லேபிள்கள்
- CHILD CARE (165)
- COMEDY (51)
- COMPUTER (140)
- GENERAL (18)
- INFORMATION (668)
- ISLAM (442)
- MEDICAL (911)
- MY ALBUM (5)
- STORY (13)
திங்கள், 3 ஜூலை, 2023
வயிறு உப்புசத்தை சரியாக்கும் சில இயற்கை மருத்துவ குறிப்புகள் !!
ஒரு எலுமிச்சை பழச்சாற்றை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்து விடுங்கள். இதில் இருக்கும் அசிட்டிக் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை உருவாக்கி செரிமானத்தை தூண்டி தேவையற்ற வாயுக்களை வெளியேற்ற செய்யும் இதனால் வயிற்றில் வலியும் குறையும்.
பொதுவாகவே வாழைப்பழம் மலச்சிக்கலை தீர்க்கும் என்று கூறுவது உண்டு. வாழைப்பழத்தில் இருக்கும் அதிகப்படியான பொட்டாசியம் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை எளிதாக கலைகிறது. அதில் வயிற்று உப்புசத்தை விரைவாக சரி செய்யக்கூடிய ஆற்றல் நிறைந்துள்ளது.
வயிறு உப்புசமான நேரத்தில் ஒன்றிரண்டு வாழைப் பழங்களை சாப்பிடுங்கள். பிறகு பசி எடுக்கும் வரை உணவு எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
குழந்தைகளுக்கு வயிற்றுப் பிரச்சினைகள் தீர ஓமத்திரவம் கொடுப்பது உண்டு. அசௌகரியமான சமயத்தில் கொஞ்சம் ஓமத்தை வாயில் போட்டு தண்ணீரை குடித்து விடுங்கள். கொஞ்ச நேரத்தில் வயிற்றில் தேங்கி இருக்கும் வாயுவை அகற்றி வயிற்று உப்புசத்தை குறைத்துவிடும்.
வயிறு உப்புசம் ஏற்பட்டு அசௌகரியமான சமயத்தில் மெல்லோட்டம், நடைப்பயிற்சி, ஆசனங்கள், நீச்சல் ஆகியவற்றை மேற்கொண்டால் கொஞ்ச நேரத்தில் வயிற்று உப்புசம் சரியாகிவிடும்.
பிரியாணி சாப்பிட்டுவிட்டு அஜீரணக் கோளாறு ஏற்படாமல் இருக்க இனிப்பு சோம்பை சாப்பிடுவது வழக்கம். நாம் எப்போதெல்லாம் அதிகமாக சாப்பிட்டது போல உணர்கிறோமோ, அப்போதெல்லாம் கொஞ்சம் வெறும் சோம்பை வாயில் போட்டு மென்றால் போதும் எளிதில் ஜீரணமாகிவிடும். அவ்வகையில் வயிற்று உப்புசம் பிரச்சனைக்கு கொஞ்சம் சோம்பை மென்று தின்று தண்ணீர் குடித்தால் போதும்
https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/some-natural-medical-tips-to-correct-bloating-121071700062_1.html
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சிக்கன் சாப்பிட்டு விட்டு பால் அருந்தலாமா? ஆயுர்வேதம் சொல்வது என்ன?
பால்... குழந்தையின் முதல் உணவு. தாய்ப்பாலில் தொடங்கும் மனித உணவு வயதிற்கும் வாயின் ருசிக்கும் ஏற்ப மாறிக் கொண்டே இருக்கலாம். ஆனால் ...
Popular Posts
-
ஜனாஸாத் தொழுகை என்பது மரணித்தவருக்காக பிராத்தனை செய்யும் ஒரு விசேஷத் தொழுகையாகும். இந்தத் தொழுகையை நபிகளார் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள...
-
இன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...
-
உங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக