லேபிள்கள்

செவ்வாய், 11 ஜூலை, 2017

மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகள் (Part-1)

-இம்தியாஸ் யூசுப் ஸலபி-
நரகத்திலிருந்து பாதுகாத்தல்
கடைசி வரைக்கும் கண்கலங்காமல் காப்பாற்றுவேன் என்ற உறுதிமொழியுடன் தான் ஒவ்வொரு கணவனும் மனைவியை கைப்பிடிக்கின்றார். மனைவியின் மீது அன்பு, பாசம் வைத்து சந்தோசமாக வாழ்வதற்கு அனைத்து வழிகளையும் கடைப்பிடிக்கின்றார்கள். மனைவியின் கண்ணில் தூசு விழுவதையும் பொறுத்துக் கொள்வதில்லை. மனைவி நோயினால் அவஸ்தைப்படுவதையோ அல்லது வேறு காரணங்களால் துன்பப்படுவதையோ விரும்புவதில்லை. மனைவிக்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராகுகின்றார்.

மனைவி சுகயீனமுற்றால் குணப் படுத்துவதற்காக பெரும் சிரமப்படுகின்றார். அதற்காக எவ்வளவு பணம் செலவழிப்பதற்கும் தயாராகுகின்றார். சிலநேரம் சொத்துக்களை விற்றாவது காப்பாற்ற முனைகின்றார்.
உலகின் எல்லா தொல்லைகளிலிருந்தும் காப்பாற்ற நினைக்கும் கணவன், தன் அன்புக்குரிய மனைவியை நரகத்திலிருந்து காப்பாற்றவும் தன்னாலான அனைத்து வழிகளையும் மேற் கொள்ள வேண்டும். இதுதான் உண்மையான கணவனின் அன்பும் பொறுப்புமாகும். 


நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் நரகத்தையும் விட்டு பாதுகாத்துக் கொள்ளுங்கள். மனிதர்களும் கற்களுமே அதன் எரிபொருட்களாகும். அதன் மீது கடின சித்தம் கொண்ட பலசாலிகளான வானவர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ் தமக்கு ஏவியதற்கு மாறுசெய்ய மாட்டார்கள். மேலும் அவர்கள் தமக்கு ஏவப்பட்டதைச் செய்வர்கள். (66:6)
அல்லாஹ்வும் அவனது தூதரும் ஏவிய கட்டளைகளுக்கு முற்றிலும் அடிபணியக் கூடியவளாக மனைவியை மாற்றுவது கணவனின் கடமையாகும். முஸ்லிமான முஃமினான, சாலிஹான பெண்ணாக மனைவி அமையும்போதே குடும்ப வாழ்வு அருளுக்குரியதாக மாறிவிடும்.
குடும்ப வாழ்வில் மனைவி சில தவறுகளை விடும்போது அல்லது கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் சில குறைகளை விடும் போது கணவன் கோபப்படுவதை விட அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் செய்ய வேண்டிய கடமைகளில் தவற விடும்போதே கோபப்பட வேண்டும். காரணம் மறுமை வாழ்வில் மனைவியுடன் வாழ்வு மற்றும் பொறுப்புப் பற்றி கணவன் விசாரிக்கப்பட இருக்கிறார்.
கணவன் தன் குடும்பத்தின் மேய்ப்பாளராவார். அவரது மேய்ப்புப் பற்றி (பொறுப்பு) குறித்து விசாரிக்கப்படுவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), நூல்: புகாரி.

குடும்ப வாழ்வில் கணவனின் கடமையும் பொறுப்பும் இந்த உலகத்துடன் முடிவடைவதல்ல. அது குறித்த விசாரணை மறுமையுடன் முடிவடை கின்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே கணவன் இபாதத்களில் கவனம் செலுத்துவதுடன் மனைவியையும் இபாதத்களில் ஈடுபடுத்த வேண்டும்.
நபியே! உமது குடும்பத்தாருக்கு தொழுகையைக் கொண்டு ஏவி, நீர் அதில் பொறுமையாகவும் இருப்பீராக. (20:132)

தொழுவது முதல் அனைத்து இபாதத்களிலும் கணவன் முன்மாதிரியாக இருந்து, மனைவியை வழி நடாத்த வேண்டும். இபாதத்களில் முதன்மையாக இருப்பது தொழுகையாகும். மனைவியுடனான தொடர்பும் இந்த வணக்கத்தின் மூலமே வலுப்படுத்த வேண்டும்.
மனைவி இஸ்லாத்தின் வரம்பை மீறும்போது கணவன் எந்தச் சந்தர்ப்பத்திலும் அதற்கு இடம்கொடுக்கக் கூடாது. அல்லாஹ்வுக்கு மாறு செய்து மனைவியை திருப்திப்படுத்துவதை விட மனைவியுடன் கோபப்பட்டு அல்லாஹ்வை திருப்திப்படுத்த வேண்டும்.
குடும்ப வாழ்வில் ஏற்படும் தகராறுகள் பிரச்சினைகள் காரணமாக (அற்பமான காரியங்களுக்காக) மனைவியை விவகாரத்துச் செய்வதை விட அல்லாஹ் ரஸூலுக்கு மாற்றமாக நடக்கும் போதே விவாகரத்து குறித்து முடிவுக்கு வர வேண்டும். இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் மனைவியை நரகத்தை விட்டும் காப்பாற்றிக் கொள்ள வழி பிறக்கும்.
மனைவிக்காக செலவு செய்தல் மனைவிக்கு உணவு கொடுப்பது, உடை கொடுப்பது, உறையுள் கொடுப்பது, போஷிப்பது உட்பட இஸ்லாம் ஆகுமாக்கியிருக்கின்ற அனைத்து செலவுகளும் கணவனுக்குரிய பொறுப்பாகும். இந்த பொறுப்பிலிருந்து கணவன் ஒருபோதும் ஒதுங்கிவிட முடியாது.
பெண்களை நிர்வகிக்க ஆண்கள் தகுதியுடையோராவர். அவர்களில் சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும் (ஆண்களாகிய) அவர்கள் தமது செல்வங்களிலிருந்து செலவழிப்பதாலும் ஆகும். (4:34)
இறுதிய ஹஜ்ஜின்போது நான் நபி (ஸல்) அவர்களின் உரையைக் கேட்டேன். அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்து உபதேசம் செய்தார்கள். அப்போது அறிந்து கொள்ளுங்கள். மனைவியரிடம் சிறந்த முறையில் நடந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அவர்கள் உங்களிடம் கட்டுப்பட்டு உள்ளவர்களாவர். அது அல்லாத எதையும் நீங்கள் அவர்களிடமிருந்து சொந்தமாக்கிக் கொள்ளாதீர்கள். எனினும் அவர்கள் தெளிவான மானக்கேடான காரியத்தைச் செய்தாலே தவிர.
அவர்கள் பாவம் செய்தால் அவர்களை படுக்கையிலிருந்தும் ஒதுக்கி விடுங்கள். கடுமையாக இல்லாமல் லேசாக அடியுங்கள். (அதன் மூலம் அவர்கள்) உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்.
அறிந்து கொள்ளுங்கள். உங்கள் மனைவியரிடம் உங்களுக்கு உரிமை உண்டு, அவர்களிடம் உங்களை உரிமை என்பது, உங்கள் விரிப்பில் நீங்கள் விரும்பாதவர்களை உட்காராமலிருக்கச் செய்வதும் உங்கள் வீடுகளில் நீங்கள் விரும்பாதவர்களை அனுமதிக்காமல் இருப்பதும் ஆகும்.
அறிந்துகொள்ளுங்கள். உங்களிடம் அவர்களுக்குரிய உரிமைகள் என்பது அவர்களுக்கு உடையும் உணவும் தருவதும் நல்ல முறையில் நடந்து கொள்வதுமாகும் எனக் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அம்ர் (ரழி), நூல்: திர்மிதி)

அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவரிடம் அவரது மனைவியின் உரிமைகள் என்ன? என்று கேட்டேன். அப்போது நபியவர்கள் நீர் சாப்பிடும் போது அவளையும் நீர் சாப்பிடச் செய்ய வேண்டும். நீர் ஆடை அணியும்போது அவளுக்கு அணியச் செய்ய வேண் டும்… என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: முஆவியா இப்னு ஹைதா (ரழி), நூல்: அபூதாவூத்)

