லேபிள்கள்

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2026

ஹேண்ட்பேக் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் நல பிரச்சனைகள்.


பெண்கள் வெளியே செல்லும் போது ஹேண்ட்பேக் அவசியமானது.

ஏற்கனவே எடுத்து செல்லும் பொருட்களின் எடை அதிகமாக இருக்கும்பட்சத்தில் ஹேண்ட்பேக்கை வாங்கும்போதே அதன் எடையைக் கவனிக்க வேண்டும். இல்லையெனில் பல உடல்நல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

வேலைக்குச் செல்லும் பெண்கள், தங்களுக்குத் தேவையான குடை, வாட்டர் பாட்டில், லஞ்ச் பாக்ஸ், முக்கியமான பேப்பர்கள், மேக்கப் பொருட்களை ஹேண்ட் பேக்கில் வைத்துக்கொள்கிறார்கள். குறைந்தபட்சம் நான்கு கிலோ பொருள்களுடன் ஒரு பக்கமாக மட்டுமே மாட்டிக்கொண்டு செல்வார்கள். இப்படித் தொடர்ந்து பயன்படுத்துவதால், பல்வேறு உடல் நலப் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்.

எலும்புகளில் பாதிப்பு ஏற்படும் தோள்பட்டையில் உள்ள நரம்புகள் நசுங்கி, கையில் வலியை ஏற்படுத்தும். அந்தப் பகுதியின் தசைகளும் பாதிப்படையும். பலரும் ஹேண்ட்பேக்கை வாங்குவதோடு சரி, அதனை பயன்படுத்திவிட்டு குப்பை தொட்டியில் தூக்கி வீசும் வரை அவற்றை துவைத்து சுத்தம் செய்வதே இல்லை. ஹேண்ட்பேக் தேர்வு அன்றாடம் பயன்படுத்தும் பேக் எனில், அது எடை குறைவானதாக இருக்கட்டும். அடிக்கடி துவைத்துச் சுத்தம் செய்ய எளிதாக இருக்கும் வகையிலும் அமைந்திருக்கவேண்டும்.

தோள் பகுதியில் வரும் ஸ்ட்ராப், பட்டையாக இருக்க வேண்டும். இரண்டுத் தோள்களிலும் மாட்டிக்கொள்ளும்படியான பின்பக்க பேக்கைப் பயன்படுத்தலாம். ஷோல்டர் பேக்கை பயன்படுத்தும்போது வலது கை, இடது கை என அடிக்கடி பையை மாற்றி அணியுங்கள். அனைத்துப் பொருள்களையும் ஹேண்ட்பேக்கில் அடைக்காமல், உணவு மற்றும் தண்ணீர் ஆகியவற்றுக்கு லஞ்ச் பேக்கைப் பயன்படுத்துங்கள். அடிக்கடி ஹேண்ட்பேக்கை சுத்தம்செய்து தேவையற்ற காகிதங்கள், பயன்பாடில்லாத பொருள்களை அப்புறப்படுத்தவும். மொத்தத்தில் ஹேண்ட்பேக்கை லக்கேஜ் ஏற்றும் லாரியாக பயன்படுத்தாமல் மயிலிறகாக மென்மையாக கையாள வேண்டும்.



--

கருத்துகள் இல்லை:

ஹேண்ட்பேக் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் நல பிரச்சனைகள்.

பெண்கள் வெளியே செல்லும் போது ஹேண்ட்பேக் அவசியமானது. ஏற்கனவே எடுத்து செல்லும் பொருட்களின் எ...

Popular Posts