லேபிள்கள்

ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

டீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாமா?

"சுகர் பீரி' சீனித் துளசி மூலிகையை சாகுபடி செய்து சர்க்கரை நோயை விரட்டலாம் என, காந்திகிராம பல்கலை தெரிவித்துள்ளது. மேற்குதொடர்ச்சி மலையில் "ஸ்டீபியா ரொபோடியானா' என்ற சீனித்துளசி மூலிகை உள்ளது. இவற்றின் இலையை மென்று தின்றால் இனிப்பாக இருக்கும். கலோரி அற்றது. இவை வெல்லம், சக்கரையை (சீனி) விட பல மடங்கு இனிப்பு சுவை கொண்டது. இவற்றின் மூலம் தயாரிக்கப்படும் உணவுப்பொருட்களை உண்டால் ரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்காது. இதனால் சர்க்கரை நோய் வராது. மலைப்பிரதேசத்தில் மட்டும் காணப்படும் அவற்றை, சமதள பகுதியில் பயிடுவதற்காக காந்திகிராம பல்கலை உயிரியியல் உதவி பேராசிரியர் ஆர்.ராமசுப்பு ஆய்வு மேற்கொண்டார். முடிவில் சீனித்துளசி சமதள பகுதியிலும் நன்றாக வளர்வது தெரியவந்தது.ராமசுப்பு கூறியதாவது: சீனித்துளசியில் உள்ள சர்க்கரை உடலுக்கு எந்த தீங்கும் தராது. அவற்றை பொடி செய்து இனிப்பு தேவையுள்ள உணவு பொருட்களில் பயன்படுத்தலாம். இதன் மூலம் "சாக்கரின்' பயன்பாட்டை குறைக்க முடியும். மலைப்பிரதேசத்தை போல், மற்ற பகுதிகளிலும் சீனித்துளசி நன்றாக வளர்கிறது. இதனால் அவற்றை மூலிகை பயிராக விவசாயிகள் சாகுபடி செய்யலாம், என்றார். தொடர்புக்கு 90948 15828.
 தென்அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட இந்த சீனித்துளசி, இனிப்புச்சுவை கொண்டது. இதன் இலைகளை சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்த முடியும். இலையை உலர வைத்து பொடியாக்கி, டப்பாக்களில் அடைத்து வைத்து இயற்கை சர்க்கரையாக பயன்படுத்தலாம். இந்த இலைகளில் கலோரிகளே (Zero  Calorie) இல்லை. அதனால், இனிப்புக்குப் பதிலாக தாராளமாக உபயோகிக்கலாம். அதிக சூரிய ஒளியை விரும்பும் இத்தாவரம், தமிழகத்தில் நன்கு வளரும்.
ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பார்கள். பழமொழி அளவுக்கு இலுப்பைப்பூ பிரசித்தி பெறுவதற்குக் காரணம் அந்த அளவு இனிப்புச்சுவை உள்ளது இலுப்பைப்பூ. முற்காலங்களில் பழங்குடி மக்கள் சர்க்கரைக்குப் பதிலாக இலுப்பைப்பூவின் இதழ்களை நேரடியாகவோ உலர்த்தியோ அரிசியுடன் சேர்த்து சமைத்தோ சாப்பிட்டிருக்கிறார்கள். அந்தவரிசையில் வந்திருப்பதே சீனித் துளசி.
சர்க்கரை
சர்க்கரைக்கு மாற்றாக அதுவும் இன்றைக்கு பெருவாரியான மக்களை பாடாய்ப்படுத்தி வரும் சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக வாராது வந்த மாமணிபோல் வந்திருப்பதே இனிப்புத் துளசி எனப்படும் சீனித் துளசி. `ஸ்டீவியா ரியோடியானா' எனப்படும் இந்த சீனித்துளசியின் தென்அமெரிக்காவை தாயகமாகக்கொண்டது. லத்தீன் அமெரிக்க நாடான பராகுவேயில் அதிகமாகக் காணப்படும் இந்தச்செடி சூரியகாந்தி குடும்பத்தைச்சேர்ந்தது. சீனித்துளசியில் இருந்து எடுக்கப்படும் ஸ்டீவியோசைடு (Stevioside) மற்றும் ரெபடையோசைடு (Rebaudioside)  போன்ற வேதிப்பொருள்களே இனிப்புத்தன்மைக்கு முக்கியக் காரணமாகும். கரும்புச்சர்க்கரையைவிட 30 மடங்கு அதிகமாக இனிப்புத்தன்மை கொண்டிருந்தாலும் மிகக்குறைந்த சர்க்கரை மற்றும் மாவுச்சத்து கொண்ட பொருட்களே இதில் உள்ளன. சர்க்கரைக்கு மாற்றாக உணவில் பயன்படுத்தப்படும் இந்த சீனித் துளசி உலக நாடுகள் பலவற்றிலும் சாகுபடி செய்யப்படுகிறது.