கணவனுக்குரிய கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து இந்த ஹதீஸ் களில் நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். மனைவியுடன் கணவன் நடந்துகொள்ளும் ஒழுங்கு முறைகளையும் விளக்கப்படுத்துகிறார்கள்.
மனைவி ஏழையாகவோ பணக்காரியாகவோ இருந்தாலும் செலவழிப்பது கணவனின் கடமையாகும். மனைவியிடம் செல்வம் இருக்கின்றது. அவளது செலவுகளை அவளது செல்வத்திலிருந்து பார்த்துக் கொள்ளட்டும் என கணவன் சொல்ல முடியாது. அல்லது மனைவி சம்பாதிக்கின்றாள், அவளது சம்பாத்தியத்திலிருந்து அவளது செலவுகளை கவனித்துக் கொள்ளட்டும் என்றும் சொல்ல முடியாது.
கணவன் தன்னுடைய நண்பர்களுடன் வெளியில் சுற்றி வயிறாற உண்டுவிட்டு, மனைவியை பட்டினியில் போடக் கூடாது. தனக்கென புத்தாடையொன்றை வாங்கி விட்டு மனைவிக்குக் கொடுக்காது விட்டு விடக் கூடாது. தன்னுடைய சுய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதுபோல் மனைவியின் தேவைகளையும் முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.
கணவன் மனைவிக்கு இடையில் பிரச்சினைகள் ஏற்பட்டு விவாகரத்தில் முடிவு காண முனைந்து, மனைவி தலாக்கிற்கான இத்தாவில் இருக்கும்போது கூட மனைவிக்கான அத்தனை செலவுகளையும் பொறுப்பேற்க கணவன் கடமைப்பட்டுள்ளான். போதுமான செலவுகளை கணவன் தராது விட்டால் அவனது பணத்திலிருந்து அவனுக்கு தெரியாமல் போதுமான அளவு பணத்தை எடுத்துக் கொள்வதற்கு மனைவிக்கு தடையேதுமில்லை. இவ்வாறான அனுமதியை ஹின்தா(ரலி) அவர் களுக்கு நபியவர்கள் வழங்கினார்கள்.
மனைவி இத்தாவுடைய காலத்தில் சுகவீனமுற்றாலும் அவளுக்குரிய மருத்துவ வசதியை செய்துகொடுப்பதும், பெருநாள் தினத்தை அடைந்தால் பெருநாளுக்குரிய செலவுகளை பொறுப்பேற்பதும் கணவனின் கடமையாகும்.
மணம் முடித்து மனைவியை தீண்டுவதற்கு முன் அவளை விவாகரத்துச் செய்தாலோ அல்லது மஹரை நிர்ணயம் செய்யாமல் மணம் முடித்து விவாகரத்து செய்தாலோ அப்போது கணவன் தனது வசதிக்கும் சக்திக்கும் ஏற்ப மனைவிக்கு ஏதேனும் வசதியை அளிப்பதும் கடமையாகும். (பார்க்க: அல்குர்ஆன் 2:236)
மஹரை நிர்ணயம் செய்து மனைவியை தீண்டுவதற்கு முன் விவாகரத்துச் செய்தால் நிர்ணயித்த மஹரில் அரைவாசியை மனைவிக்குக் கொடுப்பதும் கணவனின் பொறுப்பாகும். (பார்க்க 2:237)
மனைவியை தலாக் கூறிய சந்தர்ப் பத்தில் பால் குடிக்கும் பருவத்தில் குழந்தை இருந்தால் அக்குழந்தைக்கு பாலூட்டும் தாய்க்கும் உணவளிப்பதும் உடையளிப்பதும் கணவனின் கடமையாகும். அக்குழந்தையின் பராமரிப்புக்கான முழுமையான செலவுகளும் கணவனையே சாரும். (பார்க்க 2:233)
வசதி உள்ளவர் (கணவர்) தமது வசதிக்கு ஏற்ப செலவிடப்பட்டும் யாருக்கு வாழ்வாதாரம் அளவோடு வழங்கப்பட்டுள்ளதோ அவர் அல்லாஹ் தனக்கு வழங்கியவற்றிலிருந்து செலவிடட்டும். அல்லாஹ், தான் வழங்கியதற்கு மேல் எந்தவோர் ஆத்மாவையும் சிரமப்படுத்த மாட்டான். அல்லாஹ் கஷ்டத்திற்குப் பின் இலகுவை விரைவில் ஏற்படுத்துவான். (65:3)
கணவனின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டே செலவுகளை மனைவியும் பெற வேண்டும். கணவனை கஷ்டத்திற்குள்ளாக்கி செலவுகளை கோரக் கூடாது.
பொதுவாக மனைவி இத்தாவுடைய காலத்தில் இருக்கும்போதும் தலாக்கிற்குப் பின் குழந்தைக்கு பாலூட்டும் போதும் அதற்குரிய செலவுகளை கணவன் பொறுப்பேற்காமல் மனைவியையும் குழந்தையையும் விட்டு விட்டு செல்கிறான். அல்லது தலை மறைவாகின்றான். இத்தாவுடைய காலத்தில் பெற்றோர் தனது மகளை தங்களது வீட்டுக்கு அழைத்து செல்வதால் கணவனது செலவுகளை பெற்றுக் கொள்வதில்லை. கணவனும் கொடுப்பதில்லை. இது பெரும் தவறாகும். இந்தத் தவறை பெற்றோர் செய்யக் கூடாது. கணவன் எச்சந்தர்ப்பத்திலும் மனைவிக்குரிய இக்கடமையை செய்ய பின்நிற்கவும் கூடாது


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

ஞாயிறு, 9 ஜூலை, 2017

பிக்ஹுல் இஸ்லாம் – சுன்னத்தான தொழுகைகள் – 3

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் –
லைலத்துல் கத்ர்
கடந்த இதழில் கடமையான தொழுகைகளுக்கு முன், பின் உள்ள சுன்னத்தான தொழுகைகள் குறித்துப் பார்த்தோம். இந்த இதழில் கியாமுல் லைல் குறித்து நோக்கவிருக்கின்றோம்.

'கியாமுல் லைல்' – இரவுத் தொழுகை- என்பது இஷாவின் பின் சுன்னத்து முதல் பஜ்ர் வரையுள்ள நேரத்தில் தொழப்படும் தொழுகையைக் குறிக்கும்.
நடு இரவில் தொழப்படும் தஹஜ்ஜத் தொழுகையும் இரவில் தொழப்படும் வித்ர் தொழுகையும், ரமழான் காலங்களில் தொழப்படும் தராவீஹ் என அழைக்கப்படும் தொழுகையும் கியாமுல் லைல் என்ற பொதுப் பெயரால் அழைக்கப்படும். இந்த கியாமுல் லைல் தொழுகையின் சிறப்பு பற்றி அல்குர்ஆன், சுன்னாவில் அதிகம் பேசப்பட்டுள்ளது.


1. நல்லவர்களின் பண்பு:
அல்குர்ஆனில் யூத, கிறிஸ்தவர்கள் பற்றி அல்லாஹ் கண்டித்துப் பேசிக் கொண்டு வரும் போது அவர்களிலும் நல்லவர்களும் இருப்பதாகக் கூறுகின்றான். அந்த நல்லவர்கள் பற்றிக் கூறும் போது 'கியாமுல் லைல்' தொழுகையில் ஈடுபடுவது அவர்களின் சிறந்த பண்பாக இருக்கும் என்று அல்லாஹ் கூறுகின்றான்.
'அவர்கள் (அனைவரும்) ஒரே சமமானவர்கள் அல்லர். வேதத்தையுடையோரில் (சத்தியத்தில்) நிலைத்திருக்கும் கூட்டத்தினரும் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை இரவு வேளைகளில் ஓதி, சிரம்பணிகின்றனர்.' (3:113)
2. சுவனம் செல்லும் ரஹ்மானின் அடியார்கள்:
சுவனத்திற்குச் சொந்தக்காரர்களான ரஹ்மானின் அடியார்கள் பற்றி அல்லாஹ் கூறும் போது இரவுத் தொழுகையையும் அவர்களின் பண்பாகக் கூறுகின்றான்.
'அர்ரஹ்மானின் அடியார்கள்தான் பூமியில் பணிவுடன் நடப்பார்கள். அறிவீனர்கள் அவர்களுடன் தர்க்கித்தால், 'ஸலாம்' எனக் கூறுவார்கள்.'
'மேலும், அவர்கள் தமது இரட்சகனுக்கு சுஜூது செய்தவர்களாகவும், நின்றவர்களாகவும் இரவைக் கழிப்பார்கள்.' (25:63-64)
3. இரவில் நீண்ட நேரம் வணங்குதல்:
இரவில் நீண்ட நேரம் வணங்குவது அல்குர்ஆனில் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது.
'போர்த்திக் கொண்டிருப்பவரே'

'இரவில் சிறிது நேரம் தவிர (தொழுகைக்காக) எழுந்து நிற்பீராக!'
'அதில் அரைப்பகுதி அல்லது அதை விட சிறிதளவு குறைத்துக் கொள்வீராக!'
'அல்லது அதைவிட அதிகமாக்கிக் கொள்வீராக! மேலும், இக்குர்ஆனை நேர்த்தியாக ஓதுவீராக!' (73:1-4)
'உமது இரட்சகனின் பெயரைக் காலையிலும், மாலையிலும் நினைவு கூர்வீராக!'
'இரவில் அவனுக்கு சுஜூது செய்வீராக! மேலும், இரவில் நீண்ட நேரம் அவனைத் துதிப்பீராக!' (76:25-26)
4. சமமாகமாட்டார்கள்:
இரவுத் தொழுகையில் ஈடுபடுபவர்களுக்கு அதில் ஈடுபாடு காட்டாதவர்கள் சமமாக முடியாது என பின்வரும் வசனம் கூறுகின்றது.
'(நிராகரிப்பவன் சிறந்தவனா?) அல்லது மறுமையைப் பயந்து, தனது இரட்சகனின் அருளை ஆதரவு வைத்து, சுஜூது செய்தவராகவும், நின்றவராகவும் இரவு நேரங்களில் அடிபணிந்து வழிபடுபவரா? அறிந்தோ ரும் அறியாதோரும் சமமாவார்களா? என (நபியே!) நீர் கேட்பீராக! சிந்தனையுடையோர்தாம் நல்லுபதேசம் பெறுவார்கள்.' (39:9)
5. ஈமானின் அடையாளம்:
கியாமுல் லைல் என்பது முழுமையான ஈமானின் அடையாளமாகத் திகழ்கின்றது.
'எமது வசனங்கள் ஞாபகமூட்டப்பட்டால் அவற்றை நம்பிக்கை கொள்வோரே 'சுஜூது' செய்தவர்களாக விழுவார்கள். மேலும், தமது இரட்சகனின் புகழைக் கொண்டு துதிப்பார்கள். இன்னும், அவர்கள் பெருமையடிக்க மாட்டார்கள்.'
'அவர்களது விலாப்புறங்கள் படுக்கைகளை விட்டும் விலகியிருக்க, அவர்கள் தமது இரட்சகனை அச்சத்துடனும், ஆதரவுடனும் பிரார்த்திப்பார்கள். மேலும், நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்லறங்களில்) செலவும் செய்வார்கள்.'
'எனவே, அவர்கள் செய்துகொண்டிருந்த வற்றிற்குக் கூலியாக அவர்களுக்கு மறைத்து வைக்கப் பட்டிருக்கும் கண் குளிர்ச்சியை எந்த ஆன்மாவும் அறிந்து கொள்ளாது.'
(32:15-17)

