உடலுறவின் போது ஓதும் ‘துஆ’ சேர்க்கப்பட்டுள்ளது.]
[ ஒருவர் தனது பிள்ளையை எப்படி பொத்தி பொத்தி வளர்த்தாலும் சிலசமயம்
அதுகூட தவறான பாதையில் சென்றுவிடுவதைக் காணத்தான் செய்கிறோம். மனித முயற்சிக்கு என்ன
பலன் கிடைக்கும் என்பதை எவரும் நிர்ணயிக்க முடியாது.
அதே சமயம் கணவன் – மனைவி உடலுறவு கொள்கின்ற அந்த இனிமையான நேரத்தில் அல்லாஹ்விடம்
ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புத் தேடிக்கொண்டால் பிறக்கின்ற
குழந்தை ஸாலிஹான பிள்ளைகளாகத் திகழும் என்பதில் எவருக்கேனும் சந்தேகமுண்டா என்ன!
கணவன்-மனைவி உடலுறவு கொள்கின்ற அந்த நேரத்தில் ஆணின் விந்து
பெண்ணின் கற்பப்பைக்குள் நீந்திச் செல்கின்ற நேரத்தில் இறைவனால் அதற்கு ‘ரூஹு’ ஊதப்படுகிறது என்று அறிஞர்,
ஓ.எம் அப்துல் காதர் பாகவி அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையில் படித்த நினைவு.
ஒரு நிமிடம் சிந்தனை செய்து பாருங்கள்! ‘ரூஹு’ ஊதப்படும் அவ்வேளையில்
அல்லாஹ்வின் பாதுகாப்பைக் கோரினால் பிறக்கின்ற குழந்தை அல்லாஹ்வின் அருளோடு எவ்வளவு
சிறந்த குழந்தையாக பிறக்கும்! அது வாழ்ந்து மரணிக்கும் வரை அல்லாஹ்வின் அருள்பெற்ற
மனிதனாக திகழும் என்பதில் என்ன சந்தேகம்?
அதைவிடுத்து உடலுறவு கொள்கின்ற அந்த நேரத்தில் இறைவனை மறந்து விட்டு
குழந்தை பிறந்தவுடன் அதனை நல்லவனாக அல்லது நல்லவளாக வளர்ப்பதற்கு எவ்வளவு கஷ்டங்களை
எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது!
ஆகவே கணவன் – மனைவி ஒருவரையொருவர் ‘அதற்காக’ தொடுவதற்குமுன் குறைந்தபட்சம், அவூது…
பிஸ்மி… யாவது சொல்வதில் என்ன தயக்கம்!]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக