லேபிள்கள்

சனி, 8 மார்ச், 2014

ஹஜ்ஜின் சட்டமும் சிறப்பும்

ஹஜ்ஜின் சட்டமும் சிறப்பும்

ஹஜ், முஸ்லிமான ஆண், பெண் அனைவர் மீதும் வாழ்நாளில் ஒருமுறை கடமையாகும். இது இஸ்லாமியக் கடமைகளில் ஐந்தாவது கடமையாகும். அல்லாஹ் கூறுகிறான் அதற்கு (செல் வதற்கு)ரிய பாதையில் பயணம் செய் யச் சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது கடமையாகும். (3 : 97)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இஸ்லாம் ஐந்து காரியங்கள் மீது அமைக் கப்பட்டுள்ளது. அவை வணக்கத்துக்குரிய வன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரு மில்லை.
நிச்சயமாக முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதரா வார்கள். எனச் சாட்சி பகர்வது, தொழு கையை நிலை நிறுத்துவது, ஸகாத் கொடுப்பது, ரமழான் மாதம் நோன்பு நோற்பது, கண்ணியமிக்க அல்லாஹ்வின் வீட்டிற்குச் சென்றுவர சக்தி பெற்றவர் ஹஜ் வெய்வது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். யார் பெண்களிடத்தில் உறவாடாமலும் பாவம் செய்யாமலும் இந்த வீட்டை ஹஜ் செய்கிறாரோ அவர் (பாவங்கள் அழிக்கப்பட்டு) அன்று பிறந்த பாலகன் போலாகிவிடுகிறார். (அல்-ஹதீஸ்)
ஹஜ் வயது வந்த புத்தி சுவாதீனமுள்ள சக்தி பெற்ற அனைத்து முஸ்லிம்களுக்கும் கடமையாகும். சக்தி பெறுவதென்பது சென்று வருவதற்கும் வாகனச் செலவிடும் சக்தி பெறுவதாகும்.
உதாரணமாக சென்று வரும் வழியில் உணவு, நீர், உடை, வாகனம் ஆகியவற்றிற்குச் செலவு செய்யச் சக்தி பெற்றவனாக இருப்பது போல இச்செலவு தனது குடும்பத்தின ருக்கும் தனது செலவின் கீழுள்ளவர் களுக்கும் போக மேல் மிச்சமானதாக இருக்கவேண்டும் இதுபோனறே ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்குத் தடை யாக நோய் போன்ற இடையூறில்லாமல் உடல் ஆரோக்கியமாகவும் பயணம் செய்யும் பாதை பயமற்றதாகவும் இருக்க வேண்டும்.
பெண்களுக்கும் இதே நிபந்தனைதான். என்றாலும் அவளுடன் அவளுடைய கணவர் அல்லாது அவள் மணம் முடி த்துக்கொள்ள ஹராமாக்கப்பட்ட ஒரு வருடன் செல்வது அவசியமாகும்.
இன் னும் அவள் இத்தாவிலிருக்கும் பெண் ணாகவுமிருக்கக் கூடாது. ஏனெனில் இத்தாவிலிருக்கும் பெண்கள் அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியே செல்வதை அல்லாஹ் தடுத்துள்ளான். எனவே யாருக்கேனும் இத்தடைகளில் ஒரு தடையிருக்குமானால் அவருக்கு ஹஜ் கடமையில்லை.


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

Paneer: பன்னீரை சமைத்து சாப்பிடுவது நல்லதா? நிபுணர்கள் கூறுவது என்ன?

Paneer Health Benefits: ஆரோக்கியமான பால் உணவான பன்னீர் , அனைவராலும் விரும்பப்படும் ஒரு உணவாக உள்ளது. ஆனால் , பன்னீர் சாப்பிடும் சரியான ம...

Popular Posts