6. சுவனத்திற்குரிய முஹ்ஸின்கள்:
இரவுத் தொழுகையை தக்வா உடையவர்களின் அடையாளமாகவும், 'முஹ்ஸின்' – நல்லவர்களின் அடையாளமாகவும், அமைந்துள்ளது. அவர்கள் சுவர்க்கத்தில் இருப்பார்கள் என்றும் பின்வரும் வசனங்கள் கூறுகின்றன.
'நிச்சயமாக பயபக்தியாளர்கள் தமது இரட்சகன் தமக்கு வழங்கியதைப் பெற்றுக் கொண்டவர்களாக, சுவனச் சோலைகளிலும் நீரூற்றுக்களிலும் இருப்பார்கள். நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நன்மை செய்பவர்களாக இருந்தனர்.'
'இவர்கள் இரவில் குறைவாகவே தூங்குபவர்களாக இருந்தனர்.'
'மேலும் இவர்கள், இரவின் இறுதி வேளைகளில் பாவமன்னிப்புக் கோருவார்கள்.' (51:15-18)
இவ்வாறு அல்குர்ஆனின் பல வசனங்கள் கியாமுல் லைல் தொழுகையின் சிறப்பு பற்றிப் பேசுவது போன்றே சுன்னாவும் இதன் சிறப்பு முக்கியத்துவம் குறித்துப் பேசி ஆர்வமூட்டுவதைக் காணலாம்.
சுவனம் செல்லும் வழி:
'மனிதர்களே! ஸலாத்தைப் பரப்புங்கள். உணவளியுங்கள், உறவுகளைப் பேணுங்கள். மக்கள் உறங்கும் வேளையில் இரவில் தொழுங்கள். ஸலாமத்தாக சுவனத்தில் நுழைவீர்கள்' என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(வ) ஆதாரம்: இப்னுமாஜா- 1334, 3251

(அறிஞர் அல்பானி(ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸ் ஸஹீஹானது என்று கூறுகின்றார்.)
சுவனத்தில் அந்தஸ்தை உயர்த்தும்:
'சுவனத்தில் ஒரு மாளிகை உண்டு. அதன் வெளியில் இருந்து பார்த்தால் உள்ளே தெரியும். உள்ளே இருந்து பார்த்தால் வெளிப்புறம் தெரியும். அதனை உணவளித்தவர்களுக்கும், ஸலாத்தைப் பரப்பியவர்களுக்கும், மக்கள் உறங்கும் வேளையில் இரவில் தொழுதவர்களுக்குமாக அல்லாஹ் ஏற்பாடு செய்துள்ளான்.' என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.
(ஆதாரம்: இப்னு குஸைமா- 2137,
திர்மிதி- 1984)

(அறிஞர் அல்பானி(ரஹ்) அவர்கள் இதனை ஹஸனான அறிவிப்பு என்கின்றார்.)
சிறந்த தொழுகை:
'பர்ழான தொழுகைக்குப் பின்னர் தொழுகையில் சிறந்தது இரவுத் தொழுகையாகும்' என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(வ)
ஆதாரம்: அபூதாவூத்- 2429, திர்மிதி- 438, நஸாஈ- 1613

(அறிஞர் அல்பானி (ரஹ்) அவர்கள் இதனை ஸஹீஹான அறிவிப்பு என்கின்றார்.)
இவ்வாறு ஏராளமான செய்திகள் 'கியாமுல் லைல்' – இரவுத் தொழுகையின் சிறப்பு பற்றிப் பேசுகின்றன.
இரவுத் தொழுகையின் நேரம்:
இஷாவின் பின் சுன்னத்தில் இருந்து பஜ்ருடைய அதான் வரையுள்ள நேரம் கியாமுல் லைல் தொழுகைக்குரிய நேரமாகும். நபி(ச) அவர்கள் இதனைப் பல நேரங்களில் நிறைவேற்றி சமூகத்திற்கு வழிகாட்டியுள்ளார்கள்.
இரவில் எழுந்து தொழ முடியாத பட்சத்தில் தொழுதுவிட்டே உறங்கலாம். நடுநிசியில் எழுந்து தொழுவது ஏற்றமான தாகும். சில போது நபி(ச) அவர்கள் சுபஹுக்கு முன்னர் எழுந்து இரவுத் தொழுகையைத் தொழுதுவிட்டு பஜ்ரைத் தொழுவார்கள். ஒவ்வொருவரும் அவரவர் வசதிக்கு ஏற்ற விதத்தில் இதைத் தொழுதுகொள்ளலாம்.
இரவின் இறுதிப் பகுதி:
இருப்பினும், இரவின் இறுதிப் பகுதியில் தொழுவதில் ஒரு சிறப்பு உள்ளது.
'இரட்சகன் அடியானுக்கு இரவின் இறுதிப் பகுதியில் மிக அருகில் இருக்கின்றான். அந்த நேரத்தில் அல்லாஹ்வை நினைவுகூர்பவர்களில் உன்னால் இருக்க முடிந்தால் இருந்து கொள்' என நபி(;) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(அறிவிப்பவர்: அம்ர் இப்னு அபஸா(வ)
ஆதாரம்: இப்னு குஸைமா- 1147,
நஸாஈ- 572)

(அறிஞர் அல்பானி இந்த ஹதீஸை ஸஹீஹ் என்கின்றார்.)
இரவின் மூன்றாம் பகுதியில் அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்குகின்றான் என ஏராளமான ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் கூறுகின்றன. இந்த நேரம் கியாமுல் லைலுக்கு மிகச் சிறப்பான நேரமாகும்.
நடுநிசி நேரம்:
நடு இரவில் விழித்து தொழுவதும் ஏற்றமானதாகும். மக்கள் உறங்கும் போது இரவில் தொழுவதை சிறப்பித்துப் பேசும் பல அறிவிப்புக்களை நாம் ஏற்கனவே பார்த்தோம்.
'எமது வசனங்கள் ஞாபகமூட்டப்பட்டால் அவற்றை நம்பிக்கை கொள்வோரே 'சுஜூது' செய்தவர்களாக விழுவார்கள். மேலும், தமது இரட்சகனின் புகழைக் கொண்டு துதிப்பார்கள். இன்னும், அவர்கள் பெருமையடிக்க மாட்டார்கள்.'
'அவர்களது விலாப்புறங்கள் படுக்கைகளை விட்டும் விலகியிருக்க, அவர்கள் தமது இரட்சகனை அச்சத்துடனும், ஆதரவுடனும் பிரார்த்திப்பார்கள். மேலும், நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்லறங்களில்) செலவும் செய்வார்கள்.'
'எனவே, அவர்கள் செய்துகொண்டிருந்த வற்றிற்குக் கூலியாக அவர்களுக்கு மறைத்து வைக்கப் பட்டிருக்கும் கண் குளிர்ச்சியை எந்த ஆன்மாவும் அறிந்து கொள்ளாது.'
படுக்கையை விட்டும் எழுந்து தொழும் தொழுகை இங்கே சிறப்பிக்கப்படுகின்றது.
'உமக்கு உபரியாக இருக்க, இரவின் ஒரு பகுதியில் தொழுகைக்காக எழுந்து நிற்பீராக! உமது இரட்சகன் (புகழப்பட்ட இடமான) 'மகாமு மஹ்மூத்'தில் உம்மை எழுப்புவான்.' (17:79)
இந்த சிறப்பான நேரங்களில் தொழ முடியாதவர்கள் தொழுதுவிட்டே உறங்கலாம்.
இரவுத் தொழுகையை அடைவதற் கான ஒழுங்குகள்:
இரவுத் தொழுகையில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் அதற்கான ஒழுங்குகளைப் பேணுவது அதற்குத் துணை செய்யும்.
இரவில் விழிப்பதற்கான ஏற்பாடுகள்
1. இரவில் விழிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யலாம். தற்காலத்தில் அலாரம் வைத்துக் கொள்ளலாம்.
2. இரவில் விழித்திருப்பதற்காக பகலில் சிறிது கைலூலா தூங்கலாம்.
3. இஷா தொழுகையின் பின் வீணாக விழித்திருக்காமல் நேரத்துடன் உறங்குவது இரவில் விழித்துத் தொழ ஏதுவாக அமையும்.
இரவுத் தொழுகையில் ஈடுபட வேண்டும் என்ற நிய்யத்துடன் உறங்குதல்:
தூங்கும் போதே விழித்துத் தொழ வேண்டும் என்ற எண்ணத்துடன் தூங்க வேண்டும். இது விழித்து எழவும் உதவும். ஒரு வேளை தூக்கம் மிகைத்துவிட்டால் தொழுத நன்மையைப் பெற அது வழிவகுக்கும்.
'இரவில் எழுந்து தொழ வேண்டும் என்ற எண்ணத்தில் யார் தனது படுக்கைக்குச் சென்று சுபஹ் வரை தூக்கம் அவரை மிகைத்து விடுகின்றதோ அவர் எண்ணியது (இரவுத் தொழுகையில் ஈடுபட்ட நன்மை) அவருக்குப் பதியப்படும். அவரது உறக்கம் என்பது ரப்பிடமிருந்து அவருக்குக் கிடைத்த ஸதகாவாக இருக்கும்' என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர்தா(வ)
ஆதாரம்: இப்னு குஸைமா- 1172, இப்னு மாஜா- 1314, நஸாஈ- 1787.

