவ்வாறு முறையாக சரி செய்யாமல் ஓர் உறுப்பின் பிரச்சினையைத் தீர்க்க செல்லும் இரத்த ஓட்டத்தை மாத்திரைகள் கொடுத்து தடுப்பது பாதிக்கப்பட்ட உறுப்பை மேலும் கேடாக்கி, இதயத்துடன் இயக்கத்தில் தலையீடு செய்து அதன் வலிமையை குறைத்து, ஆண் பெண் பிறப்புறுக்களின் இயக்கத்தையே நாசம் செய்யும்.
இது போன்ற நேரங்களில் ஒருவருடைய ஆண் உறுப்பில் கோளாறு ஏற்படவே செய்யும். ஆண்மையின்மை, விறைப்புத் தன்மை குறைவு, விறைப்பு இன்மை, விரைவில் விந்து வெளியேறுதல்;, ஆண் பெண் உறுப்பில் பருமன் குறைதல் போன்றவைகள் உண்டாகும்.
எந்த ஓர் ஆண் முழங்காலில் வலியையும் வீக்கத்தையும் உணர்கின்றானோ அது அவனுடைய பாலின உறுப்புக்களின் பலவீனத்தை உறுதி செய்கின்றது.
பெண்களாயிருந்தால் இந்த முழங்கால் வலி வீக்கம் அவர்களின் கர்ப்பப்பை, சினைப்பை வலுவிழந்து வருவதையும் பிறப்புறுப்பு அதன் இயற்கைத் தன்மையில் குறைவு உண்டாகின்றது என்பதையும் தெளிவுபடுத்துகின்றது. சிறுநீரகங்களின் பலவீனம் எப்போதும் பிரதிபலிப்பது முழங்கால் மூட்டுகளில் தான். பெண்மைக் குறைவு (Frigidity) உச்சநிலைக் கோளாறு (Orgasmil Dysfunction) அவசர உச்சநிலை (Rapid Orgasm) போன்றவைகள் இவர்களுக்குப் படிப்படியாக ஏற்பட வாய்ப்பாகி விடும்.
இது போன்ற பிரச்சினைகளை பெண்கள் வெளிப்படுத்துவதில்லை. கணவர்களுக்கும் இது பற்றிய போதிய விபரம் இல்லாததால் இதை கவனிக்காமல் விட்டு விடுகின்றார்கள். கணவனின் விருப்பத்திற்காகவே இல்லற வாழ்வில் ஈடுபடும் அளவுக்கு இவர்களின் மனநிலை மாறி விடும். இவர்களுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் கணவனின் விருப்பத்திற்கு கட்டுப்படுவதன் நோக்கம் கணவன் திசை மாறிப் போய்விடக் கூடாது என்பதே.
தோற்றமும் வனப்பும் இருந்தும் இவர்கள் நடைபிணமாய் வாழ்வில் ஆர்வமில்லாமல் இருப்பார்கள்.
இந்த பிரச்சினைகளைப் பற்றி நாம் பல நூறு பக்கம் எழுதலாம். ஆனால் நமக்கு இப்போது தேவை நோயின் விபரங்கள் அல்ல. அதற்கான தீர்வுகளே! எனவே தீர்வுகளை நாம் தெளிவுபடுத்திக் கொள்வோம்.
ஒரு உறுப்பு பாதிக்கப்படும் போதே பாலின உறுப்புக்களுக்குச் செல்லும் இரத்தம் தடைபட்டு ஆண் பெண் பிறப்புறுப்புக்களில் கோளாறு உருவாகின்றது என்றால் பல உறுப்புக்கள் பாதிக்கப்பட்டால் என்னவாகும்?
சந்தேகம் வேண்டாம். இல்லற வாழ்க்கை இவர்களுக்கு அர்த்தமற்றதாகப் போய் விடும்.
சரியான உதாரணமாக இதற்கு இரத்த அழுத்த மாத்திரை சாப்பிடுபவர்களை எடுத்துக் கொள்ளலாம். ஏதோ ஒரு உறுப்பு பாதிக்கப்பட்டால் அதை சரி செய்ய விரைவாகச் சென்ற இரத்த ஓட்டத்தை நோய் என்று எண்ணி நவீன மருத்துவத்தின் ஆலோசனைப்படி மாத்திரை சாப்பிட்டு இரத்த ஓட்டத்தை தடை செய்து அதன் மூலம் படிப்படியாக ஒவ்வொரு உறுப்பாக பாதிப்படையை இவரும் மருத்துவரின் ஆலோசனைப்படி மாத்திரைகளை அதிகப்படுத்தி சாப்பிட்டுக் கொண்டே வர விளைவு. இரத்த அழுத்தம் இரத்த கொதிப்பாக மாறும். மேலும் பல வியாதிகள் சேர்ந்திருக்கும் இதயம் மோசமாக பலவீனப்பட்டு போயிருக்கும் அத்துடன் அவரின் ஆண் உறுப்பு வெறும் சிறுநீர் கழிக்க உதவும். பாதையாக மட்டுமே செய்யப்பட்டு கொண்டிருக்கும்.
