லேபிள்கள்

ஞாயிறு, 8 மே, 2011

குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது கவனிக்க வேண்டியவை :

குழந்தைகளுக்கு  மருந்து தரும் முன்  இரண்டு  விசயங்களை  நாம் கவனிக்க வேண்டும் I .வயது  II .எடை 

எடை பார்க்காமல் எப்பொழுதும் மருந்து தர கூடாது.

அதே போல்  வயதும்  மிக முக்கிய காரணி ஆகும் .பல  மருந்துகளின்  அளவும் ,பயன்பாடும் வயதை பொருத்து மாறும் .

குழந்தைகளை உட்கார  வைத்தே மருந்து   தருவது நல்லது .படுக்க வைத்து  தரும் போது புரை  ஏறுதல்  என்று சொல்லப்படும்  மூக்கின் வழியாக ஊறிஞ்ச பட வாய்ப்பு உள்ளது .

மருந்து  கொடுக்கும் முன்  அதை  தருபவர் கைகளை  நன்கு சுத்தம்  செய்து கொள்ளவேண்டும் .

அளவுகள் :

குழந்தைகளின்  எடைக்கு  ஏற்பவே  மருந்துகளை  தரவேண்டும் .   மருத்துவர் சொன்ன அளவை  சொன்ன நேரத்தில் தந்தால் நல்லது .

ஒரு சி.சி  என்பது  - ஒரு மிலி 

ஒரு டீ ஸ்பூன்  என்பது  -5  மிலி

அரை  டீ ஸ்பூன்  என்பது -2 .5  மிலி 

ஒரு டேபிள்  ஸ்பூன்  என்பது -15  மிலி 
(டீ யை  விட  டேபிள்  தான் பெருசு )

dropper  எனப்படும்  சொட்டு மருந்து போடும்  குழல் உபயோகிக்கும் போது  மிகவும் கவனமுடன் இருக்கவேண்டும் .

சொட்டுகுழலில் (dropper )  ஒரு மிலி  என்பது  15 -20  சொட்டுகள்  ஆகும் .

குழலின்  முழு அளவு  ஒரு மில்லி  ஆகும் .

குழலின் பாதி அளவு அரை மிலி ஆகும் .

மருத்துவர் எந்த அளவை குறிப்பிட்டு உள்ளார் என  கவனித்து  மருந்து  தரவேண்டும் .

மிலி அளவில் குறிப்பிட்டு உள்ளாரா? அல்லது சொட்டு எண்ணிகையில்  குறிப்பிட்டு உள்ளாரா என கவனிக்க வேண்டும் .

அதாவது  ௦.5  மிலி  என்பது  எண்ணிகையில்  10  சொட்டுக்கு சமம் .

ஒரு மில்லி  என்பது  எண்ணிகையில் 15 -20  சொட்டுக்கு சமம் .

(நீர் போன்ற நீர்த்த மருந்துகள் ஒரு மில்லி 20  சொட்டும் , சற்றே கூழ்  போன்ற மருந்துகள்  15  சொட்டும் இருக்கும் )

பாட்டில் மூடியில்  உள்ள  அளவுகள் சில நேரம்  மாறலாம் .எனவே நாம் மருந்துகளை  அளக்க  சுத்தமான  புது  சிரிஞ்  கொண்டு அளந்தால்  அளவு எப்பொழுதும் சரியாக இருக்கும் .

மருத்துகளை தோரயமாக  அளக்காமல் சரியாக அளந்து  தரவேண்டும் . மருத்துவர் எடை பார்த்தே  மருந்து  தருகிறார் .எனவே அவர் எழுதிய  அளவை சரியாக தரவும் .

குறைவாக  கொடுத்தால் மருதின் வீரியம்  சரியான அளவில் கிடைக்காது .

அதேபோல்  எத்தனை வேளை கொடுக்க சொல்லி உள்ளதோ  அத்தனை வேளை  தரவும் (எந்த முக்கிய வேலை இருந்தாலும் ).

சுரத்திற்கு  தரப்படும்  பாரசிடமால்  மருந்தை 4 -6  மணி நேரத்திற்கு  ஒரு முறை தரலாம் .
http://doctorrajmohan.blogspot.com/2010/07/fever-in-children.html

ஆன்டி பயாடிக் மருந்துகளை  மருத்துவர் சொல்லும் நாள் வரை தரவேண்டும் .குறைந்தது 3 -5  நாள் வரை  தரவேண்டும் ஜுரம்  நின்றாலும்  இதனை  தொடர்ந்து தரவேண்டும் .

dry syrup  எனப்படும்  பொடி மருந்துகளை உபயோகிக்கும் போது அதில் குறிப்பிட்ட அளவு வரை சுத்தமான தண்ணீர்  கலந்த பின்பே  உபயோகிக்க வேண்டும் .


சிலர்  அவ்வப்போது  பொடியை  எடுத்து அதில் சிறிது  தண்ணீர் கலந்து கொடுக்கும்  பழக்கத்தை  செய்கின்றனர் .இது தவறு . தண்ணீர் கலந்த பிறகு  4 -7  நாட்கள்  மட்டுமே வைத்திருக்கலாம் .
இதை பற்றி  மருந்து பாட்டிலின்  உரையில் குறிப்பிட பட்டிருக்கும் . 

ஒரு முறை வாங்கிய  மருந்தை மீண்டும் மீண்டும்  மருத்துவரை கேட்காமல்  தரக்கூடாது .

சில மருந்துகளை திறந்தபின்  குறிப்பிட்ட  நாள்கள்  தாண்டி கொடுக்க கூடாது . காலாவதி  தேதி  முடியாவிட்டாலும்  திறந்த ஒரு மாதத்திற்கு பிறகு உபயோகிக்க கூடாது .

சில தடை  செய்யப்பட்ட  மருந்துகள்  கடைகளில்  கிடைகின்றன .எனவே மருத்துவர் ஆலோசனை  இல்லாமல் சுய மருத்துவம் செய்யகூடாது . 

உதாரணமாக நிமுசுலைட் என்ற  மருந்தை 
  குழந்தைகளுக்கு கொடுக்ககூடாது  என்று தடை செய்தும்  அது  மருந்து கடைகளில் இன்றும் கிடைகிறது 
http://doctorrajmohan.blogspot.com/2010/07/nimesulide-nimesulide.html

அதே போல் லோப்ரமைட் என்ற வயிற்று போக்கை நிறுத்தும்  மருந்தை 12  வயதுக்கு குறைந்த  குழந்தைகளுக்கு  உபயோகிக்க கூடாது .ஆனால் இதுவும்  தவறாக  பயன்படுத்த படுகிறது .

baby walkers உபயோக படுத்தலாமா? கூடாதா?

