லேபிள்கள்

திங்கள், 11 மார்ச், 2013

நிக்காஹ் புறக்கணிப்பு சரியா..

இஸ்லாத்தில் அல்லாஹ்வும் அவன் ரசூலும் வலியுறுத்திய நிக்காஹ் என்ற ஒரு கட்டாயக்கடமையை ஒருவர் செய்கிறார் என்றால்... அவருக்கு உறுதுணையாக இருந்தால் நன்மை கிடைக்குமா அல்லது அவரின் இந்த நற்செயலை புறக்கணித்தால் நன்மை கிடைக்குமா...? இதை புறக்கணிக்க இஸ்லாமிய அனுமதி உண்டா..? உண்டு என்றால் அதை எப்போது செய்யலாம்..? கண்ட காரணத்தை சொல்லி நிக்காஹ்வை புறக்கணிக்க ஆதாரம் உண்டா..? இக்கேள்விகளுக்கெல்லாம் பதில்களை அலசுவோமா...?
சிலர்,  ஒரு திருமணத்தில்  பித்அத் இருந்தால் நிக்காஹ்வை புறக்கணிக்க வேண்டும் என்ற தவறான நிலைப்பாட்டில் உள்ளனர்..!
மணமக்களின் உறவே இஸ்லாமிய அடிப்படையில் திருமணம் செய்யக்கூடாத அளவில் உள்ள ஹராம் என்றாலோ....
அல்லது 
மேலே கூறப்பட்ட இஸ்லாமிய கட்டளைகள் (மணமகள் சம்மதம், மஹர், வலீ, இரு சாட்சிகள், ஒப்பந்தம்) ஆகியன தேவை இல்லை என மீறப்பட்டாலோ...
இதனால், 
'அல்லாஹ் மற்றும் அல்லாஹ்வின் ரசூலால் சொல்லப்பட்டதற்கு மாற்றமாக இந்த நிக்காஹ் உள்ளது... இது அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப்படுமா என்று தெரியவில்லை... எனவே.... நான் இந்த நிக்காஹ்வை புறக்கணிப்பேன்" என்றால்... அதில் நியாயம் உள்ளது..! 
இப்போது இவர்களிடம் எனது கேள்வி என்னவென்றால்.....
"இந்த மாப்பிள்ளை ஊர்வலம் பைத்சபா  பாடலுடன் ஊர்வலம் வந்தார்... 
"மாப்பிள்ளை கோட்-சூட்-டை-மாலை-ஷூ- போட்டு ஆடம்பரமாகிவிட்டார்... "
"திருமணத்துக்கு வந்த ஒருவர் நிக்காஹ் முடிந்தவுடன் மைக்கில் ஒரு தொப்பி போட்டு தாடி வைத்த ஒரு ஹஜ்ரத்  பித்அத் துவா ஓதப்போகிறார்... "
"இந்த கல்யாணத்துக்கு ஆயிரம் பேரை மட்டன் பிரியாணி & சிக்கன் ஃபிரை என்ற வலிமா விருந்துக்கு அழைத்து ஆடம்பரம் செய்கிறார்கள்.....  "
இதனால்... நிக்காஹ்வை புறக்கணிக்க வேண்டும்... என்போர்.... இப்படியான ஆடம்பரங்கள் மற்றும் பித்அத் ஒரு திருமணத்தில் இருந்தால் அதில் உள்ள நிக்காஹ்வை புறக்கணிக்க வேண்டும் என்ற குர்ஆன் ஆயத்து... சஹீஹ் ஹதீஸ்.... ஆகியவற்றை...
நிக்காஹ் விஷயத்தில் அப்படி ஓர் ஆதாரம் இருந்தால் அதை வையுங்கள்...! அப்படியான நிக்காஹ்வை புறக்கணிப்பதில் நானும் இன்ஷாஅல்லாஹ் உங்களுடன் இணைகிறேன்..!
எனது கேள்வியை இன்னும் சுருக்கி.... இன்னும் துல்லியமாக கேட்கிறேன்...!
சூழ்நிலை ஒன்று...!
இதோ இப்படி ஒரு நிலை வருகிறது என்று வைப்போம்...!
ஒரு மணமகன்... நம்முடைய தவ்ஹீத் சகோதரர்.... இரண்டில் ஒரு சாட்சியாக இருக்க என்னையும் உங்களையும் அழைக்கிறார்.
நாம் அங்கே சென்றால்.... மற்ற எல்லாமே நபிவழியில் சரியாக உள்ளது. பக்கா இஸ்லாமிய வழிமுறையில்..!
ஆனால், 
அங்கே பெண்ணுக்கு வலீயாக வந்த ஒருவர் நிற்கிறார்.... அவர்,  நிக்காஹ் ஒப்பந்தம் முடிந்தவுடன் "அல்லாஹும்ம அள்ளிஃப் பைனஹுமா..." என்ற துவாவை ஓதுவேன் என்கிறார்..! 

நாம் மணமகனை நோக்க... "நான் என்ன பண்ணுவேன் சகோ.... எவ்வளவோ சொல்லி பார்த்துட்டேன்... அவர் கேட்கலை... வேறு வலியும் மணப்பெண்ணுக்கு இல்லையாம்... என்ன செய்ய நான்..?" என்கிறார்...!
சொல்லுங்கள்.... இப்போது இந்த நிக்காஹ்வை நாம் சாட்சி கையெழுத்து போடாமல் புறக்கணிப்பதா.... அல்லது புறக்கணிக்ககூடாதா...?
ஒரு பித்அத் இருக்கிறது என்பதற்காக அல்லாஹ் இட்ட கட்டளையை மணமக்களுக்கு நடக்காமல் செய்ய காரணம் ஆக போகிறோமா..? 

