லேபிள்கள்

வெள்ளி, 13 ஜனவரி, 2017

ஆதார் அட்டை பதிவு செய்வது எப்படி? தொலைக்கப்பட்ட ஆதார் அட்டையை திரும்பப் பெறுவது எப்படி?

ஆதார் விவரங்களை திருத்தம் செய்வது (Updation) எப்படி?
பெயர், விலாசம், பிறந்த தேதி மற்றும் கைபேசி எண்ணை திருத்தம் செய்ய ,* இணையதளமான
உள்சென்று செய்யலாம்.
*விண்ணப்பம் எழுதி அதனுடன், அதனை சார்ந்த அடையாள ஆவணத்தை கீழ்கணட UIDAI மண்டல அலுவலகத்திற்கு தபால் மூலம் அனுப்பலாம். முகவரி:UIDAI,Post box No.:10,Chhindwara,Mathya Pradesh-480 001,INDIA .அல்லதுUIDAIPost Box No:99Banjara Hills,Hyderabad - 500 034,INDIA.மறக்காமல் அனைத்து ஆவணங்களிலும் தங்களது சுய கையொப்பம் இட்டு அனுப்பவும்.

 ஆதார் அட்டை என்னிடம் இல்லை. அதனை நான் பதிவு செய்வது எப்படி?இந்திய பதிவாளர் ஜெனரல் அவர்கள், மக்கள்தொகை கணக்கெடுப்பு மையத்தை தொடர்பு கொள்ளவும்.முகவரி
:The Director,Directorate of Cencus Operations, Tamilnadu,E-Wing, Third Floor, Rajaji Bhavan,Besant nagar,Chennai-600 090,Phone:91-44-24912993.Mail: dco-tam.rgi@nic.in
 
தொலைக்கப்பட்ட ஆதார் அட்டையை திரும்பப் பெறுவது எப்படி?http://eaadhaar.uidai.gov.in/என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.

ஆதார் அட்டைக்கு பதிவு செய்து, அது கிடைக்கப் பெறாமல் இருந்தால், அவற்றின் விபரங்களை எப்படி அறிவது?* SMS ல் UID STATUS <14 digit="" eid=""> என டைப் செய்து 51969 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.
*இலவச அழைப்பு எண்: 1800 300 1947 மூலம் போன் செய்யவும்.*https://resident.uidai.net.in/check-aadhaar-statusஇணைய தளத்தில் பெறலாம்.*


தொலைக்கப்பட்ட ஆதார் பதிவுச்சீட்டு (Enrolment Slip)பெறுவது எப்படி?ஆதார் இணையதளமானhttps://resident.uidai.net.inஉள் செல்லவும். பின்னர் "find UID/EID" என்பதினை அழுத்தவும். ஆதார் பதிவின்போது அளிக்கப்பட்ட பெயர் மற்றும் கைபேசி எண்ணை பதிவு செய்து OTP (ஒரு முறை குறியீட்டு எண்) பெறவும். பெறப்பட்ட OTP எண்ணை இணையதளத்தில் பதிவு செய்யவும். பதிவான ஆதார் எண் / பதிவு எண்ணினை உங்கள் கைபேசியில் காணலாம்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

புதன், 11 ஜனவரி, 2017

எந்த நன்கொடைக்கு எவ்வளவு வரிச் சலுகை?

நன்கொடையைப் பணமாகவோ அல்லது காசோலையாகவோ வழங்கினால் மட்டுமே வரிச் சலுகை கிடைக்கும். 10,000 ரூபாய்க்கு  மேல் ரொக்கமாக நன்கொடை தந்தால், வரிச் சலுகை கிடைக்காது!

நம்மில் பலர் தானம் செய்யவேண்டும் என்ற விருப்பத்துடனேயே இருக்கிறோம். பல அமைப்பு களுக்கு விரும்பி நன்கொடை செய்யவும், பலரும் தயாராகவே இருக்கிறார்கள். இப்படித் தரும் நன்கொடைக்கு வருமான வரிவிலக்கு இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாத விஷயம். எந்தெந்த நன்கொடைக்கு வரிச் சலுகை வசதி இருக்கிறது, எந்த நன்கொடைக்கு எவ்வளவு வரிச் சலுகை கிடைக்கும், வரிச் சலுகைக்காக நன்கொடை அளிக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து விளக்கமாக எடுத்துச் சொன்னார் சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் சதீஷ்குமார்.
யாருக்கு இந்தச் சலுகை?
இந்தியர்கள் அனைவரும் அவர்கள் அளிக்கும் குறிப்பிட்ட நன்கொடை களுக்கு வரிச் சலுகை பெற முடியும். நன்கொடை வழங்கு பவர்கள் தனிநபராகவோ அல்லது வெளிநாடு வாழ் இந்தியராகவோ (NRI), நிறுவன மாகவோ, கார்ப்பரேட் நிறுவனங்களாகவோ இருக்கலாம். இவர்களில் எந்தப் பிரிவினரும் வழங்கிய நன்கொடைக்கு 80ஜி பிரிவின் கீழ் சலுகை பெறலாம்.

எத்தனை சதவிகிதம் வரிச் சலுகை?
ஒருவர் நன்கொடையாக வழங்கிய முழுத் தொகைக்கும் வரிச் சலுகை கிடைக்க நிபந்தனை இருக்கிறது.
  நன்கொடையின் தன்மையைப் பொறுத்து தொகையில் 50 முதல் 100%  வரிச் சலுகை கிடைக்கும். கீழ்க்காணும் நிதிகளுக்கு நீங்கள் நன்கொடையாகச் செலுத்தும் முழுத் தொகைக்கும் (100%) வரிச் சலுகை பெறலாம்.

பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமர் / முதல்வர் பூகம்ப நிவாரண நிதி / புயல் நிவாரண நிதி
மத நல்லிணக்கத்துக்கான தேசிய அமைப்பு நிதி
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள்
முதலமைச்சரின் பூகம்ப நிவாரண நிதி
மாவட்ட எழுத்தறிவு குழுக்கள்
தேசிய ரத்த தான கவுன்சில் அல்லது மாநில ரத்த தான கவுன்சில்
இந்திய ராணுவ மத்திய நல நிதி அல்லது இந்திய கடற்படை நல நிதி அல்லது இந்திய விமானப்படை மத்திய நல நிதி
தேசிய சுகவீனம் உதவி நிதி
முதலமைச்சர் அல்லது ஆளுநர் நிவாரண நிதி
தேசிய விளையாட்டு நிதி
தேசிய கலாசார நிதி
தேசிய குழந்தைகள் நிதி
மத்திய அரசின் தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி
ஆட்டிஸம், செரிப்ரல் பால்ஸி, மனவளர்ச்சி குறைபாடு மற்றும் உடல் ஊனமுற்றவர்களுக்கான தேசிய அறக்கட்டளைக்கு வழங்கப்படும் நிதி
கிராமப்புற மற்றும் நகர்ப்புற கல்வி மேம்பாட்டுக் காகக் கிராம/நகரத் தலைவர், மாவட்ட ஆட்சியரிட மிருந்து அனுமதி பெற்று வசூலிக்கும் நன்கொடை.
நீங்கள் வழங்கும் நன்கொடை தொகையில் 50% மட்டும் வரிச் சலுகையாகப் பெறக்கூடியவை...
ஜவஹர்லால் நேரு நினைவு நிதி
பிரதமரின் வறட்சி நிவாரண நிதி
இந்திரா காந்தி நினைவு நிதி
ராஜீவ் காந்தி அறக்கட்டளை
  வேர்ல்டு விஷன் இண்டியா உதவும் கரங்கள்.

நிபந்தனைகள்!
சில குறிப்பிட்ட அமைப்புகளுக்கு வழங்கும் வரிச் சலுகைகளுக்கு நிபந்தனை இருக்கிறது. அதாவது, ஒருவர் அவரது வரிக்கு உட்பட்ட வருமானத்தில் 10 சதவிகிதத்தை மட்டுமே நன்கொடை வழங்கி வரிச் சலுகை பெறலாம். இதிலும் 100% மற்றும் 50% வரிச் சலுகை இருக்கிறது.
நன்கொடை தொகைக்கு 100% வரிச் சலுகை
  தருபவை..!
குடும்பக் கட்டுப்பாட்டை வலியுறுத்தும் நிறுவனங்கள், சங்கங்கள்.
இந்திய ஒலிம்பிக் சங்கம் போன்ற அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள்.
விளையாட்டுப் போட்டிகளுக்குச் செய்யும் ஸ்பான்ஸர்.
நன்கொடையில் 50% வரிச் சலுகை
  தருபவை..!
அரசு மற்றும் லோக்கல் அத்தாரிட்டிகள் தான தர்மமாக நன்கொடை வழங்குவது.
வருமான வரித்துறை ஆணையரால் அங்கீகரிக்கப்பட்ட சபைகள், நிதிகள், நிறுவனங்கள்.
வழிபாட்டுத்தலங்கள் பராமரிப்பு மற்றும் புனரமைப்பு நிதி.
கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் திட்டமிடல் மற்றும் வீட்டு வசதி மேம்பாடு போன்றவைகளுக்கு வழங்கும் நன்கொடை.

கவனிக்க வேண்டியவை:
1. நீங்கள் நன்கொடை வழங்கிய அமைப்பு அல்லது அறக்கட்டளையிலிருந்து ரசீது வாங்கிக் கொள்வது அவசியம். அந்த ரசீதில் உங்களின் முழுமையான பெயர், முகவரி, பான் கார்டு எண், வழங்கிய தொகை (எண்ணிலும், எழுத்திலும் இருக்க வேண்டும்). அதேபோல், நன்கொடை விவரத்தை, நன்கொடை பெற்ற நிறுவனம் ஃபார்ம் 58-ல் குறிப்பிட்டு வழங்கினால் மட்டுமே வரிச் சலுகை பெற முடியும்.

2. நன்கொடை பெறும் நிறுவனத்துக்கு வருமான வரித் துறையிடமிருந்து 80ஜி பிரிவின் கீழ் ஒரு எண் வழங்கப் படும். அந்த எண் சரியானதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். அமைப்பு அல்லது அறக்கட்டளைக்கு வருமான வரித் துறை 80ஜி சான்றிதழ் வழங்கி இருக்கும். அதன் நகலை வாங்கிக்கொள்வது நல்லது.

3. நன்கொடை பணமாகவோ அல்லது காசோலையாகவோ வழங்கினால் மட்டுமே வரிச் சலுகை கிடைக்கும். அதேபோல், ரூபாய் 10,000க்கு மேல் நன்கொடையை ரொக்கமாக வழங்கினால் அதற்கு வரிச் சலுகை கிடைக்காது. காசோலையாகக் கொடுத்திருக்க வேண்டும். பொருளாகக் கொடுத்தாலும் வரிச் சலுகை கிடையாது. நன்கொடை வழங்கப்படும் தொகை எங்கிருந்து வந்தது என்பதற்கான வருமான ஆதாரம் இருக்க வேண்டும்.

4. பிரதமர், முதலமைச்சர் நிவாரண நிதி அல்லது பிரத்யேகமாக மாநில நிதி மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு வசூலிக்கப்படுவதற்கு எல்லாம் குறிப்பிட்ட காலம் வரைதான் 80ஜி-யின் கீழ் சலுகை பெறமுடியும். குறிப்பாக, பூகம்ப நிவாரண நிதி, புயல் மற்றும் சூறாவளி நிவாரண நிதி போன்றவைகளுக்கு குறிப்பிட்ட காலம் வரை தான் வரிச் சலுகை கிடைக்கும். நீங்கள் இது போன்ற நிதிகளுக்கு நன்கொடை வழங்கினால், அன்றைய தேதியில் அந்த நிதிகளுக்கு வரிச் சலுகை அளிக்கப்பட்டிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

நிறுவனங்களுக்குச் சலுகை!
2009 அக்டோபர் 1-ம் தேதிக்குப் பிறகு பதியப்பட்ட நிறுவனம்/அமைப்பு/அறக்கட்ட ளையாக இருந்தால், அவர்கள் 80ஜி சான்றிதழை ஆண்டுதோறும் நீட்டிப்புக்கு விண்ணப்பித்திருக்கத் தேவையில்லை. வருமான
  வரித் துறை அதிகாரிகள் புதுப்பிக்கச் செய்யச் சொன்னால் மட்டுமே, அறக்கட்டளைகள் 80ஜி சான்றிதழின் நீட்டிப்புக்கு விண்ணப்பித்தால் போதும் எனச் சலுகை அளிக்கப்பட்டிருக்கிறது.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

திங்கள், 9 ஜனவரி, 2017

அதிமதுரம்

சித்தா, ஆயுர்வேதம் மட்டுமல்லாது, சீனத்திலும் ஜப்பானிய கம்போ மருத்துவத்திலும் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் முக்கியமான மூலிகை அதிமதுரம். சர்க்கரைச்சத்து இல்லாமலே இனிக்கும் இந்த வேர், உச்சி முதல் பாதம் வரை உருவாகும் பல்வேறு நோய்களை நீக்கும் அமிர்தம். உடல் வெப்பத்தைத் தணித்து, வாய்ப்புண், நா வறண்டு போதல், காமாலை, வறட்டு இருமல், வயிற்றுப் புண், சிறுநீர் எரிச்சல், உளவியல் நோய்கள் முதலான உஷ்ணம் காரணமாக (பித்தம் காரணமாக) வரும் அனைத்து நோய்களுக்குமே அதிமதுரம் பயன்படுகிறது.

இன்று எப்படி, கசப்பான மருந்துகளைக்கூட, சுகர் சிரப், மணமூட்டிகள் சேர்த்து வழங்குகின்றனரோ, அதேபோல், அந்தக் காலத்தில் கசப்பான மருந்துகளுடன் அதிமதுரத்தைக் கலந்து அதன் அருவருப்பை நீக்கிடவும் பயன்படுத்தி வந்தனர். இன்றைய நவீன உணவு விஞ்ஞான முறை, இதன் இனிப்புச் சுவையைப் பிரித்தெடுத்து, உணவில் இனிப்புச் சுவையைக் கூட்ட பயன்படுத்திவருகிறது. இதன் இனிப்புச் சுவை வெள்ளைச் சர்க்கரையைக் காட்டிலும் பல மடங்கு அதிகம் என்றாலும், சர்க்கரை நோயாளிக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவினை ஏற்றும் குளுக்கோஸ் சத்து இதில் கொஞ்சமும் கிடையாது.

கைக்குழந்தைகளுக்குத் தாய்ப்பாலில் இழைத்துக் கொடுக்கப்படும் உரை மருந்தில் அதிமதுரம் சேர்க்கப்படுகிறது. அதிமதுரத்தை அரைத்து, குச்சிபோல் காயவைத்து, தாய்ப்பாலில் இழைத்துக் கொடுப்பார்கள். உரைமருந்தில் சேர்க்கப்படும் சுக்கு, திப்பிலி, மாசிக்காய், கடுக்காய், அக்கிரகாரம், வசம்பின் காரத்தை அதிமதுரத்தின் இனிப்புச்சுவை மறைத்து, குழந்தை சப்புக்கொட்டிச் சாப்பிடும்படி செய்துவிடும்.

வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமலைவிட அதிகம் வதைக்கக்கூடிய ஒன்று. சிலருக்கு பல வாரங்கள் தொடரும் இந்த வறட்டு இருமல், தொண்டையைப் புண்ணாக்கி, விலா எலும்புகளில் வலியையும் தரும். இந்த வலி பெரிதும் அதிகரிக்கையில், ஒவ்வொரு இருமலிலும் தன்னிச்சையாய் சிறுநீர் வெளிப்படும் தொல்லைகூட உருவாகும்.

