லேபிள்கள்

வியாழன், 19 ஜூலை, 2018

(மழை வேண்டித் தொழுகை)

 (மழை வேண்டித் தொழுகை)

ஸலாதுல் இஸ்திஸ்கா
(மழை வேண்டித் தொழுகை)

வரட்சியின் போது அல்லாஹ்விடம் மழையை வேண்டுவதற்காகத் தொழப்படும் தொழுகையே மழைவேண்டித் தொழுகை என அழைக்கப்படும். வரட்சியின் போது மக்கள், உயிரினங்கள், பயிர்-பச்சைகள் நீரின்றி வாடும் போது மழை வேண்டித் தொழுவது சுன்னா என்பதில் இஸ்லாமிய அறிஞர்கள் அனைவரும் ஏகோபித்த நிலைப்பாட்டில் உள்ளனர். ஆனால், தொழும் முறை, அதனுடன் தொடர்புபட்ட மற்றும் பல விடயங்களில் அபிப்பிராய பேதங்கள் திகழ்கின்றன.
மழை இன்மையால் பூமி வரண்டு மக்கள் சிரமப்பட்டால் மழைவேண்டித் தொழுவது முஸ்தஹப்பாகும். இச்சந்தர்ப்பத்தில் இமாமுடன் மக்கள் முஸல்லாஹ் தொழுமிடத்துக்குச் செல்வார்கள். அவர் மக்களுக்கு இரண்டு ரக்அத்துக்கள் தொழுவிப்பார். குத்பாவும் இடம்பெறும்.
அப்துல்லாஹ் இப்னு ஸைத்(வ) அறிவித்தார்: 'நபி(ச) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திக்கத் திடலுக்குச் சென்றார்கள். கிப்லாவை நோக்கிப் பிரார்த்தித்தார்கள். இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள். தம் மேலாடையை மாற்றிப்போட்டார்கள்.


மற்றோர் அறிவிப்பில் தம் ஆடையின் வலப்புறத்தை இடது தோளின் மீது போட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது.'
(புஹாரி 1027, முஸ்லிம் 894)

இந்த ஹதீஸின் அடிப்படையில் மழை வேண்டித் தொழுவதற்காகத் திடலுக்குச் செல்வது சுன்னத்தாகும். இதில் இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்கள் மட்டும் மாற்றுக் கருத்துத் தெரிவித்துள்ளார்கள். மழை வேண்டித் தொழுவதற்காக திடலுக்குச் செல்லவும் தேவையில்லை, தொழவும் தேவையில்லை என்று கருதுகின்றார்கள். நபி(ச) அவர்கள் மழை வேண்டித் தொழும் திடலுக்குச் செல்லாமலும் மழை வேண்டிப் பிரார்த்தனை செய்துள்ளதாக வந்துள்ள ஹதீஸ்களை இதற்கு ஆதாரமாகக் கொள்கின்றார்கள்.
நபி(ச) அவர்கள் மஸ்ஜிதில் வைத்து வெறும் பிரார்த்தனை மூலமாக மழை வேண்டியுள்ளார்கள் என்பது மழை வேண்டித் தொழுதுள்ளதையும் அதற்காகத் திடலுக்குச் சென்றுள்ளதையும் மறுப்பதற்கான ஆதாரமாகக் கொள்ள முடியாது. எனவே, இது குறித்த இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களின் நிலைப்பாடு மிகவும் பலவீனமானதாகும்.
1. தொழுகைக்கு முன்னரோ பின்னரோ குத்பா உரை நிகழ்த்துதல்:
மழை வேண்டித் தொழுகைக்கு குத்பா உண்டு என்பதில் ஏகோபித்த கருத்து நிலவுகின்றது. இமாம்களான மாலிக், ஷாபிஈ, அஹ்மத் (ரஹ்) மற்றும் அனேக அறிஞர்கள் தொழுகைக்குப் பின்னர் குத்பா நடைபெற வேண்டும் என்ற கருத்தில் உள்ளனர்.
'நபி(ச) அவர்கள் மழை வேண்டித் தொழுவதற்காக முஸல்லாவுக்கு வந்தார்கள். கிப்லாவை முன்னோக்கும் போது தமது மேலாடையை மாற்றிப் போட்டார்கள். குத்பாவுக்கு முன்னர் தொழுகையை ஆரம்பித்தார்கள். பின்னர் கிப்லாவை முன்னோக்கி துஆச் செய்தார்கள்.'
(அஹ்மத்: 441)

இந்த அறிவிப்பில் முதலில் தொழுகையும் பின்னர் குத்பாவும் இடம்பெற வேண்டும் என்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மழை வேண்டித் தொழும் தொழுகை பற்றி வரும் அறிவிப்புக்களில் 'பெருநாள் தொழுகை போல இரண்டு ரக்அத்துக்கள் தொழுவிப்பார்கள்' என்று இடம்பெற்றுள்ளது. (இப்னு குஸைமா 1405, அபூதாவூத் 1165, இப்னு மாஜா 1266)
இங்கு பெருநாள் தொழுகை போன்று தொழுதார்கள் என்றால் மேலதிக தக்பீர் கூறித் தொழுதார்கள் என்பது அர்த்தம் அல்ல. பெருநாள் தொழுகை போன்று முதலில் தொழுகையும் இரண்டாவது குத்பாவும் செய்தார்கள். தொழுகையில் கிராஅத்தை சப்தமிட்டு ஓதினார்கள் என்பதே அர்த்தமாகும். இந்த அடிப்படையில் முதலில் தொழுகை, இரண்டாவது குத்பா என்ற அடிப்படையிலும் குத்பா நிகழ்த்தலாம்.
இமாம் மாலிக் (ரஹ்) போன்ற அறிஞர்கள் முதலில் குத்பாவும் பின்னர் தொழுகையும் நடைபெற வேண்டும் என்ற கருத்தில் உள்ளனர். அதற்கு பின்வரும் அறிவிப்புக்களை ஆதாரமாகக் கொள்கின்றனர்.
'அப்துல்லாஹ் இப்னு யஸீது(வ) அறிவித்தார்: நபி(ச) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திக்கப் புறப்பட்டார்கள். கிப்லாவை நோக்கிப் பிரார்த்தித்தார்கள். தம் மேலாடையை மாற்றிப் போட்டார்கள். பின்னர் சப்தமாக ஓதி இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள்.' (புஹாரி: 1024)
அப்துல்லாஹ் இப்னு ஜைத்(வ) அறிவித்தார். நபி(ச) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திக்கப் புறப்பட்டபோது அவர்களை பார்த்தேன். அப்போது அவர்கள் மக்களுக்கு முதுகைக் காட்டிக் கிப்லாவை நோக்கிப் பிரார்த்தித்தார்கள். பிறகு தம் மேலாடையை மாற்றிப் போட்டார்கள். பின்னர் சப்தமாக ஓதி எங்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள்.' (புஹாரி: 1025)
இரண்டு விதமாகவும் அறிவிப்புக்கள் உள்ளதால் குத்பாவை தொழுகைக்கு முன்னரும் வைத்துக் கொள்ளலாம் அல்லது பின்னரும் வைத்துக் கொள்ளலாம் என்பது இமாம் ஷவ்காணி(ரஹ்) போன்றோரின் கருத்தாகும். இதுவே ஏற்றமானதாகவும் தெரிகின்றது. குத்பா என்பது எமது பாவங்களை உணர்த்தும் விதமாகவும் தவ்பாவை நினைவுறுத்தும் வண்ணமும் அமைந்திருப்பது ஏற்றமானதாகும்.
இமாம் பிரார்த்தனை செய்தல்:
இமாம் நீண்ட நேரம் பிரார்த்தனை செய்ய வேண்டும். இந்தப் பிரார்த்தனையின் போது கைகளை வெகுவாக உயர்த்திக் கேட்பதும் உள்ளங்கைகள் பூமியை நோக்கி இருப்பதும், இமாம் கிப்லாவை முன்னோக்கிப் பிரார்த்திப்பதும் சுன்னாவாகும். மஃமூம்களும் கரங்களை உயர்த்திப் பிரார்த்தனையில் பங்கு கொள்வார்கள். இமாம் தமது மேலாடையை மாற்றிப் போடுவதும் சுன்னாவாகும்.
ளூ கிப்லாவை முன்னோக்குதல்:
பொதுவாக குத்பாவோ அல்லது ஏனைய சந்தர்ப்பங்களிலோ துஆ செய்யும் போது இமாம் கிப்லாவை முன்னோக்குவதில்லை. ஆனால், மழை வேண்டித் தொழுகையின் போது இமாம் பிரார்த்திக்கையில் கிப்லாவை முன்னோக்கிப் பிரார்த்திக்க வேண்டும்.

