லேபிள்கள்

புதன், 5 அக்டோபர், 2011

ஜோரான ஜோக்ஸ்..!-6@ஏன் டாக்டர் வயிற்றில் ஆபரேஷன் பண்ணிட்டு தண்ணீ குடிக்கச் சொல்றீங்க..?
எங்காவது லீக் ஆகுதுன்னா பார்க்கத்தான்..!
ஒரு சிறுவன் தனது செல்லில் சார்ஜ் செய்ய ஒரு கடைக்கு சென்றான். கடைக்காரரிடம் கேட்டான் "அண்ணா, 10 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் எவ்ளோ ரூபாய்க்கு பேசலாம்?". அவர் சொன்னார் "6 ரூபாய்க்கு பேசலாம் தம்பி". அந்த சிறுவன் கேட்டான் "அப்ப மீதி 4 ரூபாய்க்கு முறுக்கு தாங்க
#பெரிய விஷயங்களை விட சிறிய விஷயங்கள்
நம்மை அதிகம் காயப்படுத்திவிடும்.
உ.ம்:
மலைமேல் உட்கார முடியும்…
குண்டூசி மேல் உட்கார முடியுமா?

#ஜோ
 : என்னுடைய மொபைல் பில் எவ்வளவு?
கால் சென்டர் பெண்
 : சார், *123னு டைப் பண்ணி கால் பண்ணினால் உங்களுடைய கரன்ட் (current) பில் எவ்வளவு என்று தெரிந்து கொள்ளலாம்.
ஜோ
 :என்னோட மொபைல் பில்லைக் கேட்டா, கரண்ட் பில்லைப் பத்தி சொல்றிங்களே!

#போஸ்ட்மேன் : சார், உங்களுக்கு மணியார்டர் போட்டிருக்காங்க.
ஜோ
  : எவன்டா அவன் மணி…? எனக்கு ஆர்டர் போடுறது…?
#விமானநிலையத்தில்
பயணி: மும்பையிலிருந்து லண்டனுக்கு எவ்வளவு நேரம் பயணம்?
ரிஷபஷனிஸ்ட்: One second sir.. 
பயணி:  அவ்வளவு ஸ்பீடா.!

#ரயில் வரும்போது ஏன் கேட்டை மூடிடறாங்க தெரியுமா........
தெரியாதே.......
அட,,,,,,இதுகூடப் புரியாம இருக்கியே மக்கு........
ரயில் ஊருக்குள்ள போயிடாம இருக்கத்தான்...
.
#நீங்க இரண்டு வார்த்தை சொல்லணும் ஆனா
அதுல minimum 200 letters இருக்கணும்.
தெரியலியா?
Post Box.
நாங்களும் நல்லா மொக்க போடுவோம்ல!
#ஏங்க அவரைப் போட்டு அடிக்கறாங்க........
பின்ன என்னங்க.........
இறந்தவர் உடலைப் போட்டோ எடுக்கச் சொன்னால் ஸ்மைல் ப்ளீஸ் என்றால் என்ன செய்வார்களாம்.......


#ஆசிரியர் : புத்தர் சொன்னது போல் நாம் நமது ஐம்புலன்களை அடக்கினால் என்ன ஆகும் ?
மாணவண் : ஆம்புலன்ஸ் வரும் சார்

கருத்துகள் இல்லை:

பகலில் தூங்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள்? விழிப்புணர்வு பதிவு.

வீட்டில் ஓயாது உழைத்துக் கொண்டிருக்கும் இல்லத்தரசிகளுக்கு ஞாயிற்றுக்கிழமையில் கூட விடுமுறை என்பதே கிடைப்பதில்லை. நாள் முழுவதும் பம்பரமாய் ...

Popular Posts