லேபிள்கள்

புதன், 12 மார்ச், 2014

ஹஜ் ருல் அஸ்வத்

ஹஜ் ருல் அஸ்வத்


ஹஜ்ருல் அஸ்வத் ஒரு ஸ¤வனத்தின் கல்லாகும். ஜிப்ரீல் (அலை) அவர்கள் அதனைக் கொண்டு வந்தார்கள். நூஹ் (அலை) அவர்களின் காலத்தில் ஏற்பட்ட தூபான் வெள்ளத்தின் பொழுது கஃபாவுக்கு பக்கத்தில் உள்ள அபூகுபைஸ் மலையின் மீது அது பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
இப்ராஹீம் (அலை) அவர்கள் கஃபாவை புனர்நிர்மாணம் செய்த வேலை கஃபாவை தவாப் செய்யும் ஆரம்ப இடமாக அடையாளம் காட்டுவதற்காக அது உரிய இடத்தில் வைக்கப்பட்டது.
அப்பொழுது அது வெண்ணிறமாகவும் அதன் பிரகாசம் கிழக்கு, மேற்கு, யமன், ஷாம் போன்ற பகுதிகளிலெல்லாம் ஒளிவீசியது.
பிற்காலத்தில் அமாலிகா, ஜுர்ஹும் போன்றவர்களின் காலங்களில் கஃபாவை புனர்நிர்மாணம் செய்தது போல் குறைஷியர்களும் புதுப்பித்த பொழுது ஹஜ்ருல் அஸ்வத்தை உரிய இடத்தில் வைக்கும் விடயத்தில் பெரும் தர்க்கம் ஏற்பட்டு பின் அடுத்த நாள் அதிகாலையில் கஃபா நுழைவாயிலினூடே முதன் முதலில் நுழைபவரே அதனை உரிய இடத்தில் வைக்க வேண்டுமென முடிவு செய்யப்பட்டது.
அதற்குப் பொருத்தமானவராக முஹம்மத் நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் தயார் செய்தான். என்றாலும் ஒற்றுமையை விரும்பிய நபியவர்கள், தானும் ஏனையோரும் சேர்ந்து ஒரு பிடவையை பயன்படுத்தி கல்லை அதிலே வைத்து எல்லோருமாக சேர்ந்து வைத்தனர். இது நடைபெற்றது சிறப்புமிக்க திங்கட்கிழமையில் ஆகும். அப்போது நபியவர்களுக்கு 35 வயதாகும்.
இஸ்லாத்திற்கு முன்னறும் பின்னரும் அப்துல்லாஹ் பின் துபைர் (ரழி) அவர்களின் காலத்திலும் ஏற்பட்ட தீவிபத்துக்கள் மூலம் இக்கல் சேதமுற்று வெள்ளி பூசி சீர் திருத்தப்பட்டது. ஹிஜ்ரி 188 இல் கலீபா ஹாருன் ரiத் அவர்களுடைய காலத்தில் மீண்டும் வெள்ளி பூசி சீர் செய்யப்பட்டது.
ஹிஜ்ரி 317 இல் திர்மித் என்பவனின் பரம்பரையில் வந்த கராமிதா என்ற கொடியவன் அதனை சேதப்படுத்த மீண்டும் ஹிஜ்ரி 339 செவ்வாயன்று உரிய இடத்தில் வைத்து சரிசெய்யப்பட்டது. ஹிஜ்ரி 363 இல் மீண்டும் ரூம் தேசத்தை சேர்ந்த ஒருவன் பெரும் பணத்திற்கு அடிமைப்பட்டு அதனை சேதப்படுத்தினான். ஹிஜ்ரி (413, 990, 135) ஆகிய காலப்பகுதிகளில் கூட இஸ்லாத்தின் விரோதிகள் அதனை சேதப்படுத்த இறுதியாக ஹிஜ்ரி 1375 ஷஃபான் மாதம் பிறை 22 புதன்கிழமை மஃரிபிற்கு சற்று முன்பு உரிய இடத்தில் வைக்கப்பட அது இன்று வரை நிலைத்திருக்கிறது.
ஹஜ்ருல் அஸ்வத் கல்லிற்கு ருக்ன் என்றுமொரு பெயருள்ளது.
பாலை விடவும் வெண்மையாக இருந்த அந்தக் கல்லை இணைவைப்பவர்களின் பாவச் செயல்கள் கறுப்பாக்கியது. இணைவைப்பவர்களால் ஏற்பட்ட கறுப்பை அல்லாஹ் ஈமான் உள்ளவர்களின் நன்மைகள் மூலம் வெண்ணிறம் ஆக்காது வைத்திருப்பதன் காரணமாவது 'பாவங்கள் கல்லையே கறுப்பாக்கியுள்ளது. அப்படியென்றால் பாவங்களினால் கல்புகள் (உள்ளங்கள்) எவ்வளவு கறுப்படையும்' என்பதை பின்னோர் உணர்வதற்கே!
பிரார்த்தனையில் ஈடுபடுபவர்களுக்கு ஆமீன் சொல்வதற்காக 70 மலக்குகளை அல்லாஹ் பொறுப்பு சாட்டியுள்ளான். (அல்ஹதீஸ்)
அது ஸ¤வனத்திலிருந்து வந்தது போல் மீண்டும் ஒருநாள் அங்கேயே கொண்டு செல்லப்படும். அதற்கு முன்னர் நீங்கள் அதனால் பயன்பெற்றுக் கொள்வீர். (அல்ஹதீஸ்)
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உட்பட எல்லா நபிமார்களும் முத்தமிட்ட அக்கல்லை நம்முடைய முகமும், வாயும் எவ்வளவு பாசத்துடன் முத்தமிட வேண்டும்.
ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிடுவது பாவங்களுக்கு பரிகாரமாகும். உண்மையான நல்ல எண்ணத்துடன் முத்தமிட்டவர்களுக்கு சாட்சி பகரும் வகையில் மறுமை நாளில் இதற்கு நாவும் இரு உதடுகளும் கொடுக்கப்படும். இக்கல்லின் பக்கமாக கேட்கும் துஆ அங்கீகாரம் பெரும். மலக்குகளும் இக்கல்லை முத்தமிடுகிறார்கள். (அல்ஹதீஸ்) ஹஜ்ருல் அஸ்வத்தை எப்பொழுதும் முத்தமிடுவது விரும்பத்தக்க நல்ல காரியமாகும்.


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

சில எளிய சமையலறைக் குறிப்புகள்

ஐடியா - 1 : சமைக்கும்போது கனம் குறைவான கரண்டியை பயன்படுத்துவது நல்லது. கனமான கரண்டியை பயன்பட...

Popular Posts