'அப்துல்லாஹ் இப்னு யஸீது(வ) அறிவித்தார்: நபி(ச) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திக்கப் புறப்பட்டார்கள். கிப்லாவை நோக்கிப் பிரார்த்தித்தார்கள். தம் மேலாடையை மாற்றிப் போட்டார்கள். பின்னர் சப்தமாக ஓதி இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள்.' (புஹாரி: 1024)
இந்த ஹதீஸ் கிப்லாவை முன்னோக்கிப் பிரார்த்திக்க வேண்டும் என்பதற்கான ஆதாரமாக அமைந்துள்ளது.
ளூ கைகளை வெகுவாக உயர்த்துதல்:
பிரார்த்தனையின் போது கைகளை உயர்த்துவது ஏற்றமானதாகும். மிம்பரில் குத்பாவின் போது இமாம் பிரார்த்தனை செய்ய நேரிட்டால் கரங்களை உயர்த்தக் கூடாது. ஆனால், மழை வேண்டித் தொழும் போது கைகளை முடிந்தவரை உயர்த்த வேண்டும்.

அனஸ்(வ) அறிவித்தார்: 'நபி(ச) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திக்கும் போது தவிர எந்தப் பிரார்த்தனையிலும் தம் கைகளை உயர்த்த மாட்டார்கள். (மழை வேண்டிப் பிரார்த்திக்கும் போது) தம் அக்குள் வெண்மை தெரியும் அளவிற்கு உயர்த்துவார்கள். ' (புஹாரி: 1031)
சாதாரண பிரார்த்தனைகளின் போது கையை உயர்த்தக் கூடாது என இந்த ஹதீஸை வைத்துப் புரிந்து கொள்ளக் கூடாது. மழை வேண்டித் தொழும் போது பிரார்த்தனையில் கையை உயர்த்துவது போல் வேறு பிரார்த்தனைகளின் போது உயர்த்த மாட்டார்கள் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.
ளூ உள்ளங்கைகள் பூமியைப் பார்த்து இருத்தல்:
பொதுவாக துஆவின் போது உள்ளங்கைகள் வானை நோக்கி இருக்கும் விதத்தில்தான் பிரார்த்திக்க வேண்டும். மழை வேண்டிப் பிரார்த்திக்கும் போது உள்ளங் கைகள் பூமியைப் பார்த்திருக்கும் விதத்தில் உயர்த்துவது சுன்னாவாகும்.

'நபி(ச) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திக்கும் போது தமது புறங்கையை வானை நோக்கி நீட்டினார்கள்..'
அறிவிப்பவர்: அனஸ்(வ)
ஆதாரம்: முஸ்லிம் 895-07

இந்த ஹதீஸின் அடிப்படையில் மழை வேண்டித் தொழுகையில் பிரார்த்திக்கும் போது கையை வெகுவாக உயர்த்த வேண்டும். கையின் புறங்கை வானத்தையும் உள்ளங்கை பூமியையும் பார்த்திருக்கும் விதத்தில் வைத்திருக்க வேண்டும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.in

செவ்வாய், 17 ஜூலை, 2018

நிகழ்வுகள் ஆதாரங்களாகுமா?

நிகழ்வுகள் ஆதாரங்களாகுமா?

ஸஹீஹான ஹதீஸ் மறுப்பாளருக்கு மறுப்பு!
மௌலவி யூனுஸ் தப்ரீஸ்
அல்லாஹ் குர்ஆனில் பல இடங்களில் நீங்கள் உண்மையாளராக இருந்தால் ஆதாரத்தை கொண்டு வாருங்கள் என்று குறிப்பிடுகிறான். நாம் செய்கின்ற ஒவ்வொரு அமல்களுக்கும் நபியவர்களின் செயல்பாடுகளே ஆதாரங்களாகும்.
மேலும் குர்ஆனிலும் மற்றும் ஹதீஸிலும் கூறப்பட்ட அனைத்து நிகழ்வுகளும் ஆதாரங்களாக எடுக்க முடியுமா? என்பதை அலசுவதே இந்த ஆக்கத்தின் நோக்கமாகும்.
அல்லாஹ் குர்ஆனில் பல நபிமார்களின் சரிதைகளையும், நல்லடியார்கள் மற்றும் பாவிகளுடைய சரிதைகளையும் பல இடங்களில் எடுத்துக் காட்டுகிறான். அதே போல நபியவர்களின் ஹதீஸின் முலமும் இவைகளை நாம் காணலாம்.நபியவர்களுக்கு முன்னால் சொல்லப்பட்ட அத்தனை சான்றுகளையும் ஆதாரங்களாக அப்படியே எடுக்க முடியுமா என்றால் முடியாது என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளவதோடு, தனக்கு முன்னால் நடந்த சம்பவங்களிலிலிருந்து எவற்றை நபியவர்கள் ஆதாரமாக வழிகாட்டுகிறார்களோ அவற்றை மட்டும் ஆதாரங்களாக நாம் எடுக்க வேண்டும். ஏனையவைகளை அந்த, அந்த காலங்களில் நடந்த ஒரு நிகழ்வாக தான் நாம் பார்க்க வேண்டும்.


இன்று தான் செய்த தவறை மறைப்பதற்காக சம்பந்தமில்லாத ஆதாரங்களை தவறாக சுட்டிக்காட்டி பேசும் நிலையை காணலாம். உதாரணமாக அபூபக்கர் (ரலி) அவர்கள் பிறரை ஏசினார்கள் என்றால் நாம் ஏன் பிறரை ஏசக் கூடாது என்று சொல்வதையும், அது போல ஸகாத் வசூலிக்க அனுப்பியவரை மக்களுக்கு மத்தியில் நபியவர்கள் தப்பாக சுட்டிக் காட்டி பேசினார்கள் என்றால் நாம் ஏன் பிறரை மானபங்கம் செய்யும் விதத்தில் பேசக் கூடாது என்று கேட்கும் அவல நிலையை காணலாம்.
குர்ஆனிலோ, ஹதீஸிலோ சொல்லப் பட்ட அனைத்தும் நமக்கு பினபற்றுவதற்றான ஆதாரங்கள் கிடையாது. குர்ஆனில் சொல்லப் பட்ட சில சம்பவங்களை நிகழ்வுகளாக மட்டும் பார்க்க வேணடும். அவற்றை ஆதாரமாக எடுக்க முடியாது. உதாரணமாக சூரத்துல் காஃபில் அந்த வாலிபர்களோடு ஒரு நாயும் பின் தொடர்ந்து சென்றது, அவர்கள் தங்கிய குகையின் வாசலில் படுத்துக் கொண்டது, இந்த சம்பவத்தை அல்லாஹ் குர்ஆனில் நினைவுப் படுத்துகிறான் இந்த சம்பவம் குர்ஆனில் வருகிறது என்பதற்காக நாமும் நாய் வளர்க்கலாம் என்ற சட்டத்தை ஆதாரமாக எடுக்க முடியுமா? என்றால் நிச்சயம் முடியாது. ஏன் என்றால் நமக்கு நாய் வளர்ப்பதை இஸ்லாம் தடை செய்துள்ளது. இந்த சம்பவத்தை ஒரு நிகழ்வாக தான் பார்க்க வேண்டுமே தவிர அல்லாஹ் குர்ஆனிலே சொல்லி விட்டான் என்று நாய் வளர்ப்பதற்கு ஆதாரமாக எடுக்க முடியாது.