BABY WALKERS  எனப்படும்  நடை பயிற்சி  கருவியை  உபயோக  படுத்துவதால்  மட்டும்  குழந்தை  சீக்கிரம்  நடக்கும் என்று சொல்லி விட முடியாது . குழந்தையின்  வயதிற்கு  ஏற்பவே  நடக்கும் . 

        ஆனால்  BABY WALKER  உபயோக  படுத்தினால்  குழந்தைக்கு கால்  வலி வர வாய்ப்பு   உள்ளது , ஏனெனில்  வாகேரில்  அது  அளவுக்கு  அதிகமாக  நடக்க  முயற்சி  செய்யும் . மேலும்  மிக வேகமாக  நகர்வதால்  (ஒரு வினாடிக்கு  மூன்று அடி )  அடி பட வாய்ப்பு உள்ளது .
INJURIES:
எலும்பு  முறிவு , தலையில்  பலத்த காயம்  ஏற்பட வாய்ப்பு உள்ளது 

கழிவுஅறை, நீச்சல்  குளம் , போன்ற  இடங்களுக்கு  சென்று  நீரில் மூழ்க  வாய்ப்பு உள்ளது 

கால் விரல் , குதி காலில் காயமும் , எலும்பு முறிவும் ஏற்பட  வாய்ப்பு  உள்ளது .

எனவே  BABY WALKER முடிந்த வரை  தவிர்ப்பது  நல்லது . 

குழந்தைகள் பார்வையை பாதுகாக்க :

படிக்கும் போதும் , டிவி  பார்க்கும் போதும்  நேராக  உட்கார்ந்தே  பார்க்க வேண்டும் , குப்புற படுத்தோ, மல்லாக்க  படுத்தோ பார்க்க கூடாது .

டிவி , கணினி  பார்க்கும் போது நேராக பார்க்க வேண்டும் , சாய்வான  கோணத்தில் பார்க்க கூடாது .

படிக்கும் போதும் ,கணினி பார்க்கும் போது, டிவி பார்க்கும் போதும்  அரை மணி நேரத்திற்கு  ஒரு முறை  அரை நொடி கண்களை மூடி  ஓய்வு  எடுக்கவேண்டும் .

சரியான அளவில்  வெளிச்சம்  இருக்க வேண்டும் , அதிகமான வெளிச்சத்தில் கண்களின் ரெட்டின பாதிப்படையும் , குறைவான வெளிச்சத்தில்  கருவிழி  தசைகள்  சோர்வடையும் . பொதுவாக  படிப்பதற்கு  குழல்  விளக்கை விட குண்டு பல்பு  சிறந்தது  என்று    ஒரு ஆய்வு  கூறுகிறது .

அதி காலையில் படிக்கும்  பழக்கத்தை  ஏற்படுத்த வேண்டும் , ஏன் எனில்  கண்கள்  புத்துணர்ச்சியுடன் இருக்கும் . நள்ளிரவில் படிக்கும் போது  கண் தசைகள் வலுவிழந்து  போகும். ( early to bed, early to rise)

வாகனத்தில்  போகும் போது  படிப்பதை தவிர்க்க வேண்டும் . கண்களுக்கு  அதிகபடியான  அழுத்தத்தை தரும் . ( விமானத்தில் படிக்கலாம் )

குழந்தைகளுக்கு டயாபர் உபயோகிக்கும் முறை :

மூன்று மணி நேரத்திற்கு  ஒரு முறை  மாற்றவேண்டும்

வீட்டில் உள்ளபோது  உபயோகிக்க வேண்டாம் 

 வெளியில்  செல்லும் போதும் , பயணங்களின்  போதும் உபயோகிக்கலாம் 

தொடர்ந்து மாற்றாமல்  இருந்தால்  டயாபர்  ரேஷ் எனப்படும்  allergy  ஏற்படும் 

ஆண்  குழந்தைகளுக்கு  இறுக்கமாக  போடகூடாது , இதனால் விரைப்பையின் வெப்பநிலை உயர்ந்து  பின்  நாட்களில் விந்து அணு  குறைபாடு  ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது .

துணி  diaper  சிறந்தது  என  ஆய்வு  அறிக்கை  தெரிவிக்கிறது . எனவே   வீட்டிலேயே   சுத்தமான  புது  துணியை  பயன்படுத்தலாம் .

துணியை   துவைத்தபின்   டெட்டோல் போன்ற  கிருமி  நாசினிகளை  உபயோகித்தால் குழந்தைகளுக்கு  அலர்ஜி  ஏற்படக்கூடும் .

குழந்தையின் ஜிப்பில் மாட்டிய ஆண் உறுப்பை எடுப்பது எப்படி ?

 சிறு  குழந்தைகள்  அவசரமாக  பாண்டை கழட்டும்போது  ஜிப்பில்  மாட்டிகொள்வது என்பது ஒரு அவசர  நிலை ஆகும் , பதட்டபடாமல்  வீட்டிலேயே அதை  விடுவிக்கும் முறைகள் கீழே: 

ஆணுறுப்பின்  முன் தோலே  பெரும்பாலும்  மாட்டிகொள்ளும்,  அது ஜிப்பின் 
பல்லுக்கு  இடையே மட்டும்  உள்ளதா? அல்லது ஜிப்பிற்கும் அதன் மேல் உள்ள இழுபானுக்கும்     இடையே உள்ளதா என்று பார்க்க வேண்டும் . 


பல்லுக்கு  இடையே மட்டும் இருந்தால் :

  

முதலில்  ஜிப்பை  பான்டில் இருந்து  கத்தரித்து எடுக்கவேண்டும் . (பான்ட் போனால் போகட்டும் போடா )  இப்பொது முன் தோளோடு ஜிப் மட்டுமே இருக்கும் 
பிறகு  1  என்ற இடத்தில கட்  செய்யவேண்டும் . அதன் வழியே  இழுபனை விடுவிக்க 


வேண்டும் . அதன் பின்  பல் பகுதியை விரித்தால் தோல்  விடுபடும் 













பல்லுக்கும்  இழுப்பனுக்கும்  இடையே மாட்டிக்கொண்டால் :


The Chomp and Squeeze Method:



இந்த முறையில்  கட்டிங் பிளேயர் கொண்டு  இரு முனைகளையும் கட் 
செய்த பிறகு  இழுபானின்  இரு  புறம் அழுத்த வேண்டும் இதன் மூலம்  
தளர்வாகி விடுபடும் . 
  
  
  
  
 Screw- driver Method: 




     ஒரு பெரிய  ஸ்க்ரு  டிரைவரை  இழுபனின் இரு முனைகளுக்கு இடையே விட்டு  நெம்பவேண்டும்.சாதாரணமாக   முன் தோல் ஒரு புறமே  மாட்டி இருக்கும் , எனவே ஆதற்கு எதிர் புறம் நேம்புவதால்  எளுதில் விடுபடும் . 
  