சீனித் துளசியில் சர்க்கரை இயற்கையாகக் காணப்படுவதால் சர்க்கரை நோயாளிகள் இதை தாராளமாகப் பயன்படுத்தலாம். இதன் இலைகளை காய வைத்துப் பொடியாக்கி டீயாக விற்கப்படுகிறது. உடனே சீனித்துளசியில் டீயா? என்று சிலர் கேட்கலாம். மேலும் இதை மூலிகை டீ என்று நினைத்துப் பயப்படவும் வேண்டாம். வழக்கமாக நாம் பயன்படுத்தும் டீயைப்போலவே பாலில் கொதிக்க வைத்து பயன்படுத்தலாம். சுக்கு, ஏலக்காய் சேர்த்துத் தயாரிக்கப்பட்ட சீனித்துளசியில் வெல்லமோ, சர்க்கரையோ சேர்க்கத் தேவையில்லை. கரும்புச் சர்க்கரை மற்றும் செயற்கை இனிப்பூட்டிகளான சாக்ரின், அஸ்பார்டேம் மட்டுமல்ல இயற்கைச் சர்க்கரைப் பதிலாகவும் இதைப் பயன்படுத்தலாம். டீ, காபி என்றில்லை… குளிர்பானங்கள், பழச்சாறுகள், ஐஸ்கிரீம், சாக்லேட், இனிப்புகள், பிஸ்கெட் போன்றவற்றிலும் சர்க்கரைக்குப் பதிலாக இதை பயன்படுத்தி உண்டு மகிழலாம். சீனித் துளசியில் ஊறுகாய், ஜாம் போன்றவையும் தயார் செய்யப்படுகின்றன.
மிகக் குறைந்த கொழுப்புச் சத்து கொண்ட சர்க்கரை உணவான இது ரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்தக்கூடியது. இதய நோயைக் குணப்படுத்தும் மருந்துகளிலும் சீனித் துளசி சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் செரிமானக்கோளாறுகளை சீராக்கும் இது அழகுசாதனப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. தோல் நோய்களைத் தீர்க்கும் மருந்துகளிலும் சேர்க்கப்பட்டுள்ளது.
இதன் பயன் தெரிய வந்ததையடுத்து இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெருமளவில் பயிரிடப்படுகிறது; தமிழகத்திலும் சில இடங்களில் பயிரிடப்பட்டு வருகிறது. விவசாய நிலங்களிலும், வீட்டுத் தோட்டங்களிலும் இதை வளர்க்கலாம். இது மிதவெப்ப மண்டலச்செடி என்பதால் அதிகமான சூரிய ஒளியை விரும்பக்கூடியது. எனவே தமிழகத்தில் செழித்து வளரும். ஆனாலும் குறைவான வெப்பநிலைதான் இதற்கு ஏற்புடையது. நல்ல வடிகால் வசதி உள்ள செம்மண் நிறைந்த நிலத்தில் நன்றாக வளரும். இயற்கை உரங்களைப் பயன்படுத்துவது நல்லது. மேலும் சீனித்துளசியை நோய் மற்றும் பூச்சிகள் எளிதில் தாக்காது. பயிர் செய்த 4 முதல் 5 மாதங்களில் அறுவடைக்குத் தயாராகும் சீனித்துளசியை 3 ஆண்டுகள் வரை தொடர்ந்து அறுவடை செய்து பயன்பெறலாம். சீனித்துளசியில் இலைகளே தேவை; பூக்கள் பூத்தால் செடியின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுவிடும் என்பதால் பூ பூத்ததும் நுனியைக் கிள்ளி பூக்களை அகற்றிவிட்டால் செடி செழித்து வளரும். நல்லமுறையில் பராமரிக்கப்படும் சீனித் துளசி 3 முதல் 5 ஆண்டுகள் வரை தொடர்ந்து நல்ல மகசூல் தரும்.