அது போல மூஸா நபி தனது இனத்தை சார்ந்த ஒருவருக்கு சார்பாக எதிரி கூட்டத்தை சார்ந்தவரை குத்திய போது அந்த மனிதர் இறந்து விட்டார். (சுருக்கம் அல் குர்ஆன் 28:15) இந்த சம்பவத்தை ஆதாரம் காட்டி மூஸா நபியே ஒருவரை அடித்து கொலை செய்துள்ளார்கள் என்றால் நாம் ஏன் கொலை செய்யக் கூடாது என்று ஆதாரமாக எடுக்க முடியுமா என்றால் முடியாது. இதை ஒரு நிகழ்வாக தான் பார்க்க வேண்டும். ஏன் என்றால் கொலையை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.
அது போல அல்லாஹ் இப்றாகீம் நபியை பின்பற்றும் படி கூறுகிறான் எனவே இப்றாகீம் நபி மூன்று பொய்களை சொல்லியுள்ளார்கள். நாமும் இப்படி பொய் சொல்லலாம் என்று ஆதாரம் எடுக்க முடியுமா என்றால் முடியாது? நடந்த சம்பவத்தை அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான். அதை ஒரு நிகழ்வாக தான் பார்க்க வேண்டுமே தவிர ஆதாரமாக எடுக்க கூடாது ஏன் என்றால் பொய் பேசுவதை பெரிய பாவமாக இஸ்லாம் கூறி நமக்கு தடை செய்துள்ளது.
அதே போல இப்றாகீம் நபி தனது மகனின் முதல் மனைவி சில குறைகளை சொல்லியதற்காக அந்த மனைவியை தலாக் விடும் படி இப்றாகீம் நபி கூறுகிறார்கள். அதற்காக ஒவ்வொரு தந்தையும் மருமகள் ஏதாவது குறையை சொன்னவுடன் மனைவியை தலாக் விடும் படி மகனிடம் சொல்ல முடியுமா என்றால் முடியாது? எடுத்த எடுப்பிலே தலாக்கிற்கு செல்வதற்கு நமக்கு இஸ்லாம் அனுமதிக்கவில்லை, பல படித்தரங்களை இஸ்லாம் சொல்லித் தருகிறது. எனவே அதை ஒரு நிகழ்வாக தான் பார்க்க வேண்டுமே தவிர, இப்றாகீமின் வழியை அல்லாஹ் பின் பற்ற சொல்கிறான் என்று இதை ஆதாரமாக எடுக்க முடியாது.
இப்படி பல உதாரணங்களை குர்ஆனிலிருந்தும், ஹதீஸிலிருந்தும் எடுத்துக் காட்டிக் கொண்டே போகலாம். சிந்தனையுடையவர்களுக்கு இந்த உதாரணங்கள் போதுமானதாகும்.
இந்த வரிசையில் பிறரை மானபங்கப் படுத்துவதை இஸ்லாம் தடை செய்துள்ளது, அருவருப்பாக பேசக் கூடாது, என்று கூறும் போது, நபியவர்களே பிறரை மானபங்கப் படுத்தி பேசியுள்ளார்கள் என்றால் நாம் ஏன் பேசக் கூடாது என்று எதிர் கேள்வியை கேட்பதை காணலாம்.நபியவர்கள் அப்படி என்ன பேசினார்கள், யாரை மானபங்கப்படுத்தினார்கள் என்று கேட்கும் போது பின் வரும் ஹதீஸை எடுத்துக் காட்டுகிறார்கள்.
அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அல்அஸ்த்" குலத்தாரில் ஒருவரை (பனூ சுலைம் குலத்தாரின்) "ஸகாத்"களை வசூலிக்கும் அதிகாரியாக நியமித்தார்கள். அவர் இப்னுல் லுத்பிய்யா என அழைக்கப்பட்டார். அவர் ("ஸகாத்"களை வசூலித்துவிட்டு) வந்து (கணக்கு ஒப்படைத்தபோது), "இது உங்களுக்குரியது, இது எனக்குரியது, இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது" என்று கூறினார்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து, சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது நின்று அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, "நாம் அனுப்பும் அதிகாரியின் நிலை என்ன? அவர் (பணியை முடித்துத் திரும்பிவந்து) "இது உங்களுக்குரியது. இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது" என்று கூறுகிறார். அவர் (மட்டும்) தம் தந்தையின் வீட்டிலோ அல்லது தாயின் வீட்டிலோ உட்கார்ந்துகொண்டு, தமக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதா இல்லையா என்று பார்க்கட்டுமே! முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது ஆணையாக! உங்களில் யாரேனும் அ(ந்தப் பொதுச் சொத்)திலிருந்து (முறைகேடாக) எதையேனும் பெற்றால் மறுமை நாளில் அதைத் தமது கழுத்தில் சுமந்துகொண்டு வருவார். அது ஒட்டகமாக இருந்தால் கனைத்துக்கொண்டிருக்கும். மாடாகவோ ஆடாகவோ இருந்தால் அது கத்திக்கொண்டிருக்கும்" என்று கூறினார்கள்.
பிறகு அவர்களுடைய அக்குள்களின் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவுக்குத் தம் கைகளை உயர்த்திவிட்டு, "இறைவா! (உன் கட்டளையை) எடுத்துரைத்துவிட்டேனா?" என்று இரண்டு முறை கூறினார்கள். (முஸ்லிம் 3739)
ஸகாத் வசூலிக்க சென்று வந்த வரை நாளு பேருக்கு மத்தியில் வைத்து நபியவர்கள் இப்படி மானபங்கப்படுத்தி விட்டார்கள். எனவே நாமும் பிறரை மானபங்கப்படுத்தலாம் என்ற அடிப்படையில் இன்று பிறரை மானபங்கப்படுத்தி, சகட்டு மேனிக்கு அருவருப்பாக பேசப்படுவதை காணலாம். நபியவர்கள் வஹியோடு தொடர்பாக இருந்தார்கள். மக்களுக்கு மார்க்கத்தை சொல்லி கொடுக்கும் முகமாக இப்படி பல சந்தர்ப்பங்களை பயன்படுத்தி மார்க்கத்தை தெளிவு படுத்தியுள்ளார்கள். தனது மனைவிமார்கள் பிரச்சனைப்பட்ட நேரத்தில் உமர் (ரலி) அவர்கள் முன் மனைவிமார்களை எச்சரித்த செய்தி மேலும் தேன் விடயத்தில் மனைவிமார்களை எச்சரித்த செய்திகள், மேலும் மனைவிமார்களோடு பிரச்சனைப் பட்டுக் கொண்டு ஒரு மாதம் வர மாட்டேன் என்று சொன்ன செய்தி, யூதர்கள் தப்பாக நபியவர்களுக்கு ஸலாம் சொல்லிய போது அதற்கு மீண்டும் தப்பாக பதில் சொன்ன ஆயிஷா அவர்களை கண்டித்த செய்தி இப்படி பல சான்றுகளை சொல்லிக் காண்டே போகலாம். இவைகள் எல்லாம் பலருக்கு முன்னால் தான் நடந்தது. நபியவர்களைப் பொருத்தவரை மார்க்கத்தை படித்து தர வந்தவர்கள் மக்களின் தவறுகளை அந்த, அந்த இடத்தில் வைத்தே திருத்திக் கொடுப்பார்கள். அதற்காக வேண்டி நாங்களும் அப்படி தான் செய்வோம் என்று தவறாக விளங்கி விடக் கூடாது. அப்படி சொல்வதற்கு நபியவர்களுக்கு அல்லாஹ் அனுமதி வழங்கியுள்ளான். நபியவர்கள் முஸ்லிம்களில் யாரையாவது ஏசினாலோ, அல்லது சபித்தாலோ அது சம்பந்தப்பட்டவருக்கு நன்மையாக மாறி விடும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். பின் வரும் ஹதீஸை கவனியுங்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், "இறைவா! நான் உன்னிடம் ஓர் உறுதிமொழி எடுக்கிறேன். அதற்கு நீ மாறு செய்யமாட்டாய். (அது) நான் ஒரு மனிதனே. ஆகவே, நான் எந்த இறை நம்பிக்கையாளரையாவது (கடிந்து கொண்டு) மனவேதனைப்படுத்தியிருந்தால், ஏசியிருந்தால், சபித்திருந்தால், அடித்திருந்தால், அதையே அவருக்கு அருளாகவும் பாவப்பரிகாரமாகவும் மறுமை நாளில் உன்னிடம் அவருக்கு நெருக்கத்தை ஏற்படுத்தும் அம்சமாகவும் மாற்றிவிடுவாயாக!" என்று கூறினார்கள். ( முஸ்லிம் 5068)
மேலும்
