லேபிள்கள்

புதன், 11 ஜனவரி, 2017

எந்த நன்கொடைக்கு எவ்வளவு வரிச் சலுகை?

நன்கொடையைப் பணமாகவோ அல்லது காசோலையாகவோ வழங்கினால் மட்டுமே வரிச் சலுகை கிடைக்கும். 10,000 ரூபாய்க்கு  மேல் ரொக்கமாக நன்கொடை தந்தால், வரிச் சலுகை கிடைக்காது!

நம்மில் பலர் தானம் செய்யவேண்டும் என்ற விருப்பத்துடனேயே இருக்கிறோம். பல அமைப்பு களுக்கு விரும்பி நன்கொடை செய்யவும், பலரும் தயாராகவே இருக்கிறார்கள். இப்படித் தரும் நன்கொடைக்கு வருமான வரிவிலக்கு இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாத விஷயம். எந்தெந்த நன்கொடைக்கு வரிச் சலுகை வசதி இருக்கிறது, எந்த நன்கொடைக்கு எவ்வளவு வரிச் சலுகை கிடைக்கும், வரிச் சலுகைக்காக நன்கொடை அளிக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து விளக்கமாக எடுத்துச் சொன்னார் சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் சதீஷ்குமார்.
யாருக்கு இந்தச் சலுகை?
இந்தியர்கள் அனைவரும் அவர்கள் அளிக்கும் குறிப்பிட்ட நன்கொடை களுக்கு வரிச் சலுகை பெற முடியும். நன்கொடை வழங்கு பவர்கள் தனிநபராகவோ அல்லது வெளிநாடு வாழ் இந்தியராகவோ (NRI), நிறுவன மாகவோ, கார்ப்பரேட் நிறுவனங்களாகவோ இருக்கலாம். இவர்களில் எந்தப் பிரிவினரும் வழங்கிய நன்கொடைக்கு 80ஜி பிரிவின் கீழ் சலுகை பெறலாம்.

எத்தனை சதவிகிதம் வரிச் சலுகை?
ஒருவர் நன்கொடையாக வழங்கிய முழுத் தொகைக்கும் வரிச் சலுகை கிடைக்க நிபந்தனை இருக்கிறது.
  நன்கொடையின் தன்மையைப் பொறுத்து தொகையில் 50 முதல் 100%  வரிச் சலுகை கிடைக்கும். கீழ்க்காணும் நிதிகளுக்கு நீங்கள் நன்கொடையாகச் செலுத்தும் முழுத் தொகைக்கும் (100%) வரிச் சலுகை பெறலாம்.

பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமர் / முதல்வர் பூகம்ப நிவாரண நிதி / புயல் நிவாரண நிதி
மத நல்லிணக்கத்துக்கான தேசிய அமைப்பு நிதி
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள்
முதலமைச்சரின் பூகம்ப நிவாரண நிதி
மாவட்ட எழுத்தறிவு குழுக்கள்
தேசிய ரத்த தான கவுன்சில் அல்லது மாநில ரத்த தான கவுன்சில்
இந்திய ராணுவ மத்திய நல நிதி அல்லது இந்திய கடற்படை நல நிதி அல்லது இந்திய விமானப்படை மத்திய நல நிதி
தேசிய சுகவீனம் உதவி நிதி
முதலமைச்சர் அல்லது ஆளுநர் நிவாரண நிதி
தேசிய விளையாட்டு நிதி
தேசிய கலாசார நிதி
தேசிய குழந்தைகள் நிதி
மத்திய அரசின் தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி
ஆட்டிஸம், செரிப்ரல் பால்ஸி, மனவளர்ச்சி குறைபாடு மற்றும் உடல் ஊனமுற்றவர்களுக்கான தேசிய அறக்கட்டளைக்கு வழங்கப்படும் நிதி
கிராமப்புற மற்றும் நகர்ப்புற கல்வி மேம்பாட்டுக் காகக் கிராம/நகரத் தலைவர், மாவட்ட ஆட்சியரிட மிருந்து அனுமதி பெற்று வசூலிக்கும் நன்கொடை.
நீங்கள் வழங்கும் நன்கொடை தொகையில் 50% மட்டும் வரிச் சலுகையாகப் பெறக்கூடியவை...
ஜவஹர்லால் நேரு நினைவு நிதி
பிரதமரின் வறட்சி நிவாரண நிதி
இந்திரா காந்தி நினைவு நிதி
ராஜீவ் காந்தி அறக்கட்டளை
  வேர்ல்டு விஷன் இண்டியா உதவும் கரங்கள்.