இந்த வறட்டு இருமலுக்கு அதிமதுரம் மிகச் சிறந்த மருந்து. அதிமதுரக்கட்டையில் சிறுதுண்டை வாயில் அடக்கிக்கொண்டு உமிழ்நீரை விழுங்கி வந்தாலே, வறட்டு இருமல் நீங்கும். கொஞ்சம் நாள்பட்ட இருமல் இருப்போருக்கு, அதிமதுரம், கடுக்காய், மிளகு இந்த மூன்றையும் சம அளவில் எடுத்து வறுத்துப் பொடித்து வைத்துக்கொண்டு, இந்த பொடி மூன்று சிட்டிகையை தேன் அல்லது பனங்கற்கண்டுடன் கலந்து கொடுக்க, வறட்டு இருமல் மாறும்.

சித்த மருத்துவத்தில் கண்ட அவிழ்தம் எனும் மிகச் சிறப்பான மருந்து ஒன்று உண்டு. அதிமதுரம், அக்கரகாரம், அரத்தை, சுக்கு இவற்றை நன்கு பொடித்து வைத்துக்கொண்டு, அவ்வப்போது இந்த பொடியை நான்கு சிட்டிகை எடுத்து, பாலில் மையாக அரைத்து, அதோடு, பாலில் வேகவைத்த பேரீச்சையைச் சேர்த்து அரைத்து உருட்டி எடுப்பதுதான் கண்ட அவிழ்தம்.

 நாவில் தடவி வந்தாலே, புற்றுமுதலான நாட்பட்ட நோய்களில், பிற மருத்துவத்தால் தணிக்க முடியாத நாவறட்சி நீங்கும். குறிப்பாக, புற்றுநோயில் கீமோதெரப்பி சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் உடல் வெம்மையால் வரும் வறட்டு இருமலுக்கும் நாவறட்சிக்கும் மிகவும் பயனளிக்கும் இந்த கண்டஅவிழ்தம்.

மைக்ரேன் எனும் ஒற்றைத்தலைவலிக்கு மிக எளிய மருந்து, அதிமதுர சோம்புக் கசாயம். சித்த மருத்துவப் புரிதல்படி, மைக்ரேன் எனும் ஒற்றைத் தலைவலி வருவது, அதிகப் பித்தத்தால்தான். பெண்களுக்கு மாதவிடாயினை ஒட்டி, அல்லது பலருக்கும் வெயிலில் அலைச்சல், இரைச்சலான இடத்தில் இருத்தல், புழுக்கமும் கூட்டமும் நிறைந்த இடத்தில் வசித்தல் போன்ற காரணங்களால், மைக்ரேன் வரும். இதற்கு வலி மாத்திரையை அடிக்கடி எடுப்பது வயிற்றுப் புண்ணை வரவழைக்கும்.

அதிமதுரமும் பெருஞ்சீரகம் எனும் சோம்பும், ஆர்கானிக் வெல்லமும் சமஅளவு எடுத்துப் பொடித்து, அரை தேக்கரண்டி அளவு சாப்பிடலாம். அல்லது இந்தத் தூளை தேநீர் போடுவதுபோல் கசாயமாக்கியும் அருந்தலாம். சுவையான தலைவலி மருந்து இது.

கோடையின் உச்சம் இது. எனவே காமாலை வரும் காலம். முட்சங்கன் வேர்ப்பட்டை, அதிமதுரம் சமஅளவு எடுத்து எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்து, சின்ன சுண்டைக்காய் அளவு மாத்திரைகளாக உருட்டி, காயவைத்து காமாலை வரும்போது, கீழாநெல்லி கற்கம் கொடுப்பதுடன், இந்த மாத்திரையையும் கொடுத்தால், காமாலை நோயும் போகும். கல்லீரலும் சீராகும். அதிமதுரத் தூளை பால், நெய், வெல்லம் சேர்த்து லேகியமாகக் கிளறி, அதனை சிறு நெல்லிக்காய் அளவு கொடுக்க, கோடையில் வரும் சிறுநீர் எரிச்சல் போகும்.

இன்றைக்கு இளைய தலைமுறையினரை அதிகம் வதைக்கும் நோய், எதுக்களித்தல் (Gastroesophageal reflux disease). மாறுபட்ட உணவும் வாழ்வியலும் இரவுத்தூக்கக் கேடாலும் வரும் இந்தத் தொல்லை, பலருக்கும் பல ஆண்டுகள் தொடரும் நோய். இதற்கு, அதிமதுரத்தூள் உணவுக்கு முன்னதாக அரை தேக்கரண்டி காலையும், மாலையும் எடுப்பது நல்லது. வயிற்றுப் புண்ணை ஆற்றும் மிகச் சிறந்த மருந்து இது. அதிமதுரத்தின் எளிய மலமிளக்கித் தன்மை, வயோதிகத்தினருக்கும் நல்ல பயனளிக்கும். அதிமதுரம் நாவில் மட்டுமல்ல; நோயற்ற வாழ்வும் தந்து வாழ்வையும் இனிக்கச் செய்யும் நாட்டு மருந்து.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

சனி, 7 ஜனவரி, 2017

"ஏ.சி. வாங்க செல்கிறிர்களா' இதை படித்து விட்டு செல்லவும் ?

இந்த கொளுத்தும் வெய்யிலை சமாளிக்க ஏ.சி.யை வாங்க தீர்மானித்து விட்டீர்களா? எதை வாங்குவது என்று நீங்கள் குழம்பினால் அது நியாயம் தான்!
இப்போது எங்கு பார்த்தாலும் விதவிதமான ஏ.சி.கள் விற்பனைக்கு உள்ளன. நீங்கள் விரும்பும் அளவுக்கு அறையை குளிற வைக்கும் ஏ.சி., காற்றை சுத்தமாக்கும் ஏ.சி. என்று எத்தனையோ....
நீங்கள் வாங்கும் ஏ.சி. புதிது, உபயோகித்தது, பிராண்டட், அசம்பிள்டு என்று எதுவாக இருந்தாலும் சில குறிப்புகளை நினைவில் வைப்பது நல்லது.
ஜன்னலில் பொருத்தக் கூடியவை:
ஜன்னலின் கீழ் பாகத்தில் இது எளிதாக பொருந்திவிடும். இதற்காக சுவரை உடைக்க வேண்டிய அவசியமில்லை.
இதை எளிதாக கழற்றவும், மாட்டவும் முடியும். அதனால் வாடகைக்கு ஏ.சி. வாங்கினாலும், வாடகை வீட்டில் பொருத்த வாங்கினாலும், இதுவே சிறந்தது.
சுவரில் பொருத்தக் கூடியது:
இவை பார்ப்பதற்கு அழகானவை. ஆனால் விலை கொஞ்சம் கூடுதல்.
ஜன்னலை ஏ.சி.யால் அடைக்க விரும்பாதவர்கள் இதை தேர்ந்தெடுக்கலாம். வேண்டிய இடத்தில் பொருத்தலாம்.
வீட்டுக்கு சொந்தக்காரர்கள் சுவரில் துளை போட அனுமதிப்பார்களா என்பதை வாடகை வீட்டில் இருப்பவர்கள் யோசிக்க வேண்டும்.
ஜன்னலில்/சுவரில் பொருத்தக் கூடியது:
வாடகை வீட்டில் இருக்கும்போது, ஜன்னலில் பொருத்திக் கொள்ளலாம். சொந்த வீட்டுக்கு மாறியவுடன் சுவரில் பொருத்தலாம்.
ஜன்னலிலும், சுவரிலும், பொருந்தக் கூடியது என்பதால் இது பலரால் விரும்பப்படுகிறது. ஆனால் இதன் விலையும் அதிகம்.
கவனிக்க வேண்டிய அம்சங்கள்:
தேவையான அளவு அறை குளிர்ந்த பிறகு பொதுவாக கம்ப்ரெஸ்ஸர் வேலை செய்வதை நிறுத்திவிடும். ஆனால் ஏ.சி.க்கு உள்ளே இருக்கும் விசிறி வேலை செய்வதால் மின் கட்டணம் ஏறிக்கொண்டே போகும். கம்ப்ரெஸ்ஸர் நிற்கும் போது விசிறியும் நிற்பது போன்ற வசதி உள்ளதா என்று கவனிக்கவும்.
ஆஸிலேடிக் வெண்ட்ஸ் இருந்தால் வெளியே வரும் குளிர்ந்த காற்று அறை முழுக்க சீராக பரவும்.
ரிமோட் கன்ட்ரோல் வசதி இருந்தால் உட்கார்ந்தபடியே ஏ.சி.யை இயக்கலாம்.
டைமர் இருந்தால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஏ.சி.யை இயக்கவும் நிறுத்தவும் முடியும்.
ஒன்று அல்லது இரண்டு வருடம் நிறுவனத்தின் உத்தரவாதம் உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் வேறு ஒரு ஏ.சி.யை வாங்குவதே நல்லது.
புதிதாக ஏ.சி. வாங்குபவராக இருந்தால் உங்கள் வீட்டில் ஏ.சி. பொருத்தப்படவிருக்கும் அறையின் அளவை மனதில் வைத்துக் கொண்டு தேர்வு செய்யுங்கள். 1.5 டன், 2 டன், 3 டன் என்று நம் பயன்பாட்டுக்கு ஏற்ற ஏ.சி. மெஷின்கள் உள்ளன. 150 சதுர அடி கொண்ட அறையாக இருந்தால் 1.5 டன் அளவுள்ள ஏ.சி. போதுமானது. பெரிய ஹால் என்றால் 3 டன் தேவைப்படும்.