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இரண்டு பேர் வந்தார்கள்; நபியவர்களிடம் எதைப் பற்றியோ பேசினார்கள். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. அவர்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கோபப்படுத்திவிட்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் சபித்து ஏசிவிட்டார்கள். அவர்கள் இருவரும் சென்றதும், நான், "அல்லாஹ்வின் தூதரே! நன்மைகளில் எதையேனும் யார் அடைந்துகொண்டாலும், இவ்விருவர் (மட்டும்) அதை அடையப்போவதில்லை" என்று கூறினேன். அதற்கு "அது எதனால்?" என்று நபியவர்கள் கேட்டார்கள். நான், "அவ்விருவரையும் தாங்கள் சபித்தீர்களே? ஏசினீர்களே?" என்று பதிலளித்தேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் என் இறைவனிடம் நிபந்தனையிட்டுக் கூறியுள்ளதை நீ அறியவில்லையா? "இறைவா! நான் ஒரு மனிதனே! நான் முஸ்லிம்களில் ஒருவரைச் சபித்திருந்தால், அல்லது ஏசியிருந்தால் அதை அவருக்குப் பாவப் பரிகாரமாகவும் நன்மையாகவும் ஆக்கிவிடுவாயாக" என்று கூறியுள்ளேன்" என்றார்கள். ( முஸ்லிம் 5066)
நபியவர்கள் சபித்தார்கள் எனவே நாமும் பிறரை சபிக்கலாம் என்று யாரும் தப்பாக ஹதீஸை விளங்கி விடக் கூடாது. நபியவர்கள் பிறரை சபித்தாலோ அல்லது ஏசினாலோ அது சம்பந்தப்பட்டவர்களுக்கு அருளாகவும், அல்லாஹ்விடம் நெருக்கத்தை ஏற்ப்படுத்திக் கொடுக்கும். ஆனால் நாம் பிறரை ஏசினாலோ, சபித்தாலோ அருளாகவோ, அல்லாஹ்வின் பக்கம் நெருக்கத்தையோ ஏற்படுத்தி தராது மாறாக பாவத்தை தான் அதிகப்படுத்தும்.
எனவே தவறான முறையில் ஹதீஸை விளங்கி மக்களை பிழையான வழியில் அழைத்துச் செல்லக் கூடாது. மக்களும் ஒரு தடவைக்கு பல தடவைகள் சிந்தித்து அவர்கள் சொல்வது சரிதானா? அவர்கள் போகும் வழி சரிதானா என்று சிந்தித்து ஏற்றுக் கொள்ள வேண்டும். அடுத்தது இவர்களின் தவறான கொள்கைகளில் ஒன்று தான் குர்ஆன் வசனத்திற்கு ஸஹீஹான ஹதீஸ் முரண்பட்டால் அந்த ஸஹீஹான ஹதீஸை மறுக்க வேண்டும் என்பதாகும். அந்த விரிசையில் இவர்களின் இந்த பிழையான கொள்கையின் படி பார்த்தாலும் பின் வரக் கூடிய குர்ஆன் வசனங்களுக்கு முரணாக மேற்ச் சுட்டிக்காட்டிய. (முஸ்லிம் 3739) ஹதீஸ் அமைந்துள்ளது.
"எவர்கள் ஈமான் கொண்டுள்ளோரிடையே இத்தகைய மானக்கேடான விஷயங்கள் பரவ வேண்டுமெனப் பிரியப்படுகிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினை செய்யும் வேதனையுண்டு; அல்லாஹ் (யாவற்றையும்) அறிகிறான். நீங்கள் அறியமாட்டீர்கள். (24:19)
இவர்கள் சொல்வது போல அந்த ஹதீஸை அணுகினால் மேற்ச்சென்ற இந்த குர்ஆன் வசனத்திற்கு முற்றிலும் முரணாகவே அமைந்துள்ளது. அப்படியானால் இவர்களின் இந்த ஹதீஸ் மறுப்பு கொள்கையின் அடிப்படையில் அந்த ஹதீஸ் ஸஹீஹாக இருந்தாலும் மறுக்க வேண்டும் என்ற நிலைக்கு வர வேண்டும். ஏன் என்றால் பிறரை மானபங்கப் படுத்துவது கூடாது என்று குர்ஆன் சொல்கிறது இவர்களின் வாதப்படி மேற்ச்சென்ற ஹதீஸ் பிறரை மானபங்கப் படுத்துவற்கு அனுமதி அளிக்கிறது. என்றால்? ஹதீஸை மறுக்க வேண்டும். எனவே பிறரை மானபங்கப் படுத்த கூடாது என்ற குர்ஆன் வசனத்திற்கு கட்டுப்பட வேண்டும் . ஆனால் குர்ஆன் வசனத்தை அலச்சியப் படுத்தி அல்லாஹ் சொன்னாலும் கேட்க மாட்டோம். எங்கள் தலைவர் சொல்கிறார் அவர் சொல்வது தான் சரி என்று நாங்கள் பிறரை மானபங்கப் படுத்தும் விதமாக பேசுவோம் நடந்து கொள்வோம் என்று இவர்களின் அணுகு முறையை காணலாம்.
அடுத்து வரும் குர்ஆன் வசனங்களையும் நிதானமாக நன்றாக அவதானியுங்கள்.
"முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள். (49:11)
"முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (49-12)
மேற்ச் சென்ற குர்ஆன் வசனங்களிலும் பிறரை பரிகாசம் செய்ய வேண்டாம், இழிவாக எண்ண வேண்டாம், பழித்துக் கொள்ள வேண்டாம், கெட்ட பட்டப் பெயர் சொல்லி அழைக்க வேண்டாம், பிறரை துருவித் துருவி ஆராய வேண்டாம். இப்படி எச்சரிக்கையாக சொல்லும் போது நாங்கள் அப்படி தான் பேசுவோம் என்றால் இவர்கள் எப்படி தவறாக வழிகாட்டப்பட்டுள்ளார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இது போல பல குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் எடுத்துக் காட்டினாலும் எப்படி நீங்கள் சொல்லக் கூடிய விசயங்கள் குர்ஆனிலும், ஹதீஸிலும் இருந்தாலும் நாங்கள் மத்ஹப் சொல்வதை தான் கேட்போம் என்று மத்ஹபுகார்கள் பிடிவாதம் பிடித்து சொல்வதைப் போல எத்தனை குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் எடுத்துக் காட்டினாலும் எங்கள் தலைவர் சொன்னது மட்டும் தான் சரி என்று பிடிவாதம் பிடித்து தலைவர் அந்த கருத்தை மாற்றாத வரை தொண்டர்களும் மாறமாட்டார்கள். நாம் எப்படி நல்ல பண்பாடு உடையவர்களாக வாழ வேண்டும் என்று பின் வரும் ஹதீஸ்கள் பாடம் சொல்லித் தருகின்றன.
மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) அறிவித்தார்:
முஆவியா(ரலி) அவர்களுடன் (இராக்கிலுள்ள) கூஃபா நகருக்கு வந்திருந்த அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்களிடம் நாங்கள் சென்றோம். அப்போது அவர்கள், இறைத்தூதர்(ஸல்) அவர்களை நினைவுகூர்ந்து, 'அவர்கள் இயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை; செயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை' என்று கூறிவிட்டு, 'நற்குணமுடையவரே உங்களில் மிகவும் சிறந்தவர்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றும் கூறினார்கள்.
 (புகாரி 6029)
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்:
நபி(ஸல்) அவர்கள் ஏசுபவராகவோ, கெட்ட வார்த்தைகள் பேசுபவராகவோ சாபமிடுபவராகவோ இருக்கவில்லை. எங்களில் ஒருவரைக் கண்டிக்கும்போது கூட 'அவருக்கென்ன நேர்ந்தது? அவரின் நெற்றி மண்ணில் படட்டும்' என்றே கூறுவார்கள்.
 ( புகாரி 6031)
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்:
ஒரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும். அவனுடன் போரிடுவது (அல்லது கொலை செய்வது), இறைமறுப்பு (போன்ற பாவச் செயல்) ஆகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
 (புகாரி 6044)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஒருவர் மற்றவரை 'பாவி' என்றோ, 'இறைமறுப்பாளன்' என்றோ அழைத்தால் அவர் (உண்மையில்) அவ்வாறு (பாவியாக, இறைமறுப்பாளனாக) இல்லையாயின் அவர் சொன்ன சொல் சொன்னவரை நோக்கியே திரும்பிவிடுகிறது. என அபூ தர்(ரலி) அறிவித்தார்.(புகாரி 6045)

மேலும் யூதர்கள் நபியின் மீது தவறான முறையில் ஸலாம் கூறிய போது அதற்கு ஆயிஷா ரலி அவரக்ள அதே அளவு பதில் சொல்லியும் கூட அதையும் நபியவர்கள் அப்படி சொல்லக் கூடாது என்று கண்டிக்கிறார்கள். அதை பின் வருமாறு காணலாம்.
நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) கூறினார்கள்
யூதர்களில் ஒரு குழுவினர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, 'அஸ்ஸாமு அலைக்கும்' (-உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (சற்றே மாற்றி சலாம்) கூறினர். அவர்கள் கூறியதைப் புரிந்துகொண்ட நான் அவர்களுக்கு 'வ அலைக்கும் அஸ்ஸலாமு வல்லஅனா (-அவ்வாறே உங்களின் மீது மரணமும் சாபமும் உண்டாகட்டும்)' என்றேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'ஆயிஷா! நிதானம்! எல்லா விஷயங்களிலும் நளினத்தைக் கையாளுவதையே அல்லாஹ் விரும்புகிறான்' என்று கூறினார்கள். அப்போது நான், 'இறைத்தூதர் அவர்களே! அவர்கள் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நான்தான் 'வ அலைக்கும்' (அவ்வாறே உங்களுக்கு உண்டாகட்டும்) என்று சொல்லிவிட்டேனே! (அதை நீ கவனிக்கவில்லையா?)' என்று கேட்டார்கள்
 (புகாரி 6024)
எனவே மேற்ச் சென்ற முஸ்லிம் 3739 ம் ஹதீஸில் சொல்லப்பட்டதை அல்லாஹ் தனக்கு தனிப்பட்ட ரீதியில் கொடுக்கப்பட்ட அனுமதியால் பேசினார்கள் என்று பார்ப்பதோடு, மேலும் எவருக்கு பொறுப்பு கொடுத்து அவர் அதன் மூலம் மோசடி செய்கிறாரோ அவர் அதை மறுமை நாளில் சுமந்து வருவார் என்ற தகவலை நபியவர்கள் சொல்ல வருகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மேலும் நபியவர்கள் அப்படி சொன்னதின் மூலம் அந்த தோழரின் மனது பாதிக்கப்பட்டிருந்தால் மேற்ச்சென்ற முஸ்லிம் 5068 ம் ஹதீஸில் சொல்லப்பட்டதை போல அது அவருக்கு நன்மையாக மாறிவிடும் என்பதை தான் நாம் புரிய வேண்டும்.
அதே போல அபூபக்கர் (ரலி) எதிரியை ஏசினார்கள் என்றால் நாம் ஏன் ஏசக் கூடாது என்ற வாதமும் ஹதீஸ்களை சரியாக அணுக தெரியாததினால் ஏற்ப்பட்ட விளைவேயாகும். ஸஹீஹான ஹதீஸ் மறுப்பாளர்களான இவர்களின் வாதப்படி ஒரு ஸஹாபியின் ஆதாரத்தை எடுப்பது வழிகேடாகும். நபியவர்கள் தவறான முறையில், அருவருப்பாக பேசுவதை தடை செய்துள்ளார்கள் என்ற ஹதீஸ்கள் எல்லாம் இந்த இடத்தில் மறந்து விட்டார்கள்.? இரண்டாவது அபூபக்கர் (ரலி) அவர்களை பொறுத்தவரை பத்ரு யுத்தத்தில் கலந்து கொண்டவர் மனிதன் என்ற அடிப்படையில் தவறுகள் நடந்தாலும் விசேசமாக பத்ரில் கலந்து கொண்டவர்களை அல்லாஹ் மன்னித்து பொருந்திக் கொள்வான். அதை அல்லாஹ் குர்ஆனில் இப்படி எடுத்துக் காட்டுகிறான்.
(விஷமங்கள் அடங்க) பூமியில் இரத்தத்தை ஓட்டாத வரையில் (விரோதிகளை உயிருடன்) சிறைபிடிப்பது எந்த நபிக்கும் தகுதியில்லை; நீங்கள் இவ்வுலகத்தின் (நிலையில்லா) பொருள்களை விரும்புகிறீர்கள். அல்லாஹ்வோ மறுமையில் (உங்கள் நலத்தை) நாடுகிறான். அல்லாஹ் (ஆற்றலில்) மிகைத்தோனும், ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
அல்லாஹ்விடம் (உங்களுடைய மன்னிப்பு) ஏற்கனவே எழுதப்படாமலிருந்தால் நீங்கள் (போர்க் கைதிகளிடம் பத்ரில் ஈட்டுப் பணத்தை) எடுத்துக் கொண்டதன் காரணமாக உங்களை ஒரு பெரிய வேதனை பிடித்திருக்கும். (8- 67,68) பத்ரு கைதிகள் விடயத்தில் நபியவர்கள் எடுத்த முடிவு தவறானது என்று அல்லாஹ் கூறிவிட்டு, அல்லாஹ்வுடைய மன்னிப்பு ஏற்கனவே முடிவாகி விட்டது, அதனால் அல்லாஹ்உங்களை மன்னித்து விட்டான் என்று கூறவதை காணலாம்.
மேலும் நபி (ஸல்) அவர்கள் மக்காவிற்கு படையெடுத்து செல்வதற்கு முன் நபியவர்களின் படைகளிலிருந்து தனது குடுப்ப உறவுகளை பாதுகாப்பதற்காக ஹாதிப் பின் அபீ பல்த்தஆ (ரலி) அவர்கள் நபியவர்களின் வருகையை ஒரு அடிமை பெண் மூலமாக நபிக்கு தெரியாமல் இரகசிய கடிதம் அனுப்பிய போது இறுதியில் அவள் பிடிக்கப்பட்டு, கடிதமும் நபியவர்களிடம் கிடைத்த போது இந்த தவறை செய்த ஹாதிப் பின் அபீ பல்த்தஆ (ரலி) அவர்களை தலையை வெட்ட உமர் (ரலி) அவர்கள் நபியிடம் அனுமதி கேட்ட போது, உமரே! உமக்கென்ன தெரியும் பத்ரு போரில் கலந்து கொண்டவர்களிடம் நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள் உங்களுக்கு சுவர்க்கம் உறுதியாகி விட்டது என்று கூறியிருக்கலாம் அல்லவா என்றார்கள். (ஹதீஸை விரிவாக பார்க்க புகாரி 6259)
மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதுாறு பழி சுமத்திய ஆயிஷா (ரலி) அவர்களின் உறவுக்காரா் மிஸ்தா (ரலி) அவர்கள் ஏசப்பட்ட போதும் பாதிக்கப்பட்ட ஆயிஷா அவர்கள் அவர் பத்ரில் கலந்து கொண்டவர் அவரை ஏசாதீர்கள் என்று சம்பந்தப்பட்டவரை மன்னித்ததை காணலாம். மிஸ்தஹ்வுக்கு உதவிகள் செய்த வந்த அபூபக்கர் (ரலி) அவரகள் இனி மேல் இந்த மிஸ்தஹ்வுக்கு உதவிகள் செய்ய மாட்டேன் என்று கூறிய போது அல்லாஹ்வுடைய மன்னிப்பு உங்களுக்கு தேவையில்லையா என்று அல்லாஹ் குர்ஆன் வசனத்தை இறக்கிய உடனே அல்லாஹ்வின் வசனத்திற்கு கட்ப்பட்டு தனது முடிவை அபூபக்கர் அவர்கள் மாற்றிக் கொண்டார்கள். இவர் தான் பகிரங்கமாக தவறு செய்தார் என்பதை தெரிந்தும் அவருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்பதை இஸ்லாம் அழகான முறையில் வழிக்காட்டுகிறது.
எனவே ஹதீஸ்களை சரியான முறையில் கையாள வேண்டும். தாம் உருவாக்கிய தவறான கொள்கைக்காக ஹதீஸ்களை தவறாக வளைக்கக் கூடாது என்பதை புரிந்து, சொல்லப்ட்ட செய்திகளை சரியாக விளங்கி வாழ்வதற்கு அல்லாஹ் அருள் பாலிப்பானாக!