அல்லது
 

நிக்காஹ் நடக்க காரணமாக சாட்சியாக இருந்து முடிந்தவுடன்.... நாம் நம்முடைய நபிவழிப்படி... "பாரக்கலாஹு லக... வ பாரக்க அலைக்க... வ ஜமஅ பைனக்குமா ஃபீ க்ஹைர்...!" என்று சொல்லிவிட்டு... "யோவ் வலீ.... நீ வேணும்னா உம்ம துவாவை ஓதிக்கிட்டு நீயே ஆமீன் போட்டுக்க... இது பித்அத்... நாங்க இதை புறக்கணிக்கிறோம்...." என்று கூறி என்று நாம் கழண்டு விட்டால்... பித்அத் ஐ ஆதரித்து விட்டோம் என்று அர்த்தமாகிவிடுமா...? அந்த துவாவுக்கு முன்னர் நடந்த நிக்காஹ் "புறக்கணிக்க வேண்டிய பித்அத் சபை" என்றாகி விடுமா...
பதில் சொல்லுமுன்னர் முந்திய பதிவான........ 
திருமணம் 'கட்டாயக்கடமை' இல்லையா...?
----இதில் நான் சொன்ன ஆதாரங்கள் அனைத்தையும் படித்து விட்டு பதில் சொல்லுங்கள்...!
சூழ்நிலை இரண்டு...!
இதோ... இப்படி ஒரு நிலை வருகிறது, என்று வைப்போம்...!
ஒரு மணமகள். அவளுக்கு யாருமே கிடைக்கவில்லை, வலீயாக இருக்க...! நீங்கள் ஆட்சியாளர். எனில், நீங்களே வலீ.
நானும் இன்னொருத்தரும் சாட்சிகளாக நிக்காஹ் நடக்கும் இடத்துக்கு நீங்கள் அழைத்ததன் பேரில் வந்தால்.... மற்ற எல்லாமே நபிவழியில் சரியாக உள்ளது. பக்கா இஸ்லாமிய வழிமுறையில்..!
ஆனால், 
நம்ம மாப்பிள்ளை மாலையும் கழுத்துமாக வந்து நிற்கிறார்..!
இந்த ஒன்றுதான் இடிக்கிறது...!
 
நான் என்ன சகோ... இது...? என்று உங்களை நோக்க... 
நீங்கள்... "அவருகிட்டே கேட்டுட்டேன் சகோ... அவரு... கல்யாண ஃபோட்டோ எடுத்தால்... அதில் மாலையும் கழுத்துமா இருக்கணும் என்று விரும்புகிறாராம்... அவசியமாம்... இது அவருக்கு ஆடம்பரம் இல்லையாம்... மாலை மார்க்கத்தில் இல்லைன்னும் தெரியுமாம்... கழட்ட மாட்டேன்... போட்டே தீருவேன் என்கிறார்...என்ன செய்ய..." என்று சொல்கிறீர்கள்..!
ம்ம்ம்.... சொல்லுங்கள்.... இப்போது இந்த நிக்காஹ்வை நான் சாட்சி கையெழுத்து போடாமல் புறக்கணிப்பதா.... அல்லது புறக்கணிக்ககூடாதா...? நீங்கள் வலியாக இருப்பீர்களா... அல்லது புறக்கணிப்பீர்களா...?
ஓர் ஆடம்பரம் என்று நாம் கருதும் ஒன்று மாப்பிள்ளை கழுத்தில் இருக்கிறது என்பதற்காக அல்லாஹ் இட்ட கட்டளையை மணமக்களுக்கு நடக்காமல் செய்ய காரணம் ஆக போகிறோமா..?  
அல்லது... நிக்காஹ் நடக்க வலீயாக, சாட்சியாக இருந்து அது முடிந்தவுடன்.... நாம் 'பாரக்கலாஹு லக...' சொல்லிவிட்டு... மாப்பிள்ளைக்கு மாலையை பற்றி... அது ஒழிக்கப்பட வேண்டியதைப்பற்றி ஒரு சிறு கிளாஸ் எடுத்துவிட்டு... கிளம்புவோமா...?ஆனால்...  

நானும் ஒரு நிக்காஹ்வை புறக்கனிப்பேன்.
எப்போது தெரியுமா...?
அதில்... ஹராம் இருந்தால்..! அதில் ஷிர்க் இருந்தால்..!
அல்லாஹ் திருமணம் செய்ய தடை கூறி ஹராமாக்கிய சொந்தத்துக்கு இடையில் (அண்ணன்-தங்கை, அப்பா-மகள், அம்மா-மகன்... இதுபோல...) நிக்காஹ் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிந்தே தெரிந்தே புரிந்தே நடந்தால்..!
அல்லாஹ் கூறிய "நிக்காஹ்வுக்கு அவசியமான வலி, சாட்சிகள், பெண்ணின் சம்மதம் போன்றவை, மஹர் (சிலர் மஹரும் தந்து அந்த சபையில் வரதட்சணையும் வாங்கி தருகிறார்கள். இது அப்பட்டமான அல்லாஹ்வின் மஹர் சட்ட அவமதிப்பு)  ஏதும் அவசியமில்லை" என்று பகிரங்கமாக கூறி... அல்லாஹ்வின் கட்டளை அறிந்தே தெரிந்தே புரிந்தே மீறப்பட்டால்...! 
நிக்காஹ் நடக்கும் இடத்தில்... சிலை வழிபாடு... சமாதி வழிபாடு... அக்னி வழிபாடு... போன்ற அல்லாஹ் தடை கூறிய.... ஷிர்க் இருந்தால்...!
இவை நிச்சயம் அல்லாஹ்வை கேலி செய்வது..! 
அவன் வசனங்களை மறுப்பது..! 
எனவே.... இதுபோன்ற நிக்காஹ்வை நான் நிச்சயமாக முடிந்தால் கையால் தடுப்பேன்..! முடியவில்லையேல் வாயால் தடுப்பேன்...! அதுவும் முடியவில்லையேல் அந்த நிக்காஹ்வை புறக்கணிப்பேன்..!
இப்படி செய்ய.... எனக்கு என்ன இஸ்லாமிய ஆதாரம்...???
அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் அல்லாஹ் நரகில்ஒன்று சேர்ப்பான்.- (அல்குர்ஆன் 4:140)
அப்புறம் எப்படி வீண் வெட்டி ஆடம்பர பித்அத் அனாச்சாரங்களை ஒழிப்பது என்றா கேட்கிறீர்கள்..? 
இன்றைய இஸ்லாமிய இயக்கங்கள் சில, நன்மையை வேறு எங்கோ ஓரிடத்தில் (மேடை/டிவி) ஏவிவிட்டு... அந்த தீமை நடக்கும் இடத்தில் தீமையை தடுக்க வழி இருந்தும்... தடுக்காமல்... வெறும் 'ஈமானின் கடைநிலை புறக்கணிப்பால்' என்ன பெரிய பயன் ஏற்படுகிறது..? எதிர்ப்பில்லா தீமை இன்னும் பலம்தான் பெறுகிறது..!

தீயதை கண்டால்... நாம் கையால் தடுக்க வேண்டும் அல்லவா..? தனி மனிதனாக தடுத்தால் மண்டை உடையும்..! எனவே... ஊரில் அப்படி புறக்கணிக்கும் எண்ணம் கொண்டவர்கள் எல்லாம் ஒன்று கூடிச்சென்று... அவை நடக்கும் இடத்தில் ஜமாஅத்தாக சென்று அவற்றை நடக்க விடாமல் கையால் தடுக்க வேண்டும்..!
 
ஏன்...? முடியாதா..? இன்று ஒரு SMS இல் இலட்சம் பேரை திரட்டும் வல்லமை இயக்கங்களிடம் உள்ளதா... இல்லையா..? எனவே, கையால் தடுக்கும் கடமையும் இவர்களுக்கு சேர்ந்து விடுகிறது..! 
அப்படியான சாத்தியம்... இல்லையா...? சரி,  எங்கோ வேறொரு திருமணமே நடக்காத இடத்தில் மேடை போட்டு இதனை கடுமையாக எதிர்ப்பதை விடுத்து... அவை எல்லாம் நடக்கும் இடத்தில், களத்தில் இறங்கி நமது பிரச்சாரத்தை அழகிய முறையில் செய்யலாமே..? இப்படி தீமையை அது நடக்கும் இடத்திலேயே வாயால் தடுத்தால் என்ன..? அங்கே வந்த மக்களிடம் அவை குறித்து 'விழிப்புணர்வு பிட்நோட்டிஸ்' தந்தால் என்ன..?
இதுவும் முடியாதா...? சரி, மனத்தால் வெறுத்து... அவற்றை மட்டும் புறக்கணிக்கலாம்..! 'அது எப்படி முடியும்' என்கிறீர்களா..? 
முடியும்..! அதுவரை கூட்டமாக வீட்டுக்கு/மண்டபத்துக்கு/பள்ளிக்கு வெளியே நின்று விட்டு... நிக்காஹ் ஆரம்பிக்கும் போது மட்டும் அங்கே திடீர் என்டர் கொடுப்பது..! அது முடிந்து "அல்லாஹும்ம அள்ளிஃப்..." பித்அத் துவா ஸ்டார்ட் ஆகுதா... சத்தமாக எல்லாரும் சேர்ந்து.. "பாரக்கலாஹு லக.." ஓதிவிட்டு... 'திமு திமு' என்று எழுந்து இடத்தை காலி பண்ணி வெளியேறி வெளிநடப்பு செய்து விடுவது..!

பின்னர் மீண்டும் அந்த துவா முடிந்தவுடன்... உள்ளே சென்று வலிமாவில் கலந்து கொள்ள வேண்டும்..! எப்படி...? இதில்... அல்லாஹ் மறைமுகமாக
 சொல்வது... நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்!  அதாவது... அவர்கள் வேறு நல்ல ஆகுமான பேச்சுக்களில் ஈடுபட்டால்... அதே சபையில் சென்று கலந்து கொள்ளலாம் எனபதே..!
இப்படி செய்வது... இதொன்றும்  நமக்கு புதிது இல்லையே..? நாம் நமது மஸ்ஜித்களில் இதனைத்தானே தினம் செய்கிறோம்..! தொழுகை முடிந்து கூட்டுதுவா ஓதினால் எழுந்து வெளியே செல்கிறோம்..! தராவீஹ் எட்டாவது ரக்கத் முடிந்தால் அனைவரையும் விளக்கி வெளியே செல்கிறோம்..! பின்னர்... வித்ர் ஆரம்பிக்கும் பொது உள்ளே நுழைகிறோம்..! இதெல்லாம்தான் அங்கே உள்ள மற்ற மக்களுக்கு செயல் மூலம் தாவா..!

பராஅத்-மிஃராஜ்-தஸ்பீஹ் நஃபீல்-யாசீன்- துவா... மவ்ளூது-ஹத்தம்-பாத்திஹா-ராத்திபு... இவற்றில் எல்லாம் கலந்து கொள்வதில்லையே..! ஃபர்ளும் சுன்னத்தும் தொழுதுட்டு வெளிநடப்பு செய்கிறோமே..! இவற்றுக்காக பள்ளிவாசலையே புறக்கணித்தது இல்லையே நாம்..? இதேபோல... திருமணத்திலும் செய்ய முடியாதா, என்ன..?

இன்ஷாஅல்லாஹ்.... கடமையை நிறைவேற்றி... பித்அத் ஐ அனாச்சாரத்தை மட்டும் புறக்கணிக்க முடியும்..! நிச்சயம் முடியும்..
http://www.onlyoneummah.blogspot.in/2012/08/blog-post.html

--
*more articles click*
www.sahabudeen.com



சனி, 9 மார்ச், 2013

கார்/பஸ் தண்ணீருக்குள் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? பயண பாதுகாப்பு வழிமுறைகள்

1.     சாலையில் பாதுகாப்பான பயண வழிமுறைகள் என்னென்ன? (பயணி/டிரைவர் இருவருக்கும்!)  
·                     முதல்ல கார்ல உட்கார்ந்த உடனே கார் கதவை மூட வேண்டும்! 
·                     கண்டிப்பாய் முன்புறமுள்ள டிரைவர்/பயணி இருவரும் சீட்பெல்ட் போடவேண்டும்!
·                     சாலையில் அனுமதிக்கப்பட்ட வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும்! (வேகமா எங்க விண்வெளிக்கா போகப்போற?) அனைத்து டிராபிக் ரூல்ஸ்களையும் பின்பற்ற வேண்டும்!
·                     சாலை என்பது பகிர்ந்து செல்வது! உனக்காக மட்டும் போடவில்லை! சாலையை உபயோகப்படுத்த நடைபயணி, சைக்கிள்காரர், லாரி, பஸ், மாட்டுவண்டி என அனைவருக்கும் உரிமையுண்டு! யாரேனும் வேகமாக வந்தால் அவருக்கு வழி விட்டுவிடவும்! (சாகப்போகிறவன் வேகமாத்தான் போவான்!)
·                     14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை முன்புற இருக்கையில் அமர அனுமதிக்கக்கூடாது! 
·                     யாரேனும் நடந்து சாலையின் குறுக்கே வந்துவிட்டால் காரை நிறுத்தி அவர்கள் போன பின்பே செல்ல வேண்டும் (நீ இதேபோல் எத்தனைமுறை வந்திருப்ப?)
·                     ஒவ்வொரு நாளும் பயணத்தை ஆரம்பிப்பதற்குமுன் சக்கரங்களின் காற்றை சரிபார்க்க வேண்டும! 
·                     இருசக்கர வாகனங்களில் செல்லும்போது கட்டாயம் ஹெல்மெட் போடவேண்டும் (பயணம் செய்யும் இருவரும்!) சைக்கிளில் செல்லும்போது ஹெல்மெட் + REFLECTIVE LIFE JACKET அணிய வேண்டும். நீங்கள் தவறுதலாய் ரோட்டின் நடுப்பகுதிக்கு வந்துவிட்டால்கூட தூரத்தில் வரும் வாகனங்கள் எளிதில் உணர்ந்து நிறுத்த முடியும்! 
·                     தேவையில்லாமல் ஹாரன் அடிப்பது, வேகமாக செல்லுதல், வேறு டிரைவர்களை கெட்டவார்த்தையால் திட்டுவது, வீலிங் செய்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். முன்புறம் செல்லும் வாகனங்களிலிருந்து குறிப்பிட்ட இடைவெளியை பின்பற்றவும், முந்த வேண்டுமெனில் லைட்டை உபயோகிக்கவும் - ஹாரனை அல்ல!