உதிரிபாகங்களை குறைந்த விலையில் வாங்காதீர்கள். நல்ல விலையில் தரமானவற்றை வாங்குங்கள். ஏ.சி. வாங்கியதும்
, அதற்கேற்ற தரமான 'ஃப்யூஸ் ஒயர்', 'டிரிப்பர்' போன்றவற்றை பொருத்தவேண்டும். மலிவான விலைகளில் வாங்கினால், உங்கள் உயிருக்கு ஆபத்தாக முடியும்.

உதாரணத்துக்கு ஸ்பிலிட் ஏ.சி. 1.5 டன் எனில்
, 20 ஆம்ப்ஸ் ஒயரினால் ஆன ஃப்யூஸை பொருத்துங்கள். இதேபோல் டிரிப்பரும் 20 ஆம்ப்ஸ் கொண்டதாக இருக்க வேண்டும். அப்போதுதான் மின் சப்ளையில் கோளாறு எற்பட்டாலும் டிரிப்பர் தானாக ஆஃப் ஆகி ஏ.சி-யைக் காப்பாற்றி விடும்.

ஏ.சி. வாங்கும்போது இலவசமாகக் கொடுக்கப்படும் ஸ்டெபிலைசர்கள் தரம் குறைந்தவையாக இருக்கக் கூடும். தரமான நிறுவனங்களின் ஸ்டெபிலைசர்களை வாங்குங்கள். எல்லா ஏ.சி. நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு சொல்லும் அட்வைஸ்... ஏ.சி. வாங்கி பொருத்தியதும்
, அது எப்போதும் 23 டிகிரிக்கு கீழ் வைக்கக்கூடாது. அதற்கும் குறைவாகக் கொண்டு போகும்போது ஏ.சி. அதிக பயன்பாட்டுக்கு உட்படுத்தப்படும். அப்போது கம்ப்ரஸர், காயில், ஏ.சி-க்கு செல்லும் ஒயர் என எல்லா பகுதியும் சூடாகிவிடும். இதனாலும் தீப்பிடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. எக்காரணம் கொண்டும் 16 டிகிரியில் ஏ.சி-யை கொண்டு போகாதீர்கள்.

வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏ.சி-க்களை முன்று மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் சர்வீஸ் செய்யவேண்டும். ஸ்பிலிட் ஏ.சி. எனில் 15 நாட்களுக்கு ஒரு முறை ஃபில்டரை கழற்றி தண்ணீரில் நன்கு சுத்தம் செய்து மாட்டுங்கள். இதனால்
, எந்தவித இடையூறும் இல்லாமல் குளுமையாக காற்று வரும்.

ஏ.சி. ஓடிக் கொண்டிருக்கும்போதே ரூம் ஸ்ப்ரே அடிப்பது மிகவும் தவறு. பெர்ஃப்யூம்கள் ஏ.சி.யின் உள்ளே இருக்கும் காயிலை பழுதாக்கி
, சீக்கிரத்தில் மெஷினை ரிப்பேராக்கிவிடும்.

நல்ல குளுமை வேண்டும் என்பதற்காக ஏ.சி. ஓடிக்காண்டிருக்கும்போதே ஃபேனை போடாதீர்கள்
ஏர்கண்டிஷனர் ஏற்பாடுகள்!

இன்று வீடு
, அலுவலகம், ஹோட்டல், சினிமா தியேட்டர் என எல்லா இடங்களிலும் ஏர்கண்டிஷனர் எனப்படும் ஏ.சி. பயன்படுகிறது. ஆடம்பரமான பொருள் என்பதைத் தாண்டி அவசியமான பொருள் என்றாகி விட்டது இந்த ஏ.சி. ஆனால், அதற்காக செலவிடும் தொகைதான் அதிகம். அதன் உபயோகத்தில் எப்படி மின் செலவைக் கட்டுப்படுத்தி, பணத்தை மிச்சப்படுத்துவது..?

  சுட்டெரிக்கும் கோடைக்காலம் தவிர்த்து, மற்ற சீஸன்களில் சீலிங் ஃபேன், டேபிள் ஃபேன்களையே பயன்படுத்தலாம். காரணம், இவற்றை பயன்படுத்தினால் ஒரு மணி நேரத்துக்கு முப்பது பைசா மட்டுமே செலவாகும். இதுவே ஏ.சி-யை பயன்படுத்தினால்... ஒரு மணி நேரத்துக்கு ரூபாய்களில் செலவாகும்!

  ஏ.சி. இருக்கும் அறையில் குறைந்த அளவு சூரிய ஒளி உள்ளே செல்லுமாறு பார்த்துக் கொண்டால் 'குளுகுளு' மெயின்டெயின் ஆகும். மின்சாரமும் அதிகம் செலவாகாது.

  உலகத்துக்கே இயற்கைதானே எஜமான்! வீட்டின் ஜன்னல் மற்றும் சுவர்களின் மீது நிழல் படும்படி மரங்களை வளர்த்தால், 'ஏ.சி'-க்கான மின்சாரத்தில் நாற்பது சதவிகிதத்தை சேமிக்கலாம் என்று நிரூபணம் செய்திருக்கின்றன ஆய்வுகள். அப்புறம் என்ன... மரம் நடுங்கள்; வளம் பெறுங்கள்.

  ஏ.சி. வசதி செய்யப்பட்ட அறையின் மேற்கூரை வெப்பத்தை உள்ளே கடத்தும் வகையில் இருக்கக் கூடாது. அப்படியிருந்தால், குளிர்ச்சியை வெளியே கடத்தாத வண்ணங்களை அங்கு தீட்டுவது சிறந்தது.

  ஏ.சி. பொருத்தப்பட்டுள்ள அறையின் மேற்கூரையின் கீழே செயற்கை சீலிங் (ஃபால்ஸ் சீலிங்) அமைக்கப்படுவதால், மேற்கூரையிலிருந்து வெளிப்படும் வெப்பக்கதிர் வீச்சு குறையும்; குளிரூட்டப்படும் அறையின் பரப்பளவும் குறைவதால், குறைந்த மின்சாரத்தில் 'ஜில்ஜில்' என இருக்கும்.