 இனொரு  முறையில்  இழுபனின்  நடு பகுதியை  கட்டிங் பிளேயர்  கொண்டு  நறுகுவதன் மூலம் செய்யலாம் , இது மிக கவனமுடன் செய்ய வேண்டும் . 
  
  
உங்களால் ஒரு முறையில் முடியவில்லை எனில் உடன் மருத்துவரை  அணுகவும் .  பான்டில் இருந்து ஜிப்பை மட்டும்  வெட்டில் பிரித்து அழைத்து வந்தால்  அதிக சேதாரத்தை தவிர்க்கலாம் 

குழந்தைகளுக்கு வரும் காது வலி :

 காது வலி வர  முக்கியமான  காரணம்  சளி பிடிப்பதும் , பாட்டில்  பால் தருவதும் ஆகும் .  வலி  வந்தால்  குழந்தை விடாமல் அழுது  கொண்டே  இருக்கும் . காது மடலை  தொட்டால்  வலி அதிகமாகும் . 

மூக்கை   சிந்துவதால்  காதின் உள்ளே  அழுத்தம்  அதிகரிப்பதால்  காது வலி  அதிகமாகும் . எனவே  சிந்தாமல்  துடைத்துவிட  வேண்டும் .

காதுக்கு  பட்ஸ்  போடவே  கூடாது . அப்படி செய்தால்  வெளியே உள்ள  அழுக்கு  உள்ளே தள்ள படுமே  தவிர  வெளியே  வராது. பஞ்சை  கொண்டு  விளக்கு திரி போல திரித்து  துடைத்து  எடுக்க வேண்டும் .


தாய்ப்பால் படுத்து கொண்டு   தரக்கூடாது , குழந்தையின்   தொண்டைக்கும்  நடு காதிற்கும் (middle ear ) உள்ள இணைப்பு(Eustachian  tube ) வழியே பால் உள்ளே சென்று  சீழ்  பிடிக்கும் . அதே போல் புட்டி பால் கொடுத்தாலும்  காதில்  சீழ்  பிடிக்கும் .

மூக்கு அடைப்பு  இருந்தாலும் காது வலி வரலாம் , எனவே மூக்கு சொட்டு மருந்து  போட்டு கொள்ள வேண்டும் .

குழந்தைகளுக்கு இருமல் மருந்து ஏன் தரக்கூடாது ?

குழந்தைகளுக்கு  வரும்  சளி , இருமல் :

           இருமல் என்பது  ஒரு முக்கியமான  பாதுகாப்பு  வழிமுறை ஆகும் , ஏனென்னில் இது  நமது  மூச்சுகுழாயில் தேவையற்ற  தூசு , கிருமிகள்  , நச்சு  நுழைவதை தடுக்கிறது. 

  இருமலின்  அடிப்படை :

           காற்று  உள்ளே இழுக்கப்பட்டு , தொண்டை சதைகள்  சுருங்கியபின் அதிக அழுத்தத்துடன் காற்று வெளித்தள்ளி விடுவிக்கபடுகிறது . இதனால்  நுரையீரல்  உள்ளே  தூசு,நச்சு  செல்லாமல் தடுக்கபடுகிறது .

  சுரத்தை போலவே  இருமலும்  நமக்கு நன்மையையே  செய்கிறது . எனவே அளவான  இருமல் நல்லது , இதற்க்கு வைத்தியம் தேவை இல்லை . இருமல் அதிகமாக வந்து மூச்சு விட சிரமம் , தூக்கம் இல்லாமை , தொண்டை வலி போன்றவை வந்தால் மட்டுமே  இருமல் குறைய  syrup எடுத்துகொள்ளவேண்டும் .

சிறு குழந்தைகளின்  இருமலை  முற்றிலும்  நிறுத்தக்கூடாது , ஏனெனில்  இருமல் மூலமே உள்ளே தேங்கும்  சளி  வெளியேறும் .இருமலை  நிறுத்தினால்  அவை  நுரை யில்  சென்று  atelectasis  என்ற  நுரையீரல்  சுருங்கும்  தன்மையை  ஏற்படுத்திவிடும் .

இருமலுக்கான தொடு  நரம்புகள்  காதிலும் உண்டு  , அதனால் தான் காது குடையும் போது  இருமல் வருகிறது .

மருத்துவம் :

  குழந்தைகளுக்கு முற்றிலும்  இருமலை கட்டுபடுத்த  கூடாது 
எதனால் இருமல் வருகிறது என்று பார்த்து  ஆதற்கு வைத்தியம்  செய்ய வேண்டும் 

வறட்டு இருமல், தொண்டை வலி இருந்தால்  இருமல் மருந்து தரலாம் 

தூக்கம் இல்லாமல் இருமுதல் , பால் குடிக்கமுடியாமல் இருமல் , இருமலின் முடிவில்  வாந்தி   - ஆகிய  நேரங்களில்  மருந்து தரவேண்டும்

மூக்கின்  முன்புறம் நீர் வடிவது போல , மூக்கின் பின் புறமும்  தொண்டையில் நீர் வடியும் இதனால்  இருமல் வந்துகொண்டே  இருக்கும்(postnasal  drip ) . இதற்க்கு  மூக்கு சொட்டு  மருந்து போட்டாலே  இருமல் குறைந்து விடும்.

சைனுசிடிஸ்  என்ற நிலையிலும்  சைனசில்     இருந்து  நீர் , சளி கசிவதால்  தொடர்ந்து  இருமல் இருக்கும் .

வெண்ணீரில் உப்பு  போட்டு வாய் கொப்புளிக்க  வேண்டும்

மூக்கிற்கு  சொட்டு மருந்து  போட்டு வரவேண்டும் 
வெநிரில் ஆவி  பிடிக்கவேண்டும் .

எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டுவதை தவிர்க்கவேண்டும் .  

எப்பொழுது மருத்துவரை அணுக  வேண்டும் :

 சளி மஞ்சளாகவோ , பச்சையாகவோ , கெட்டியாகவோ மாறும்போதும் 

முச்சு  விடும் வேகம்  அதிகரிக்கும் போதும் - இது வயதிற்கு  ஏற்ப மாறும்.

            பிறப்பு  முதல்  2  மாதம் வரை - > 60  / ஒரு நிமிடம் 

                 2  மாதம்  முதல் ஒரு வயது  வரை ->50  /ஒரு நிமிடம்

                  ஒரு வயது மேல் 5  வயது வரை -> 40  / ஒரு நிமிடம் 

குழந்தை  அழாமல் உள்ளபோது  குழந்தை  மூச்சு விடும் வேகத்தை  ஒரு முழு நிமிடத்திற்கு  எண்ணவேண்டும். மேலே சொன்ன  அளவை விட அதிகமாக இருந்தால் அது நிமோனியா  சளியின்  அறிகுறியாக இருக்கலாம் .