(அறிஞர் அல்பானி(ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸ் ஸஹீஹான ஹதீஸ் என்று கூறுகின்றார்.)
எனவே, தூங்கச் செல்லும் போதே எழுந்து தொழ வேண்டும் என்ற உறுதியான எண்ணத்தில் உறங்க வேண்டும்.
இவ்வாறே,
வுழூவுடன் உறங்குவது, வலது புறமாக சாய்ந்து படுத்தல்:
இடது புறமாக ஒருக்கலித்து உறங்கும் போது ஆழமான உறக்கம் ஏற்படும் என்றும் வலப்புறமாக உறங்குவது உள்ளத்திற்கு நல்லது என்றும் இமாம் இப்னுல் கையூம் (ரஹ்) குறிப்பிடுகின்றார். (ஸாதுல் மஆத்: 1/311)
இவ்வாறே இஸ்லாம் கூறும் உறங்கும் ஒழுங்குகளைப் பேணுவதுடன் ஓதவேண்டிய திக்ர்கள், அவ்ராதுகளையும் ஓதிக் கொள்வது நன்மையைப் பெற்றுத் தரும்.
விழித்து எழுந்ததும் ஓத வேண்டிய அவ்ராதுகளை ஓதி மிஸ்வாக் செய்து தொழுகைக்கு தயாராக வேண்டும்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வெள்ளி, 7 ஜூலை, 2017

கம்ப்யூட்டர், செல்போன், டேப்ளட் சுத்தமாக வைத்திருக்க டிப்ஸ்

முதலில் டிஜிட்டல் சாதனங்கள் என்றால் என்பதை தெரிந்துகொள்வோம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் கம்ப்யூட்டர், செல்போன், டேப்ளட் போன்றவைகள் அனைத்துமே டிஜிட்டல் சாதனங்கள் தான்.

இவைகளை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி என்பதைப் பார்ப்போம். உட்புறம் மட்டுமின்றி வெளிப்புறம் இதுபோன்ற சாதனங்களை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் அவைகள் விரைவில் பழுதடையா வண்ணம் பாதுகாக்க முடியும்.



பல நேரங்களில் டிஜிட்டல் சாதனங்களின் பயனர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் அவ்வப்பொழுது கண்ணை கவரும் விதத்தில் உள்ள சாப்ட்வேர்களை டவுன்லோட் செய்து வைத்துக்கொள்கின்றனர். அவற்றின் பயன் அதிகமாக இருக்காத நிலையிலும் தொடந்து அவைகள் கம்ப்யூட்டர் போன்ற சாதனங்களில் இடம்பெற்றுவிடுகின்றன.

இதுபோன்ற தேவையில்லாத புரோகிராம்கள் கம்ப்யூட்டர் ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு மேலாக அதிகமாகிவிடும் நிலையில் அந்த டிஜிட்டல் சாதனங்கள் இயக்கத் தன்மையில் வேகம் குறைகிறது.

ஒரு வண்டியில் அது தாங்கும் அளவிற்கு மட்டுமே பாரம் ஏற்ற வேண்டும். இல்லையெனில் அந்த வண்டியின் வேகம் குறையதொடங்கும். சில நேரங்களில் அவை பேலன்ஸ் செய்ய முடியாமல் கவிழ்ந்து விபத்து ஏற்படும்.

அதுபோலதான் டிஜிட்டல் சாதனங்களும். அதன் தாங்குதிறனுக்கு (கொள்ளளவு) மேல் புரோகிராம்களை நிறுவினால் தானாவே வேகம்
 குறைந்துவிடும். தேவையற்ற புரோகிராம்களால் அவைகள் பழுதடைய வாய்ப்புகள் ஏற்பட்டுவிடும்.

கம்ப்யூட்டர் டெஸ்டாப்பில் சேவ் செய்தல்: 

பெரும்பாலானவர்கள் மிக எளிதாக கோப்புகளை எடுக்கும் வசதிக்காக டெஸ்க்டாப்பில் கோப்புகளை சேமித்துவிடுகின்றனர். இது மிகப்பெரிய பிரச்னையை ஏற்படுத்திவிடும்.

டெஸ்க்டாப்பில் கோப்புகள் சேர சேர கம்ப்யூட்டரில் செயல்படும் வேகத்திறனும் குறையும். அவ்வாறு செய்யாமல் வேறு போல்டர் ஒன்றை உருவாக்கி வேறு டிரைவில் சேவ் செய்து வைக்கலாம்.

கீபோர்ட் பாதுகாத்தல்: 

நிறைய பயனர்கள் கம்ப்யூட்டரை பயன்படுத்தும்போது நொறுக்கு தீனிகளை தின்றுகொண்டே பயன்படுத்துகின்றனர். இதனால் அவர்களை அறியாமலேயே கீபோர்டில் உணவு துணுக்குள் விழுந்துவிடுகின்றன. அதுமட்டுமல்லாமல் தூசி, துகள்கள் என கீபோர்ட் இடுக்குகளில் சேர்ந்துவிடுகின்றன. இதனால் கீபோர்ட்டில் உள்ள கீகள் சில நேரம் செயல்படாமல் போகும். சிலர் வருடக்க்கணக்காக கூட கீபோர்டை சுத்தம் செய்யாமலேயே வைத்திருப்பம்.

கீபோர்டை தலைகீழாக கவிழ்த்து அதன்முதுகு பகுதியில் இலேசாக ஒரு தட்டிப் பார்த்தால் ஒரு கூடை அளவு குப்பை விழும்.
 வாரம் இருமுறையாவது இவ்வாறு கீர்போர்டை சுத்தப்படுத்த வேண்டும். அதற்கென இருக்கும் பிரஷ்களைக் கொண்டும் கீபோர்டை சுத்தப்படுத்தலாம்.

சாப்ட்வேர் அப்டேட் கட்டாயம்

கம்ப்யூட்டரில் உள்ள சாப்டவேர்கள் சில நேரங்களில் அப்டேட் செய்யச் சொல்லி கேட்கும். ஆனால் பெரும்பாலானவர்கள் இதை செய்யாமல் குளோஸ் செய்துவிடுகின்றனர். அது தவறு. அப்டேட் செய்யச்சொல்லும்போது தவறாமல் அப்டேட் செய்துவிட வேண்டும். இதனால் பல்வேறு பிரச்னைகளை தீரும்.

டபுள் செக்யூரிட்டி தேவை

மின்னஞ்ல், வங்கி கணக்குகள் போன்றவற்றை இணையம் வழியாக கம்ப்யூட்டரில் பயன்படுத்துபவர்கள் இரண்டு அடுக்கு பாதுகாப்பை கட்டாயம் செயல்படுத்த வேண்டும். இதனால் மால்வேர் புரோகிராம்களை அனுப்பி பாஸ்வேர்ட் திருடும் கூட்டத்திலிருந்து தப்பிக்கலாம். இரண்டு அடுக்கு பாதுகாப்பு என்பது மொபைல் மூலம் மெசேஜ் பெற்று, அந்த அக்கவுண்ட்டை திறப்பதாகும்.

தவறாமல் செய்ய வேண்டும் டேட்டா பேக்கப்

டேட்டா பேக்கப் என்பது இதற்கு முன்பு நாம் கணினியில் பணிபுரிந்து வைத்திருக்கும் கோப்புகளை பேக்கப் எடுப்பதாகும். இதற்கு சாப்டவேர்கள் பல உள்ளன. ஒவ்வொரு புதிய கணினி பயனருக்கும் டேட்டா பேக்கப் பற்றி அறிவுரை தேவைப்படுகிறது. இது எதற்கென்றால் கம்ப்யூட்டர் ஏதாவது பழுதாகிடும்பொழுது, அதில் உள்ள டேட்டா அழியாமல் பாதுகாத்து, மீண்டும் கம்ப்யூட்டருக்கு கொண்டு வந்து பயன்படுத்திடதான். எனவே தவறாமல் டேட்டா பேக்கப் எடுப்பது அவசியம்.

