லேபிள்கள்

புதன், 5 அக்டோபர், 2011

ஜோரான ஜோக்ஸ்..!-2
"டாக்டர்...டாக்டர் .. இந்த பிளாஸ்டிக் குடம் உடைஞ்சு போச்சு!"
"அதுக்கு ஏன்யா என்கிட்ட வந்தே?"
"நீங்கதான் பெரிய பிளாஸ்டிக் சர்ஜன்னு சொன்னாங்க!"

காதலி : டியர் நான் எப்பவுமே உங்க நிழல்லதான் நிற்பேன்
காதலன் : அதுக்காக நான் வெயில்லயே நிக்க முடியாது
டாக்டர் :உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு. 
நோயாளி :நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்.
 
டாக்டர்:!!!!!!!!!!!!!!!!!???

இண்டர்வியூவில்: என்னப்பா! நாற்காலியை எடுத்துக்கிட்டுப் போறே?
நீங்கதானே சார், டேக் யுவர் சீட்னு சொன்னீங்க

புதிதாய் பிறந்த குழந்தை நர்ஸிடம் பேசுகிறது...)
"நர்ஸ், ஒரு மொபைல் இருந்தா கொடுங்க."
"எதுக்குடா செல்லம்?"
"நான் சேஃப்டியா லேண்ட் ஆயிட்டேனு சொல்றதுக்கு கடவுள்கிட்ட மிஸ்டு கால் கொடுக்கணும்!!"

ரவி: நான் விமலாவுக்கு போன் பண்ணினப்ப அவங்க அம்மா எடுத்துட்டாங்க...
ராமு: அட, அப்புறம் என்ன ஆச்சு?
ரவி: ராங் மெம்பர்னு சொல்லி வெச்சுட்டேன்
கமலா : என் காதலருக்கு குறும்பு ஜாஸ்தி.
விமலா : எப்படி சொல்ற?
கமலா : 'உங்களையே நினைச்சு உருகிக்கிட்டிருக்கேன்'னு சொன்னதுக்கு, எத்தன டிகிரி செல்சியஸ்லனு கேக்குறாரு

கருத்துகள் இல்லை:

சில எளிய சமையலறைக் குறிப்புகள்

ஐடியா - 1 : சமைக்கும்போது கனம் குறைவான கரண்டியை பயன்படுத்துவது நல்லது. கனமான கரண்டியை பயன்பட...

Popular Posts