குழந்தைகளுக்கு வரும் மழை கால நோய்கள்

சுவாச மண்டல  நோய்கள் :
        ஆஸ்த்மா 
ஃப்ளு / வைரஸ்  ஜுரம் 

ஜீரண மண்டல  நோய்கள் :
       வயிற்றுபோக்கு
        டைபோய்ட் 
           காலரா
  தோல் நோய்கள் :
           பூஞ்சை (fungus ) நோய்கள் 
கொசு மூலம்  பரவும் நோய்கள் :
       மலேரியா 
       டெங்கு

எலி  மூலம்:  
      எலி காய்ச்சல் (லெப்டோ ச்பைரோசிஸ்) 

மழையின்  போது   ஈரப்பதம்  அதிகமாவதாலும் , வெப்பநிலை குறைவதாலும் எளிதில் 
பாக்ட்ரியா, வைரஸ் , பூஞ்சை காளான்கள் ஆகியவை  பல்கி பெருகும் .
தடுப்பு முறைகள் :
     நீரை கொதிக்க  வைத்து , ஆறிய பின்பே  குடிக்க வேண்டும் .
     ( கொதிக்க வைப்பது  என்பது - 100  செல்சியுஸ் இல்  குறைந்தது 5  நிமிடங்கள் வைத்திருப்பது , சும்மா சூடு மட்டும்  பண்ணுவது அல்ல ).

அதிக அளவில்  காய்கள் , பழங்கள்  செர்த்துகொள்ளவேண்டும் ( வைட்டமின்  c  நல்லது )

வெளியில்  சாப்பிடுவதை  கட்டாயம் தவிர்க்க வேண்டும். 

காய்கள் , பழங்களை நன்கு கழுவிய பின்பே  சாப்பிடவேண்டும் 

அசைவ உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் ( செரிக்கும்  சக்தி  குறைவு - மழைகாலத்தில் )

கொசுவிடம் இருந்து  தற்காத்து கொள்ளவேண்டும் .( கொசு வலை , வெளிபூச்சு கொசுவிரட்டி , புகை கிளப்பி , கொசு சுருள்   முதலியன ..).

எலி காய்ச்சல் - எலியின் சிறுநீர்  மழை நீரில் கலந்து நமது உடலில்  உள்ள சிறு சிறு  சிராய்ப்புகள் மூலம்  பரவி  மஞ்சள் காமலை ஏற்படுத்தும்  ஒரு நிலை .வெளியே சென்று வந்தவுடன் நன்கு  சோப்பு  போட்டு  கால்களை  கழுவவேண்டும் .

உங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி ?

 ஞாபகம் ஒரு வியாதி , மறதி ஒரு வரம் என்று  சொல்வார்கள்  , ஆனால்  நம் குழந்தை  படித்தததை  எல்லாம் மறுக்கும் போது  மறதி ஒரு சாபம் போல  நமக்கு தோன்றும் .

ஞாபகம்   குறித்து சில  தகவல்கள் :
   
     நாம்  பார்க்கும்  , கேட்க்கும் , உணரும் , சுவைக்கும் , முகரும்  அனைத்துமே  நமது  ஞாபகங்கள்  ஆகும் .  இது முதலில் முதலில் குறைந்த  நேரமே மனதில் இருக்கும் (சென்சரி மெமரி ). உடனே  மறந்து விடும் .

இந்த சென்சரி  மெமரியில் நாம்  முழு கவனத்தை செலுத்தி  ஆழ்ந்து கவனித்தால்  அது ஷார்ட் டெர்ம் மெமரி  ஆக  பதிவாகும் .இதுவும்  சில மணித்துளிகளுக்கு  மட்டும்  இருக்கும் .

ஷார்ட் டெர்ம் மெமரி  ஐ திரும்ப திரும்ப  செய்யும்போது  அது நாள் பட்ட  ஞாபக சக்தியாக  மாறும் .


எனவே  ஞாபக சக்திக்கு  மிகவும் முக்கிமானது  இரண்டு :
                ஆர்வம் மற்றும்  கவனம் 

                 திரும்ப திரும்ப செய்தல் .

மேலும்  நாள் பட்ட ஞாபகம்  கூட மறக்க  வாய்ப்பு  உள்ளது , இதுவும் நல்லது தான் . சில சமயம்  வாழ் நாள் முழுதும் நினைவில் இருக்கும்.

நாள் பட்ட ஞாபகத்தை  இரண்டு வகையாக  பிரிக்கலாம்  :
         explicit & implicit 

explicit   என்பது  கொஞ்சம் யோசித்தால்  நினைவுக்கு  கொண்டுவர முடியும் 

implicit என்பது  யோசிக்க தேவை இல்லாமல் உடனே நினைவுக்கு  கொண்டு வருதல் 

நினவு  திறனை  சிறு உதாரணம் கொண்டு விளக்கலாம் :
மிதி வண்டி ஓட்ட பழகுதலை    எடுத்துகொள்வோம்

   யாரோ ஓட்டுவதை  நாம் பார்ப்பது - சென்சரி மெமரி 
   முதன் முதல் ஓட்ட காற்று கொள்வது  - ஷார்ட் டெர்ம் மெமரி 
    தத்தி தத்தி ஓட்டுவது - லாங் டெர்ம்  explicit மெமரி
  தயவே இல்லாமல்  ஓட்டுவது -லாங் டெர்ம் implicit மெமரி (சாகும் வரை மறக்காது )

இனி நினைவு திறனை அதிகரிக்கும் வழிகள் 

  1 . எதையும்  தாய் மொழியிலேயே  சிந்திக்க வேண்டும் , நீங்கள்  படிப்பது ஆங்கிலமோ , ஹிந்தியோ , பிரெஞ்சோ - உங்கள் தாய் மொழி என்னவோ   அதில் சிந்தித்து  மனதில் பதிய செய்ய வேண்டும்

2 . புரியாமல்  எதையும் படிக்க கூடாது . ஒரு வரி புரிய ஒரு நாள் ஆனாலும்  பரவாயில்லை .

3 . முழு கவனம்  மிக அவசியம் . 

4 . mnemonics  வைத்து  படிப்பது ஒரு கலை . அதை உங்கள் குழந்தைக்கு  கற்று
 கொடுங்கள் 
         உதரணம்  news - north ,east,west,south 

5 . படித்த வுடன் எழுதி  பார்க்கும் பழக்கத்தை  ஏற்படுத்த வேண்டும் . ஹோம் வொர்க் என்ற பெயரில்  கடமைக்கு  எழுதும்  சடங்கு  பயனில்லை.

6 . படங்களுடன் கூடிய  தகவல்கள்  மனதில் பதியும் . பட விளக்கங்களை திரும்ப திரும்ப  வரைந்து பார்க்க சொல்லவேண்டும்

7 . நல்ல உறக்கம்  அவசியம் . குறைந்தது  8  மணி நேர தூக்கம்  கண்டிப்பாக தேவை

8 .இரவில்  சீக்கிரம்  தூங்கி  அதிகாலை  படிக்கும்  படி  சொல்லவேண்டும் .