இரத்த அழுத்த மாத்திரை தொடர்ந்து சாப்பிடுபவர்களின் நிலைமை இறுதியில் இதுதான். ஆண் உறுப்பு பெயருக்கு இருக்குமே தவிர சிறுநீர் கழிப்பதை தவிர வேறு எதற்கும் பயப்படாத நிலைமை உருவாகிவிடும். ஆண் உறுப்பு சிறுத்து விடும். வாழ்க்கையின் அழகிய அர்த்தங்கள் தொலைந்து விடும்.
மருத்துவமனையில் என்னிடம் இது போன்றவர்கள் வந்து கண் கலங்க பேசும் போது நம் மனம் பரிதவிக்கவே செய்கின்றது. அறியாமையினால் மாத்திரைகள் சாப்பிட்டு நன்மை செய்ய உண்டான இரத்த அழுத்தத்தை தடுத்து நிறுத்தியதன் விளைவு இன்று வாழ்வில் வசந்தங்கள் பல விடை பெற்று விட்டன.
எனக்கு இரத்த அழுத்தம் இரத்த கொதிப்பு இல்லை. அதற்கான மாத்திரைகளும் சாப்பிடவில்லை. பிறகு எனக்கு எப்படி ஆண்மைக் குறைவு ஏற்பட்டது என்று சிலர் கேட்கலாம். அதற்கான விடை இது தான்.
உடல் உறுப்புக்கள் ஒன்றோ அதற்கு மேற்பட்டதோ பாதிக்கப்படும் போது ஆண்மைக் கோளாறு ஏற்படவே செய்யும். உடல் உறுப்புக்கள் பாதிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட உறுப்பு சரியாகும் வரை இரத்த அடுத்தம் ஏற்படவே செய்யும். சிலருக்கு அப்படி இரத்த அழுத்தம் ஏற்படாவிட்டால் நாம் சிகிச்சை மேற்கொண்டு அதை சரி செய்ய வேண்டும். உடல் உறுப்புக்களின் பாதிப்பு இரத்த அழுத்த மாத்திரை சாப்பிட்டதினாலும் ஏற்படலாம். சக்தி சமநிலை மாறுபாட்டால் உடல் உறுப்புக்கள் பாதிக்கப்படும் போதும் ஏற்படலாம். ஆனால் இரத்த அழுத்த மாத்திரைகளோ அல்லது வேறு மாத்திரைகளோ ஏற்பட்ட ஆண்மை மற்றும் பெண்மைக் கோளாறுகளே தற்போதைய காலகட்டத்தில் அதிகம்.
இதற்குத் தீர்வு தான் என்ன?
அக்குபஞ்சர் மருத்துவம் அழகாக வழிகாட்டுகின்றது. நாடி பரிசோதனை முறையில் பாதிக்கப்பட்ட உறுப்புக்களை வரிசை முறைப்படி கண்டறிந்து சீர்படுத்தி உடலில் ஆண்மை வீறு கொள்கின்றது. மடிந்த பெண்மை மலருகின்றது. எந்தவித பக்க விளைவுகள் இல்லாமல், மருந்து மாத்திரைகள் என்ற இரசாயனத்தை உட்கொள்ளாமல், பரிசோதனைகள் என்ற ஏமாற்று வித்தைகளுக்கு உட்படாமல் பல வருடங்களுக்கு முன்னிருந்த நிலைமையை மீண்டும் கொண்டு வருகின்றது. இன்ஷா அல்லாஹ்!
இந்த முறையில் அணுகாமல் செயற்கையான தூண்டுதலை தரும் மருந்துகள், மாத்திரைகள், களிம்புகள் என்று நாடினால் அது விபரீதத்தில் போய் உயிருக்கே ஆபத்தில் போய் முடியும் வாய்ப்பை உருவாக்கும். உதாரணமாக, வயக்ரா என்ற செயற்கையாக ஆணுறுப்பை விறைப்படையச் செய்யும் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.
உறுப்புக்கள் பாதிக்கப்பட்ட நிலையிலேயே இரத்த ஓட்டம் பிறப்புறுப்புக்களுக்குச் செல்லாமல் பாதிக்கப்பட்ட உறுப்புக்களைச் சரி செய்ய விரைந்து செல்கின்றது. இந்த செயற்கைத் தூண்டுதல் மாத்திரைகள் சாப்பிடும் போது நிர்ப்பந்தமான இரத்தம் பிறப்புறுப்புக்களுக்கு திருப்பப்படுகின்றது. இதனால் ஏற்கனவே பாதிப்படைந்த உறுப்பு மேலும் பாதிப்படைகின்றது.
