லேபிள்கள்

ஞாயிறு, 29 மே, 2011

உடலை சார்ஜ் செய்வது எப்படி? பாகம் -3


     முதல் இரண்டு பாகங்களில் உடலை சார்ஜ் செய்வதால் உண்டாகும் பலன்களை தெரிந்துகொண்டீர்கள் .இது உடலை வருத்தி செய்யப்படும் கடுமையான பயிற்சி அல்ல மாறாக உடலுக்கு ஓய்வு அளித்து சக்தியளிக்கும் பயிற்சி .இதில் கடினமான ஒரு விஷயம் உண்டென்றால் அது மனதை ஒரு முக படுத்துவதுதான் .ஆனால் இது தியானம் செய்வதை போன்றது அல்லாமல் எளிதானதுதான் .இப்போது பயிற்ச்சிகளை தொடங்கலாம் .

1. ஒரு வசதியான இருக்கையிலோ அல்லது தரையிலோ வசதியாக அமர்ந்துகொள்ளுங்கள் .

2. உங்களால் முடிந்த அளவு உடலிலுள்ள அத்தனை உறுப்புக்களையும் தளர்வாக்குங்கள் .
3. இப்போது உங்கள் உடலிலுள்ள ஏதாவது ஒரு உறுப்பின் மீது மட்டும் உங்கள் கவனத்தை செலுத்த ஆரம்பியுங்கள் .கையாக இருக்கலாம் அல்லது காலாகவும் இருக்கலாம் .தொடர்ந்து 3 நிமிடங்கள் வேறு எங்கும் உங்கள் கவனம் சிதறிவிடாதவாறு அந்த உறுப்பின் மீது மட்டும் உங்கள் கவனம் இருக்கட்டும் .ஆரம்பத்தில் ஒரே இடத்தில் கவனத்தை செலுத்துவது கடினமாக இருக்கலாம் .அதற்காக கவலை படவேண்டியதில்லை .தொடக்கத்தில் 30 வினாடிகள் 50 வினாடிகள் என்று கால அளவை குறைத்து கொள்ளுங்கள் .பின்னர் படிப்படியாக நேரத்தை அதிகப்படுத்திக்கொள்ளலாம் .

4. தொடந்து சிறிது நேரம் ஒரே உறுப்பின் மீது கவனம் செலுத்தும் போது குறிப்பிட்ட உறுப்பின் மீது சிறிய அளவிலான மின்சாரம் பாய்வது போன்ற உணர்வு தென்பட ஆரம்பிக்கும் .அந்த உணர்வு வர ஆரம்பித்து விட்டாலே உங்களுக்கு வெற்றிதான் .

5 .மின்சாரம் பாய்வது போன்ற அந்த உணர்விலிருந்து கவனத்தை 3 நிமிடங்களுக்கு சிதற விடாதீர்கள் .3 நிமிடங்களுக்கு பிறகு அதிலிருந்து விடுபடலாம் .இப்போது பார்த்தீர்களானால் நீங்கள் கவனம் செலுத்திய அந்த உறுப்பின் மீது சக்தி அதிகரித்திருக்கும் .

6.இது போலவே  உடம்பிலுள்ள ஒவ்வொரு உறுப்புக்களுக்கும்  தனித்  தனியாக சக்தியளியுங்கள் .
      
         மீண்டும் ஒரு முறை குறிப்பிடுகிறேன் நீங்கள் எந்த உறுப்பின் மீது கவனம் செலுத்துகிறீர்களோ வேறு எங்கும் உங்கள் கவனம் செல்லக்கூடாது .சரியான சூழ் நிலையில் இப்பயிற்ச்சிகளை செய்து பயனடையுங்கள் .உடற்பயிற்சிகளால் கிடைக்கும் சக்தியை விட அதிக சக்தி இப்பயிற்சி மூலம் தங்களுக்கு கிடைப்பதை உணரலாம் .உடற்பயிற்சி செய்பவர்கள் இப்பயிற்சியை முடித்துவிட்டு உடற்பயிற்சி செய்யலாம் .இப்பயிர்ச்சிக்கு நேரம் ,இடம் என்று எதுவுமே கிடையாது .எந்நேரத்திலும் எவ்விடத்திலும் செய்யலாம் .இப்பொழுதே பயிற்ச்சியை ஆரம்பித்து பயனடையுங்கள்

கருத்துகள் இல்லை:

உடலில் இரத்தம் குறைவாக இருந்தால் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்.

இரத்த சோகை காரணமாக உடல் மிகவும் பலவீனமாக தோன்றும். எப்போதும் சோர்வாக இருக்கும். அடிக்கடி தலைவலி ஏற்படும். உடலில் ரத்தம் குறைவாக இருக்கும்ப...

Popular Posts