9 . தூங்க போகும்  முன்  அன்று  படித்த  அனைத்தையும்  ஒரு முறை மேலோட்டமாக  நினைவு படுத்தி பார்க்க வேண்டும் . அப்படி செய்யும் போது நாம் தூங்கினாலும்   நம் மூளையின்  சில மூலைகள் விழிப்புடன் இருந்து  தகவல் களை ஷர்ட் டெர்ம் மெமரியில் இருந்து  லாங் டெர்ம் மெமரியில் பதிவு செய்து கொண்டு இருக்கும். இது மிக முக்கியமான  பயிற்சி ஆகும் .

10 . மாவு சத்து உள்ள உணவுகள்  மந்த நிலையை  ஏற்படுத்தும் , எனவே புரதம்  நிறைந்த எளுதில்  செரிக்கும்  உணவை செர்த்துகொள்வது நல்லது.

மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள்

கண்களின்  வெளி சவ்வு  அழற்சியே  - சிவந்த  கண் அல்லது  மெட்ராஸ் ஐ  எனபடுகிறது .அடினோ  வைரஸ் (ADENO VIRUS -CONJUNCTIVITIS)என்ற வைரஸ் இதற்க்கு  பெரும்பாலும் காரணம் .

இது பருவநிலை  மாறுபாடல் வரும் ஒரு வியாதி .இந்த வைரஸ் சூடான  , ஈரபதமான சூழ்நிலையில்  மிக வேகமாக  பரவக்கூடியது .

இது காற்று  மற்றும் உடைமைகள்(fomites) ( கர்சிப் , துண்டு ,பேனா ,பென்சில் ,அழிப்பான் ,பேப்பர்  ) கை குலுக்குதல்  மூலம் பரவும்  ஒரு வைரஸ்  வியாதி  ஆகும் .

கருப்பு  கண்ணாடி போடுவதால்  பிறருக்கு  பரவாது என்பது  தவறு . கண்ணாடி போடுவதால் அதிகபடியான  சூரிய வெளிச்சம் மூலம்  வரும்  எரிச்சலை மட்டுமே தடுக்க மூடியும் .

ஒருவர் பயன்படுத்திய  கண்ணாடியை  மற்றவர் பயன் படுத்த கூடாது 

கண் சொட்டு  மருந்தை  ஒரு நாளைக்கு  ஆறு முதல்  எட்டு  முறை  மருத்துவர் ஆலோசனை படி  போடவேண்டும் .

கண்களை கசக்க  கூடாது .

தும்மல் , இருமல் மூலமும் இந்த  வைரஸ் பரவும் , எனவே வாயில் துணி  வைத்து இருமவும் .

கண்களை  குளிர்ந்த நீரில்  அடிக்கடி கழுவவும் ,ஆதற்கு முன்பு கைகளை  நன்கு சோப்பு போட்டு  கழுவவும் .

மிதமான  வெந்நீரில்  துண்டை  நனைத்து  ஒத்தடம் கொடுக்கவும் .

நேருக்கு  நேர் பார்த்தால்  வராது . ஆனால்  எதிர்ப்பு சக்தி குறைவனவர்களுக்கும்   , குழந்தைகளுக்கும்   அருகில் வந்தாலே மூச்சு  காற்று மூலம்  தொற்று  ஏற்படும் .

மருத்துவர் ஆலோசனை இன்றி  steroid  சொட்டு  மருந்துகளை கடையில் வாங்கி போட்டால் கண் பார்வை இழப்பு ஏற்படலாம் . எனவே  சுய  மருத்துவம்  செய்வதற்கு  சும்மா இருப்பதே மேல். ஏனெனில்  இது தானாகவே  சரி ஆகிவிடும்  (self limiting ).

உடலின் எதிர்ப்பு சக்தியை பொருத்து 5  முதல் 7  நாட்களில்  இது குணமடையும் .

டாப் 10 சோர்வடைய காரணங்கள் :

1 . தூக்கம் இன்மை :INSOMNIA
              குழந்தைகளுக்கு  எட்டு முதல்  பத்து  மணி நேரமும் , பெரியவர்களுக்கு  ஆறு முதல்  எட்டு  மணி நேர துக்கம் அவசியம்  .

2 .தூக்கத்தில் மூச்சுவிட  மறத்தல் : SLEEP APNEA-இந்த  நிலை  மிகவும் குண்டான , புகை பழக்கம் உள்ளவர்களுக்கு  வரும் . உறக்கத்தில்  அடிக்கடி மூச்சு  நின்று நின்று வருவதால்  இவர்கள்  நாள் முழுதும் சோர்வாகவே இருப்பார்கள் .எட்டு  மணி நேரம்  தூங்கினாலும்  இரண்டு     மணி     நேரம் தூங்கிய  உணர்வே இருக்கும் .

              மருத்துவம் ; எடை  குறைப்பு , புகைப்பதை  நிறுத்துதல் 

3 .மாறுபட்ட உணவு :    காலை உணவு சாப்பிடாமல்  இருத்தல் , சரிவிகித  உணவு உண்ணாமை , நேரம் தவறி சாப்பிடுதல் , அதிகபடியான  அசைவ உணவு , உணவு அலர்ஜி- 
              மருத்துவம் : கட்டாய  காலை உணவு , பழங்கள் , அளவுடன் அசைவம் , அலர்ஜி உள்ள உணவை தவிர்த்தல்.



4 . ரத்த சோகை :பெண்களுக்கு , குழந்தைகளின்   சோர்வுக்கு  மிக முக்கிய காரணம் .



 மருத்துவம் : இரும்பு
சத்துமிக்க உணவுகள் : கல்லீரல் , கடலை முட்டாய், ..

5 .மன அழுத்தம் :  வெளியே தெரியாத  மன  அழுத்தமே  பெரும்பாலான  சோர்வுக்கு  காரணம் 
                 மருத்துவம் :  நடை பயிற்சி , யோகா 

6 .THYROID  HORMONE  குறைபாடு ;
           வெளியே தெரியாத ஹோர்மோன்  குறைபாடு ஒரு காரணம். 
                  மருத்துவம் : பரிசோதனை  செய்து  பின் ஹோர்மோனை  ஈடு செய்தல்.

7 . KAFFEINE  OVERLOAD : 
கொஞ்சம்  கொஞ்சமாக  நெறைய  தடவை குடிக்கும்  காபி டி  போன்றவை  முதலில்  ஒரு தற்காலிக  உற்சாகம் தந்து பின்  இறுதியில்  சோர்வையே தரும் .

8 . நீரிழிவு  நோய் :   35  வயதை  கடந்தாலே  இதுவும்  ஒரு சோர்வுக்கு ஒரு காரணம் 
          வெறும் வயிற்றில்  110  MG , சாப்பிட்டவுடன்  160  MG  கீழே  இருக்கவேண்டும் .

9 . சிறு நீர்  தொற்று :

             பெண்கள் ,சிறு குழந்தைகள் - வெளியே  தெரியாத  தொற்றும் நாள்பட்ட சோர்வுக்கு காரணம் 
         மருத்துவம் : அதிகம் தண்ணீர்  குடிக்கவும் , நீரை  அடக்கிவைக்க கூடாது .

10 .உடலில்  நீர்,உப்பு  பற்றாகுறை( DEHYDRATION )   
             போதிய அளவில்  நீர் குடிக்காமல் இருப்பது  மற்றும்  வியர்வையில்  நீர் ,உப்பு இழப்பு  . 
              மருத்துவம் : ஒரு நாளைக்கு  3  லிட்ர் நீர் அருந்துதல் ,  

ஆடிசம் (AUTISM) என்பது நோய் அல்ல!!

ஆடிசம் என்பது நோய் அல்ல . மன குறைபாடு ஆகும் . உடல் வளர்ச்சி சரியாக இருக்கும் . ஆனால் மன நல குறைபாடு இருக்கும் .

 தமிழில் தற்புனைவு ஆழ்வு என்று கூறலாம் . 

அறிகுறிகள்:

இரண்டு வயதிற்கு பிறகும் பேசாமல் இருப்பது .

கூப்பிட்டால் திரும்பி பார்க்காமல் இருப்பது

பல முறை கூப்பிட்டால் ஒரு முறை மட்டும் பார்ப்பது 

கண்ணோடு கண் பார்க்க மாட்டான்

முகத்தை நேருக்கு நேர் பார்க்காது .

சில விசயங்களை  திரும்ப திரும்ப  ஒரே மாதிரி  செய்து கொண்டு இருப்பது 

இதை எவ்வளவு  சீக்கிரமாக  கண்டுபிடிகிறோமோ அவ்வளவு  நல்லது .
நான்கு மாதத்தில் :

கண்ணோடு கண் பார்க்க மாட்டான்.

சத்ததிற்கோ , கை தட்டும் ஒலிக்கோ எந்த  உணர்ச்சியையும்  காட்டது இருத்தல்

முகம் பார்த்து  சிரிக்காது  இருத்தல் . இதற்க்கு  சோசியல் ஸ்மைல்  என்று பெயர் . சாதாரண  குழந்தைகளுக்கு  மூன்றாம் மாதமே வந்துவிடும் .

புதிய  முகங்களை  பார்க்க விருப்பம் இல்லாது இருத்தல் .

12  மாதத்தில் :

கண்ணோடு  கண் பார்த்தலையும்  சிரிப்பையும்  ஒரே நேரத்தில் செயாது  இருத்தல்.

ஒலி எழுப்பாமல்  இருத்தல். இந்த  வயதில்  அர்த்தமற்ற  ஒலிகளை  குழந்தைகள்  எழுப்பும் .(babble).

நாம்  சுட்டிகாட்டும்    பொருளையோ , திசையையோ பார்க்காது இருத்தல்.

ஆள்காட்டி விரலை  உபயோகிக்க  தெரியாது இருத்தல் .
bye  bye  சொல்லதெரியது இருத்தல் 

யாரேனும் அழுதால் அது பற்றி  கவலை கொள்ளாது தனது வேலையை  மட்டும்  பார்த்துகொண்டு  இருத்தல் .

பெயர் சொல்லி அழைத்தால் உடனே  பார்க்காது 

தனிமையில்  நீண்ட நேரம்  விளையாட விரும்புதல் .

புதிய மாற்றத்தை ஏற்று கொள்ள  மறுப்பது . 

விரலை மட்டும் ஊன்றி  நடக்க  முயல்வது .(tip toe walking  )

எதையாவது  திரும்ப திரும்ப  வரிசையாக  அடுக்கிகொண்டே இருப்பது . 

மேற்கூறியே  அறிகுறிகளில்  சில  மற்றும்  பல  இருந்தால் உடன்  குழந்தை நல மருத்துவரை  அணுகி பரிசோதனை செய்ய வேண்டும் 

பிறந்த குழந்தைக்கும் வரும் பீரியட்ஸ்-

 பிறந்து சில  நாட்களே ஆன  பெண் குழந்தைகளுக்கு   சிறிதளவு  ரத்தம்  பிறப்பு உறுப்பு வழியாக  வரும் . இது குறித்து பயம் கொள்ள  தேவை இல்லை .

காரணம் : 

   குழந்தை  வயிற்றில் இருக்கும் போது  அம்மாவின் அத்தனை ஹர்மோன்களும் குழந்தைக்கு  பிளாசெண்ட எனப்படும் நஞ்சு  கோடி மூலம்  குழந்தைக்கு  போய்கொண்டிருக்கும்  . குழந்தை  பிறந்தவுடன்  இவை அனைத்தும்  நிறுத்தபடுகிறது.

இந்த ஹார்மோன்களின்  அளவு ரத்தத்தில்  படி படியாக  குறையும் .எனவே இது ஒரு  மினி மேன்ஸ்ட்ரோல் பீரியட் (tiny menstrual period ) போன்ற நிலையை  ஏற்படுத்தும் . குழந்தையின் கற்பபையில் இருந்து  சிறிதளவு  ரத்தபோக்கு  ஒரு சில நாள்  நீடிக்கும் . 

இதனால்  குழந்தைக்கு வலி  இருக்காது 

குழந்தையின் உடல்  உறுப்புகள்  மற்றும்  ஹார்மோன்  அமைப்புகள்  சரியாக வேலை  செய்வதையே இது  காட்டுகிறது. எனவே  இது கவலை பட கூடிய  விஷயம்  அல்ல . ( சந்தோஷ படகூடிய  விஷயம் என்றும்  கூறலாம் )

பெண்  குழந்தைகளுக்கு  மட்டுமே வரும் 

எல்லா பெண் குழந்தைகளுக்கும்  வரும் என்று  கூறமுடியாது . வரவில்லை என்றாலும் கவலை கொள்ள தேவை இல்லை .

வைட்டமின்  கே  அளவு  சாதரணமாக  பிறந்த குழந்தைகளுக்கு  குறைவாக  இருக்கும் .இதனாலேயே  பிறந்தவுடன்  vit k   ஊசி மூலம் போடபடுகிறது . உதிரபோக்கு அதிகமாகவோ  அல்லது அதிக  நாட்களோ  இருந்தால்  வைட்டமின்  கே  போட்டுகொள்வது நல்லது 

பச்சிளம் குழந்தைகளுக்கு வரும் மஞ்சள் காமாலை

 நமது  ரத்தத்தில்  பிலிருபின் என்ற  நிறமி  பொருள்  அதிகரிப்பதே  மஞ்சள் காமாலை ஆகும் . ஜுரம்  எப்படி  ஒரு பொதுபடையான  அறிகுறியோ  அதுபோலவே  ம.கா வும் ஒரு  அறிகுறியே தவிர  வியாதி  அதுவல்ல . (Latin bīlis, bile + ruber, red )

முன்னுரை :    நமது உடலில்  கோடிகணக்கான  ரத்த சிவப்பு  அணுக்கள்  உள்ளன . இவற்றின்  வாழ் நாள்  தோரயமாக  120  நாட்கள் .