 ஏ.சி-யிலிருந்து வரும் குளிர்க்காற்று கீழ்நோக்கி வீசும் தன்மையுடையதால், தரையிலிருந்து இரண்டு அல்லது மூன்று மீட்டர் உயரத்துக்கு மேல் ஏ.சி-யை பொருத்துவதுதான் சரியான முறை. 'நாங்க கீழ வச்சுட்டோமே.. என்ன பண்றது' என்பவர்கள், அதன் ஸ்விங் மோட் (Swing Mode), எப்போதுமே மேல் நோக்கியதாக இருக்குமாறு அமைத்து விட்டால், பிரச்னை தீர்ந்து விடும்.

  ஸ்பிலிட் ஏ.சி-யின் கம்ப்ரஸரை (compressor) எப்படி வைப்பது..? எங்கு வைப்பது..? - இதுதான் நிறைய பேருக்கு வரும் சந்தேகம். ஏ.சி. பொருத்தப்படும் அறைக்கு வெளியே குளிர்ச்சியான, நிழல்பாங்கான இடமாக பார்த்து வைத்தால், சூரிய ஒளிபட்டு வெப்பமாவது தடுக்கப்படும்.

  ஸ்பிலிட் ஏ.சி-யின் பழைய கம்ப்ரஸர்களை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை மாற்றுவது நல்லது. அதற்கு மேலும் பழைய கம்ப்ரஸரை பயன்படுத்தாமல், புதிய கம்ப்ரஸர்களை அமைத்து செயல்திறனை அதிகரித்தால்... மின்செலவு குறையும்.
  
 ஏ.சி-யின் மின் செலவை ஈஸியாகக் குறைத்திட வேண்டுமா..? எப்போதுமே... 25 டிகிரி சென்டிகிரேடு அளவிலேயே ஏ.சி-யின் 'தெர்மோஸ்டாட்' இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அதற்கு கீழே குறையக் குறைய... மின்செலவு அதிகரிக்கும். போர்வைதான் இருக்கிறதே என்று 18 என்ற அளவிலேயே பயன்படுத்தினால்... பர்ஸ் கரையத்தான் செய்யும்!

  ஏ.சி-யையும் ஃபேனையும் ஒருசேர பயன்படுத்துவது நல்லதல்ல. அது தூக்கத்தையே குலைக்கும். குறிப்பிட்ட நேரத்துக்கு ஏ.சி-யை ஓடவிட்ட பிறகு, அதை ஆஃப் செய்துவிட்டு, ஃபேனை ஓடவிடலாம். ஃபேன் குறைந்த மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும் என்பதால் மின் சிக்கனம் சாத்தியமாகிறது. அறை ஏற்கெனவே குளிர்ந்திருப்பதால், குளுமைக்கும் குறைவிருக்காது.

 ஏ.சி. மெஷினானது, ஓர் அறையை 30 நிமிடங்களுக்குள் குளிர்ச்சியாக்கிவிடும். எனவே, நேரக்கட்டுப்பாட்டுக் கருவியை (Timer) பயன்படுத்துவதன் மூலம் மின்சாரத்தை சேமிக்கலாம்.

   ஏ.சி. வசதி செய்யப்பட்ட அறைகளில் குளிர் வெளியே செல்லாதவாறு கதவுகள் இடைவெளியில்லாமல் மூடப்பட்டிருந்தால், அதுவும் மின் சிக்கனத்துக்கு வழி வகுக்கும்.

  ஏ.சி-யின் 'ஃபில்டர்', மாதம்தோறும் தவறாமல் சுத்தம் செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால், அதில் அழுக்குப் படிந்து காற்றோட்டத்தைக் குறைத்து, ஏ.சி. மெஷினை விரைவில் பழுதாக்கி விடும். சுத்தமான 'ஃபில்டர்', விரைவாக குளிர்வதற்கு உதவுவதன் மூலம், மின்சக்தி இழப்பினை தடுத்து, உங்கள் பர்ஸைக் காப்பாற்றும்.

  ரிப்பேர் ஆகும் நிலையில் உள்ள ஏ.சி-யை இயக்கினால், அது குறைந்த அளவு குளிர்ச்சியைத்தான் தரும்; தொடர்ந்து இயக்கினால், உடனே பழுதாகி புதிய ஏ.சி. வாங்கும் செலவை உண்டாக்கும். 'ஏதாவது கோளாறு...' என்று தெரிந்தால், உடனடியாக அதை சரி செய்வதுதான் சாமர்த்தியம்.

  ஏ.சி-க்கு அருகிலேயே போட்டோ காப்பி மெஷின் (ஜெராக்ஸ் மெஷின்), ஸ்டெபிலைஸர், யு.பி.எஸ். போன்ற வெப்பத்தை வெளியிடும் கருவிகளை வைக்காமல், தூரத்தில் வைப்பது இரு கருவிகளுக்கும் நல்லது.

  மின் அடுப்பு, காபி தயாரிக்கும் கருவி, வாட்டர் கூலர், ஃப்ரிட்ஜ், அயர்ன்பாக்ஸ் போன்ற வெப்பத்தை வெளியிடும் மின்கருவிகளையும் ஏ.சி. அறைகளில் அறைகளில் பயன்படுத்தாமல் இருப்பது மின் சிக்கனத்துக்கான வழி.

  ஏ.சி. அறையை விட்டுக் கிளம்பப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்துவிட்டால், அறையின் குளிர்நிலை கொஞ்ச நேரம் நீடிக்கும் என்பதை மனதில் கொண்டு, அரை மணி நேரத்துக்கு முன்பாகவே ஏ.சி-யை ஆஃப் செய்துவிடலாம்.
 

ஏசியை பராமரிப்பது எப்படி!