2.     நீங்கள் பயணம் செய்யும் கார்/பஸ் தண்ணீருக்குள் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

  கார்/பஸ் தண்ணீருக்குள் விழுந்துவிட்டால் முன்புற அல்லது பின்புற கண்ணாடியை உள்ளிருந்து வெளிப்புறமாகக் கையால் வேகமாய்க் குத்தவும். (அர்ஜுன் சொல்ற மாதிரி முதலாளி! உங்க அக்காவ நினைச்சிகிட்டு வேகமா குத்துங்க) இதனால் கண்ணாடி உடைந்துவிடும்! அதன்மூலம் நீங்கள் வெளியே வந்துவிடலாம்! குத்துவதற்கு ஏதேனும் இரும்புக்கம்பி இருந்தால் அதைக்கூட உபயோகிக்கலாம்! 

3.     உங்களின் டிரைவிங் வேகம் எதைப் பொறுத்தது? ரோடு கண்டிசன் மெயின் ரோடு/சப் ரோடு அல்லது வாகனம்?

  டிரைவிங் வேகம் ரோடு/மெயின் ரோடு/ சப்ரோடு/வாகனம் இவற்றையெல்லாம் பொறுத்தது அல்ல! உங்கள் பார்வை எவ்வளவுதூரம் வரை பார்க்க முடிகிறது என்பதை பொறுத்தது. இதனால்தான் வளைவு வரும்போது நீங்கள் வேகத்தைக் குறைக்க வேண்டும்! மலைப்பாதை/ ,மழை, பனி மற்றும் இரவில் நீண்ட தூரம் பார்க்க முடியாததால் வேகத்தைக்குறைத்து செல்ல வேண்டும்!

4.
    மலைப்பாதைகளில் இறங்கும்போது ஆட்டோமாட்டிக் கியரில் போகக்கூடாது ஏன்? இறக்கங்களில் பிரேக் பிடிக்காதது ஏன்?

  புவிஈர்ப்பு விசையால் உங்கள் வாகனம் இறக்கங்களில் தானாகவே வேகமாய்ச் செல்லும்! ஆட்டோமாட்டிக் கியரில் வேகம் அதிகரிக்க தானாகவே அடுத்த கியருக்கு மாறி இன்னும் வேகமாகச் செல்லும்! வேகம் அதிகரிக்க அதிகரிக்க உங்கள் பிரேக் திறன் குறைத்துக்கொண்டே வரும்! எனவே ஆட்டோமாட்டிக் கியரை மாற்றி இரண்டாவது கியரில் பயணிக்க வேண்டும்! இதனால் எஞ்சினிலுள்ள என்ஜின் பிரேக்கையும் நாம் உபயோகிக்கிறோம்! பயணம் பாதுகாப்பானது! 

5.
     மலைகளில் யாருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் - ஏறுபவர்? அல்லது இறங்குபவர்

  மலைகளில் நிச்சயம் ஏறுபவருக்குத்தான் முன்னுரிமை! அது மாட்டுவண்டியாய் இருந்தாலும்கூட! ஏறுபவர் நிறுத்தினால் வண்டி புவிஈர்ப்பு விசையினால் பின்னோக்கி நகர ஆரம்பித்துவிடும், இப்படி எத்தனைமுறை அவர் நிறுத்தி செல்லுவார்? எனவே இறங்குபவர் ஏறுபவருக்கு வழி கொடுத்து வாகனத்தை நிறுத்திவிட வேண்டும்.


--
*more articles click*
www.sahabudeen.com



வியாழன், 7 மார்ச், 2013

முகப்பரு வரக் காரணம் என்ன?

 பருவ வயதில் "ஆன்ட்ரோஜன்" என்றஇயக்குநீர் (Androgen Harmone) ஆண், பெண்இருபாலருக்கும் சுரக்க தொடங்கும். சில சமயங்களில் ஆன்ட்ரோஜன் அளவுக்கு அதிகமாகச்சுரக்கும்போது முகப்பரு உண்டாகிறது.
சருமத்தில் கொழுப்புச் சுரப்பிகள் (Sebaceous Glands) உள்ளது, அவை "சீபம்" (Sebum) என்ற எண்ணைப்பசை போன்ற ஒரு பொருளைவெளியேற்றுகிறது. இவை மயிர்க்கால்களில் தங்கி சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கப்பயன்படுகின்றன. பருவ வயதில் சுரக்கும் அதீத ஆன்ட்ரோஜன் இந்த எண்ணைப்பசையை மிக அதிகமாக சுரக்க வைக்கின்றன. அப்போது அவை மயிர்க்கால்களில் வழக்கத்தைவிட அதிக அலவில்படிந்து, திரண்டு, ரவை போன்ற முகப்பருக்கலை ஏற்படுத்துகின்றன. சில சமயங்களில்பாக்டீரியா கிருமிகள் பருக்களில் தொற்றிக்கொள்ள, பருக்கள் பெரிதாக வீங்கிக்கொள்கின்றன.எப்படி என்பதை இப்போதுபார்ப்போம்:
  முகப்பருவைப் போக்கவும், தடுக்கவும் கீழ்க்காணும் வழிமுறைகள் நிச்சயம் உதவும்:
1. முகத்தை சோப்புப் போட்டு வெதுவெதுப்பான தண்ணீரால் அடிக்கடிகழுவுங்கள்.
2. முகத்தில் பவுடர் பூசுவதையும், அழகு சாதன களிம்புகள்உபயோகப்படுத்துவதையும் தவிருங்கள்.
3. சுத்தமான காற்றும், சூரிய ஒளியும் முகத்திற்கு தேவை.
4. கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகளையும், நெய், வெண்ணெய் கேக், ஐஸ்கிரீம், சாக்லெட், பாலாடை போன்றவற்றையும் ஒதுக்குங்கள்.
5. கீரை மற்றும் பச்சை காய்கறிகளை நிறைய சாப்பிடுங்கள்.
6. தினமும் இரண்டு லிட்டருக்கு குறையாமல் தண்ணீர்குடியுங்கள்.
7. மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
8. பருக்களை கிள்ளுவதோ, அதலுள் இருக்கும் ரவை போன்ற பொருளை வெளியேற்றஅழுத்துவதோ கூடாது.
9. பருக்களில் சீழ் வைத்தால் "டெட்ராசைக்ளின்" (Tetracycline) மாத்திரைகளை மருத்துவர்பரிந்துரைக்கும் கால அளவுக்கு தொடர்ந்து சாப்பிடுங்கள்.
10. பருக்களின் மேல் பூசுவதற்கு பலவித களிம்புகள் கிடைக்கின்றன.அவற்றை தேர்வு செய்வதற்கு மருத்துவரின் உதவியை நாடுங்கள்
நன்றி ..தமிழ் ஜோதி

