லேபிள்கள்

ஞாயிறு, 8 மே, 2011

ஜுரம் உள்ளபோது குழந்தைக்கு ஸ்வட்டர் போடலாமா ?

ஜுரம் என்பது  ஒரு அறிகுறி  மட்டுமே , அதுவே வியாதி அல்ல என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே .http://doctorrajmohan.blogspot.com/2010/07/fever-in-children.htmlஆனால் சிறு குழந்தைக்களுக்கு  ஜுரம் வந்தால் சோர்வடைந்து எதுவும் சாப்பிடாமல் ,குடிக்காமல் இருக்கும் .இது உடலில் உள்ள  நீர் சத்தை குறைத்துவிடும் .இது மேலும்  உடல் வெப்பத்தை  அதிகரிக்கும் .எனவே ஜுரம் வந்தால் செய்யவேண்டியது என்ன ?


அதிகமான திரவ உணவினை கொடுத்துகொண்டே இருக்கவேண்டும் - காய்கறி சூப் ,ஐஸ் போடாத பழசாறு எளுதில் காற்றோட்டம் உள்ள பஞ்சினால் ஆனா உடையை மட்டுமே போடவேண்டும் .முடிந்தால் டயபரை  கூட கழட்டிவிடுவது நல்லது .
http://doctorrajmohan.blogspot.com/2010/08/blog-post_15.html


ஸ்வட்டர் கண்டிப்பாக போடகூடாது .ஏனெனில் இது உடல் சூட்டை தக்கவைத்து சுரத்தை இன்னும் அதிகரிக்க செய்யும் .எனவே கண்டிப்பா  கூடாது .இதனால் சில குழந்தைகளுக்கு சுர வலிப்பு எனப்படும் febrile fits வர வாய்ப்பு உண்டு .


http://doctorrajmohan.blogspot.com/2010/06/febrile-fits.html


ஏற்கனவே சுர வலிப்பு வந்திருந்தால் கண்டிப்பாக இதை கடைபிடிக்கவேண்டும் !


 சரி ஸ்வட்டர்  எப்போது போடலாம் :

எடை குறைவான குழந்தைகளுக்கு உடல் வெப்ப இழப்பு ஏற்படாமல் இருக்க பயன் படுத்தலாம்.

பயணம் செய்யும்போது ,குளிர்ப்ரதேசங்களுக்கு  செல்லும்போது ,


இந்திய போன்ற வெப்பநாட்டில் இருக்கும் போது நாம் இதனை அதிகமாக உபயோகிக்க தேவை இல்லை .முக்கியமாக ஜுரம் உள்ளபோது 

கருத்துகள் இல்லை:

மஞ்சள் கலந்த பாலைக் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்.

வெறும் பாலைக் குடிக்காதே. அதுல ஒரு துளி மஞ்சள் பொடி கலந்து குடி ' என்பார்கள் நம் வீட...

Popular Posts