ஏசியை சரியாகப் பராமரிக்காவிட்டால் நீண்ட நாள் உழைக்காது. அதோடு, குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டு தீ விபத்து ஏற்படுவதற்கும் வாய்ப்புஇருக்கிறது. முறையாகப் பராமரிக்காத ஏசி அதிகம் செலவு வைக்கும். எப்படிப் பராமரிப்பது என்பதை விளக்குகிறார் ஏசி மெக்கானிக் இஜாஸ் அகமது.
மாதம் ஒருமுறையாவது ஏசியை சர்வீஸ் செய்யவேண்டும். அதிகமான புகை, புழுதி உள்ள இடங்களில் வசிப்பவர்கள் குறைந்தது மாதத்துக்கு 2
முறை சர்வீஸ் செய்யவேண்டும். அதிக தூசி ஏசியில் சேர்ந்தால் பாதிப்பு நமக்குத்தான். எனவே, ஏசியில் உள்ள ஃபில்டரை சுத்தப்படுத்த சர்வீஸ் செய்வது அவசியம். அதிகம் பயன்படுத்தாத காலகட்டத்தில்கூட சர்வீஸ் செய்து வைப்பது ஏசியின் வாழ்நாளைக் கூட்டும்.
ஏசி வாங்கும்போது இலவச ஸ்டெபிலைஸரையும் சேர்த்துக் கொடுப்பார்கள். அது ஒரிஜினல் பிராண்ட்தானா என்பதைப் பார்த்து வாங்கவும். சிலகடைகளில் விலை மலிவான சீனத் தயாரிப்புகளைக் கொடுத்துவிடுவார்கள். அலுமினிய ஸ்டெபிலைஸர் ஏசியைப் பாழாக்கிவிடும். நல்ல தரமான ஸ்டெபிலைஸரில் தாமிரம் இருக்கும். அதுதான் நீடித்து உழைக்கும்.
ஏசி இணைப்பில் இருக்கும் ஒயர்கள் அடிக்கடி லூசாகிவிடும். அதனால்தான் தீ விபத்து, ஏசி வெடிப்பது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. ஏசியில் உள்ள ஒயர்கள் சரியாகப் பொருத்தப்பட்டு இருக்கிறதா என்பதை மெக்கானிக்கின் உதவியோடு அவ்வப்போது சோதனை செய்வது நல்லது.
குளிர் முகத்தில் படவேண்டும் என்பதற்காக உங்களுக்குப் பிடித்த இடத்தில் ஏசியை வைக்கக்கூடாது. குறைந்தது 6 அடிக்கு உயரமான இடத்தில்தான் ஏசி இருக்க வேண்டும். அப்போதுதான் அதிலிருந்து வெளியாகும் குளிர்ச்சி அறை முழுக்க நிரம்பும்.
நல்ல குளிர்ச்சி வேண்டும் என்பதற்காக அளவுக்கு அதிக டிகிரியில் டெம்பரேச்சர் வைக்கக் கூடாது. 23 டிகிரிக்கு குறைவாகச் செல்லும்போது ஏசியில்அதிக பிரஷர் ஏற்படும். அதனால் தீப்பிடிக்கும் அபாயம் இருக்கிறது. எனவே 23 - 24 டிகிரி என அளவான டெம்பரேச்சருக்கு பழக்கப்படுத்திக் கொள்வது நல்லது.
ஏசி ஆனில் இருக்கும்போது பெர்ஃப்யூம், ரூம் ஸ்பிரே ஆகியவற்றை ஏசியின் மீது அடிக்கக்கூடாது. அப்படிச் செய்தால், ஏசியின் உள்ளே இயங்கும் காயில் பழுதாகிவிடும்.
ஏசி அறையில் சூரிய ஒளி படாதவாறு ஸ்கிரீன் போட்டுக்கொள்வது நல்லது. வெப்பம் அறைக்குள் நுழைந்தால் அவ்வளவு சீக்கிரம் குளிர்ச்சி அடையாது. இதனால் மின்சாரமும் வீணாகும்.
ஏசியை சரியாக துளையிட்டு பொருத்தாவிட்டால் அதிகம் சப்தம் எழுப்பும். பர்ச்சேஸ் செய்யும் கடையிலேயே பிராண்டுக்கு ஏற்றபடி ஏசி பொருத்திக்கொடுக்க நபர்கள் இருப்பார்கள். அவர்களையே அழைத்து ஏசியை பொருத்துவது நல்லது.
சர்வீஸ் செய்யும்போது காயில் க்ளீன் செய்யப்படுகிறதா? ஃபேன் மோட்டார்களுக்கு ஆயில், பெல்ட் அட்ஜஸ்ட்மெண்ட், கம்ப்ரஸர் க்ளீனிங் எல்லாம் செய்கிறார்களா என்பதை அருகிலிருந்து சோதனை செய்து கொள்ளுங்கள்.
ஏசி பொருத்தப்பட்ட அறையில் அளவுக்கு அதிக பொருட்களை வைக்கக்கூடாது. அப்படி இருந்தால், அறை குளிர்ச்சியாவதற்கான நேரம் அதிகமாகும். அதன் காரணமாக மின்சாரம் அதிகம் செலவாகும்.
ஏர் கூலர் எப்படி?
அதிக விலை கொடுத்து ஏசி வாங்க முடியாதவர்கள், சுவரில் ஏசி பொருத்தும் வசதி இல்லாதவர்களுக்கு ஏர்கூலர் சரியான சாய்ஸ். ஆனால், ஏர்கூலர்
கடல் காற்று வீசும் அல்லது அதிக ஈரப்பதம் நிலவும் பிரதேசங்களில் சரிவர பயன் அளிக்காது. சென்னை உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் ஏர்கூலரால் பலனில்லை. ஏர்கூலர் குளிர்ந்த காற்றை மட்டுமே தரும். ஏசியில் கிடைக்கும் குளிர்ச்சி ஏர் கூலரில் கிடைக்காது.
ரூ15 லிட்டர், 25 லிட்டர், 45 லிட்டர் என அறையின் தன்மைக்கு ஏற்ப வாங்கிக் கொள்ளலாம். உஷா, கென்ஸ்டார், சிம்பொனி என பல பிராண்டுகள்கிடைக்கின்றன. விலை ரூ. 4 ஆயிரத்திலிருந்து 8 ஆயிரம் ரூபாய்க்குள்.
குளிர் முகத்தில் படவேண்டும் என்பதற்காக உங்களுக்குப் பிடித்த இடத்தில் ஏசியை வைக்கக்கூடாது


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வியாழன், 5 ஜனவரி, 2017

பூச்சி உருண்டைகளைப் பாவிப்பதில் அவதானம் வேண்டும்

அவள் துடித்துப் பதைத்து ஓடிவந்தது நியாயம்தான். ஒரு தாய்க்கு தன் குழந்தையின் உயிர் பற்றிய பயமும் பதகளிப்பும் இல்லாமல் போய்விடுமா. தாயின் பதற்றத்தைப் புரிந்துகொள்ளமல் சிரித்தபடி நின்றாள் மகள். பிரச்சனையின் ஆழத்தைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் அந்த வயதில் இருக்கப் போவதில்லையே!!

பிரச்சனை பூச்சி உருண்டை வடிவில் வந்தது.
பூச்சி உருண்டை எனச் சொல்லப்படும் இவை பளிச்சிடும் வெள்ளை நிற உருண்டைகளாகும். Naphthalene balls, moth balls  என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இவை பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இனிப்பு வகைகள் போன்ற தோற்றம் கொண்டதால் வாயில் போட்டுவிடலாமா என எண்ணத் தோன்றும்.

மசகு எண்ணெய் மற்றும் நிலக்கரித் தாரிலிருந்து இவற்றைத் தயாரிப்பார்கள். சிகரட் புகையிலும் இது இருக்கிறது. வாகனங்கள் உமிழ்ந்தெறியும் புகையிலும் இருக்கவே செய்கிறது.
பொருட்களையும் உடைகளையும் சேமித்து வைக்கும் அலுமாரி, பெட்டி போன்றவற்றில் பூச்சி கொல்லியான இதைப் போட்டு வைப்பார்கள். பல உணவகங்களிலும் கழிப்பறைகளிலும் வாஷ் பேசினில் போட்டு வைத்திருப்பதையும் காணலாம். இதிலிருந்து எழும் மணமானது கரப்பொத்தான் மற்றும் சிறுபூச்சிகளை வெருட்டி அடிக்கும். மணத்தை எழுப்பும் இவை படிப்படியாகக் காற்றிலேயே கரைந்து அற்றுப் போகும்.
ஏனைய பூச்சி கொல்லிகளைப் போலவே இது மனிதர்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும். பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படலாம்.

உட்கொள்ளும் போது

ஆயினும் இதனை தற்செயலாகவோ வேண்டும் என்றே உட்கொண்டால் பாதிப்பு அதிகமாகும். பாதிப்பின் தீவிரம் உட்கொள்ளப்பட்ட நப்தலீனின் அளவைப் பொறுத்தது ஆகும்.
இரைப்பையை உறுத்துவதால் வயிற்று வலி, ஓங்களாம், வாந்தி, வயிற்றோட்டம் போன்ற அறிகுறிகள் ஆரம்பத்தில் ஏற்படும். இவை தானே மாறிவிடக் கூடும்.

ஆயினும் அதிகளவில் உட்கொண்டால் கடுமையான பாதிப்பு ஏற்படும். இதந்குக் காரணம் நப்தலீன் ஆனது குருதியில் உள்ள செங்குருதிக் கலங்களைப் பாதித்து அவற்றைச் சிதைவடைய வைப்பதே ஆகும். அதிக இரத்தக் கலங்கள் அழியும்போது ஒரு வகை இரத்தசோகை ஏற்றபடும். இதை
 hemolytic anemia  என்பார்கள். சிதைந்த இரத்தத்தின் ஹீமகுளோபினானது சிறுநீருடன் வெளியேறும். சிறுநீர் செந்நிறத்தில்; வெளியேறும்.

அதிகமாக உட்கொண்டிருந்தால் சிறுநீரகம் ஈரல் போன்ற உள்ளுறுப்புகள் பாதிப்புறும்.