ஆஸ்துமா என்ற நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். அவருடைய நுரையீரலைச் சரி செய்ய இரத்த ஓட்டம் அதிகம் சென்று கொண்டிருக்கும். அந்த நேரத்தில் செயற்கையாகத் தூண்டக் கூடிய மாத்திரைகளைச் சாப்பிட்டால் நிர்ப்பந்தமாக நுரையீரலுக்குச் செல்லும் இரத்தம் ஆணுறுப்பு விறைப்புத் தன்மைக்காக திருப்பி அனுப்பப்படுகின்றது. இதனால் அவரது உடல் வேட்கை தணிந்தாலும், அவருடைய நுரையீரல் முன்பை விட மோசமாக பாதிப்படைந்து நுரையீரல் நோய்கள் அதிகமாகின்றன. இது போன்றே இதயம் பலவீனம் உள்ளவர் - இதய நோய்களாலும், வயிறு பாதிக்கப்பட்டவர் - வயிற்றுப் புண் போன்ற நோய்களாலும், சிறுநீரக பலவீனம் உள்ளவர் - மூட்டுவலி போன்ற நோய்களாலும் படிப்படியாக பாதிக்கப்பட்டு பிறகு தீவிர நோய் அவஸ்தைக்கு உள்ளாகின்றார். வயக்ரா போன்ற மிக மோசமான மாத்திரைகள் சாப்பிடும் போது உடல் உறுப்பு பாதிப்பு அதிகம் இருந்தால் மரணம் ஏற்படலாம்.
காதல் மோகம் என்பது இயற்கையான சூழலில் எதார்த்தமாக ஏற்படும் போது நம் உடலில் (CGmp) இரசாயன திரவம் உற்பத்தியாகி ஆண் உறுப்பு விறைப்பு தன்மையை கொடுக்கின்றது. இந்த சூழ்நிலையில் உடலில் பல உறுப்புக்களிலிருந்தும் சக்தி (இரத்தம்) உறிஞ்சப்படுகின்றது. இது நீண்ட நேரம் நடைபெற்றால் உடல் நிலை மிகவும் மோசமாகும் என்பதால் (pd5) என்ற மற்றொரு இரசாயன திரவம் சுரந்து, அந்த விறைப்புத் தன்மையை செயலிழக்கச் செய்கின்றது, இதற்கு இடைப்பட்ட நேரத்தில் தான் இல்லற இன்பம் நிறைவடைகின்றது.
இவ்வாறு இல்லாமல் வயக்ரா போன்ற செயற்கை ஆண் உறுப்பு தூண்டுதல் மாத்திரைகள் சாப்பிடும் போது (pd5) என்ற விறைப்புத் தன்மையைச் செயலிழக்கச் செய்யும் திரவத்தை அழித்து விடுகின்றது. இதனால் (CGmp) என்ற ஆண் உறுப்பை விறைப்படையச் செய்யும் திரவம் மட்டுமே இருந்து செயல்படுவதால், விறைப்புத் தன்மை நீடிக்கின்றது. உடலுறவு முடிந்த பிறகும் விறைப்பு தன்மை தொடருகின்றது. சிலருக்கு உடலுறவு முடிந்ததா இல்லையா என்று கூடத் தெரியாமல் போய் விடுகின்றது.
விளைவு உள் உறுப்புக்கள் பலமாக அதிர்வடைந்து ஏற்கனவே பாதிக்கப்பட்ட உறுப்புக்கள் மேலும் கடுமையாக பாதிப்படைகின்றன. பலர் உயிர் இழந்ததன் விபரம் தற்போது உங்களுக்கு புரிந்திருக்க வேண்டும்!?
என்ற இரசாயன திரவம் சுரப்பதே நமக்கு சுகத்தையும் தந்து உடல் உறுப்புக்களையும் பாதுகாப்பதற்கே. அதையே நாம் அறியாமையினால் நாசம் செய்தால்?
என்ற இரசாயன திரவம் சுரப்பதே நமக்கு சுகத்தையும் தந்து உடல் உறுப்புக்களையும் பாதுகாப்பதற்கே. அதையே நாம் அறியாமையினால் நாசம் செய்தால்?
இயற்கையான முறையில் உடல் ஆரோக்கியத்தைக் கட்டிக் காக்கும் போது உண்மையான சந்தோஷத்தை வாழ்வில் நாம் சந்திக்க முடியும். இயற்கையான முறையில் உடலை சீரமைப்பு செய்து இழந்த ஆண்மையையும் இழந்த பெண்மையையும் மீண்டும் மலரச் செய்வதில் 5000 வருடங்களுக்கு முற்படட சீன மருத்துவமான அக்குபஞ்சர் முதன்மையான இடத்தைப் பெறுகின்றது. காரணம் அக்குபஞ்சர் நோய் நாடி நோய் முதல் நாடி என்னும் தத்துவத்தில் செயல்படுகின்றது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நோய்களுக்கும் இனி கண்பிடிக்கப் போகும் நோய்களுக்கும் அக்குபஞ்சர் சிகிச்சை முறையில் அழகிய தீர்வு உண்டென்றால் அது மிகையல்ல.
- -

கருத்துகள் இல்லை:

தரமான செங்கல்லைகண்டறிவது எப்படி? செங்கல் கட்டுமானத்தில் என்னசெய்யலாம்? என்ன செய்யக் கூடாது?

இன்று ஹாலோபிளாக் , கான்கிரீட் கல் , ஏஏசி கல் , போன்ற பல தரப்பட்ட கற்கள் வந்து விட்டாலும் , நம...

Popular Posts