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வெள்ளி, 21 செப்டம்பர், 2018

இந்த 4 தவறுகளைத் திருத்தினால், நம் நாள் நன்றாக அமையும்!

தவறுகள் செய்வது மனித இயல்பு. ஒரு தவறு நேர்ந்துவிட்டால் அதை எண்ணி சோர்வடையாமல் அதை திருத்துவது எப்படி என்ற சிந்தனை மட்டுமே நம் மனதில் இருக்க வேண்டும். அதேசமயம், தவறுகளைக் களைந்தால்தான் வெற்றியும் கிட்ட வரும். உங்கள் நாள் நன்றாக அமைய, அப்படி களைய வேண்டிய முக்கியத் தவறுகளாக,  எழுத்தாளர் ரிச்சர்டு என் ஸ்டீபன்சன் (Richard N. Stephenson) சுட்டிக் காட்டுபவை இவை.
1. பழையதைப் பின்பற்றாதீர்கள்!
எப்போதும் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்காமல் புதிதாகச் சிந்தியுங்கள். எந்த வேலையாக இருந்தாலும், வார நடுவில் சலிப்பு தட்டுவதற்குக் காரணம் அதன் பழைமையே. புதிதாக முயற்சி செய்து பாருங்கள். ஒருவேளை அது தவறாக முடிந்தாலும், 'சரி இன்று ஏதோ ஒரு புது முயற்சி செய்தோம்' என்கிற திருப்தியாவது மிஞ்சும்.
இன்று நிறைய பேர் செய்யும் பொதுவான தவறு, தங்களுக்கென வாழ்க்கையில் ஒரு குறிக்கோளை வைத்துக்கொள்ளாமல் இருப்பது. உங்களுக்கென ஒரு குறிக்கோளை முடிவு செய்து அதை அடைவதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிந்து, அடுத்த அடுத்த நிலைகளுக்கு உங்களை நீங்களே நகர்த்திக்கொள்ள வேண்டும். புது விஷயங்களைத் தெளிவாகக் கற்றுத் தேர்ந்து சிறந்த முடிவுகளை தைரியமாக எடுங்கள்.
2. 'என்னால் முடியுமா?' என்ற அவநம்பிக்கையைச் சுமக்காதீர்கள்!
இன்று பலருக்கும் தன்னம்பிக்கை இல்லை. 'என்னால் முடியுமா?' என்று யோசிக்காமல், 'என்னால் ஏன் முடியாது?' என்று சிந்தியுங்கள். உங்களைச் சுற்றி ஒரு வட்டத்தை வரைந்து கொண்டு, 'அதுதான் என் உலகம். அதைச்சுற்றிதான் என் சிந்தனைகள் இருக்கும்' என்ற எண்ணத்தைக் கைவிட வேண்டும். 'என்னால் என்ன வேலை இயலும்? அதை எந்த அளவுக்கு கச்சிதமாக முடிக்க இயலும்' என்று உங்களுக்கு நீங்களே சுயமதிப்பீடு செய்து தன்னம்பிக்கையுடன் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துங்கள்.
3. நம்பிக்கை இழக்கச்செய்யும் உறவுகளைப் பொருட்படுத்தாதீர்கள்!
பாசிட்டிவிட்டி என்பது அனைவரின் வாழ்விலும் மிக முக்கியமாக இருக்க வேண்டிய ஒன்று. என்ன துயரம் நேர்ந்தாலும் 'இது நிரந்தரம் அல்ல, இதுவும் கடந்து போகும்' என்ற உணர்வு இருப்பது மிகவும் முக்கியம். இது போன்ற பாசிட்டிவ் சூழல்களை அமைப்பதில் பெரும் பங்கு, நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு உண்டு. நண்பர்கள், உறவுக்காரர்கள், உடன் வேலை செய்பவர் என யாராக இருந்தாலும், ஒருவரிடையே வெளிப்படும் நெகட்டிவிட்டி நம்மையும் சோர்வடைய செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. விமர்சனங்களோ, கருத்துகளோ ஊக்கப்படுத்தும் வகையில் சொல்லப்படாவிட்டால் அது நம்மிடையே இருக்கும் பாசிட்டிவிட்டியை குறையச் செய்யும். எனவே இவ்வாறு இருக்கும் உறவுகளின் கருத்துகளை மட்டும் அல்ல, அவர்களையும் பொருட்படுத்தக்கூடாது. முடிந்தவரை இவர்களிடமிருந்து உங்களை விலக்கிக்கொள்வதே நல்லது.
4. அறிவை தேக்கநிலையில் வைக்காதீர்கள்!
உலகச் செய்திகள், தொழில், வேலை சார்ந்த நாட்டு நடப்புகள் பற்றிய அறிவு முழுவதுமாக  இல்லை என்றாலும், உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாமல் இருக்காதீர்கள். அறிவு, பிறரிடம் உங்களுக்கான மரியாதையைப் பெற்றுத் தரும் பெரும் சொத்து. அதைத் தேக்க நிலையில் வைக்காதீர்கள்.
தவறுகள் கழித்தால் வெற்றியின் வாசல் கிட்ட நெருங்கும்!
நன்றி:   – விகடன்