நப்தலீனால்
 குருதியில் உள்ள இரும்புக் கூறானது  ferrous என்பதற்கு பதிலாக ferric ஆக மாறும்.  இரத்தத்தினால் உடலுக்குத் தேவையான ஒட்சிசனைக் குருதியால் காவிச் செல்ல முடியாது போய்விடும். உடல் நீலம் பாரிக்கும். methemoglobinemia என்ற இது மற்றொரு கடுமையான விளைவாகும். இந் நிலை தொடரும்போது உடலுக்கு வேண்டிய ஒட்சிசன் இல்லாமையால் வலிப்பும் மரணமும் தொடரலாம்.

நப்தலீன் நச்சு பெரியவர்களை விட குழந்தைகளில் பாதிப்பை ஏற்படுவது அதிகம்.

உட்கொள்வதால் மாத்திரம் மட்டுமின்றி, அதன் மணத்தைச் சுவாசிப்பதாலும் குழந்தைகளில் பெரும் பாதிப்பு ஏற்படலாம். நப்தலீனால் மாசடைந்த உடைகள் படுக்கை விரிப்புகள் மற்றும் னiயிநசள போன்றவற்றைத் தொடர்ந்து அணியும்போது அதன் நச்சுத்தன்மை சுவாசத்தின் ஊடாக உடலை அடைந்து, இத்தகைய பாதிப்புகளை பாலகர்களில் ஏற்படுத்தி இருப்பதாக சில அறிக்கைகள் கூறுகின்றன.

ஏனைய பாதிப்புகள்

இதன் மணம் சிலருக்கு கண்களில் எரிவை உண்டாக்கும். கண்ணில் நேரடியாகப் பட்டால் கண்கள் சிவந்து நோய்
 conjunctivitis ஏற்படலாம். நீண்டகாலமாக தொடர்பு ஏற்படும்போது வெண்புரை எனப்படும் கற்றரக்ட் ஏற்படவும் கூடும். கண்ணில் பட்டால் உடனடியாக கண்களை நீரினால் நன்கு கழுவுங்கள்.

சருமத்தில் படும்போது சருமத்தை சற்று உறுத்தலாம். உடனடியாகக் கழுவிவிடுதல் போதுமானது. தொடர்ச்சியான தொடர்பு கொண்டிருந்தால் ஒவ்வாமை அழற்சியை ஏற்படுதுவது உண்டு. இதைக் கையாள வேண்டியிருந்தால் வேலை முடிந்ததும் உடனடியாகவே கைகளை நன்கு கழுவுவது முக்கியமானது.

இதன் மணமானது பலரிலும் சுவாசத் தொகுதியில் உடனடிப் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். அதிகளவு எச்சில் சுரப்பது, ஓங்காளம், சத்தி, வயிற்று வலி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தலாம். சிலரில் மூச்சுத் திணறலையும் ஏற்படுத்த வாய்ப்பு உண்டு.

glucose-6-phosphate dehyrogenase
 (G6PD) பிரச்சனை உள்ளவர்களில் பாதிப்பு அதிகமாகும்

நப்தலீனானது மிருகங்களில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய காரணிகளில் ஒன்று என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆயினும் மனிதர்களில் இது பற்றிய தெளிவான ஆய்வு அறிக்கைகளைக் காண முடியவில்லை.

அந்த 5 வயதுக் குட்டிப் பெண் 2-3 பூச்சி உருண்டைகளை முதல் நாள் இரவு சாப்பிட்டுவிட்டாளாம். பரிசோதித்துப் பார்த்தபோது குழந்தையின் உடலில் எந்தவித பாதிப்புகளும் தெரியவில்லை. காலையில் சிறுநீர் சற்று இரத்தக் கலரில் போனது என அம்மா கூறினாள்.

உடனடியாகவே சிறுநீரைப் பரிசோதித்தபோது அதில் மாற்றங்கள் எதுவும் இருக்கவில்லை. இருந்தபோதும் இரண்டு நாட்களுக்கு அவதானிப்பில் வைத்திருக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டது.

குழந்தைகள் தவறுதலாக உட்கொள்வதை அறிவோம்.

அதேபோல விளையாட்டாக அவற்றை முக்கினுள் அல்லது காதினுள் செலுத்தி விடுவதும் உண்டு. அவ்வாறு நடந்தால் நீங்களாக அதை எடுக்க முயலவேண்டாம். மூக்கினுள் கிடப்பதை எடுக்க முயலும்போது அது பிற்புறமாக விழுந்தால் சுவாசக் குழாயினுள் வீழ்ந்து மூச்சுத் திணறலை ஏற்படுத்தும் பாரிய ஆபத்து உள்ளது.

மருத்துவத்தைப் பொறுத்தவரையில் அதை உட்கொண்டிருந்தால் அதன் பாதிப்பை குறைப்பதற்கு
 Activated charcoal  உபயோகிப்பது உண்டு. குருதி சேதமடைந்திருந்தால் குருதி மாற்றீடு செய்ய நேரலாம். நாளம் ஊடாக திரவங்களை ஏற்றவும் தேவை ஏற்படலாம்.

செல்லக் குழந்தைக்காப் பயந்து வந்த தாயானவள் தங்களது செல்லப் பூனைக்காகவோ நாய்க்காகவோ மருத்துவரிடம் செல்ல நேரலாம். ஏனெனில் பாதிப்பு உங்கள் வீட்டில் உள்ள மனிதர்களுக்கு மட்டுமல்ல வளர்ப்பு மிருகங்களிலும் ஏற்படலாம்.

எனவேதான் பூச்சி உருண்டைகளைப் பாவிப்பதில் அவதானம் தேவை என்றோம்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

செவ்வாய், 3 ஜனவரி, 2017

பேஸ்புக் செய்யக்கூடாத அந்த 7 தவறுகள்....!

ஒருவர் தன் புகைப்படம், முகவரி, பணியிடம் தொடர்பான விவரங்கள், பொன்ற பல்வேறு விதமான சுயவிவரங்களை ஃபேஸ்புக் தளத்தில் பகிர்ந்து கொள்வதால், அதை தங்கள் சுயநலத்துக்காகவோ, விளையாட்டாகவோ சில விஷமிகள் மாற்றி/திரித்து விடுவது, மற்றும் விவரங்களைக் கொண்டு சம்பந்தப்பட்டவரை தொடர்புகொண்டு சில்மிஷங்கள் செய்வது போன்ற பல சிக்கல்களை ஃபேஸ்புக் பயனாளிகள் சந்திக்கக்கூடும்..!
இப்படி நிறைய பிரச்சினைகள் இருக்குங்கறதுக்காக, ஒட்டு மொத்தமா ஃபேஸ்புக் தளத்தை பயன்படுத்தாமல் இருந்து விடுவது நல்லது என்றோ, ஃபேஸ்புக்கினால் கிடைக்கும் சில நல்ல விஷயங்களை அனுபவிக்காமல் விட்டுவிட வேண்டும் என்றோ சொல்ல முடியாது. ஆனால், ஃபேஸ்புக்கை பாதுகாப்பாக எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொண்டால் மட்டுமே போதுமானது! அதைப்பற்றிய சில நுணுக்கங்களை அலசத்தான் இந்தப் பதிவு…..!!!
ஃபேஸ்புக்கில் செய்யக்கூடாத 7 தவறுகள்!

ஃபேஸ்புக் தளத்தை பாதுகாப்பாக பயன்படுத்த, தவிர்க்க வேண்டிய 7 முக்கியமான தவறுகள்/செயல்களை பட்டியலிட்டிருக்கிறார்கள் சில வலைப்பின்னல் துறை வல்லுனர்கள். அவை….

1. சுலபமான ஒரு கடவுச்சொல்லை பயன்படுத்துவது (Using a Weak Password) பெயர்கள், களஞ்சியத்தில் உள்ள சில சுலபமான வார்த்தைகள், அவற்றுக்கிடையில் எண்களை சேர்த்து பயன்படுத்துவது போன்றவற்றை உங்கள் கடவுச்சொல்லாக பயன்படுத்துவதை தவிர்த்தல் அவசியம்..! அதற்க்கு பதிலாக, பெரிய மற்றும் சிறிய எழுத்துக்களுடன் (upper- and lower-case letters) எண்கள் மற்றும் குறியீடுகளை (symbols) கடவுச்சொல்லாக பயன்படுத்துவது மிகவும் உறுதியானது!