மேலுக்கு மட்டுமல்ல.. உள்ளுக்குள் சுத்தம்

கம்ப்யூட்டரில் சேரும் தூசிகளால் அதை வெப்பத்திலிருந்து காத்திடும் காற்றாடிகள் பழுதடைகின்றன. இதனால் மேலும் கம்ப்யூட்டரில் உள்ள உட்பாகங்கள் பிராசசர், ஹார்ட் டிஸ்க் போன்றவைகள் கெட்டுப்போகும் வாய்ப்புகள் ஏற்படுகின்றன. எனவே தூசிகளை சுத்தம் செய்திட வேண்டும். காற்றடிக்கும் பம்பு மற்றும் அதற்கென கொடுக்கப்பட்டிருக்கும் computer cleaning liquid பயன்படுத்தி அவற்றை சுத்தப்படுத்தல் அவசியம்.

அதிக வெப்பம் ஆபத்து...

அதிக வெப்பமாக உள்ள இடங்களில் கம்ப்யூட்டர், செல்போன், டேப்ளட் சாதனங்களை வைத்து இயக்குவது ஆப்பத்தை விளைவிக்கும். இதுபோன்ற டிஜிட்டல் சாதனங்கள் அதிகபட்சமாக 35 டிகிர வெப்பம் வரைக்கும் தாங்கும். அந்த வெப்பநிலை உள்ள இடங்களில் மட்டுமே அவற்றை இயக்க வேண்டும். அதற்கு கூடுதலாக வெப்பம் உள்ள இடங்களில் வைத்து இயக்கினால் கட்டாயம் கம்ப்யூட்டர் காலியாகிவிடும்.

கிருமிகளின் உற்பத்தி இடம் மொபைல்

பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் மொபைல் போன் கிருமிகள் உற்பத்தி ஆகும் இடமாகவே மாறிவிட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. என்ன காரணம் என்றால் அதைப்பயன்படுத்துபவர்கள் கைகளை நன்றாக கழுவுவதில்லையாம். இதனால் பலரும் பயன்படுத்தும் பொதுவான லேப்டாப், டேப்லட், செல்போன் போன்ற சாதனங்களில் அதிகமாக கிருமிகளும் உற்பத்தியாகிவிடுகிறதாம்.
இதைத்தவிர்க்க அவற்றை அதற்கென கொடுக்கப்பட்ட சோப் வாட்டர் கொண்டு அவற்றை துடைத்து சுத்தப்படுத்திட வேண்டும். அவ்வாறு செய்யும்பொழுது 99.9 சதவிகித கிருமிகள் ஒழிக்கப்படுகின்றன.

குழந்தைகளிடம் இதுபோன்ற சாதனங்களை கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
 இல்லையென்றால் விரைவிலேயே குழந்தைகள் நோய் தொற்றுக்கு ஆளாக நேரிடும்.

ஆக உங்களது டிஜிட்டல் சாதனங்களை அதற்கென உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி சுத்தமாக வைத்திருந்தால் கட்டாயம் அது ரிப்பேரும் ஆகாது. உங்களுக்கு செலவும் மிச்சமாகும்.. அதே சமயம் அது புதிய சாதனத்தைப் போல சுறுசுறுப்பாகவும் இயங்கும்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

புதன், 5 ஜூலை, 2017

மேஜர் ஆனதும்... மறக்காமல் செய்யுங்கள்!

வாக்காளர் அடையாள அட்டை!
புதிதாக வாக்காளர் அடை யாள அட்டை பெற, மாவட்ட தாலுகா அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங் களில் படிவம் - 6 எனும் விண்ணப்பம் பெற வேண்டும் (தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் ஆன் லைன் மூலமாகவும் விண்ணப் பிக்கலாம்). விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் அந்த ஊரில் இருப்பவராக இருக்க வேண்டும். நிரந்தர முகவரிக்கான ஆதாரம் (குடும்ப அட்டை, பாஸ் போர்ட், ஓட்டுநர் உரிமம், வீட்டு வரி ரசீது, மின்சாரக் கட்டண அட்டை, காஸ் வாங்கும் ரசீது, தண்ணீர் கட்டண ரசீது, சமீபத்திய டெலிபோன் பில், வங்கி மற்றும் அஞ்சலகக் கணக்குப் புத்தகம் இவற்றில் ஏதாவது ஒன்றின் நகல்), வயதுச் சான்றிதழ் (பிறப்புச் சான்று/பள்ளி மதிப்பெண் பட்டியல் நகல்) இணைக்க வேண்டும்.

ஓட்டுநர் உரிமம்!
கியர் உள்ள மோட்டார் சைக்கிள் மற்றும் இலகு ரக வாகனத்துக்கான ஓட்டுநர் உரிமம், 18 வயது நிரம்பியதும் பெறலாம். முன்னதாக, எல்.எல்.ஆர் எனும் பழகுநர் உரிமம் (LLR - Learner's License Registration) பெற வேண்டும். விண்ணப்பப் படிவத்துடன் மருத்துவச் சான்று, உடல் தகுதிச் சான்று (தேவை இருப்பின்), மற்றும் முகவரிக்கு ஆதாரச் சான்று (பிறப்புச் சான்று, பள்ளிச் சான்று, பாஸ்போர்ட் இவற்றில் எதாவது ஒன்றின் நகல்), பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மூன்றும் இணைத்து, அடிப்படைக் கட்டணத்துடன் வட் டார போக்குவரத்து அலுவலரிடம் சமர்ப்பிக்க, அன்றே எல்.எல்.ஆர் கிடைக்கும். அதிலிருந்து 30 நாட்கள் கழித்தே ஓட்டுநர் உரிமம் பெற முடியும்.

ஒட்டுநர் உரிமத்துக்கான விண்ணப்பப் படிவத்துடன், உங்கள் வாகனத்தின் ஆர்.சி.புக், இன்ஷூரன்ஸ் சான்று, சாலைவரிச் சான்று, மாசுக்கட்டுப்பாடு சான்று, சொந்த வாகனம் இல்லையென்றால் வாகன உரிமையாளரின் அனுமதிச் சான்று மற்றும் மூன்று பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கட்டணம் 250 ரூபாய், சேவைக்கட்டணம் 100 ரூபாய் சேர்த்து வட்டார போக்குவரத்து அலுவலரிடம் சமர்ப்பித்து, ஓட்டுநர் உரிமம் பெறலாம்.''

நிரந்தர கணக்கு அட்டை
(PAN - Permanent Account Number)
வங்கி கணக்குத் துவங்குவதற்கு, பங்குச் சந்தையில் முதலீடு செய்ய, ரூபாய் 5 லட்சத்துக்கு மேல் அசையா சொத்துக்கள் வாங்கும்போது, 50,000 ரூபாய்க்கு மேல் வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட் செய்யும்போது, வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யும்போது என எல்லாவற்றுக்கும் பான் கார்டு அவசியம். இதைப் பெற வருமான வரித்துறையின் படிவம்-49ஏ பூர்த்தி செய்து, அத்துடன் வயதுச் சான்று மற்றும் முகவரிச் சான்றையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இது குழந்தைகளுக்கும் வழங்கப்படும். இதற்கு காப்பாளர் அவசியம். மேஜர் ஆனதும், இதே எண் தொடரும்.

பேங்க் அக்கவுன்ட்
புதிதாக கணக்குத் துவங்க, சம்பந்தப்பட்ட வங்கியிலிருந்து பெறப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், அடையாளச் சான்று நகல் (பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், அங்கீகரிக்கப்பட்ட அலுவலக அடையாள அட்டை இதில் ஏதாவது ஒன்று), முகவரிச் சான்று நகல் (மின் கட்டண ரசீது, தொலைபேசி ரசீது, குடும்ப அட்டை), தமது அக்கவுன்ட்டில் செலுத்த வேண்டிய குறைந்தபட்ச தொகை (வங்கிக்கு வங்கி மாறுபடும்). வங்கியிலிருந்து உங்கள் புகைப்படம் மற்றும் பெயருடன் கூடிய பாஸ்புத்தகம், ஏ.டி.எம் மற்றும் டெபிட் கார்டு இரண்டு வாரத்துக்குள் கிடைக்கும். குழந்தைகளுக்கும் வங்கிக் கணக்கு துவங்க முடியும். இதற்கும் காப்பாளர் அவசியம். இந்தக் கணக்கையே மேஜர் ஆனதும், தொடரலாம்
http://pettagum.blogspot.in/2015/10/blog-post_61.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

திங்கள், 3 ஜூலை, 2017

குழந்தைக்கு உதவும் இயற்கை மருந்து!

காலையில் குழந்தைகள் கண் விழித்தவுடன் ஒரு சொட்டு தேனை நாக்கில் தடவவும். தேன் உடல் வளர்ச்சிக்கு இயற்கை அளித்த ஓர் அற்புதமான வரப்பிரசாதம். பொதுவாகவே வசம்பு போடுவதால் குழந்தைக்கு நாக்கு தடித்து சீக்கிரம் பேச்சு வராமல் இருக்கும் என்பார்கள். ஆனால், தேன் தடவுவதால் நாக்கு புரண்டு விரைவில் பேச்சு வரும். 