 வயதான  அணுக்கள்     மண் ஈரலில்     போய் இறந்துவிடுகின்றன .           RBC  யின்      உள்ளே  ஹீமோக்ளோபின்    என்ற    வஸ்து         பொருள்  உள்ளது  . இது    HEME  மற்றும்    GLOBIN      என்று இருபகுதியாக  உடைக்க படுகிறது . 

       HEME   என்ற  பகுதி சில பல  வேதி  வினை  மாற்றங்களுக்கு    உட்பட்டு    BILIRUBIN    என்ற  மஞ்சள்  நிறமியாக மாறுகிறது .

          பிளிருபின்  ரத்தத்தில் சுற்றிக்கொண்டு  இருக்கும் . இதனை  கல் ஈரல்  ரத்தத்தில் இருந்து  பிரித்து  பித்தநீரோடு சேர்த்து நீரில் கரையும் பொருளாக  மாற்றுகிறது .

      பின்  இது  பித்த பை வழியாக  குடலை  அடைந்து  இரு வேறு  பொருள்களாக  மாறுகிறது .

 STERCOBILIN  அண்ட் UROBILINOGEN 

STERCOBILIN - மலத்தின்  மூலம்  வெளியேறும் . மலத்தின்  நிறத்திற்கு  (BROWNISH YELLOW )  இதுவே காரணம் .

UROBILIN - இது  நிறம் அற்றது  , சிறுநீரில்  வெளியேறும் . டெஸ்ட்  செய்து பார்த்தால் தான்  இது  தெரியும் .

மேலே சொன்ன அனைத்தும்  சாதாரணமாக  தினமும் நடக்கும்  செயல்கள் . இதில் ஏதேனும்  ஒரு  இடத்தில  தவறு நேர்ந்தாலும்  மஞ்சள் காமாலை  அறிகுறி தெரியலாம் .

எங்கே  நடக்கலாம்  தவறு ?

I . அதிகபடியான  RBC  அணுக்கள் உருவாதல்  மற்றும்  அதிகபடியான RBC  சிதைவு அடைதல் ( HEMOLYTIC  JAUNDICE )
               
II .கல்லீரல்  செயல் இழப்பது (HEPATIC  JAUNDICE )

III . கல்லீரலில்  இருந்து வெளியேறும்  பிளிருபின்  குடலை  அடையமுடியாமல்  ஏற்படும் அடைப்பினால்    வரும் மஞ்சள் காமாலை (OBSTRUCTIVE  JAUNDICE )

பொதுவாக  CBD  எனப்படும் COMMON  BILE  DUCT  எனப்படும் இடத்தில அடைப்பு ஏற்படும் .
  ரத்த சிவப்பு அணுக்கள்  அதிகமாக  சேதம் அடைவதனால் அதிகமாக bilrubin   உற்பத்தி ஆகிறது . கலீரலால் அதனை  சுத்தம் செய்ய கால தாமதம் ஆவதால்  பிளிருபின்  அளவு அதிகரிக்கிறது . இங்கு  கல்லீரல்  நன்றாகவே உள்ளது .


காரணங்கள்    :

    I . NEONATAL  JAUNDICE : பச்சிளம்  குழந்தைகளுக்கு  வரும்  மஞ்சள் காமாலை .

                     பிறந்த  குழந்தையின் உடலில்  பொதுவாக  ரத்த அணுக்கள்  அதிகமாக இருக்கும் . மேலும்  கருவில் இருக்கும் போது உள்ள  ஹீமோ க்லோபின்  F  எனப்படும் . பிறந்தவுடன்  இந்த F  குறைந்து  ஹீமோக்ளோபின்  A  உற்பத்தி  ஆகும் . கலாவதி ஆனா  HB  F  சிதைவு  அடைந்து  வெளியேற்ற  படும். இதனால்  பிளிருபின் அளவு கூடி  குழந்தை பிறந்த 24  மணி நேரம்  கழித்து  உடலில்  மஞ்சள் நிறம் தோன்றும் . இது  படிப்படியாக  அதிகரித்து ஒரு வாரத்திற்குள்  தானாக குறைய  ஆரம்பிக்கும் .

இது  சாதாரணமாக  எல்லா குழந்தைகளுக்கும்  நடக்க கூடியதே . எனவே  இதற்கு  PHYSIOLOGICAL  JAUNDICE  என்று பெயர் .
         
எப்பொழுது  கவலை படவேண்டும் ?
I .   பிறந்த  24  மணிக்கு  முன்பாகவே  மஞ்சள் நிறம்  தோன்றுதல் - இதற்கு  அசாதாரண  மஞ்சள் காமாலை -PATHOLOGICAL  JAUNDICE  என்று பெயர் . 

II .தாயின்  ரத்த க்ரூப் நெகடிவ் ஆக இருந்தால் . - 
              தாய்க்கு  நெகடிவ் க்ரூப்பும்  பிள்ளைக்கு  பாசிடிவ்  இருந்தால் தாயின் உடலில்  பாசிடிவ் க்ரூபிற்கு  எதிராக  ANTI BODIES  உற்பத்தி ஆகும் . இது முதல் குழந்தையை  பாதிக்காது . ஆனால் அடுத்த  பிரசவத்தின் போது  உள்ள குழதையை  பாதிக்கும் தன்மை உள்ளது . 

எனவேதான்  NEGATIVE க்ரூப் உள்ள தாய்க்கு  முதல் குழந்தை பிறந்தவுடன் தடுப்பு ஊசி (ANTI  D ) கட்டாயம் போடவேண்டும் .
மேலே சொன்ன நிலைக்கு  RH  INCOMPATIBILTY  என்று பெயர் .

இன்னும் ஒரு நிலை உள்ளது . அதற்க்கு ABO  INCOMPATIBILITY  என்று பெயர் . தாய்க்கு O  க்ரூப்பும்  பிறந்த குழந்தைக்கு  A , B ,AB ஏதேனும் ஒன்று  இருக்கும் பட்சத்தில் வரும் மஞ்சள் காமாலை . 

    RH  INCOMPATIBILTY நெகடிவ் மஞ்சள் காமாலை இரண்டாவது  குழந்தையை மட்டும் பாதிக்கும் ஆனால் ABO  INCOMPATIBILITY முதல் குழந்த்யில் இருந்தே  தனது  பாதிப்பை தொடங்கிவிடும் .

