லேபிள்கள்

வியாழன், 6 ஜூலை, 2023

குளிர்ந்த நீரைவிடவெந்நீர் குடிப்பதால் என்ன நன்மைகள்...?

தினமும் காலையில் வெந்நீர் அருந்துவது நல்லது.  குடல் இயக்கத்தை சீராக வைத்து மலச்சிக்கல் பிரச்னைகள் வராமல் இருக்க தடுக்கிறது. மேலும் இது உங்கள் குடலில் சிக்கியுள்ள முந்தைய கழிவுகளை நகர்த்த உதவுகிறது.

உடலில் ஈரப்பதத்தை தக்கவைப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. உடலில் ஈரப்பதத்தை தக்கவைப்பதன் மூலம் தோல் பளபளப்பையும் அதிகரிக்க முடியும்.  குறைந்தபட்சம் ஒரு நபர் 2 லிட்டர் தண்ணீராவது அருந்த வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக ஒவ்வொரு மனிதனும் எந்தளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கிறாரோ அந்தளவுக்கு உடம்புக்கு நல்லது. அதிகமான தண்ணீர் அருந்துவது நமது உடலுக்கும் மிகவும் ஆரோக்கியமான ஓன்று. அதிலும் குறிப்புக்காக காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதால் ஏகப்பட்ட நன்மைகள் உள்ளன.

அதேபோல் குளிர்ந்த நீரை விட வெந்நீரை ஆறவைத்து குடிப்பதனால் மேலும் பல்வேறு நன்மைகள் உண்டாகிறது. உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் காலை  எழுந்ததும் வெந்நீர் அருந்தினால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறைகிறது.

செரிமான பிரச்சனை உள்ளவர்கள் காலை உணவுக்கு முன் சற்று வெந்நீர் அருந்திவிட்டு சிறிதுநேரம் கழித்து உணவை எடுத்துக்கொண்டால் எளிதில் செரிமானம் அடையும். வெந்நீரை குடிப்பதனால் நமது உடலில் உள்ள ரத்த செல்கள் சுறுசுறுப்படைகின்றன. மேலும் இது ரத்த இயக்கத்தை சீராக வைத்திருக்கவும் உதவுகிறது

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/what-are-the-benefits-of-drinking-hot-water-over-cold-water-121070900036_1.html


--

கருத்துகள் இல்லை:

உடலில் ஏற்படும்சின்ன சின்ன நோய்களை தீரக்க கூடிய சில எளிய மருத்துவக்குறிப்புகளை இங்கேபார்ப்போம்

உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும். துளசி இலைகள் போடப்பட்ட ...

Popular Posts