ஒரு கடவுச்சொல் குறைந்தது 8 எழுத்துக்களைக் கொண்டிருத்தல் நலம். மற்றுமொரு வழி, ஒரு வார்த்தையின் நடுவில் எண்கள்/குறியீடுகளை சேர்த்து கடவுச்சொல்லாக பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. உதாரணமாக, "houses" என்னும் வார்த்தையை hO27usEs என்று மாற்றிப் பயன்படுத்துவது!

2. உங்களின் முழு பிறந்த தேதியை வெளிப்படையாக குறிப்பிடுவது (Leaving Your Full Birth Date in Your Profile)
இணையத்தில் உலவும், அடையாளத் திருடர்களுக்கு (identity thieves), ஒருவரின் பிறந்த தேதி தான் முதன்மையான இலக்கு. அதைத் திருடி என்ன செய்வாங்கன்னு கேக்குறீங்களா? உங்க பிறந்த தேதியை வச்சி, உங்களின் மேலதிக தகவல்களை சேகரித்து, உங்க வங்கி கணக்கு/க்ரெடிட் கார்டு கணக்கு போன்றவற்றை கடத்தக் கூடும்?!
அய்யய்யோ…அப்படீன்றீங்களா? சரி சரி, உடனே உங்க ஃபேஸ்புக் கணக்கை திறந்து, profile பக்கத்துக்கு போய், Info tab-அ கிளிக் பண்ணி, Basic Information பகுதியில வெறும் பிறந்த தேதி மட்டும்/மாதம் மட்டும் இல்லைன்னா பிறந்ததேதியே குறிப்பிடாம விட்டுடுங்க. சரிங்களா?!.

3. சுய பாதுகாப்பு கட்டுப்பாடு வாய்ப்புகளை அலட்சியப்படுத்துவது (Overlooking Useful Privacy Controls)
உங்க ஃபேஸ்புக் பக்கத்துல, மத்தவங்களுக்கு தொடர்பு வழங்க நண்பர்கள் மட்டும் (only friends) நண்பர்களின் நண்பர்கள் மட்டும் (friends of friends) அல்லது நீங்கள் மட்டும் (yourself) இப்படி பல கட்டுப்பாடுகள் வச்சிக்கலாம்.
இந்தப் பக்கத்துல, உங்க படங்கள், பிறந்த தேதி, மத பார்வை மற்றும் குடும்ப விவரங்கள், இது எல்லாத்தையும் மேற்குறிப்பிட்டபடி ஒரு வகையான கட்டுப்பாட்டுக்குள் வைங்க! மிக முக்கியமா, உங்க தொலைபேசி எண், முகவரி போன்ற தொடர்பு விவரங்கள மத்தவங்க பார்க்குற மாதிரி வைக்காதீங்க!!

4. உங்களின் குழந்தையின் பெயரை புகைப்பட தலைப்புகளாக பயன்படுத்துவது (Posting Your Child's Name in a Caption) உங்க குழந்தைங்க பெயரை படங்களின் தலைப்புகளாகவோ, குறியீடுகளாகவோ (photo tags) பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. வேறு யாராவது உங்க குழந்தைங்க பெயரை பயன்படுத்தியிருந்தா, Remove Tag என்னும் தொடர்பை அழுத்தி நீக்கிடுங்க இல்லைன்னா அவங்கள நீக்கச் சொல்லுங்க!

5. நான் வெளியூருக்குச் செல்கிறேன் என்று குறிப்பிடுவது (Mentioning That You'll Be Away From Home) அதாவது, வெளியூருக்குச் செல்வதாயிருந்தா, "no one's home" அப்படீங்கிற மாதிரியான விஷயங்கள எழுதுவதை தவிர்த்திடுங்க! நீங்க திரும்பி வந்து உங்க சுற்றுலா எப்படி இருந்ததுன்னு சொல்லிக்கலாம். அதேமாதிரி சுற்றுலா செல்லும் தேதியை மறந்தும் குறிப்பிடாதீங்க!!

6. கூகுள் போன்ற தேடியந்திரங்களின் பார்வையில் இருப்பது (Letting Search Engines Find You)
பரிச்சயமில்லாதவர்கள் உங்கள் ஃபேஸ்புக் பக்கங்களை, கூகுள் போன்ற தேடியந்திரங்கள் மூலம் அடைவதை தவிர்க்க, ஃபேஸ்புக்கின் சுயபாதுகாப்பு பகுதிக்குள் இருக்கும் தேடுதல் பகுதியில் (Search section of Facebook's privacy controls) நண்பர்கள் மட்டும் என்பதை தேர்ந்தெடுங்கள் (select Only Friends for Facebook search results). முக்கியமா பொதுத் தேடுதல் முடிவகள் என்பதை தேர்ந்தெடுக்காமல் இருக்கிறதா என்று உறுதிபடுத்தி கொள்ளுங்கள்! (Be sure the box for public search results isn't checked)

7. மேற்பார்வையில்லாமல் குழந்தைகளை ஃபேஸ்புக் தளத்தை பயன்படுத்த அனுமதிப்பது (Permitting Youngsters to Use Facebook Unsupervised) இது வரைக்கும் பார்த்ததிலேயே ரொம்ப முக்கியமானது இதுதான்!
அதாவது, ஃபேஸ்புக் பக்கம் 13 வயது மற்றும் அதற்க்கு மேற்பட்டவர்கள் மட்டுமே ஃபேஸ்புக்கை பயன்படுத்தவேண்டும் என்று விதி முறைப்படுத்தி இருந்தாலும், 13 வயதுக்கு குறைவானவர்களும் பயன்படுத்துகிறார்களாம். இவ்வயதுக்குட்பட்ட உங்க குழந்தை/குழந்தைகளும் ஃபேஸ்புக்கை பயன்படுத்தும் பட்சத்தில், அவர்களை மேற்பார்வையிட மிகவும் சுலபமான வழி, அவர்களின் நண்பர்களில் ஒருவராகச் சேர்ந்து கொண்டு, அவர்களின் தொடர்பு மின்னஞ்சல் பகுதியில் உங்கள் மின்னஞ்சலைக் கொடுத்து, அவர்களுக்கு வரும் தகவல்கள் உங்களுக்கு வரும்படியாக செய்துகொள்வதுதான்!

"குழந்தைகள் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் தாங்கள் எழுதும் சிலவற்றை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை" என்கிறார், இணையதளத்தின் குற்றப்புகார் மைய மேற்பார்வையாளர் சார்லஸ் பேவலிட்ஸ் (Charles Pavelites, a supervisory special agent at the Internet Crime Complaint Center). உதாரணமாக, "அம்மா வர நேரமாச்சு, நான் சீக்கிரம் வீட்டைச் சுத்தப்படுத்தியாகனும்" அப்படீன்னு எழுதும் ஒரு குழந்தைக்கு, தினமும் தம் பெற்றோர் அலுவலகம் செல்லும் அல்லது வீடு திரும்பும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை, தங்களையறியாமலேயே ஃபேஸ்புக் தளத்தில் குறிப்பிடுகிறார்கள் என்று உணர்வதில்லை அப்படீங்கிறாரு சார்லஸ். இதுல இருக்குற சாதக பாதகம் என்னன்னு உங்களுக்குப் புரிஞ்சிருக்கும்னு நெனக்கிறேன்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

மழைக்காலத்தில்ஏற்படும் வாய்ப்புண்... வீட்டு மருத்துவத்தின் மூலம் தீர்வு.

வாய்ப்புண் ஏற்பட்டுவிட்டால் , ஒருவருக்கு பெரும் தொந்தரவு. அதில் இருந்து எப்படியாவது மீண்டுவிட...

Popular Posts