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.in

ஞாயிறு, 15 ஜூலை, 2018

நலம் நம் கையில் - நோய் தீர்க்கும் கைவைத்தியங்கள்!

நலம் நம் கையில் - நோய் தீர்க்கும் கைவைத்தியங்கள்!
ஹெல்த்ரமேஷ், சித்த மருத்துவர்
முன்பு கூட்டுக்குடும்பமாக இருந்த நாட்களில் எல்லா வீடுகளிலும் முதியவர்கள் இருந்தார்கள். சளி, தலைவலி, காய்ச்சல், வயிற்றுவலி என எளிய பிரச்னைகள் ஏற்பட்டபோது, வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கைவைத்தியங்கள் மூலம் சின்னச் சின்ன நோய்கள் விரட்டப்பட்டன. தனிக்குடும்பங்கள் பெருகிக்கொண்டிருக்கும் இன்றைய நாளில் எதற்கெடுத்தாலும் டாக்டரிடம் ஓடுகிறோம். வீட்டிலேயே செய்யக்கூடிய சின்னச் சின்ன கைவைத்தியங்கள் என்னென்ன... எந்தப் பொருளுக்கு என்ன மருத்துவக் குணம் உண்டென பார்ப்போம்!


எள்
எள்ளை தொடர்ந்து சாப்பிட்டுவர, உடல் எடை கூடும். வலு அதிகரிக்கும். எள் எண்ணெயைக் கோழிமுட்டையின் வெள்ளைப்பகுதியுடன் கலந்து, பருக்கள், கட்டிகள் மீது பூச, கட்டிகளினால் ஏற்படும் வலி நீங்கும். கட்டிகள் மறையும். எள்ளுப் பிண்ணாக்கைத் தினம் ஒரு ஸ்பூன் சாப்பிட்டுவர, சர்க்கரை நோய் கட்டுப்படும்.


சீரகம்
சீரகத்துடன் நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி, தலைக்குக் குளித்துவர, சோர்வு, மயக்கம், கண்நோய், தலைவலி, மந்தம் தீரும். சீரகத்தைப் பொடித்து தினமும் காலை, இரவு சாப்பிட்டுவர, வயிற்று உபாதைகள், அஜீரணம், வயிற்றுப் புண் குணமாகும். உயர் ரத்தஅழுத்தம் கட்டுப்படும். சீரகத்தை நீரில் போட்டு கொதிக்கவைத்து வடிகட்டி அருந்திவர, செரிமானக் கோளாறுகள் நீங்கும்.



பூண்டு
நாட்டுப்பூண்டை பாலில் வேகவைத்துச் சாப்பிட்டுவர, கொழுப்பு, ஊளைச் சதை குறையும். பூண்டுச் சாற்றைத் தேனில் கலந்து நாக்கில் தடவினால், குழந்தைகளின் சிறுநாக்கு வளர்ச்சி பிரச்னை, தொண்டைக்கட்டு, இருமல் நீங்கும்.


ஆமணக்கு எண்ணெய்
கண் நோய்களுக்கு ஆமணக்கு எண்ணெய் நல்ல தீர்வு. உணவில் ஆமணக்கு எண்ணெய் சேர்த்துவந்தால், பார்வைத்திறன் மேம்படும். சருமத்தைப் பாதுகாத்து, மலச்சிக்கல், மலக்கட்டைப் போக்கும்.


சுக்கு
சுக்கை வாயில் இட்டு மெல்ல, பல்வலி தீரும்; அரைத்துப் பற்றுப்போட,
  தலைவலி தீரும். சுக்கை வெந்நீரில் அரைத்து பற்று போட மூட்டுவலி வீக்கம் குறையும். சுக்கைப் பொடித்து அரை சிட்டிகை பாலில் கலந்து சாப்பிட, நன்கு பசி உண்டாகும்.


ஜாதிக்காய்
ஜாதிக்காயைப் பொடித்து நீரில் கொதிக்கவைத்து, வடிகட்டி அருந்த, குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் வயிற்றுப்போக்கு தீரும். ஜாதிக்காயைப் பொடித்து தினமும் ஒருவேளை தேனில் சாப்பிட்டுவர, ஆண்மை பெருகும்; விந்து கெட்டிப்படும்.


கறிவேப்பிலை
கறிவேப்பிலைப் பொடியை உணவாக உட்கொண்டுவர, ரத்தச்சோகை நீங்கும். முடி உதிர்தல் நிற்கும்.


மிளகு
தலையில் புழுவெட்டு உள்ளவர்கள், மிளகுத்தூளுடன் சிறிது வெங்காயச்சாறு, உப்பு கலந்து பூசிவர, நல்ல பலன் கிடைக்கும். பாதிக்கப்பட்ட இடத்தில் முடி முளைக்கும். மிளகுப் பொடியையும் சோம்புப் பொடியையும் சம விகிதத்தில் எடுத்துகொண்டு சிறிது தேனில் கலந்து சாப்பிட, மூலநோய் நீங்கும்.


கொத்தமல்லி விதை
கொத்தமல்லி விதையைப் பொடித்துச் சாப்பிட, குடியின் மீதான ஆர்வம் குறையும்.
கொத்தமல்லி விதைப் பொடியை சோம்புடன் சேர்த்துச் சாப்பிட, புளிச்ச ஏப்பம் நீங்கும்.
கொத்தமல்லி விதை வாய் துர்நாற்றத்தைப் போக்கும்.


கொள்ளு
10 மி.கி கொள்ளை 100 மி.லி நீர் விட்டுக் கொதிக்கவைத்து, பிரசவித்த பெண்களுக்குக் கொடுக்க, உடலில் உள்ள பேறு கால கசடுகள் (நஞ்சு) நீங்கும். கொள்ளை சேர்த்துக் கொதிக்கவைத்த நீருடன் இந்துப்பு கலந்து பருக, சிறுநீரகக் கல் அடைப்பு நீங்கும்.

ஓமம்
ஒரு டீஸ்பூன் ஓமத்தை
  வெந்நீரில் கலந்து கொதிக்கவைத்து, வடிகட்டி அருந்த, வயிற்றுவலி, அஜீரணம் தீரும். ஓமப் பொடியை வெந்நீரில் கலந்து சாப்பிட்டால், வயிற்று மந்தம், வாயுத் தொல்லை நீங்கும்.


வசம்பு
வசம்பைக் கறுக்கிப் பொடித்துத் தேனில்
  குழைத்துக் கொடுக்க, குழந்தைக்கு மாந்தம், இருமல் தீரும். நோய் எதிர்ப்புச் சக்தி மேம்படும்.

கசகசா
கசகசாவை நீரில் கொதிக்கவைத்து, வடிகட்டிக் குடிக்க, தூக்கமின்மை நீங்கி நன்றாக உறக்கம் வரும். கசகசாவைப் பொடித்துப் பாலில் கலந்து சாப்பிட்டுவர, உடல் வலிமை அடையும்; ஆண்மை பெருகும்.


முள்ளங்கி
முள்ளங்கிச் சாற்றைத் தினமும் அருந்திவர, கல்லடைப்பு மற்றும் நீர்க்கட்டு தீரும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.in

வெள்ளி, 13 ஜூலை, 2018

மனச்சோர்வை விரட்ட 6 வழிகள்!