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

புதன், 19 செப்டம்பர், 2018

கழிப்பறையின் ஆரோக்கிய விதிகள்.!

உணவு, உறக்கம், ஓய்வு மூன்றும் மனிதனுக்கு அடிப்படை. அதைப்போலவே உண்ட உணவு நல்லவிதமாக செரிமானமாகி, குறித்த நேரத்தில் மலமாக வெளியேறவேண்டியதும் மிக மிக அவசியம். செரிமானத்தில் சிக்கல் ஏற்படும்போது, உடலின் ஒட்டுமொத்த செயல்பாடும் முடங்கிப்போகிறது. உடலைவிட்டு வெளியேறும் மலம், நமது மலச்சிக்கல் முதல் மனச்சிக்கல் வரை ஆரோக்கியம் காட்டும் கண்ணாடியாக இருக்கிறது. உடல்நிலை சொல்லும் ஸ்டூல் சார்ட் இங்கே…
டைப் 1: மலம் கழிக்க மிகவும் சிரமமாக இருப்பது. தனித்தனியாக சிறு சிறு உருண்டைகள்போல வெளிவருவது. இந்த நிலை இருந்தால், மோசமான மலச்சிக்கல்.
தீர்வு: உடனடியாக, மருத்துவரை அணுக வேண்டும். மோசமான மலச்சிக்கல் ஏற்படுவதற்கு, நாட்பட்ட நோய்கள், புற்றுநோய், செரிமான மண்டல நோய்கள், சர்க்கரைநோய், கடுமையான மனநல பாதிப்பு போன்ற பல்வேறு காரணங்கள் இருக்கக்கூடும். மலச்சிக்கலைச் சீராக்க, தேவையான மலமிளக்கிகள் (Laxatives) எடுத்துக்கொண்டு, உணவுமுறை மாற்றம், வாழ்வியல் மாற்றம் போன்றவற்றுடன் அதற்கு மூல காரணமான நோயைக் கட்டுப்பாட்டில் வைப்பதன் மூலம் பிரச்னையில் இருந்து விடுபடலாம்.
டைப் 2: மலம் கழிப்பதில் சிரமமும் மலம் வறட்சியாக இருப்பதும் பிரச்னைதான். மலம் கழிக்கும்போது எரிச்சலான உணர்வு இருப்பது, இந்த நிலை பொதுவான மலச்சிக்கல் பிரச்னை.
தீர்வு: இதற்கு, செரிமான மண்டலக் கோளாறுகள், மனஅழுத்தம் போன்ற காரணங்கள் இருக்கக்கூடும். மருத்துவரை அணுகி மலமிளக்கிகள் எடுத்துக்கொள்ளலாம். ஆரோக்கியமான உணவுப் பழக்கம், வாழ்வியல் முறை மூலம் தீர்வு காணலாம்.
டைப் 3: மலம் கழிக்கும்போது லேசான எரிச்சல் இருந்து தொல்லை கொடுக்கும். வறட்சியாக, விரிசல்களோடு மலம் வெளியேறும். இந்த பிரச்னை உள்ளவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படலாம்.
தீர்வு: ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கமே இதற்கு முக்கியமான காரணமாக இருக்கக்கூடும் எனவே, போதுமான அளவு நார்ச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். துரித உணவுகளை தவிர்ப்பது நல்லது.