மருத்துவம் :

       PHOTOTHERAPY  என்ற கண்ணாடி பெட்டியில்  வைத்தால் உடலில்  உள்ள பிளிருபின் அளவு குறைந்து சிறுநீர் வழியாக  வெளியேறி விடும் .

GARDENAL  என்ற மருந்து  கல்லீரலின்  பணியை  துரிதம் செய்து  பில்ருபினை வெளியேற்றும் .

அதிக அளவு  பிளிருபின் இருந்தால் >15 -20  ) EXCHANGE  TRANSFUSION  என்ற ரத்தத்தை மற்றும் முறையை  செய்ய வேண்டும் .

    குழந்தயின் ரத்தத்தை தொப்புள்  கொடி மூலம் வெளியே எடுத்துவிட்டு  பின் சுத்த ரத்தத்தை  ஏற்றும் முறை .

மேலே சொன்ன இரண்டும் தான்  பொதுவாக பார்க்கும்  HEMOLYTIC  JAUNDICE : இது தவிர மலேரியா ,இரத்த சிவப்பு அணுக்களின்  உற்பத்தி குறைபாடு போன்ற  இதர அரிதான காரணங்களும் உள்ளன .


தொப்புள் கொடி:

  தாய்க்கும் சேய்க்கும்  இடையே  பாலமாக  செயல்பட்டு  உணவு மற்றும் உணர்வுகளை  பகிரும் ஒரு அற்புதமான அமைப்பே தொப்புள் கொடி .


       
இதனுள் மூன்று ரத்த குழாய்கள்  இருக்கும் . இரு தமனி (artery ) மற்றும் ஒரு  சிரை(vein ). பிறந்தவுடன்  கத்தரிக்கும் போது  குறுக்கு வெட்டு தோற்றத்தில்  இந்த மூன்று ரத்த குழாய்களும்  தெரியும் . பிறவி குறைபாடு ,இருதய குறைபாடு  உள்ள குழந்தைகளுக்கு ஒரு தமனி மட்டுமே இருக்கலாம் . (single umbilical artery )






தொப்புள் கொடி குழந்தை  பிறந்த 7 - 10  நாட்களில் விழுந்துவிடும் .இரண்டு வாரங்களுக்கு பிறகும்  விழவில்லை எனில்  நோய் தோற்று உள்ளது என்று பொருள் ,உரிய சிகிச்சை  செய்யவேண்டும்.



               
umbilical granuloma
சில நேரங்களில்  தொப்புள் கொடி விழுந்த பின்பும்  அந்த இடத்தில சிகப்பு நிறத்தில்  சதை கட்டி போல ஒட்டிக்கொண்டு  இருக்கும் .இதற்க்கு  umbilical granuloma  என்று பெயர் . 
இதற்க்கு silver  nitrate மருந்தை மருத்துவர்  அறிவிரையின் பேரில் பயன்படுத்தவேண்டும் .



cleaning
தினமும் தொப்புள் கொடி விழும் வரை  ஆன்டி செப்டிக்  மருந்து கொண்டு  சுத்தம்  செய்தால் போதும் . 



கிராமங்களில்  இன்னும்  சுருட்டு  சாம்பல் வைப்பது  , சாணம் தடவுவது  போன்ற செயல் களை செய்து வருகின்றனர் . இது முற்றிலும் தவறு .



தொப்புள் கோடியில் உள்ள ரத்த குழாய்கள்  கல் ஈரலில்  சென்று முடிகின்றன  , எனவே இங்கே  நோய்தொற்று  வந்தால்  கல்லீரலை  கூட பாதிக்கும் .கவனம் அவசியம் . 


தொப்புள் கொடிக்கு நிறைய மருத்துவ குணங்கள்  உண்டு . நாள் பட்ட புண்களை  ஆற்ற இதிலிருந்து  மருத்துகள் தயாரிக்க படுகிறது (placentrex ).


மேலும் தொப்புள்  கொடி ரத்தம் பல நோய்களுக்கு  ஒரு சரியான தீர்வாக  அமையபோகிறது -( cord blood  

ஜுரம் உள்ளபோது குழந்தைக்கு ஸ்வட்டர் போடலாமா ?

ஜுரம் என்பது  ஒரு அறிகுறி  மட்டுமே , அதுவே வியாதி அல்ல என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே .



http://doctorrajmohan.blogspot.com/2010/07/fever-in-children.html



ஆனால் சிறு குழந்தைக்களுக்கு  ஜுரம் வந்தால் சோர்வடைந்து எதுவும் சாப்பிடாமல் ,குடிக்காமல் இருக்கும் .இது உடலில் உள்ள  நீர் சத்தை குறைத்துவிடும் .இது மேலும்  உடல் வெப்பத்தை  அதிகரிக்கும் .



எனவே ஜுரம் வந்தால் செய்யவேண்டியது என்ன ?


அதிகமான திரவ உணவினை கொடுத்துகொண்டே இருக்கவேண்டும் - காய்கறி சூப் ,ஐஸ் போடாத பழசாறு 



எளுதில் காற்றோட்டம் உள்ள பஞ்சினால் ஆனா உடையை மட்டுமே போடவேண்டும் .முடிந்தால் டயபரை  கூட கழட்டிவிடுவது நல்லது .
http://doctorrajmohan.blogspot.com/2010/08/blog-post_15.html


ஸ்வட்டர் கண்டிப்பாக போடகூடாது .ஏனெனில் இது உடல் சூட்டை தக்கவைத்து சுரத்தை இன்னும் அதிகரிக்க செய்யும் .எனவே கண்டிப்பா  கூடாது .இதனால் சில குழந்தைகளுக்கு சுர வலிப்பு எனப்படும் febrile fits வர வாய்ப்பு உண்டு .


http://doctorrajmohan.blogspot.com/2010/06/febrile-fits.html


ஏற்கனவே சுர வலிப்பு வந்திருந்தால் கண்டிப்பாக இதை கடைபிடிக்கவேண்டும் !


 சரி ஸ்வட்டர்  எப்போது போடலாம் :

எடை குறைவான குழந்தைகளுக்கு உடல் வெப்ப இழப்பு ஏற்படாமல் இருக்க பயன் படுத்தலாம்.

பயணம் செய்யும்போது ,குளிர்ப்ரதேசங்களுக்கு  செல்லும்போது ,


இந்திய போன்ற வெப்பநாட்டில் இருக்கும் போது நாம் இதனை அதிகமாக உபயோகிக்க தேவை இல்லை .முக்கியமாக ஜுரம் உள்ளபோது 

புதிதாக குழந்தைபெற்ற தாய்மார்களின் தூக்கமில்லா இரவுகளுக்கான சில தீர்வுகள்.

உங்கள் வீட்டில் புதிதாகப் பிறந்த குழந்தை இருக்கும் போது சரியான நேரத்தில் தூங்குவது சாத்தியமில...

Popular Posts