மனச்சோர்வை விரட்ட 6 வழிகள்!
மனச்சோர்வுக்குக் காரணங்களைத் தேடினாலே சோர்வு வந்துவிடும். அந்த அளவுக்குக் காரணங்கள் கொட்டிக் கிடக்கின்றன. தற்போது, பெரும்பாலானோர் மனச்சோர்வால் பாதிக்கப்பட்டு, அதனுடனேயே  வாழ்ந்துவருகின்றனர். இவர்கள் தங்கள் வாழ்வை எவ்வாறு மேம்படுத்திக்கொள்வது, மனச்சோர்விலிருந்து எப்படி விடுபடுவது என்பதற்கான எளிய வழிகளைப் பற்றிப் பார்க்கலாம்.

நிறைவான தூக்கம்
மண்டையை உடைக்கும் மனஉளைச்சலைச் சமாளிக்க, தெளிவான மனம் வேண்டும். அதற்கு நிறைவான தூக்கம் அவசியம். தூங்காமல் இருந்து அல்லது சரியாகத் தூங்காமல் பிரச்னை குறித்துச் சிந்தித்துக்கொண்டே இருந்தால், மனநோயாளியாக மாறும் வாய்ப்பு அதிகம். தூங்கும் முன் பிரச்னையைப் பற்றிச் சிந்திப்பதை அவசியம் தவிர்த்து விடுங்கள்.



ஒரு பயிற்சியை உங்களுக்கு எனத் தேர்வு செய்யுங்கள்
நீச்சலோ, ஏரோபிக்ஸோ உங்களுக்கான ஒரு பயிற்சியைத் தேர்ந்தெடுத்து, அதில் அரை மணி நேரம் முழு மனதோடு செலவழிக்க வேண்டும். அந்த அரை மணி நேரத்தில், நீங்கள் வேறு... உங்களது பிரச்னைகள் வேறு என்பதை மனதுக்குப் புரியவைத்துவிடுங்கள்.

நம்பிக்கை மனிதர்களைப் படியுங்கள்
நாளிதழ், பத்திரிகை, இணையம் என எல்லா இடங்களிலும் நம்பிக்கை மனிதர்களைப் பார்க்க முடியும். அவர்களின் கதையைப் படியுங்கள். புதிய சிந்தனைகள் தோன்றும். உங்களுக்கான வழிகளும் பிறக்கும். நம்பிக்கை வாசகங்களைத் தேடிப் பிடித்துப் படியுங்கள். நம்பிக்கை தரும் பாடல்களை அடிக்கடி கேளுங்கள்.

சரியான நேரத்துக்கு வேலையை முடித்துவிட்டுக் கிளம்புங்கள்
வேலைதான் எல்லாமுமே என்ற எண்ணத்தை மாற்றுங்கள். வேலையும் உங்களுக்கு ஒரு வேலை எனப் புரிந்துகொண்டு, வேலையை மிகச் சரியாக, சரியான நேரத்துக்கு முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்லுங்கள். கசப்பான உணர்வுகளை
  அலுவலக வாசலில் புதைத்துவிட்டுச் செல்வது நல்லது.

பிடித்த உறவுகளுடன் சில நிமிடங்கள்
நண்பர், அம்மா, அப்பா, பாட்டி, செல்லப் பிராணி என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்... அவர்களுக்கு என நேரம் ஒதுக்கி, அவர்களுடன் செலவழியுங்கள். சிலருக்கு ஷாப்பிங் பிடிக்கும், அவர்கள் மனச்சோர்விலிருந்து தப்பிக்க அடிக்கடி 'விண்டோ ஷாப்பிங்' செய்யலாம்.

உண்ணும் உணவைக் கவனியுங்கள்
போதுமான காய்கறி, பழங்கள், சிறுதானியங்கள், தானியங்கள், பருப்பு-பயறு வகைகள், நிறைவான கொழுப்புச்சத்து உள்ள உணவுகள் போன்ற அனைத்தும் சரியான அளவில் தினசரி உண்ண வேண்டும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.in

புதன், 11 ஜூலை, 2018

வரிக் கணக்கை வியாபாரிகள் ஏன் தாக்கல் செய்ய வேண்டும்?

வரிக் கணக்கை வியாபாரிகள் ஏன் தாக்கல் செய்ய வேண்டும்?
சொக்கலிங்கம் பழனியப்பன், இயக்குநர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

தமிழகத்திலும் சரி, இந்தியாவிலும் சரி, பல லட்சம் / கோடி மக்கள் பலவிதமான சிறு தொழில்களைச் செய்துவருகிறார்கள். காலம் காலமாக இந்தத் தொழில்களில் ரொக்கமாகத்தான் பணத்தைப் பரிமாற்றம் செய்து வருகிறார்கள். சிறு தொழில் செய்பவர்கள் பலரும் ரொக்கமாக வியாபாரம் செய்துவந்ததால், வரி வரம்புக்குள் வராமல் மகிழ்ச்சியாக தங்கள் தொழிலைச் செய்து வந்தார்கள். தவிர, பல வியாபாரிகள் தினமும் தாங்கள் வியாபாரம் செய்த பணத்தை தங்கள் கைகளால் எண்ணிப் பார்த்து அளவற்ற ஆனந்தம் அடைவார்கள். சில வியாபாரிகள், ஒரு நாளில் பல தடவை தங்களது கல்லாப்பெட்டியைத் திறந்து பணத்தை எண்ணிக்கொள்வார்கள்!

இவற்றில் எல்லாம் எந்தத் தவறும் இல்லை. தொழில் செய்வதே பணம் சம்பாதிக்கத்தான் என்கிறபோது, சம்பாதிக்கும் பணத்தைத் தொட்டு, ரசித்துப் பார்ப்பதில் தவறே இல்லை.
  சொல்லப் போனால், பணத்தை ரொக்கமாகப் பயன்படுத்துவது தான் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் செளகரிய மாக இருக்கிறது.


ஆனால், கடந்த ஆண்டின் இதே மாதத்தில் இருந்த இந்தியா இப்போது இல்லை.  நமது மத்திய அரசாங்கம், கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவற்றில் ஒன்று ரொக்கத்தில் நடக்கும் வியாபாரத்தை முடிந்த அளவுக்குக்  குறைப்பதாகும்.ரூ.20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கடனாகவோ அல்லது சன்மானமாகவோ தரக்கூடாது என்கிற சட்டம் ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், ரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக பணப் பரிமாற்றம் செய்யவே கூடாது என மத்திய அரசாங்கம்,  இந்த ஆண்டு பட்ஜெட்டில் புதிய நடைமுறையைக் கொண்டு வந்திருக்கிறது. 

 ஆக, சிறு தொழில் செய்யும் வியாபாரிகள் பணத்தை ரொக்கமாகப் பயன்படுத்தாமல் இருப்பதற்கு மத்திய  அரசாங்கம் ஒரு பக்கத்திலிருந்து அழுத்தம் தந்துவருகிறது. மற்றொரு பக்கம், இளம் வாடிக்கையாளர்கள்
கேஷ்லெஸ்ஸாகத்தான் பரிவர்த்தனை செய்வோம் என்று சொல்லி வருகிறார்கள். ஆன்லைன் மூலம் அல்லது இ-வேலட் மூலம் அல்லது கிரெடிட்/ டெபிட் கார்டுகள் மூலம் தங்களது பர்ச்சேஸ்களை முடித்துக் கொள்கிறார்கள் இன்றைய இளைஞர்கள்.
 

ஆக, பணமில்லா பரிவர்த்தனையை சில ஆண்டுகள் வேண்டுமானால் ஒத்திப் போடலாமே தவிர, அதனை வியாபாரிகள் முழுவதுமாகத் தவிர்த்துவிட முடியாது. இந்த நிலையில், சிறு வியாபாரிகள் கேஷ்லெஸ் பரிவர்த்தனையை ஏன் தவிர்த்து வருகிறார்கள் என்பது முக்கியமானக் கேள்வி.

இதற்கு பல காரணங்கள் உண்டு. கூடுதல் கட்டணச் செலவு, பொருள் விற்ற பணம் காலம் தாழ்த்திக் கிடைப்பது, விற்பனை வரி, வருமான வரி போன்ற வரிப் பிரச்னைகள் ஏதேனும் வந்துவிடுமோ என்கிற அச்சம் போன்றவற்றை இதற்குக் காரணங்களாகச் சொல்லலாம். இந்த நான்கு காரணங்களில் வியாபாரிகளை அதிகமாக அச்சுறுத்துவது வருமான வரித் தாக்கல் செய்யவேண்டும் என்பதே.