டைப் 4: பாம்புபோல நீளமாக மலம் வெளியேறும். மலம் வெளிவரும்போது எந்த எரிச்சல் உணர்வும் இருக்காது. இதுதான் இயல்பான நிலை.
தீர்வு: இது ஆரோக்கியமான நிலை. உங்களின் செரிமானம் சீராக இருக்கிறது என்று அர்த்தம். தினசரி சமச்சீரான உணவை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சிகளை செய்வது, போதுமான ஓய்வு எடுப்பதன் மூலம் ஆரோக்கியமான செரிமானத்தை தக்கவைத்துக்கொள்ளலாம்.
டைப் 5: எளிதாக மலம் வெளியேறும். ஆனால், தனித்தனியாக துண்டுகளாக வெளியேறும்.
தீர்வு: இது ஆபத்து இல்லாத நிலை என்றாலும், உணவில் நார்ச்சத்து குறைவாக இருப்பதே மலம் இப்படி வெளியேறக் காரணம். எனவே, நார்ச்சத்து மிகுந்த உணவுகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். கீரைகள், பழங்கள், காய்கறிகளில் நார்ச்சத்துக்கள் உள்ளன. அவற்றை நாள்தோறும் சாப்பிடலாம்.
டைப் 6: திரவ நிலை அதிகமாகவும் கொஞ்சம் திடமாகவும் மலம் வெளியேறும். இது வயிற்றுப்போக்கின் ஆரம்பநிலையாக இருக்கலாம்.
தீர்வு: ஆரோக்கியமற்ற உணவு, சுகாதாரமற்ற நீர் போன்றவையே வயிற்றுப்போக்குக்கு முக்கியக் காரணம். உடனே மருத்துவரை அணுக வேண்டும். வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்த மருந்துகள் எடுத்துக்கொண்டு, உடலுக்குத் தேவையான எனர்ஜியைப் பெற குளூக்கோஸ், சலைன் நீர் ஏற்றிக்கொள்ள வேண்டும்.
டைப் 7: திரவ நிலையில் மலம் வெளியேறும். அடிக்கடி வயிறு வலித்து, இதேபோல தொடர்ந்து போகும். இது தீவிர வயிற்றுப்போக்கு பிரச்னை.
தீர்வு: சுகாதாரமற்ற உணவுகளையும் நீரையும் தொடர்ந்து பயன்படுத்தும்போது, இப்படி வயிற்றுப்போக்கு ஏற்படும். மேலும், தீவிரமான செரிமான மண்டலப் பிரச்னை இருப்பவர்களுக்கும் இந்தப் பிரச்னை ஏற்படும். தாமதிக்காமல் வயிறு, இரைப்பை நிபுணர் ஒருவரை அணுக வேண்டும்.
நன்றி:  இளங்கோ கிருஷ்ணன் – விகடன் –



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

திங்கள், 17 செப்டம்பர், 2018

அதிக டோஸ் மருந்து, மாத்திரை என்ன செய்யும்?

