லேபிள்கள்

திங்கள், 3 மார்ச், 2014

தோலைத் தூக்கிப் போடாதீங்க

தோலைத் தூக்கிப் போடாதீங்க

சத்தான உணவைத் தேர்ந்தெடுத்து உண்பது மட்டுமா, அதை எந்த விதத்தில் சாப்பிடுகிறோம் என்பதும் மிகவும் முக்கியம். பழங்களை வாங்கியவுடன் நாம் முதலில் செய்யும் வேலை பழத்தின் தோல்களை நீக்குவதுதான். தோல்கள் என்றாலே தேவையற்றவை என்று நம் மனதில் பதிந்துபோனதன் விளைவு இது. பழத் தோல்களின் பலன்களைச் சொல்கிறார் காரைக்குடியைச் சேர்ந்த உணவியல் நிபுணர் ஷில்பி பிஸ்த்ரி.   

''பொதுவாகவே பழங்களின் உட்பகுதியைவிடத் தோலில்தான் அதிக அளவு சத்துக்கள் இருக்கும். அதிலும், சப்போட்டா, மாம்பழம், கொய்யா, திராட்சை, ஆப்பிள் போன்ற பழங்களின் தோல்களில் அதிக அளவு சத்துக்கள் அடங்கி இருக்கின்றன.

ஆப்பிள் தோலில் கால்சியம் மற்றும் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளன. டயட் மேற்கொள்பவர்களுக்கு ஏற்ற அதிகமான நார்ச் சத்தும், ஆன்டிஆக்சிடென்ட்களும் இருப்பதால் செல்கள் வலுவடைந்து, இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. மேலும், தோல் நீக்கப்படாத ஆப்பிள் பழத்தில் இருந்து எடுக்கப்படும் பழச்சாறு ரத்தத்தை சுத்தம் செய்து, ரத்தத்தில் கலந்துள்ள அமிலத்தன்மையை நீர்த்துப்போகச் செய்யும்.

கொய்யாப் பழத்தைத் தோலுடன் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சருமத்துக்குப் பொலிவையும் அழகையும் கூட்டுவதுடன் தோல் வறட்சியையும் போக்கும்.  
ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கும் வல்லமை மாம்பழத் தோலுக்கு உண்டு. நீரழிவு நோயாளிகள் மாம்பழத்தைத் தோலுடன் சாப்பிடுவது நல்லது.

கிவி பழத் தோலில் வைட்டமின்கள், கனிமச் சத்துகள் மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட் அதிகமாக இருப்பதால், இதய நோய் வராமல் பாதுகாக்கும்.

வாழைப்பழத் தோலில் அதிக அளவு நார்ச் சத்தும், கால்சியமும் உள்ளன. மூட்டு வலி உள்ளவர்கள் தோலுடன் சேர்த்து பழத்தைச் சாப்பிட்டுவர, மூட்டுவலி சரிய£கும். கொஞ்சம் கசப்புத்தன்மை இருக்கும் என்பதால், தேன் கலந்து சாப்பிடலாம்.

திராட்சையைத் தோலுடன் சாப்பிடும்போது, ரத்த உற்பத்தி அதிகரிக்கும். மலச்சிக்கலும் சரியாகும்.

மாதுளம் பழத் தோலை சூரிய ஒளியில் காயவைத்துப் பொடியாக்கி, வெண்ணெயுடன் சீரகம், உப்பு சேர்த்துக் கொதிக்கவைத்து உண்டுவர, நீண்ட நாள் வயிற்றுவலி சரியாகும். மாதுளம் தோல் பொடியினைப் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டால், நீரிழிவு நோய் குணமாகும்.

சப்போட்டாவின் தோலில் உள்ள சில வேதிப்பொருட்கள் உடலில் உள்ள காயங்களை விரைவில் குணப்படுத்தக்கூடியவை. உடலில் இருக்கும் தீங்கு செய்யும் பாக்டீரியாவையும் அவை அழிக்கும். சருமப் பிரச்னை, ஆறாத புண் இருப்பவர்கள் தோலுடன் எடுத்துக்கொள்ளலாம்.'' எனப் பட்டியலிடுகிறார் ஷில்பி பிஸ்த்ரி.

''பழங்களில் மட்டும் அல்ல... காய்கறிகளின் தோலிலும் அதிக அளவு சத்துக்கள் உண்டு'' என்கிறார் உணவியல் நிபுணர் லலிதா.

''காய்கறிகளில் உள்ள தோலை நேரடியாகச் சாப்பிட முடியாது. ஆனால், அவற்றை வைத்துத் துவையல் மற்றும் சாம்பார் செய்து சாப்பிடலாம். சருமப் பாதுகாப்புக்கும் பயன்படுத்தலாம்.

எலுமிச்சம்பழத் தோலில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. தோல் தொடர்பான நோய்களைப் போக்கி, சருமத்துக்குப் பளபளப்பைத் தரக்கூடியது. எலுமிச்சைத் தோலை அரைத்து, அத்துடன் உருளைக்கிழங்கு, எலுமிச்சை சாறு, சிகப்பு சந்தனம் ஆகியவற்றைச் சேர்த்து சுடுதண்ணீரில் கலந்து, முகத்தில் பூசி, மெல்லிய துணியால் மூடி, அரை மணி நேரம் கழித்துக் கழுவ வேண்டும். இதுபோன்று தொடர்ந்து செய்துவர முகச் சுருக்கங்கள் மறைந்து இளமைத் தோற்றம் கிடைக்கும். விரல் நகங்களை எலுமிச்சை தோலால் தேய்க்க, நகம் சுத்தமாகும்.

தக்காளிப் பழத்தைத் தோல் எடுக்காமல், அப்படியே சாப்பிடுவது ஏராளமான சக்தியைக் கொடுக்கும். தக்காளியின் தோலில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, மற்றும் கால்சியம் இருக்கின்றன.

உருளைக்கிழங்கைப் பெரும்பாலும் தோல் நீக்கித்தான் பயன்படுத்துகின்றனர். வேகவைத்தவுடன் தோலை நீக்காமல், அப்படியே பொரியல் செய்து சாப்பிடலாம். இதில் நார்ச்சத்து, பாஸ்பரஸ் அதிகம் உள்ளன. அதேபோல் முள்ளங்கியைத் தோலுடன் நறுக்கி, ஜூஸ் செய்து குடித்துவர, சிறுநீரகக் கற்கள் கரையும். சுரைக்காய், புடலங்காயைத் தோல் நீக்காமல் சாப்பிட்டு வர, தொப்பை குறையும்'' என்கிறார்.  

இனிமேல் தோலைத் தூக்கிப் போட மாட்டீங்கதானே?!


--
*more articles click*
www.sahabudeen.com


கருத்துகள் இல்லை:

நெட்டி முறிக்கும் பழக்கம் உடையவரா நீங்கள்?

நம்மில் பலருக்கும் நெட்டி முறிக்கும் பழக்கம் உள்ளது. இப்படி நெட்டி முறிக்கும் போது ஒரு விதமான நிவாரணம் கிடைப்பது போல் தோன்றும். மேலும் அந்...

Popular Posts