லேபிள்கள்

ஞாயிறு, 9 மார்ச், 2014

குதிகால் செருப்பு வாங்கப் போறீங்களா?

குதிகால் செருப்பு வாங்கப் போறீங்களா?
குட்டையான பெண்கள், தங்களுக்கு உயரமும், கம்பீரமான தோற்றமும் கிடைக்க வேண்டுமென்பதற்காக, உயரமான குதிகால் செருப்புகளை தேடி, அதிக விலை கொடுத்து வாங்கி அணிகின்றனர். கூடவே, அசவுகரியம் மற்றும் ஆரோக்கிய சீர்கேட்டையும் சந்திக்கின்றனர்.

* குதிகால் செருப்பணியும் ஐம்பது சதவீத பெண்கள், காலில் சுளுக்கு மற்றும் குதிகால் வலியால் அவதிப்படுவதுண்டு.
* குதிகாலின் பின்பக்கம், சிலருக்கு சிவந்து வீங்கிஇருக்கும். அவர்களது காயம் வெளியே தெரியாமல், குதிகாலின் உள்ளெலும்பில் கீறலோ அல்லது முறிவோ ஏற்பட்டிருக்கலாம்.
* இயல்பு நிலை பாதிக்கும் வண்ணம், குதிகால் நரம்பு விண்விண்ணென தெறிக் கிற மாதிரி, "நியுரோமா' எனப்படும் கடுமையான வலி எற்படும்.
* குதிகால் செருப்புகளை நீண்டநேரம் அணியும் போது, குதிகால் தசை நார் சுருங்கிப் போகும். அதிக உயரமான செருப்புகளை நீண்ட நேரம் அணியும்போது, முதுகுத் தண்டில் விரிசல் ஏற்பட்டு, அதிக அழுத்தம் ஏற்படுவதுடன், முழங்கால் மூட்டுவலியும் ஏற்படும்.

பாதிப்பு ஏதும் ஏற்படாமல் இருக்க...
* உங்கள் கால் அளவை, சரியாக தெரிந்து, அதற்கு பொருத்தமான, அதிக உயரமில்லாத குதிகால் செருப்புகளை தேர்ந்தெடுங்கள். கம்பெனி பெயர் மற்றும் செருப்பின் புற அழகில் மயங்கி, உங்கள் கால் அளவிற்குப் பொருந்தாத செருப்புகளை வாங்காதீர்கள்.
* நீங்கள் அதிக உயரமாக தெரிய வேண்டும் என்பதற்காக, அளவுக்கு மீறிய உயரமுள்ள செருப்புகளை வாங்காதீர்கள். மிக உயரமான குதிகால் செருப்புகளே அதிக பிரச்னையை ஏற்படுத்தும்.

* இரண்டு அங்குல உயரம் கொண்ட, குட்டையான குதிகால் செருப்புகளே ஆபத்தில்லாதவை; பாதுகாப்பானவை.
* குதிகால் செருப்பின் உள்ளிருக்கும், "சோல்' ரப்பரால் ஆனதுதானா என்று பார்த்து வாங்குங்கள். ரப்பர் சோல்தான், கால் வழுக்காமல் சிரமமின்றி நடக்க பாதுகாப்பானதாக இருக்கும்.

* செருப்பின் அடிப்பாகம், மேற்பகுதி மற்றும் ஓரங்களின் லைனிங், செயற்கையான "வினைல்' போன்ற சிந்தடிக் பைபரில் செய்யப்படாமல், இயற்கையான தோலினால் செய்யப்பட்டுள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும்.
* தோல் செருப்புகளே ஈரத்தை உறிஞ்சும் தன்மை கொண்டவை. அவைதான், காலிற்கு காற்றோட்டமாக அமைந்து, பாதுகாப்பு தரும்.

* பகல் முழுவதும், நடந்து, நடந்து வேலை முடித்து, மாலையில் வீடு திரும்பும் போது, கால் சற்று வீக்கத்துடன் காணப்படும். எனவே, செருப்பு வாங்க, காலை நேரத்தை விட, மாலை நேரம் பொருத்தமானது.
* செருப்பின் முன்பகுதி, மேற்புறம் முழுவதும் மூடியிராமல், அங்கங்கே காற்று புகும்படி, திறந்த வெளியாக இருக்க வேண்டும்.
* அதிக நேரம் குதிகால் செருப்பணியாமல், குறைந்த நேரம் மட்டுமே உபயோகப்படுத்துங்கள். அழகை விட, பாதுகாப்பான உடல் ஆரோக்கியம் முக்கியம்.
* குதிகால் செருப்பு, காலில் நன்றாகப் பொருந்தும் வண்ணம் வடிவமைப்பு வேண்டும்; அதுவே ஆரோக்கியமானது.

நடக்கும் போது கவனிக்க வேண்டியவை:
* கைகளை முன்னும் பின்னும் நீட்டியசைத்து, உடல் எடையை சமநிலை செய்து விட்டு, நடந்து பழக வேண்டும்.
* குதிகால் செருப்பணிந்தவர்கள், கால்களை எட்டி நடக்காமல் குறுகிய இடைவெளியில், கால்களை எடுத்து வைக்க வேண்டும்.

* மாடிப்படியேறும் போது முன்னங்காலும், குதிகாலும் படியில் ஒன்றுபோல் சமமாகப் பதித்து ஏற வேண்டும். அதேபோல், கீழிறங்கும் போது, காலின் முற்பாதம் மட்டும் படியில் பதியும்படி கவனமாக நடந்து கீழிறங்க வேண்டும்.
* கால் பாதங்களில் வெந்நீரையும், தண்ணீரையும் மாற்றி, மாற்றி ஊற்றிக் கழுவித் துடைத்தால், குதிகால் வலியின்றி சுகமாக இருக்கும்.

* கால்நீட்டி கீழே உட்கார்ந்து, சிறிய பந்தின் மேற்பகுதியில், கால் பாதங்களை அழுத்தி உருட்டுதல், சிறிய கோலிகளை தரையில் போட்டு அவற்றை கால் பாதங்களின், முற்பகுதி விரல் இடுக்கில் அகப்படச் செய்து எடுத்தல் போன்றவை, குதிகால் செருப்பு அணிபவர்களின் கால்களுக்கு நல்ல பயிற்சியாகும்.


--
*more articles click*
www.sahabudeen.com


கருத்துகள் இல்லை:

கொசுவை அடித்தால்சிவப்பாக இரத்தம் வருகிறது. எறும்பை அடித்தால் சிவப்பாக இரத்தம் வருவதில்லை. ஏன்?

கொசுவை அடித்தாலும் எறும்பை அடித்தாலும் சிவப்பாக ரத்தம் வராது. பூச்சிகளில் இருக்கும் உயிர் திரவத்துக்கு ' குருதிநிணம்" என்று ப...

Popular Posts