மாத்திரையா… ஒரே கசப்பு என முகத்தை சுளிப்பவர்கள் பலர். மாத்திரை என்னும் கசப்பு மிட்டாயை நாம் உட்கொள்ளும் விதங்கள் மாறலாம். ஆனால் அவற்றின் செயலில் மாற்றங்கள் கிடையாது. ஆனால், ஒன்றுக்குமேல் ஒரேவிதமான மாத்திரையை ஒரே நேரத்தில் உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள், விளைவுகள் மற்றும் அவற்றுக்கான முதலுதவி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விளக்குகிறார் பொதுநல மருத்துவர் சுந்தரராமன்.
அதிக டோஸ் உள்ள மாத்திரைகளை உட்கொள்வது மிகவும் ஆபத்தானது. சாதாரண தலைவலி, இடுப்பு வலி, முதுகு வலி போன்ற எந்த ஒரு உடல் வலி மற்றும் நோய்க்கு அதிக டோஸ் உள்ள மாத்திரைகளை உட்கொள்ளக்கூடாது. மருத்துவர் பரிந்துரைத்த அளவு மட்டுமே மாத்திரைகளை சாப்பிடவேண்டும்.
ஓவர் டோஸ் மாத்திரை…
சிலர் ஒன்றுக்கு இரண்டு மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் உடல்நிலை சரியாகிவிடும் என்று கருதி அதிக அளவு டோஸ் உட்கொள்கிறார்கள். பாரசிட்டமால் மாத்திரை 3 கிராம் அளவுதான் சாப்பிட வேண்டும். அதற்கு மேல் சாப்பிட்டால் அது அதிக டோஸாகக் கணக்கிடப்படுகிறது. அதாவது,  நம் உடல்நிலையைப் பொறுத்தும், ஆரோக்கியம் மற்றும் வயதைப் பொறுத்தும் மாத்திரையின் டோஸ் அளவு மாறுபடும். நம் உடல் நிலை தாங்கிக்கொள்ளும் அளவை விட அதிகமாக இருந்தால் அது அதிக டோஸாக கணக்கிடப்படும்.
நீங்கள் உட்கொண்ட மருந்து ஓவர்டோஸாக ஆகிவிட்டால் ஏற்படும் பொதுவான அறிகுறிகள்
· குமட்டல்
· வாந்தி
· வயிற்றுப் பிடிப்பு
· வயிற்றுப்போக்கு
· தலைசுற்றல்
· தடுமாற்றம்
· பதற்றம்
· வலிப்பு
· உடல் அயர்வு
· செயல்களில் குழப்பம்
· மூச்சுத் தினறல், மூச்சுவிடுவதில் சிரமம்
· உடல் உள்உறுப்புகளில் ரத்தக் கசிவு
· மாயத்தோற்றம்
· நினைவாற்றால்
· பார்வைக் கோளாறு
· ஆழ்ந்த கோபம்
· பார்க்கும் இடம் சுழல்வதுபோல் தெரிதல்
· கோமா
இந்த அறிகுறிகள் பொதுவானவை. இவை ஒவ்வொரு மாத்திரை மற்றும் நோயைப் பொறுத்து மாறுபடும். மேலும், உடல்நிலை, ஆரோக்கியம், வயது போன்றவற்றைப் பொறுத்தும் மாறுபடும்.
சர்க்கரை நோயாளிகள்…
சர்க்கரை நோயாளிகள் உட்கொள்ளும் மாத்திரை சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இன்று அதிகமாக ஸ்வீட் சாப்பிட்டுவிட்டோம் என்று இரண்டு மாத்திரையை சாப்பிடக் கூடாது. அதேபோல காய்ச்சல், உடல் வலி போன்றவற்றுக்காக ஒரே விதமான மாத்திரையை அதிகமாக சாப்பிடக்கூடாது. இப்படி சாப்பிடும் அதிக டோஸ் மாத்திரை, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிக அளவில் குறைத்துவிடும். லோசுகர் நிலையை உண்டாக்கும். சில நேரங்களில் படபடப்பு, மயக்கம் மற்றும் நாடித் துடிப்பைக் குறைத்துவிடும்.
ரத்த அழுத்தம் உள்ளவர்கள்…
ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உட்கொள்ளும் மாத்திரைகள் அதிக அல்லது குறைந்த ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்து உடல் முழுவதும் ரத்தம் சீராக பாய உதவுகிறது. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாதாரண காய்ச்சல், உடல் வலி போன்றவற்றுக்காக அதிக டோஸ் உள்ள மாத்திரைகளை உட்கொள்ளும்போது, திடீரென ரத்த அழுத்தத்தின் அளவில் மாற்றம் உண்டாகும். மயக்கம், தலைசுற்றல், நினைவாற்றல் இழப்பு போன்றவற்றை ஏற்படுத்தும். இப்படியான மாற்றம் இதயத் துடிப்பை நிறுத்தும் அபாயமும் உள்ளது. சில நேரங்களில் உயிரிழப்புக்கூட ஏற்படுத்தும்.
மாத்திரைகள் எப்போது ஓவர் டோஸாக மாறும்..?
* ஒரே நேரத்தில் ஒரேவிதமான மாத்திரையை ஒன்றுக்குமேல் எடுத்துக்கொள்ளும்போது.
* நாம் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள், உடல் நிலைக்கு ஒத்துக்கொள்ளாது இருக்கும்போது ஓவர் டோஸாகக் கருத்தப்படும்.
அதிக டோஸ் மாத்திரைகளை உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள்…
சிறுநீரகம், கல்லீரல் மற்றும் குடல் போன்ற உறுப்புகளில் பாதிப்புகளை ஏற்படுத்தும். அதிக அளவு டோஸ் உள்ள மாத்திரைகள் வயிற்றில் அதிக நேரம் இருக்கும்போது வயிற்றில் உண்டாக்கும் அமிலங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனால், வயிறு தொடர்பானஉபாதைகளை உண்டாக்கும்.
மருந்து ஓவர் டோஸாகி விட்டால் என்ன செய்ய வேண்டும்?
நிதானமாக இருக்க வேண்டும்.
முதலுதவிக்கு ஆம்புலன்ஸைத் தொடர்புகொள்ள வேண்டும்.
அதிக டோஸ் மாத்திரை உட்கொண்டவர் நினைவில்லாது இருக்கும்போது (unconscious), நேராகத் தரையில் படுக்கவைக்க வேண்டும். தலையை நேராக வைக்க வேண்டும். கால்களை சற்று உயர்த்தி வைக்க வேண்டும்.
அதிக டோஸ் மாத்திரை உட்கொண்டவர், வாந்தி எடுத்தால் சரியாகிவிடும் என்று எந்த முயற்சியிலும் ஈடுபடக்கூடாது.
வலுக்கட்டாயமாக உண்பதற்கும் குடிப்பதற்கும் எதுவும் கொடுக்கக்கூடாது.
உடனடியாக மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.
முன்னெச்சரிக்கை எப்போதும் நல்லது..?
· * சில சமயங்களில் இந்த ஓவர் டோஸ் என்பது போலி மாத்திரைகளாலும் ஏற்படும். ஆகையால், மாத்திரையை வாங்கும்போது போலியா இல்லையா என்பதை உறுதி செய்து வாங்கவேண்டும்.
· * மருத்துவரின் ஆலோசனை இல்லாது சுயமாக எந்தவிதமான மாத்திரைகளையும் விழுங்கக்கூடாது.
· * எப்போதும் மாத்திரை உட்கொள்ளும்முன் மருத்துவரிடம் காட்டி ஒப்புதல் பெற்று சாப்பிடலாம்.
· * நீண்ட நாள்களாக வைத்திருக்கும் மாத்திரைகளை விழுங்கக்கூடாது.
· * மாத்திரை மருந்துகளைக் குழந்தைகளின் கைகளுக்கு எட்டும் தொலைவில் வைக்கக்கூடாது.
நன்றி:   விகடன்