நிபந்தனைகள்!
சில குறிப்பிட்ட அமைப்புகளுக்கு வழங்கும் வரிச் சலுகைகளுக்கு நிபந்தனை இருக்கிறது. அதாவது, ஒருவர் அவரது வரிக்கு உட்பட்ட வருமானத்தில் 10 சதவிகிதத்தை மட்டுமே நன்கொடை வழங்கி வரிச் சலுகை பெறலாம். இதிலும் 100% மற்றும் 50% வரிச் சலுகை இருக்கிறது.
நன்கொடை தொகைக்கு 100% வரிச் சலுகை
  தருபவை..!
குடும்பக் கட்டுப்பாட்டை வலியுறுத்தும் நிறுவனங்கள், சங்கங்கள்.
இந்திய ஒலிம்பிக் சங்கம் போன்ற அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள்.
விளையாட்டுப் போட்டிகளுக்குச் செய்யும் ஸ்பான்ஸர்.
நன்கொடையில் 50% வரிச் சலுகை
  தருபவை..!
அரசு மற்றும் லோக்கல் அத்தாரிட்டிகள் தான தர்மமாக நன்கொடை வழங்குவது.
வருமான வரித்துறை ஆணையரால் அங்கீகரிக்கப்பட்ட சபைகள், நிதிகள், நிறுவனங்கள்.
வழிபாட்டுத்தலங்கள் பராமரிப்பு மற்றும் புனரமைப்பு நிதி.
கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் திட்டமிடல் மற்றும் வீட்டு வசதி மேம்பாடு போன்றவைகளுக்கு வழங்கும் நன்கொடை.

கவனிக்க வேண்டியவை:
1. நீங்கள் நன்கொடை வழங்கிய அமைப்பு அல்லது அறக்கட்டளையிலிருந்து ரசீது வாங்கிக் கொள்வது அவசியம். அந்த ரசீதில் உங்களின் முழுமையான பெயர், முகவரி, பான் கார்டு எண், வழங்கிய தொகை (எண்ணிலும், எழுத்திலும் இருக்க வேண்டும்). அதேபோல், நன்கொடை விவரத்தை, நன்கொடை பெற்ற நிறுவனம் ஃபார்ம் 58-ல் குறிப்பிட்டு வழங்கினால் மட்டுமே வரிச் சலுகை பெற முடியும்.

2. நன்கொடை பெறும் நிறுவனத்துக்கு வருமான வரித் துறையிடமிருந்து 80ஜி பிரிவின் கீழ் ஒரு எண் வழங்கப் படும். அந்த எண் சரியானதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். அமைப்பு அல்லது அறக்கட்டளைக்கு வருமான வரித் துறை 80ஜி சான்றிதழ் வழங்கி இருக்கும். அதன் நகலை வாங்கிக்கொள்வது நல்லது.

3. நன்கொடை பணமாகவோ அல்லது காசோலையாகவோ வழங்கினால் மட்டுமே வரிச் சலுகை கிடைக்கும். அதேபோல், ரூபாய் 10,000க்கு மேல் நன்கொடையை ரொக்கமாக வழங்கினால் அதற்கு வரிச் சலுகை கிடைக்காது. காசோலையாகக் கொடுத்திருக்க வேண்டும். பொருளாகக் கொடுத்தாலும் வரிச் சலுகை கிடையாது. நன்கொடை வழங்கப்படும் தொகை எங்கிருந்து வந்தது என்பதற்கான வருமான ஆதாரம் இருக்க வேண்டும்.

4. பிரதமர், முதலமைச்சர் நிவாரண நிதி அல்லது பிரத்யேகமாக மாநில நிதி மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு வசூலிக்கப்படுவதற்கு எல்லாம் குறிப்பிட்ட காலம் வரைதான் 80ஜி-யின் கீழ் சலுகை பெறமுடியும். குறிப்பாக, பூகம்ப நிவாரண நிதி, புயல் மற்றும் சூறாவளி நிவாரண நிதி போன்றவைகளுக்கு குறிப்பிட்ட காலம் வரை தான் வரிச் சலுகை கிடைக்கும். நீங்கள் இது போன்ற நிதிகளுக்கு நன்கொடை வழங்கினால், அன்றைய தேதியில் அந்த நிதிகளுக்கு வரிச் சலுகை அளிக்கப்பட்டிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

நிறுவனங்களுக்குச் சலுகை!
2009 அக்டோபர் 1-ம் தேதிக்குப் பிறகு பதியப்பட்ட நிறுவனம்/அமைப்பு/அறக்கட்ட ளையாக இருந்தால், அவர்கள் 80ஜி சான்றிதழை ஆண்டுதோறும் நீட்டிப்புக்கு விண்ணப்பித்திருக்கத் தேவையில்லை. வருமான
  வரித் துறை அதிகாரிகள் புதுப்பிக்கச் செய்யச் சொன்னால் மட்டுமே, அறக்கட்டளைகள் 80ஜி சான்றிதழின் நீட்டிப்புக்கு விண்ணப்பித்தால் போதும் எனச் சலுகை அளிக்கப்பட்டிருக்கிறது.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

பகலில் தூங்குவதால் ஏற்படும் விளைவுகள்.

தூங்குவதால் உடலுக்கு ஓய்வு கிடைத்து சோர்வு நீங்குகிறது. சிலருக்கு படுத்தவுடன் தூக் கம் கண்களை...

Popular Posts