லேபிள்கள்

சனி, 9 மார்ச், 2013

கார்/பஸ் தண்ணீருக்குள் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? பயண பாதுகாப்பு வழிமுறைகள்

1.     சாலையில் பாதுகாப்பான பயண வழிமுறைகள் என்னென்ன? (பயணி/டிரைவர் இருவருக்கும்!)  
·                     முதல்ல கார்ல உட்கார்ந்த உடனே கார் கதவை மூட வேண்டும்! 
·                     கண்டிப்பாய் முன்புறமுள்ள டிரைவர்/பயணி இருவரும் சீட்பெல்ட் போடவேண்டும்!
·                     சாலையில் அனுமதிக்கப்பட்ட வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும்! (வேகமா எங்க விண்வெளிக்கா போகப்போற?) அனைத்து டிராபிக் ரூல்ஸ்களையும் பின்பற்ற வேண்டும்!
·                     சாலை என்பது பகிர்ந்து செல்வது! உனக்காக மட்டும் போடவில்லை! சாலையை உபயோகப்படுத்த நடைபயணி, சைக்கிள்காரர், லாரி, பஸ், மாட்டுவண்டி என அனைவருக்கும் உரிமையுண்டு! யாரேனும் வேகமாக வந்தால் அவருக்கு வழி விட்டுவிடவும்! (சாகப்போகிறவன் வேகமாத்தான் போவான்!)
·                     14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை முன்புற இருக்கையில் அமர அனுமதிக்கக்கூடாது! 
·                     யாரேனும் நடந்து சாலையின் குறுக்கே வந்துவிட்டால் காரை நிறுத்தி அவர்கள் போன பின்பே செல்ல வேண்டும் (நீ இதேபோல் எத்தனைமுறை வந்திருப்ப?)
·                     ஒவ்வொரு நாளும் பயணத்தை ஆரம்பிப்பதற்குமுன் சக்கரங்களின் காற்றை சரிபார்க்க வேண்டும! 
·                     இருசக்கர வாகனங்களில் செல்லும்போது கட்டாயம் ஹெல்மெட் போடவேண்டும் (பயணம் செய்யும் இருவரும்!) சைக்கிளில் செல்லும்போது ஹெல்மெட் + REFLECTIVE LIFE JACKET அணிய வேண்டும். நீங்கள் தவறுதலாய் ரோட்டின் நடுப்பகுதிக்கு வந்துவிட்டால்கூட தூரத்தில் வரும் வாகனங்கள் எளிதில் உணர்ந்து நிறுத்த முடியும்! 
·                     தேவையில்லாமல் ஹாரன் அடிப்பது, வேகமாக செல்லுதல், வேறு டிரைவர்களை கெட்டவார்த்தையால் திட்டுவது, வீலிங் செய்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். முன்புறம் செல்லும் வாகனங்களிலிருந்து குறிப்பிட்ட இடைவெளியை பின்பற்றவும், முந்த வேண்டுமெனில் லைட்டை உபயோகிக்கவும் - ஹாரனை அல்ல!

2.     நீங்கள் பயணம் செய்யும் கார்/பஸ் தண்ணீருக்குள் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

  கார்/பஸ் தண்ணீருக்குள் விழுந்துவிட்டால் முன்புற அல்லது பின்புற கண்ணாடியை உள்ளிருந்து வெளிப்புறமாகக் கையால் வேகமாய்க் குத்தவும். (அர்ஜுன் சொல்ற மாதிரி முதலாளி! உங்க அக்காவ நினைச்சிகிட்டு வேகமா குத்துங்க) இதனால் கண்ணாடி உடைந்துவிடும்! அதன்மூலம் நீங்கள் வெளியே வந்துவிடலாம்! குத்துவதற்கு ஏதேனும் இரும்புக்கம்பி இருந்தால் அதைக்கூட உபயோகிக்கலாம்! 

3.     உங்களின் டிரைவிங் வேகம் எதைப் பொறுத்தது? ரோடு கண்டிசன் மெயின் ரோடு/சப் ரோடு அல்லது வாகனம்?

  டிரைவிங் வேகம் ரோடு/மெயின் ரோடு/ சப்ரோடு/வாகனம் இவற்றையெல்லாம் பொறுத்தது அல்ல! உங்கள் பார்வை எவ்வளவுதூரம் வரை பார்க்க முடிகிறது என்பதை பொறுத்தது. இதனால்தான் வளைவு வரும்போது நீங்கள் வேகத்தைக் குறைக்க வேண்டும்! மலைப்பாதை/ ,மழை, பனி மற்றும் இரவில் நீண்ட தூரம் பார்க்க முடியாததால் வேகத்தைக்குறைத்து செல்ல வேண்டும்!

4.
    மலைப்பாதைகளில் இறங்கும்போது ஆட்டோமாட்டிக் கியரில் போகக்கூடாது ஏன்? இறக்கங்களில் பிரேக் பிடிக்காதது ஏன்?

  புவிஈர்ப்பு விசையால் உங்கள் வாகனம் இறக்கங்களில் தானாகவே வேகமாய்ச் செல்லும்! ஆட்டோமாட்டிக் கியரில் வேகம் அதிகரிக்க தானாகவே அடுத்த கியருக்கு மாறி இன்னும் வேகமாகச் செல்லும்! வேகம் அதிகரிக்க அதிகரிக்க உங்கள் பிரேக் திறன் குறைத்துக்கொண்டே வரும்! எனவே ஆட்டோமாட்டிக் கியரை மாற்றி இரண்டாவது கியரில் பயணிக்க வேண்டும்! இதனால் எஞ்சினிலுள்ள என்ஜின் பிரேக்கையும் நாம் உபயோகிக்கிறோம்! பயணம் பாதுகாப்பானது! 

5.
     மலைகளில் யாருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் - ஏறுபவர்? அல்லது இறங்குபவர்

  மலைகளில் நிச்சயம் ஏறுபவருக்குத்தான் முன்னுரிமை! அது மாட்டுவண்டியாய் இருந்தாலும்கூட! ஏறுபவர் நிறுத்தினால் வண்டி புவிஈர்ப்பு விசையினால் பின்னோக்கி நகர ஆரம்பித்துவிடும், இப்படி எத்தனைமுறை அவர் நிறுத்தி செல்லுவார்? எனவே இறங்குபவர் ஏறுபவருக்கு வழி கொடுத்து வாகனத்தை நிறுத்திவிட வேண்டும்.


--
*more articles click*
www.sahabudeen.com



கருத்துகள் இல்லை:

தரமான செங்கல்லைகண்டறிவது எப்படி? செங்கல் கட்டுமானத்தில் என்னசெய்யலாம்? என்ன செய்யக் கூடாது?

இன்று ஹாலோபிளாக் , கான்கிரீட் கல் , ஏஏசி கல் , போன்ற பல தரப்பட்ட கற்கள் வந்து விட்டாலும் , நம...

Popular Posts