முகப்பரு நீங்க
* பன்னீர் ரோஜா மொட்டுக்களை எடுத்து, அது முழ்கும் அளவு சூடான தண்ணீர் விட்டு, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின் அந்த நீரை வடிகட்டி முகத்தில் பூசி அரைமணி நேரம் ஊறிய பின் துடைத்து எடுக்கவும்.இவ்வாறு செய்தல் பருக்கள் நாளடைவில் மறையும்.
* சந்தனக் கட்டையை பன்னீர் விட்டு இழைத்து முகத்தில் தடவி வந்தால், பருக்களினால் ஏற்பட்ட வடுக்கள் நாளடைவில் மறையும்.
*தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது வெளியேறும் வியர்வையினால், துவாரங்களில் உள்ள அழுக்கு நீக்கி பருக்கள் வராமல் தடுக்கலாம்.
*ஒரு ஸ்பூன் ஆரஞ்சு பழச்சாறை, ஒரு ஸ்பூன் குளிர்ந்த நீரில் கலந்து அதை முகத்தில் தடவி அரைமணி நேரம் ஊறிய பிறகு துடைத்து விடவும். இது சருமத்தில் உள்ள எண்ணெய் நீங்கி பருக்கள் வராமல் பாதுகாக்கும்.பார்லர்களில் இதே சிகிச்சையை ஆரஞ்சு பீல் மாஸ்க் என்ற பெயரில் செய்கின்றனர்.
* வேப்பிலை பொடி, துளசி பொடி, புதினா பொடி ஆகியவை தலா ஒரு டீஸ்பூனும், முல்தானிமெட்டி இரண்டு ஸ்பூன்களும் எடுத்துக் கொள்ளவும். பின் அதை மிதமான சுடுநீரில் கலந்து முகப்பருக்களில் தடவவும். இந்த கலவையை கண்களுக்கு அடியில் தடவக்கூடாது. பதினைந்து நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விடவும்.
* இரண்டு ஸ்பூன்கள் ஓமவல்லி இலைச்சாறுடன், ஒரு ஸ்பூன் சிவப்பு சந்தனத்தை கலந்து பருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால் விரைவில் பருக்கள் தொல்லை நீங்கும்.
* சோற்றுக் கற்றாழை சருமத்தை மிருதுவாக்கும் தன்மையுடையது. அவற்றின் நடுவில் இருக்கும் பசையை எடுத்து, அதில் சம அளவு நீரைக் கலந்து முகத்தில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைப்பதை பார்க்கலாம்.
* ஒரு ஸ்பூன் அருகம்புல் பொடியும், குப்பமேனி இலைப் பொடியும் குளிர்ந்த நீரில் கலந்து பருக்களில் போடலாம். இது பருக்களின் வடு மறைய உதவுகிறது.
நன்றி: மாலைமலர்