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

சனி, 15 செப்டம்பர், 2018

மாத்திரை, #மருந்துகள் உட்கொள்ளும்போது தவிர்க்கவேண்டிய உணவுகள்!

ஆரோக்கியம் குறித்த விழிப்புஉணர்வு இன்று அதிகமாகிவிட்டது… உண்மை! உடல்நலம் குறித்த அக்கறையோடு பார்த்துப் பார்த்து காய்கறிகளைத் தேர்ந்தெடுத்து, அளவு பார்த்துச் சாப்பிடுகிறவர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்களேகூட ஒரு விஷயத்தில் கோட்டை விட்டுவிடுவார்கள். அது, மாத்திரை, மருந்துகள் சாப்பிடும் தருணம். `இவற்றில் சிலவற்றை உட்கொள்ளும்போது, சில உணவுகளைச் சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிடும்போது, மாத்திரை, மருந்தின் தன்மை பாதிக்கப்படும்; அவற்றின் பணி தடைப்படும்; சில நேரங்களில் நோய்க்கு மருந்தாவதற்கு பதிலாக, ஆபத்தான விளைவுகளையும் ஏற்படுத்திவிடும்.  
அதேபோல காபி, குளிர்ப்பானங்களைக்கூட மாத்திரை சாப்பிடும் நேரத்தில் அருந்தக் கூடாது. அதனால், மாத்திரை பயனற்றதாகிவிடும்; சில நேரங்களில் பக்கவிளைவுகள் ஏற்படும்' என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். அப்படி, எந்தெந்த உணவுகளுடன் எந்தெந்த மருந்து, மாத்திரைகளை உட்கொள்ளக் கூடாது என்பது குறித்து பொதுநல மருத்துவர் எம்.அருணாச்சலம் விவரிக்கிறார்.
இதயநோய் தொடர்பான மருந்துகள் – மதுப்பழக்கம்
ஐசோசோபைடு டினிட்ரேட் ( Isosorbide dinitrate), நைட்ரோகிளிசரின் (Nitroglycerine) போன்ற மாத்திரைகளை, கார்டியாக் அரெஸ்ட், இதயத் துடிப்பில் பாதிப்பு போன்ற இதயநோய் பிரச்னைகளுக்காக கொடுக்கப்படுபவை. 'ஆன்டி ஆர்த்திமிக் மருந்து' என்னும் இந்த வகை மருந்துகளை மது அருந்திய பிறகு உட்கொண்டால், குறைந்த ரத்த அழுத்த நிலையை உருவாகும். இந்த நிலை ஆபத்தான சூழ்நிலைகளை உருவாக்கலாம். இந்த மாத்திரைகள் மட்டுமல்ல எந்த மாத்திரையை உட்கொண்டாலும் மது அருந்துவதை அவசியம் தவிர்க்க வேண்டும். நார்ச்சத்து உணவுகளையும் சாப்பிட்டிருந்தாலும், மருந்தின் செயல்படும் தன்மையைக் குறைக்கும். எனவே, நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னதாகவோ அல்லது பின்னரோ சாப்பிடலாம்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வியாழன், 13 செப்டம்பர், 2018

இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்!

இந்த கடிகாரத்தை உறக்கத்தை நெறிப்படுத்த ஆணையிடும் திறனுள்ள மெலடோனின் அப்படீங்கிற வேதியியல் பொருளின் இயற்கை உறைவிடம் தான் செர்ரிபழங்கள்.
வாழைப்பழம்:
இயற்கையான தசை தளர்த்திகளான பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நம்ம வாழைப்பழத்துல நிறைய இருக்கு.
அது மட்டுமல்லாமல் எல் ட்ரிப்டோபன் அப்படீங்கிற அமினோ அமிலமும் வாழைப்பழத்துல இருக்குது. இந்த எல் ட்ரிப்டோபான் அமினோ அமிலமானது மூளைக்குள்ளே 5 HTP அப்படீங்கிற ஒரு ரசாயனமா மாறிவிடும். அதன் பிறகு இந்த 5 HTP-யானது செரடோனின் மற்றும் மெலடோனினாக மாறிவிடும்.
அதாவது மேலே சொன்ன டோஸ்‌ட் மாதிரியே இந்த ஓட்ஸ் கஞ்சியும் ரத்தத்துல இருக்குற சர்க்கரை அளவை அதிகப்படுத்தி அந்த சர்க்கரை இன்சுலின் ஹார்மோன் சுரப்பதை தூண்டிவிட அதன் விளைவாக உறக்கம் தூண்டும். மூளை ரசாயனங்கள் சுரந்து கடைசியா… "உறக்கம் உன் கண்களை தழுவட்டுமே… நிம்மதி நெஞ்சினில் மலரட்டுமே… அப்படீன்னு நாம தூங்கிடலாம்"
ஆனா பால் மட்டும் பழசுதான். ஆமாம் சின்ன வயசுலேர்ந்து ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு படுத்தா நல்லா தூக்கம் வரும் அப்படீன்னு அம்மா காய்ச்சின பாலை கொடுப்பாங்க இல்லையா?


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

ஹேண்ட்பேக் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் நல பிரச்சனைகள்.

பெண்கள் வெளியே செல்லும் போது ஹேண்ட்பேக் அவசியமானது. ஏற்கனவே எடுத்து செல்லும் பொருட்களின் எ...

Popular Posts