லேபிள்கள்

ஞாயிறு, 29 மே, 2011

உடலை சார்ஜ் செய்வது எப்படி? பாகம் -2


உடலை சார்ஜ் செய்வது எப்படி? பாகம் -2

        முந்தைய  பதிவில் நம் உடலை ஏன் சார்ஜ் செய்ய வேண்டும்,அதனால் உண்டாகும் பலன்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொண்டோம்.இப்போது இந்த கருத்துக்களை சொல்லியிருக்கும் ஆசிரியரை தெரிந்து கொள்வோம் .பிரபல அமெரிக்க உளவியல் அறிஞரான DR RICHARD LAWRENCE என்பவர் தனது நூலில் இது பற்றி தெளிவாக விளக்கியுள்ளார் .இதில் இன்னொரு  விஷயமும் உள்ளது . இவர் இந்த பயிற்சிகளை இந்தியாவிலுள்ள சுவாமி விவேகானந்தர் மற்றும் சுவாமி சிவானந்தர் ஆகியோரது நூல்களிலிருந்து  கற்றதாக குறிப்பிட்டுள்ளார் .
        பொதுவாக உளவியல் அறிஞர்கள் எடுத்துரைக்கும் பயிற்சிகள் சற்று கடினமாக இருக்கும் .மாறாக இப்பயிற்சிகள் மிகவும் எளிமையாகவும் அதிக பலன்  தரக்கூடியவையாகவும் உள்ளன .இதை செய்யும் அனைவருக்கும் மிக்க பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
         சரி இப்போது  விஷயத்துக்கு வருவோம் .பொதுவாக சார்ஜ் என்ற சொல்லை கேட்டவுடன் நமக்கு நினைவுக்கு வருவது மின்சாரம்தான் .ஆனால் நாம் மின்சாரத்தை கொண்டு உடலை சார்ஜ் செய்யவேண்டியதில்லை .இந்த பிரபஞ்சத்தின் அனைத்து இடங்களிலும் பரவியிருக்கும் பிரபஞ்ச சக்தியை கொண்டு நமது உடலுக்கு சக்தியளிக்க போகிறோம் .
         பிரபஞ்சத்தில் உள்ள காற்று ,நீர் ,சூரிய ஒளி ஆகியவை நமது வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அறிவோம் .இந்த மூன்று ஆதாரத்தையும் கொண்டுதான் தாவரங்கள் ,மரங்கள் வாழ்கின்றன,வளர்கின்றன .பிரபஞ்ச சக்தியை கிரகித்து அவை தங்களது வாழ்க்கைக்கு பயன்படுத்துகின்றன .முற்காலத்தில் வாழ்ந்த முனிவர்கள் பலர் இப்பிரபஞ்ச சக்தியின் துணையோடுதான் உணவருந்தாமல் அதிக சக்தி மிக்கவர்களாக வாழ்ந்திருக்கிறார்கள் .அதற்காக நாமும் முனிவர்களாக மாறவேண்டிய அவசியம் இல்லை .தற்போதைய வாழ்க்கை சூழ் நிலையில் இப்பிரபஞ்ச சக்தியை எப்படி பயன்படுத்துவது என்பதைத்தான் இப்போது அறிந்துகொள்ள போகிறோம் .
         பிரபஞ்சம் எப்படி சக்தி மிகுந்ததாக உள்ளதோ அது போலத்தான் நமது உடலிலும் கண்ணுக்கு புலனாகாத ஒரு சக்தி உள்ளது .இந்த சக்தி அதிகமாக கொண்டுள்ளவர்கள் மெலிவான தோற்றமுடையவர்களாக இருந்தாலும் ஆற்றல் மிக்கவர்களாக விளங்குகிறார்கள் .உதாரணமாக  புரூஸ்லீயை எடுத்துக்கொள்ளலாம் .சக்தி குறைவாக உள்ளவர்கள் நல்ல உடல் வாகு கொண்டவர்களாக தோன்றினாலும் ஆற்றல் இல்லாதவர்களாக இருக்கிறார்கள் .நாம் பயிலப்போகும் பயிற்சி பிரபஞ்சத்தில் உள்ள அள்ள அள்ள குறையாத சக்தியை நமது உடலால் கிரகிப்பதை  பற்றி .
       இந்த பதிவும் சற்று நீண்டுவிட்டது .எனவே பயிற்சிகள் பற்றிய மேலும் விபரங்களுக்கு அடுத்த பதிவு வரை உங்களை காத்திருக்க வைப்பதற்கு வருந்துகிறேன் .மீண்டும் சந்திப்போம் .........(தொடரும்)

கருத்துகள் இல்லை:

நெட்டி முறிக்கும் பழக்கம் உடையவரா நீங்கள்?

நம்மில் பலருக்கும் நெட்டி முறிக்கும் பழக்கம் உள்ளது. இப்படி நெட்டி முறிக்கும் போது ஒரு விதமான நிவாரணம் கிடைப்பது போல் தோன்றும். மேலும் அந்...

Popular Posts