சில குழந்தைகள் அடிக்கடி வாந்தி எடுக்கும். அதற்கு வேப்பார்க்குத்துளி, அரை மிளகு, ஒரு சீரகம், ஒரு ஸ்பூன் ஓமம், ஒரு பல் பூண்டு இவற்றை அம்மியில் தட்டி துளி வெந்நீர் விட்டுப் பிழிந்து வடிக்கட்டி ஊற்றினால் வாந்தி சட்டென்று நின்றுவிடும். நாட்டு மருந்துக் கடையில் மாசிக்காய் என்று கிடைக்கும். அதை வாங்கி சாதம் வேகும்போது, அதோடு போட்டு எடுத்து உலர்த்தி வைத்துக் கொள்ளவும். குழந்தையைக் குளிப்பாட்டும் போது, நாக்கில் தடவி வழித்தால் நாக்கில் உள்ள மாவு அகன்று குழந்தை ருசித்துப் பால் சாப்பிடும்.



தினமும் இரவில் விளகேற்றியவுடன் சுட்ட வசம்பைக் கல்லில் உரைத்து குழந்தைக்கு ஒரு சங்கு குடிக்கக் கொடுத்து, சிறிது தொப்புளைச் சுற்றி தடவுங்கள். பின் ஒரு வெற்றிலையில் எண்ணெய் தடவி அதை விளக்கில் காட்டி வாட்டி, பொறுக்கும் சூட்டில் அந்த இலையை குழந்தையின் தொப்புள் மேல் போட்டால் அசுத்த காற்றெல்லாம் வெளியேறி, வயிறு உப்புசம் இல்லாமல் இருக்கும்!
குழந்தை தினமும் இரண்டு, மூன்று முறை மலங்கழிக்க வேண்டும். இல்லாமல் கஷ்டப்பட்டால், முதலில் ஒரு பாலாடை வெந்நீர் புகட்டிப் பார்க்கவும். அப்படியும் போகவில்லை என்றால் ஐந்தாறு விதையில்லாத உலர்ந்த திராட்சைகளை வெந்நீரில் ஊறப்போட்டு கசக்கிப் புகட்டினால் ஒரு மணி நேரத்தில் போய்விடும். மலங்கட்டி அவஸ்தைப்பட்டால் விளக்கெண்ணையோ, வேறு மருந்துகளோ தர வேண்டாம். ஆசனவாயில் வெற்றிலைக் காம்போ சீவிய மெல்லிய சோப் துண்டோ வைத்தாலே போய்விடும்.

பிறந்த குழந்தைக்கு தலைக்கு ஊற்றியதும், கால் கஸ்தூரி மாத்திரையை தாய்ப்பாலில் கரைத்து ஊற்றினால் சளிப்பிடிக்காது. ஒவ்வொரு மாதமும் கால், கால் மாத்திரையாக அளவைக் கூட்டிக் கொள்ளலாம். ஒரு வயதுக்கு மேல் துளசி, கற்பூரவல்லி இலைகளை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டிக் கொடுத்தால் சளிப் பிடிக்காது, இருந்தாலும் அகன்று விடும். குழந்தைகளுக்கு பேதிக்குக் கொடுப்பது எண்ணெய் தேய்த்து ஊற்றுவது, காதில் மூக்கில் எண்ணெய் விடுவது இதை அறவே தவிர்த்து விடவும்.

குழந்தைக்கு சளி பிடித்து இருந்தால் தேங்காய் எண்ணெயை சுடவைத்து, பூங்கற்பூரம் போட்டு உருக்கி, ஆற வைத்துத் தடவினால் போதும், சளி இளகிக் கரைந்து விடும்.தினமும் குடிக்க காலையும், மாலையும் இரண்டிரண்டு சங்கு வெந்நீர் கொடுங்கள். குழந்தையின் உடம்பு கலகலவென்று இருக்கும்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

சனி, 1 ஜூலை, 2017

மின்சார சிக்கனம்... செய்யலாம் இப்படி!

''இனி இல்லத்தரசிகளும் மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். ஆம், மின் சிக்கனம் என்பது மின்சார உற்பத்திக்குச் சமம். அதோடு புவி வெப்பமயமாகுதலையும் அதன் மூலம் தடுக்கலாம்!'' என்று உற்சாகப்படுத்தும் தமிழ்நாடு மின் ஊழியர் அமைப்பின் தலைவர் விஜயன், மின்சார சிக்கனம் தொடர்பான சந்தேகங்களைக் களைகிறார்.   
''மின் சாதனங்களை வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?''



''பொதுவாகத் தரமான, ஸ்டார் வேல்யூ பெற்ற தயாரிப்புகளாக வாங்க வேண்டும். மின்சார சிக்கனத்துக்கு வழிகாட்டக்கூடிய அமைப்பிடமிருந்து சான்று பெற்றிருக்கிறதா என்று சரிபார்த்து வாங்க வேண்டும். உதாரணமாக, ஏ.சி-க்களில் நட்சத்திரக் குறியீடு இருக்கும். 5 நட்சத்திரங்கள் பெற்றிருந்தால் குறைந்த அளவு மின்சக்தியை இழுக்கும் என்று அர்த்தம். இவை விலை அதிகம் என்றாலும், இவற்றை வாங்குவதுதான் சிறந்தது.''
''மின் கட்டணத்தைக் குறைக்க டிப்ஸ் ப்ளீஸ்...''

''டியூப்லைட்டுக்கு மாற்றாக சிஎஃப்எல் பல்பு, எல்இடி பல்பு பயன்படுத்தலாம். இவை குறைந்த மின் நுகர்வில் அதிக வெளிச்சம் தரும். டியூப்லைட்களில் பழைய சோக்குகளை எல்லாம் மாற்றிவிட்டு தற்போது வந்திருக்கும் எலெக்ட்ரானிக் சோக்குகளைப் பயன்படுத்தலாம். இதனால் டியூப்லைட் எரிவதற்கு சில நிமிடங்கள் தாமதம் குறைவதோடு, அதனால் வீணாகும் மின்சாரத்தையும் மிச்சப்படுத்தலாம். மேலும், தூசு படிந்த பல்புகள் மற்றும் அலங்கார விளக்குகளை அவ்வப்போது சுத்தம் செய்வதன் மூலம் வெளிச்சம் குறைவதைத் தடுக்கலாம், மின் விசிறிகளில் எலெக்ட்ரானிக் ரெகுலேட்டர்களை உபயோகிக்கலாம், தினமும் ஒன்றிரண்டு துணிகளை அயர்ன் செய்வதைத் தவிர்த்து மொத்தமாக அயர்ன் செய்யலாம். மின்சாதனங்களை ரிமோட் மூலம் மட்டுமே ஆஃப் செய்யாமல், ஸ்விட்ச் மற்றும் பிளக் பாயின்ட் ஸ்விட்ச்சையும் கண்டிப்பாக ஆஃப் செய்ய வேண்டும்.''
'' 'வாட்ஸ்' என்பது என்ன?''

''வாட்ஸ் என்பது எரிசக்தியின் அளவுகோல். 1000 வாட்ஸ் என்பது 1 யூனிட்.''
''ஏ.சி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், கிரைண்டர் போன்ற சாதனங்களை மின்சார விரயம் செய்யாமல் எப்படிப் பராமரிப்பது?''
 

''கிரைண்டர் பெல்ட் தளர்ந்து போயிருந்தாலோ, சில சமயங்களில் அழுக்கு காரணமாகவோ இறுக்கமாக ஓடும். `இறுக்கமாகத்தானே ஓடுகிறது' என்று இல்லாமல், குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை பெல்ட் மாற்ற வேண்டும். தளர்ந்து போன பெல்ட்டிலேயே கிரைண்டர் ஓடினால் அதிக மின்சாரம் செலவாகும். ஏ.சி அறைகளின் சுவரில் வெப்பம் கடத்தா பெயின்ட் அடிப்பது, தரையில் தரைவிரிப்புகளை பயன்படுத்துவது போன்ற முயற்சிகள் அதிக நேரம் குளிர்ச்சியைத் தக்கவைக்கும். குறிப்பிட்ட இடைவெளியில் ஏ.சி-யை சர்வீஸ் செய்ய வேண்டும். ஃப்ரிட்ஜ் மீது நேரடியாக சூரியஒளி படாமலும், ஃப்ரிட்ஜின் பின்புறம் காற்றோட்டம் இருக்குமாறும் வைத்தால் மின்நுகர்வு குறையும். ஃப்ரிட்ஜ் தேவையான குளிர்ச்சியடைந்ததும் தானாகவே ஆஃப் ஆகிவிடும். ஆனாலும் அடிக்கடி திறந்து மூடும்போது மின் செலவு அதிகமாகும். வெயில் காலங்களில் வாஷிங் மெஷின் ட்ரையரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். அயர்ன் செய்யும்போது ஃபேன் போடுவதைத் தவிர்க்கலாம்.''
''ஸ்விட்ச்போர்டில் இருக்கும் இண்டிகேட்டர் லைட்டால் மின்சாரம் செலவாகுமா?''

''தற்போது பலரும் டிஜிட்டல் மீட்டரை மாற்றிவிட்டு, நவீன ஸ்டாட்டிக் மீட்டரைப் பொருத்துகிறார்கள். அது இண்டிகேட்டர் லைட்டுக்கும் கரன்ட் செலவழிக்கிறது. இதுகுறித்து பலரும் புகார் சொல்லி வருகிறார்கள். எனவே, ஸ்டாட்டிக் மீட்டர் பொருத்தியிருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.''
''மின்சார அடுப்பு, மின்சார குக்கர் போன்றவற்றைப் பயன்படுத்தலாமா?''

''சாதாரண நிக்ரோம் கம்பியிலான ஹீட்டிங் எலிமன்ட் உள்ள மின்சார அடுப்பு, மின்சார குக்கர் அதிக மின் விரயம் செய்யக்கூடியவை. பதிலாக, இன்டக்‌ஷன் அடுப்பு பயன்படுத்தலாம். இதிலும் மின்சார செலவு இருக்கிறது என்றாலும் சமையல் கேஸை மிச்சப்படுத்தலாம்.''
''மின் கட்டணம் கணக்கிடும் முறை என்ன?''

''மின் நுகர்வு கணக்கில் மொத்தம் நான்கு நிலைகள் இருக்கின்றன.
முதல் நிலை: 1-100 யூனிட் வரை - ஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாய் கட்டணம்; நிலைக்கட்டணம் இல்லை.
இரண்டாம் நிலை: 1-200 யூனிட் வரை - ஒரு யூனிட்டுக்கு 1.50 ரூபாய் கட்டணம்;
  நிலைக்கட்டணம் 20 ரூபாய்.
மூன்றாம் நிலை: 1-200 யூனிட் வரை
  ஒரு யூனிட்டுக்கு 2 ரூபாய்; 201-500 யூனிட் வரை யூனிட்டுக்கு மூன்று ரூபாய் கட்டணம்; நிலைக்கட்டணம் 30 ரூபாய்.
நான்காம் நிலை: 1-200 யூனிட் வரை - ஒரு யூனிட்டுக்கு 3 ரூபாய்; 201-500 யூனிட் வரை யூனிட்டுக்கு 4 ரூபாய்; 500 யூனிட்டுக்கும் மேல் யூனிட்டுக்கு 5.75 ரூபாய். நிலைக்கட்டணம் 40 ரூபாய்.
உதாரணமாக, நீங்கள் 510 யூனிட் மின்சாரம் செலவு செய்திருந்தால் முதல் 200 யூனிட்டுக்கு 600 ரூபாய் + அடுத்த 300 யூனிட்டுக்கான 1,200 + கூடுதல் 10 யூனிட்டுக்கான 57.50, இவற்றோடு நிலைக்கட்டணம் 40 ரூபாய் சேர்த்து 1,898 ரூபாய் மின்சாரக்கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

பவர் டேரிஃப் கால்குலேட்டர் மூலமாக உங்களது யூனிட்டுக்கு எவ்வளவு கட்டணம் கட்ட வேண்டும், அரசு மானியம் எவ்வளவு என்று எல்லாம் தெரிந்து கொள்ளலாம். ஆன்லைன் பவர் டேரிஃப் கால்குலேட்டருக்கான லிங்க்:  http://tneb.tnebnet.org/tariff_new.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வியாழன், 29 ஜூன், 2017

வீட்டை குத்தகைக்கு விடும்போது எதையெல்லாம் கவனிக்க வேண்டும்?

{?} என் வீட்டை பத்து வருடத்துக்கு குத்தகைக்கு விடலாம் என்று இருக்கிறேன். என்னென்ன கவனிக்க வேண்டும்?

சுரேஷ்பாபு, வழக்கறிஞர், சென்னை.

''குடியிருக்கப் போகும் நபர் சரியானவரா என்று உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். வழக்கறிஞர் உதவியுடன் குத்தகை பத்திரத்தை தயார் செய்யுங்கள். முத்திரைத்தாளில் குத்தகை பத்திரம் இருக்க வேண்டும். தவிர, அது பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவும் செய்யப்பட வேண்டும்.



வீட்டிலுள்ள வசதிகளை (அறைகள், லிஃப்ட்  வசதி, மின்சார வசதி) பற்றி குத்தகை பத்திரத்தில் குறிப்பிட வேண்டும். எதற்காக வீட்டை குத்தகைக்கு எடுக்கிறார் என்றும், இந்தந்த காரணங்களுக்கு வீட்டை உபயோகிக்கலாம், இதை தவிர்த்து வேறு காரணங்களுக்காக உபயோகிக்கக் கூடாது என்றும் குறிப்பிட வேண்டும்.

குத்தகைக்கு எடுப்பவர் வேறு ஒருவருக்கு வீட்டை குத்தகைக்குவிட வாய்ப்பு இருக்கிறது. இதனைத் தடுக்கும் விதத்தில் கவனம் அவசியம். மேலும், நீங்கள் குத்தகைக்கு விடப்போகும் தொகையையும், வரி உள்பட அனைத்து விஷயங்களையும் குறிப்பிட வேண்டும். மின்சாரக் கட்டணத்தை குடியிருப்போர்தான் கட்ட வேண்டும். குடியிருப்போர் பயன்படுத்தும் மின்சாரத்தை அளவிட மீட்டர் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதையும் குறிப்பிட வேண்டும்.

குத்தகைக் காலம் நீட்டிக்கப்படுமா, இல்லையா என்பதைக் குறிப்பிட வேண்டும். குத்தகைக் காலம் முடிவடையும் முன்னரே வீட்டை காலி செய்யச் சொல்லும் உரிமை உரிமையாளருக்கு உள்ளதா என்பதையும் குறிப்பிட வேண்டும். உரிமை உள்ளது எனில் என்ன காரணத்துக்காக நீங்கள் காலி செய்யச் சொல்ல முடியும் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

குடியிருப்போர் உங்களின் வீட்டை அடமானம் வைக்கவோ, மூன்றாம் நபருக்கு விற்கவோ வாய்ப்பிருக்கிறது. அதனால் குத்தகைக்கு விட்டபிறகு உங்கள் சொத்தின் வில்லங்க சான்றிதழை பதிவு அலுவலகத்தில் வருடம் ஒருமுறை சரிபார்த்து கொள்ளுங்கள். ஏதாவது பிரச்னை என்றால் உடனே தீர்வு காண முடியும். உங்களுக்கும் குடியிருப்போருக்கும் எதாவது பிரச்னை இருந்தால், புகார் தர நடுவர் ஒருவரையும் பத்திரத்தில் குறிப்பிடுங்கள்.''


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

செவ்வாய், 27 ஜூன், 2017

நிதி... மதி... நிம்மதி –

குடும்ப நிதி மேலாண்மை தொடர்பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

திருமணம் என்னும் திருப்புமுனை!
'நீங்க போயிட்டு வாங்கடா, நான் வரலை. ஏற்கெனவே நான் 'கமிட்'ஆன செலவுக்கே என்ன பண்றதுன்னு தெரியல. இதுல, பார்ட்டி, ட்ரீட்ன்னு வேற நிறைய இருக்கு. கொஞ்ச நாளைக்கு என்னை விட்டுருங்க, ப்ளீஸ்!'


'அப்பா, ஆஃபிஸ்ல வேலை ரொம்ப இருக்குப்பா. அதனால நான் அடுத்த மாசமே வர்றேனே. இந்தச் செலவெல்லாம் அப்பவே வச்சிக்கலாமே!'
'சார்.. நம்ம கோபி, லீவு கேட்டானே. எனக்கு 'ஓவர்-டைம்' போட்டுக் குடுத்தீங்கன்னா, நான் வேணுமானா அவனோட வேலையெல்லாம் முடிச்சுக் குடுக்கட்டுமா?'
'முரளி... உனக்குப் பதிலா நான் பெங்களூரு போயிட்டு வர்றேனே... வேற ஒண்ணும் இல்லை... டூர் அலவன்ஸ் கிடைக்குமே! கொஞ்சம் பணம் தேவையா இருக்குடா...'
இன்றைய இளைஞர்களுக்கு மேற்சொன்ன உரையாடல்களின் 'அர்த்தம்' நன்றாகப் புரியும். ஆம், இ்வன் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறான்.
நல்லதுதான். மனம் திறந்து வாழ்த்துவோம்.

மிக நிச்சயமாக, ஒரு விஷயத்தில் இளைஞர்களிடம் நல்ல தெளிவு பிறந்து இருக்கிறது. அதுதான், கல்யாண வாழ்க்கைக்குப் பிறகான  திட்டமிடல். குறிப்பாக, செலவு செய்யும் போக்கில் ஒரு மாற்றம் தானாகவே ஏற்பட்டுவிடுகிறது. நண்பர்கள் நான்கைந்து பேர் சேர்ந்து 'கும்பலாக'த் திரியும் நிலை, குறுகிய காலத்திலேயே மறைந்துவிடுகிறது. பதிலுக்கு, 'இரண்டு பேர்' மட்டுமே ஊர் சுற்றுகின்றனர்!
எண்ணிக்கை குறைந்து போனது மட்டுமே இல்லை. எதற்காக, எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதிலும் ஒரு மாற்றம். தனக்கான கேளிக்கை, விருப்பம் என்பது பின்னுக்குப் போய், தம் இருவருக்கும் பொது வான செலவு; அல்லது 'மற்றவருக்கான' தேவை முன்னுக்கு வந்துவிடுகிறது. அதனால் செலவிடுதலில் 'தரம் சார்ந்த மாற்றம்'
  (Qualitative change) பரிணமித்து விடுகிறது.
அன்றைய, அப்போதைய தேவையைவிடவும், சற்றே நீண்ட காலத்துக்குத் தேவை யானதை வாங்குவதில் அக்கறை பிறக்கிறது. நல்ல உடைகள், காலணிகள், அணிகலன்கள், அழகுப் பொருட்கள், கேளிக்கைச் செலவுகள் ஆக்கிரமிக்க ஆரம்பிக்கின்றன.

இவையெல்லாம், சொத்துக்கள் (Assets) வகையைச் சேர்ந்தவை அல்ல என்றாலும், சமீபத்தில் இருக்கும் எதிர்காலத்துக்கு (Near Future) பயன்படக் கூடியன என்பதில் சந்தேகம் இல்லை. ஆக, 'இன்று' என்பதில் இருந்து, 'நாளை' என்று யோசிக்கத் தொடங்குகிற இந்த வயதுதான், வாழ்க்கையில் பணத்தின் அருமையை உணர ஆரம்பிக்கிற  பருவம்.

யாரும் சொல்லித் தராம லேயே, 'நம்' இருவரின் தேவைகள் தவிர்த்து வேறு எதற்காகவும் பணத்தைச் செலவிடக் கூடாது என்கிற எண்ணம் உதயமா கிறது. இதுதான் என்று அறியா மலேயே, 'நிதி திட்டமிடல்' நடை முறைக்கு வந்துவிடுகிறது!
எவையெல்லாம் வேண்டாத செலவுகள் என்று நாம் பட்டியல் இடுகிறோமோ, அவற்றை யெல்லாம் இவர்கள் இருவரும் 'பேசிப் பேசி' தாமாகவே விலக்கி விடுகிறார்கள். அநேகமாக அத்தனை பேர் வாழ்க்கையிலும் இது நடைபெறத்தான் செய்கிறது.

மற்ற நாடுகளில் எப்படியோ தெரியவில்லை; நம் நாட்டைப் பொறுத்தவரை, 'கல்யாணம் பண்ணிட்டா... பொறுப்பு தானா வந்துரும்...' காரணம், நமது சமுதாயத்தில், திருமணம் என்பது இன்னமும்கூட, ஒரு 'பந்தம்', ஒரு 'கட்டு', ஒரு 'மைல் கல்', வாழ்க்கையில் முக்கியமான 'திருப்புமுனை' என்கிற எண்ணம் ஆழமாகப் பதிந்து இருக்கிறது.
திருமணம் என்கிற புள்ளியில் இருந்துதான் 'குடும்பம்' என்கிற நிறுவனம் எழுகிறது. இவ்வகை இந்தியக் குடும்பங்கள், உலக அளவில் யாராலும், அசைக்க முடியாத பொருளாதார அலகுகள் (Unassailable Units of Economy) என்பதுதான் நமது வலிமை; நமது வரம். (பலரது கண்களை இதுதான் உறுத்திக் கொண்டு இருக்கிறது.)

கடந்த சில ஆண்டுகளாக உலகப் பொருளாதாரம் படும் பாட்டை நாம் நன்கு அறிவோம். ஆனானப்பட்ட ஐரோப்பிய நாடுகளே, அதிர்ச்சியில் விழி பிதுங்கி நிற்கின்றன. ஆனால், இத்தனை 'களேபரங்களுக்கு' மத்தியிலும், இந்தியா என்னும் யானை, கம்பீரமாக நடை போட்டுக்கொண்டு இருக்கிறதே... காரணம், நம் குடும்பங்கள் பின்பற்றி வரும் 'பொறுப்புத்தன்மை'யின் விளைவாக முகிழ்ந்தது இந்தச் சாதனை.
செலவு மேலாண்மைக்கு வருவோம். இப்போதெல்லாம், ஆண், பெண் இரு சாராருமே பணிக்குச் செல்பவர்கள்தாம். ஆகவே, 'ரெண்டு வருமானம்' என்பது சாதாரணம் ஆகிவிட் டது. இதற்கேற்ப, திட்டமிடல் வேண்டும்.

எல்லாரும் சொல்கிற எளிய விதிமுறைதான் முதலில். ஒருவரின் வருமானத்தில்       குடும்பச் செலவுகளைப் பார்த்துக்கொள்ளுங்கள்; மற்றதை 'அப்படியே' சேமியுங்கள்.
'உன் சம்பளம் உனக்கு; என் சம்பளம் எனக்கு.
  சுதந்திரமாகச் செலவு செய்வோம்' என்று நடந்துகொள்ளுதல் சரியல்ல. அதுதான் 'முற்போக்குத்தனம்' என்று தவறாகப் பொருள் கொண்டுவிட வேண்டாம். உண்மையில் அது  முட்டாள் தனம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

உடனடிச் செலவுகள் என்று இரண்டை வகுத்து வைத்துக் கொள்ளுங்கள். 1. இருவரும் அலுவலகம் சென்று வர ஏதேனும் ஒரு வண்டி (அல்லது, இரண்டு வண்டிகள்) 2. சொந்தமாக ஒரு வீடு.
சென்னை போன்ற போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் வசிப்பவர்கள், சொந்த வண்டியில் பணிக்குச் சென்று வருவதில் சில சௌகரியங்கள் உண்டு. எல்லா நாட்களிலும், பொதுப் போக்குவரத்தில் மட்டுமே போய்க்கொண்டு இருக்க முடியாது. ஆகவே, சொந்தமாக ஏதேனும் ஒரு வண்டி, கட்டாயம் வேண்டியதுதான். இருந்தாலும், இயன்றவரை, பேருந்துப் பயணத்தை மேற்கொள்வது நல்லது.
சொந்த வீடு. மொத்தப் பணத்தையும் ரொக்கமாகத் தந்து வீடு வாங்குவது இயலவே இயலாத காரியம். நம் முன் உள்ள ஒரே வழி வீட்டுக் கடன். திருமணம் ஆன உடனேயே, வீட்டுக்காக திட்டமிடுதலே மிக நல்லது.

குறைந்த வயதில் வீட்டுக் கடன் வாங்கும்போது, திருப்பிச் செலுத்துவதற்கான காலக்கெடு அதிகம் கிடைக்கிறது; அதனால் கூடுதலாகக் கடன் தொகை பெற முடிகிறது; நம் விருப்பத் துக்கு ஏற்றாற்போல், வீடு வாங்குவது சாத்தியம் ஆகிறது.
அனைத்துக்கும் மேலாய், நாளுக்கு நாள் வீட்டின் விலை அதிகமாகிக் கொண்டுதான் செல்லும். ஆகவே, உடனடியாக வீட்டின் மீது முதலீடு செய்வது தான் புத்திசாலித்தனம். வாடகையாகத் தரும் பணத்தின் ஒரு பகுதியை, வீட்டுக் கடன் தவணையாய்ச் செலுத்தினால், சில ஆண்டுகளில் நமக்கென்று சொந்தமாக வீடு இருக்குமே!
ஆயுள் காப்பீட்டுத் தொகை, மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் போன்றவற்றையும், திருமணம் ஆன முதல் சில மாதங்களிலேயே, தொடங்கிவிட வேண்டும்.
பிள்ளைகளுக்கான கல்விக்காகத் தனியே சேமித்தே ஆக வேண்டும். கல்விக் கடன், உதவித் தொகை எல்லாம் கிடைக்கும்தான். இருந்தாலும், குழந்தைகளின் எதிர்காலத்துக் காக இப்போது இருந்தே சேமிப்பதே நல்ல வழிமுறை ஆகும். மிக முக்கியமாக, பெற்றோர் மற்றும் வீட்டில் உள்ள பிற முதியோர்களின் நலனுக்காக, தம் வருமானத்தின் ஒரு பகுதியை ஒதுக்கி வைத்தே ஆகவேண்டும். இது, நமது குடும்பம், உறவு சார்ந்த விஷயம் மட்டுமல்ல; மனிதம் சார்ந்த, சமூகம் சார்ந்த கடமையும் கூட. மறந்துவிட வேண்டாம்.

ஒரு நினைவூட்டல். 'உன் உறவுக்காரங்க...' 'என் சொந்தம்...' என்றெல்லாம் வேறுபடுத்திப் பார்க்க வேண்டாம். 'வேண்டிய வர்களுக்கு' உதவுவதே இல்லறத்தின் பண்பும் பயனும் ஆகும்.
நிறைவாக, அனேகமாக இருவருக்கும் சேர்ந்தேதான் வருமானம் அவ்வப்போது உயர்ந்துகொண்டே போகும். அதற்கேற்ப, இருவரின் திட்டமிடலும் மாற வேண்டும். 'அதுதான் நீ சேர்த்து வைக்கிறே இல்லை..? அப்புறம் என்ன..? என்னோட பணத்தை 'ஜாலியா' செலவு பண்ணலாமே...' என்கிற மெத்தனம் தோன்றிவிடாமல் கவனமாகச் செயல்படல் வேண்டும்.
'சீரான செலவு - சிறப்பான வாழ்க்கை.' இதுதான் இளம் தம்பதியினர் மனதில் கொள்ள வேண்டிய ஒரே வாசகம்.
இனி நாம் காண இருப்பது 'கடன்'! அதை நாம் ஏற்கெனவே பார்த்து விட்டோமே என்கிறீர்களா?
இல்லை. இது மற்றொரு கோணம். கடனின் மறுபக்கம்!


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

நாம் தூங்கும் போர்வையை ஏன் மடித்து வைக்க வேண்டும் தெரியுமா?

நாம் தூங்கும் போர்வையை பல வேளைகளிலும் ஒழுங்காக மடித்து வைப்பதில்லை. ஆனால் மடித்து வைக்க வேண்டும் என்று நம் முதியோர்கள் கூறுவார்கள்...

Popular Posts