முத்து முத்தாய் முகப்பரு : பன்னீர் சந்தனக் கலவைப் போதும்
பருவ வயது ஆண், பெண்களின் மிகப் பெரிய பயம் பருக்கள். முகத்தில் பரு தோன்றினாலே தேவையற்ற மன உளைச்சலும், பதற்றமும் இளயதலைமுறையினருக்கு ஏற்படுகின்றன. எண்ணைத் தன்மை உடைய சருமத்தை உடையவர்களில் 90 சதவீதம் பேருக்கு முகப்பரு வந்துவிடுகிறது. இதர சருமம் கொண்டவர்களில் 50 சதவீதம் பேருக்கு முகப்பரு பாதிப்பு ஏற்படுகிறது. பருக்களின் பல வடிவங்களில், கரும்புள்ளி, வெண்புள்ளிகள் ஆகும். பருவமாற்றத்தினால் ஏற்படும் ஹார்மோன் சுரப்பு, எண்ணெய் பசை அதிகரிப்பு, இவற்றை விட பாக்டீரியா தொற்று போன்றவையே பருக்கள் ஏற்பட காரணமாகின்றன. இதனால் சருமத்தில் சிறு கட்டிகளும், வீக்கங்களும் ஏற்படுகின்றன. முகம், கழுத்து, மார்பு, முதுகு இவற்றில், சீழ் போன்ற திரவம் நிறைந்த பருக்களாக கரும்புள்ளி, வெண்புள்ளிகளாக தோன்றுகின்றன.
எலுமிச்சைச் சாறு
எலுமிச்சைச் சாறு, ரோஜா பன்னீர் சம அளவு எடுத்து அதனை கலந்து முகத்தில் பூசி அரைமணிநேரம் ஊறவைத்து பின்னர் வெது வெதுப்பான நீரில் கழுவவும். வாரம் மூன்று நாட்களுக்கு இதனை அப்ளை செய்தால் முகப்பரு மறைந்துவிடும். எந்த காரணம் கொண்டும் எலுமிச்சைச் சாற்றினை தனியாக முகத்தில் தேய்க்கக் கூடாது.
சந்தனம் பன்னீர்
சந்தன பவுடர், பன்னீரில் குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். மூன்று மாதங்கள் இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் பருத் தொல்லையே இருக்காது. சந்தனக் கட்டையை பன்னீர் விட்டு அரைத்து முகத்தில் தடவினால், பருக்களினால் ஏற்பட்ட வடுக்கள் மறையும்.
பன்னீர் ரோஜா மொட்டுக்களை எடுத்து, அது நனையும் அளவு சூடான தண்ணீர் விட்டு, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின் அந்த நீரை வடிகட்டி முகத்தில் பூசி அரைமணி நேரம் ஊறிய பின் துடைத்து எடுக்கவும்.
கொழுந்து வேப்பிலை
வேப்பிலை சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. கொழுந்து வேப்பிலையை தண்ணீரில் அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவிவிட வேண்டும். முகத்திற்கு மஞ்சள் பூசுவதை முடிந்த வரை தவிர்த்து விடுங்கள். இப்போதைய மஞ்சளில் அதிக அளவு இரசாயனத் தன்மை இருக்கிறது. அது பலரது முகத்திற்கும் ஒத்துக் கொள்ளாததாக இருக்கிறது. சோற்றுக் கற்றாழை சருமத்தை மிருதுவாக்கும் தன்மையுடையது. அவற்றின் நடுவில் இருக்கும் பசையை எடுத்து, அதில் சம அளவு நீரைக் கலந்து முகத்தில் தடவிவர பருவுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
ஒரு ஸ்பூன் அருகம்புல் பொடியும், குப்பமேனி இலைப் பொடியும் குளிர்ந்த நீரில் கலந்து பருக்களில் போடலாம். இது சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. இது பருவை குணமாக்கும்.
வெள்ளைப்பூண்டு
வெள்ளைப் பூண்டினை எடுத்து அதன் தோலை உரித்தபின்னர் முகப்பரு உள்ள இடத்தில் வைத்து தேய்க்கவும். தினசரி பத்து நிமிடம் தேய்க்க முகப்பரு மறையும்.
ஆப்பிள் பப்பாளி
பப்பாளிச் சாற்றினை முகத்தில் பூசி வர பருவுக்கு இயற்கையான சிகிச்சை கிடைக்கும். ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து அதில் ஒரு டீஸ் பூன் தேன் கலந்து முகத்தில் பூசி வர பரு மறையும். வாரம் இருமுறை முகத்தில் அப்ளை செய்யவேண்டும்.
உணவுக்கட்டுப்பாடு
பெண்களின் அழகான கன்னங்களுக்கு அவ்வப்போது அச்சுறுத்தலாகத் தோன்றுவது முகப்பருக்கள். பருக்கள் வராமல் இருக்க வேண்டும் என்றால் மலச்சிக்கல் வராத அளவுக்கு வயிற்றைப் பராமரிக்க வேண்டும். பொடுகுத் தொல்லை, ஹார்மோன் பிரச்னை, நகத்தினை வளர்த்தல், முறையற்ற உணவுப் பழக்கம், உணவில் அதிக அளவு எண்ணெய் பயன்படுத்துதல் போன்றவை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
முகப்பருக்கள் வராமல் தடுப்பதற்கு உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய மென்மையான உணவுகளை உண்ண வேண்டும். பழங்கள், காய்கறிகள், கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.
தலையணை உறை, சோப், டவல் போன்றவைகளை தனித்தனியாக ஒவ்வொருவரும் வைத்து தங்களுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முகப்பரு இருக்கும் ஒருவர் பயன்படுத்தும் இத்தகைய பொருட்களை இன்னொருவர் பயன்படுத்தும் போது அவருக்கும் இது பரவக்கூடும். குளிப்பதற்கும் சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும். தண்ணீர் நிறைய பருக வேண்டும். முகத்தில் எண்ணெய் வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வப்போது வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி சுத்தப்படுத்த வேண்டும். இப்படியெல்லாம் முன்னெச்சரிக்கையாக இருந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு வரலாம்.
உடற்பயிற்சி அவசியம்
தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது வெளியேறும் வியர்வையினால், துவாரங்களில் உள்ள அழுக்கு நீக்கி பருக்கள் வராமல் தடுக்கலாம். அதுபோல முகத்தில் பருக்கள் பெருமளவு உருவாகி விட்டால் அதற்கு வெளியே கொடுக்கும் சிகிச்சை மட்டுமின்றி உள்ளேயும் சிகிச்சை அவசியமாகும்.


--
*more articles click*
www.sahabudeen.com



செவ்வாய், 5 மார்ச், 2013

அன்பு மனைவியின் அழகிய அணுகு முறைகள்

 "என்னங்க! கேட்டீங்களா? உங்க அம்மா பேசிய பேச்சை! உங்கம்மா பண்ணுற வேலையைக் கண்டும் காணாமல் இருக்கின்றீர்களே! இது அநியாயம் இல்லையா?" என்று வீட்டுக்குள் வந்ததும் வராததுமாய் கணவனிடம் மனைவிமார்கள் எள்ளும் கொள்ளுமாக வெடிக்கும் பழக்கம் இன்றும் பல வீடுகளில் நடந்தேறி வருகின்றது.
அந்தக் கணவர் அலுவலகத்தில் பணியாற்றி விட்டு, மேலதிகாரியின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாகி விட்டு அசதியாகவும், மனச் சுமையாகவும் திரும்பும் ஓர் அதிகாரியாக இருப்பார்.
சரியாகப் படிக்காத மாணவர்களிடம் காலையிலிருந்து மாலை வரை மாரடித்து விட்டு மனக் கஷ்டத்துடன் திரும்பும் ஆசிரியராகக் கூட அவர் இருப்பார். அல்லது ஊரில் நடக்கும் ஃபித்னா, ஃபஸாதுகளைப் பற்றி சங்கடப்பட்டுக் கொண்டே திரும்பும் பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள ஒருவராக இருப்பார்.
அல்லது இரவெல்லாம் கண் விழித்து காரோட்டி விட்டு வீடு திரும்பும் ஒரு டிரைவராகக் கூட அவர் இருப்பார்.
இப்படிப்பட்டவர்கள் மன அமைதியையும் நிம்மதியையும் தங்கள் மனைவியரிடம் நாடியே வீடு திரும்புவார்கள். ஆனால் இங்கோ அவர் வந்ததும் எரிமலையை எதிர்நோக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டு நிம்மதியின்றி தவிப்பார்.
கணவனின் மகிழ்ச்சிக்காக தனது  துன்பத்தையும் மறைத்துக் கொண்ட உம்மு சுலைம் ரளியல்லாஹு அன்ஹா :
அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது:
அபூ தல்ஹாவின் மகன் நோயுற்றிருந்தார். ஒரு நாள் அபூ தல்ஹா ரளியல்லாஹு அன்ஹு வேளியே சென்றிருந்த போது குழந்தை இறந்து விட்டது. இதைக் கண்ட அபூ தல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மனைவி, உடனே கொஞ்சம் உணவைத் தயாரித்தார். பிறகு மய்யித்தை வீட்டின் மூலையில் வைத்தார்.
வெளியே சென்றிருந்த அபூ தல்ஹா ரளியல்லாஹு அன்ஹு வீடு திரும்பியதும், மகன் எவ்வாறு இருக்கின்றான்? என்று விசாரித்தார். அதற்கு அவரது மனைவி, "அமைதியாகி விட்டான். நிம்மதி பெற்று விட்டிருப்பான் என்பதே என் எதிர்பார்ப்பு" என்று பதிலளித்தார். அபூ தல்ஹா ரளியல்லாஹு அன்ஹு தம் மனைவி கூறியது உண்மை தான் என்றெண்ணி (நிம்மதியுடன்) தம் மனைவியோடு இரவைக் கழித்தார். பொழுது விடிந்து குளித்து விட்டு வெளியே செல்ல நாடிய போது மகன் இறந்து விட்டதை மனைவி கூறினார்.
அபூ தல்ஹா ரளியல்லாஹு அன்ஹு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு தொழுது விட்டுத் தம் வீட்டில் நடந்த சம்பவத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறினார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "இந்த இரவு நடந்தவற்றில் அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அருள் செய்யக் கூடும்" என்று கூறினார்கள்.
"அந்த இருவருக்கும் ஒன்பது குழந்தைகள் இருப்பதை நான் பார்த்தேன். அவர்கள் அனைவரும் குர்ஆனை ஓதுபவர்களாக இருந்தனர் என்று மதீனாவைச் சேர்ந்த அன்சாரிகளில் ஒருவர் கூறினார்" என்று சுஃப்யான் கூறுகின்றார். (நூல்: புகாரி 1301)
இதே ஹதீஸ் முஸ்லிமில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது.
உம்மு சுலைம் மூலமாக அபூ தல்ஹாவுக்குப் பிறந்த குழந்தை இறந்து விடுகின்றது. உடனே உம்மு சுலைம் தம் குடும்பத்தாரை நோக்கி, அவரது மகனின் (இறப்புச்) செய்தியை நான் அவரிடம் தெரிவிக்கும் வரை நீங்கள் தெரிவிக்காதீர்கள் என்று சொன்னார். அவர் வந்ததும் இரவு உணவை வழங்கினார். அவர் சாப்பிட்டு முடித்து நீர் பருகவும் துவங்கினார்.
பிறகு உம்மு சுலைம் இதற்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அபூ தல்ஹாவிடம் காட்சியளித்தார். அவர் நன்றாக சாப்பிட்டு விட்டு இல்லறத்தில் ஈடுபட்டதும், "அபூ தல்ஹாவே! ஒரு கூட்டத்தார் ஒரு பொருளை ஒரு வீட்டாரிடம் இரவலாகக் கொடுக்கின்றனர். பின்னர் தாங்கள் இரவல் கொடுத்த பொருளைத் திருப்பிக் கேட்கும் போது, அவ்வீட்டார் கொடுக்காமல் இருப்பது முறையாகுமா?" என்று கேட்கின்றார். அதற்கு அபூ தல்ஹா ரளியல்லாஹு அன்ஹு, "கூடாது" என்று பதிலளித்தார். "(அது போலத் தான்) உங்கள் மகனின் நிலையைக் கருதிக் கொள்ளுங்கள்" என்று சொல்கின்றார்.
அதற்கு அபூ தல்ஹா ரளியல்லாஹு அன்ஹு, "என்னை நீ அசுத்தமடைய விட்டு விட்டு இப்போது என்னுடைய மகனைப் பற்றி அறிவிக்கின்றாயே?" என்று கோபப்படுகின்றார். பிறகு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று நடந்ததைத் தெரிவிக்கின்றார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "சென்று விட்ட அந்த இரவில் அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக" என்று துஆச் செய்தார்கள். அது போல் அவர்களுக்குக் குழந்தை பிறக்கின்றது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அந்தச் செய்து எடுத்துச் சொல்லப்படுகின்றது. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேரீச்சம்பழத்தை மென்று கொடுத்து அப்துல்லாஹ் என்று பெயர் வைத்தார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 4496)
பொதுவாக பிள்ளைகளைப் பறி கொடுத்த பெண்கள் தங்களைக் கட்டுப்படுத்துவது மிகவும் அரிது! அதனால் அழுது தீர்ப்பதோடு அல்லாஹ்வுக்கு எதிரான வார்த்தைகளைக் கூட அள்ளி வீசுவார்கள். ஆனால் இங்கு உம்மு சுலைம் ரளியல்லாஹு அன்ஹா தமது கணவரிடம், பொய்யைத் தவிர்ப்பதற்காக, "அமைதியடைந்து விட்டான், நிம்மதியடைந்து விட்டான் என்று கருதுகின்றேன்" என்பது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றார்கள். மேலும் இரவல் பற்றிய பீடிகையைப் போட்டு நேரமறிந்து, மகன் இறந்த செய்தியை எவ்வளவு பக்குவமாக எடுத்து வைக்கின்றார்கள் என்று நாம் பார்க்க முடிகின்றது. இது போன்ற ஒரு பக்குவத்தையும் அணுகுமுறையையும் தமது கணவனிடம் பெண்கள் மேற்கொள்ள வேண்டும்.
கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் கனிவான ஆறுதல்
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முதன் முதலில் மிகப் பாரமான இறை வஹீயைப் பெற்று விட்டு நடுநடுங்கிக் கொண்டு வந்த நேரத்தில் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா உதிர்த்த வார்த்தைகள் இஸ்லாமிய வரலாற்றில் அழியாத வைர வரிகள் ஆகும்.
(நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முதன் முதலில் "வஹீ" அறிவிக்கப்பட்ட போது) இதயம் படபடத்தவர்களாக அந்த வசனங்களுடன் (தமது துணைவியார்) குவைலிதின் மகள் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் வந்து, "என்னைப் போர்த்துங்கள். என்னைப் போர்த்துங்கள்" என்று கூறினார்கள். கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் போர்த்தினார்கள். (நடுக்கம் தீர்ந்ததும்) கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் நடந்த செய்தியைத் தெரிவித்து விட்டு, தமக்கு ஏதும் நேர்ந்து விடுமோ என்று தாம் உறுதியாக அஞ்சுவதாகவும் கூறினார்கள்.
அப்போது கதீஜா ரளியல்லாஹு அன்ஹா, "அவ்வாறு கூறாதீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை ஒரு போதும் அல்லாஹ் இழிவு படுத்த மாட்டான். நீங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கின்றீர்கள். (சிரமப்படுவோரின்) சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கின்றீர்கள். வறியவர்களுக்காக உழைக்கின்றீர்கள். விருந்தினர்களை உபசரிக்கின்றீர்கள். உண்மையான சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவி புரிகின்றீர்கள்" என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி 3)
உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் உயரிய ஆலோசனை
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தோழர்களும் உம்ராச் செய்ய வந்த போது தடுத்து நிறுத்தப்படுகின்றார்கள். இதைத் தொடர்ந்து ஹுதைபிய்யா உடன்படிக்கை கையெழுத்தாகின்றது. கையெழுத்தான இந்த உடன்படிக்கையின் ஷரத்துக்கள் முஸ்லிம்களுக்குப் பாதிப்பைத் தரும் அம்சங்களாக இருந்தன.
இந்த நேரத்தில் நபித்தோழர்கள் சோகத்தில் மூழ்கிப் போயிருந்தனர். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "எழுந்திருங்கள்! அறுத்துப் பலியிடுங்கள்! தலைகளை மழித்துக் கொள்ளுங்கள்!" என்று கட்டளையிடுகின்றார்கள். ஆனால் ஒருவரும் எழுந்திருக்கவில்லை. கட்டளைக்கு மாறு செய்ய வேண்டும் என்பது நபித்தோழர்களின் நோக்கமல்ல! ஒப்பந்தத்தில் இருக்கும் பாதகமான அம்சங்களை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்பது தான் அவர்களின் எதிர்பார்ப்புகள்! அதனால் தான் அசையாமல் உட்கார்ந்திருந்தார்கள்.
அப்போது உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா, யோசனை வழங்குகின்றார்கள்.
"அல்லாஹ்வின் தூதரே! பலிப் பிராணியை அறுத்து விட்டு, தலைமுடி களைந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? புறப்படுங்கள். நீங்கள் குர்பானி ஒட்டகங்களை அறுத்து விட்டு உங்கள் நாவிதரை அழைத்து. அவர் உங்கள் முடியைக் களையும் வரை அவர்களில் எவருடனும் ஒரு வார்த்தையும் பேசாதீர்கள்" என்று உம்மு ஸலமா அவர்கள் கூறினார்கள்.
உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புறப்பட்டு ஒட்டகங்களைக் குர்பானி கொடுத்து விட்டு, தம் நாவிதரை அழைத்துத் தலைமுடியைக் களைந்து கொண்டார்கள். அதுவரை அவர்கள் எவரிடமும் பேசவில்லை.
இவற்றைக் கண்டவுடன் மற்ற நபித்தோழர்களும் எழுந்து சென்று பலிப் பிராணிகளை அறுத்து. ஒருவர் மற்றவரின் தலை முடியைக் களையத் துவங்கினார்கள். ஒருவர் மற்றவரை நெரிசலால் சாகடித்து விடுவார்களோ எனும் அளவுக்குப் போட்டி போட்டுக் கொண்டு (பலிப் பிராணிகளை அறுக்கவும் முடி களையவும்) சென்றனர். (அறிவிப்பவர்: உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 2732)
இந்த நெருக்கடியான கட்டத்தில் உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் புத்திக் கூர்மை மிக்க யோசனை உண்மையில் சாதாரணமான ஒரு பிரச்சனை அல்ல! போர் தவிர்க்கப்பட்டு சமாதானம் உருவாவதற்கு அடிப்படையாக அமைந்தது.
மனைவிமார்களின் அணுகுமுறை உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் அணுகுமுறை போன்று அறிவு ரீதியானதாகவும், கணவன் ஈடுபட்டிருக்கும் துறைக்கு உகந்ததாகவும், அவர் மாட்டியிருக்கும் சிக்கலைத் தீர்ப்பதாகவும் அமைந்திருக்க வேண்டும். கணவன் சந்திக்கும் பிரச்சனைகள் அரசியல் பிரச்சனையாகவும் இருக்கலாம். சதாரணமான வீட்டுப் பிரச்சனையாகவும் இருக்கலாம்.
விருந்துபசரிப்பில் அசத்திய தம்பதியர்
ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் (விருந்தாளியாக) வந்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (அவருக்கு உணவளிப்பதற்காக) தமது மனைவிமார்களிடம் சொல்லியனுப்பினார்கள். அப்போது அவர்கள், "எங்களிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை" என்று பதிலளித்தனர்.
ஆகவே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "இவரை சேர்த்துக் கொள்பவர் யார்?" அல்லது "இவருக்கு விருந்தளிப்பவர் யார்?" என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், "நான் (விருந்தளிக்கின்றேன்)" என்று கூறி அவரை அழைத்துக் கொண்டு தமது மனைவியிடம் சென்றார்.
"அல்லாஹ்வின் தூதருடைய விருந்தாளியைக் கண்ணியப்படுத்து" என்று (தம் மனைவியிடம்) கூறினார். அதற்கு அவருடைய மனைவி, "நம்மிடம் குழந்தைகளின் உணவைத் தவிர வேறெதுவும் இல்லை" என்று கூறினார். அதற்கு அந்த அன்சாரித் தோழர், "உன் உணவைத் தயாராக எடுத்து வைத்து விட்டு விளக்கை ஏற்றி விடு. உன் குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களைத் தூங்கச் செய்து விடு" என்று கூறினார்.
அவ்வாறே அவருடைய மனைவியும் உணவைத் தயாராக வைத்து, விளக்கை ஏற்றி விட்டுத் தம் குழந்தைகளைத் தூங்கச் செய்து விட்டார். பிறகு விளக்கைச் சரி செய்வது போல் நின்று விளக்கை அணைத்து விட்டார்.
பிறகு (இருக்கும் உணவை விருந்தாளியை உண்ணச் செய்து விட்டு) அவரும் அவரது மனைவியும் உண்பது போல் அந்த மனிதருக்கு (பாவனை) காட்டலானார்கள். பிறகு இருவரும் (உணவு உண்ணாமல்) வயிறு ஒட்டியவர்களாக இரவைக் கழித்தனர்.
காலையானதும் அந்த அன்சாரித் தோழர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்றார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "நீங்கள் இருவரும் செய்ததைக் கண்டு அல்லாஹ் இன்றிரவு சிரித்துக் கொண்டான்" அல்லது "வியப்படைந்தான்" என்று கூறினார்கள்.
அப்போது அல்லாஹ், "தமக்கு வறுமை இருந்த போதும் தம்மை விட (பிறருக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர். தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர்" எனும் (59:9) வசனத்தை அருளினான். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 3798)
இது போன்று எல்லாப் பிரச்சனைகளுக்கும் மனைவியரின் அணுகுமுறைகள் மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையில் அமைந்திருக்குமானால் இம்மையிலும் மறுமையிலும் மாபெரும் வெற்றி கிடைப்பதற்கு இது காரணமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
நன்றி : சத்தியப்பாதை


--
*more articles click*
www.sahabudeen.com



ஹேண்ட்பேக் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் நல பிரச்சனைகள்.

பெண்கள் வெளியே செல்லும் போது ஹேண்ட்பேக் அவசியமானது. ஏற்கனவே எடுத்து செல்லும் பொருட்களின் எ...

Popular Posts