ஏனெனில், கூடுதல் கட்டணம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. இந்தியா மற்றும் உலகமே ஆன்லைன் பரிவர்த்தனை போன்ற கேஷ்லெஸ் பொருளாதாரத்துக்கு மாறும்போது, நாம் மட்டும் தனித்து நிற்க முடியாது. அதற்காக நீங்கள் செய்யும் சிறு செலவினை செய்துதான், உங்கள்
  வியாபாரத்தை நீங்கள் வளர்த்தெடுக்கவேண்டும்.

காலம் தாழ்த்தி, அதாவது சில தினங்கள் கழித்து, பணம் கிடைப்பது கிரெடிட் கார்டு போன்றவற்றின் மூலம் பரிவர்த்தனை செய்யும்போது நிகழும் ஒன்றுதான். அதற்காக நீங்கள் உங்களது வொர்க்கிங் கேப்பிட்டலை அதிகப்படுத்த வேண்டிவரும். அல்லது நீங்கள் உங்கள் சப்ளையரிடம் கடனுக்குப் பொருளைத் தரச் சொல்லலாம். அல்லது
  உங்கள் நிலைமையை எடுத்துச் சொல்லி, உங்கள் வங்கியில் ஓவர் டிராஃப்ட் தரச் சொல்லலாம்.
விற்பனை வரி ஏய்ப்பை ஒருவர் நீண்ட நாட்களுக்குத் தொடர முடியாது. ஜிஎஸ்டி அறிமுகமானவுடன் இதுபோன்ற ஏய்ப்புக்கள் வெகுவாகக் குறைந்துவிடும். விற்பனை வரியை ஈடுசெய்ய உங்களின் வியாபார உத்தியை மாற்றுவதன் மூலம் சமாளித்துவிட முடியும்.

விற்பனை முழுவதையும் கணக்கில் கொண்டு வந்தால் வருமான வரி கட்டவேண்டி வருமே என்கிற சந்தேகம்தான் பலரையும் பணத்தை ரொக்கமாக பரிமாற்றம் செய்யத் தூண்டுகிறது. இந்த சந்தேகம் முற்றிலும் தவறானது. இன்று இருக்கும் பல சிறு தொழில்களில் கணவன், மனைவி, மகன், மகள் என குடும்பமே உழைத்து வருகிறது. இதுதவிர, தொழிலுக்காக நீங்கள் பல செலவுகள் செய்கிறீர்கள். அந்தச் செலவு அனைத்தையும் தொழில் செலவுக் கணக்கில் கொண்டு வரமுடியும்.
பெரும்பாலான சிறு தொழில்கள் வருடத்துக்கு ரூ.50 லட்சம் வரை லாபம் சம்பாதிக்கலாம். இந்தத் தொகையை நீங்கள் கணக்கில் காண்பிக்காமல் எடுத்துச் செல்லும்போது, முழுத்தொகையும் கறுப்புப் பணமாகிவிடுகிறது. அதற்குப் பதிலாக, நீங்கள் பணமில்லா பரிவர்த்தனையை ஏற்றுக் கொள்ளும்போது, உங்களது வியாபாரம் மற்றும் லாபம் பெருக வாய்ப்புள்ளது. உங்கள் தொழிலை
  நீங்களும் உங்கள் மனைவி, மகன், மகள் என நால்வரும் சேர்ந்து ஆரம்பித்த ஒரு பார்ட்னர்ஷிப் நிறுவனம் என்று எடுத்துக் கொள்வோம்.  மேலும், இந்த ரூ.50 லட்சம் லாபத்தை, குடும்பத்திலிருந்து தொழிலில் பார்ட்னர்களாக உழைக்கும் நீங்கள் நால்வரும், ஒவ்வொருவருக்கும் தலா ஆண்டுக்கு ரூ.12.50 லட்சம் சம்பளமாக எடுத்துக்கொண்டால், உங்கள் தொழிலுக்கு பெரிதாக வரி ஏதும் செலுத்தவேண்டி இருக்காது. அதே சமயத்தில் நீங்கள் நால்வரும் குறைவான வருமான வரியையே செலுத்த வேண்டி இருக்கும். அதாவது, உங்கள் ஒவ்வொருவருக்கும் உங்கள் சம்பளத்தில் கிட்டத்தட்ட 11 - 12% வரிதான் கட்டவேண்டி வரும்.

அது மட்டுமல்ல, நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்து வருவீர்கள் எனில், அதை வைத்துக் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன், வாகனக் கடன் மற்றும் தொழில் கடன் போன்றவற்றைப் பெறலாம். உங்கள் வருமானத்தை மறைத்து முதலீடு செய்யாமல், எந்த முதலீடு அதிக வருமானம் தருமோ, அந்த முதலீட்டைத் தேர்வுசெய்து
  முதலீடு செய்யலாம். சமூகத்தில் வருமான வரி கட்டும் ஒரு அந்தஸ்த்தும் உங்களுக்குக் கிடைக்கும்.  வருமான வரித் துறையிலிருந்து உங்களுக்கு நோட்டீஸ் வருவதும் குறையும். பயமில்லாமல்  கார் வாங்கலாம். வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்று வரலாம். கிரெடிட் கார்டில் வேண்டியதை செலவு செய்யலாம். டீமேட் கணக்கு திறந்துகொள்ளலாம். மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து கொள்ளலாம். எவ்வளவு தொகைக்கு வேண்டுமானாலும் வங்கியில் பரிவர்த்தனை செய்துகொள்ளலாம்.

கறுப்புப் பணம் வைத்திருந்த அனைவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பரில் என்ன நடந்தது? இரவோடு இரவாக 30% அதிக விலை தந்து தங்கத்தை வாங்கினார்கள். அல்லது 30% - 50% விலை கொடுத்து ரூபாய் நோட்டுக்களை மாற்றினார்கள். ரெகுலராக 11 - 12% வரி கட்ட அஞ்சியவர்கள், மொத்தமாக யாரோ ஒருவரிடம் 30% விலை கொடுத்தார்கள். அரசாங்கத்தின் உச்சபட்ச வரியே அதுதான்.  அது மட்டுமல்ல, கமிஷன் கொடுத்து பணத்தை மாற்றியபிறகும், அந்தப் பணம் கறுப்புப் பணம்தான். சொந்தக்காரர்களிடம் சென்று, உங்கள் அக்கவுன்டில் ரூ.1 அல்லது ரூ.2 லட்சம் போட்டு மாற்றித் தருகிறீர்களா என்று கெஞ்சி கைகட்டி நின்ற காட்சியை எல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள், கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த நிலை தேவைதானா என்று சற்று யோசித்துப் பாருங்கள்.

சரியாக வரி செலுத்தி நிம்மதியாக பிசினஸ் செய்வது லாபமா அல்லது வரி கட்டாமல், பயந்து பயந்து பிசினஸ் செய்வது லாபமா என்பதை ஒரு சிறிய உதாரணத்துடன் பார்ப்போம். 20 வருடங்களுக்கு முன்பு உங்களிடம் ரூ.10 லட்சம் இருந்தது. அன்றைய தினத்தில் உங்களுக்கு இரண்டு ஆப்ஷன்கள் இருந்தன.

ஆப்ஷன் 1 : உச்சபட்ச வருமான வரியான 30 சதவிகிதத்தைச் செலுத்திவிட்டு, நீங்கள் விருப்பப் பட்டவாறு, மீதியுள்ள ரூ.7 லட்சத்தை முதலீடு செய்துகொள்ளலாம்.

ஆப்ஷன் 2 : வரி கட்டாமல் கறுப்புப் பணமாக வைத்திருந்து, மொத்த ரூ.10 லட்சத்தையும் நீங்கள் தங்கத்திலோ அல்லது நிலத்திலோ முதலீடு செய்து கொள்ளலாம். (பெரும்பாலான கறுப்புப் பணம் இந்த இரண்டில்தான் செல்கிறது).
சந்தேகமே இல்லாமல், பெரும்பாலான சிறு தொழில் செய்பவர்கள்
  இரண்டாவது ஆப்ஷனையே தேர்வு செய்திருப்பார்கள். ஆனால், ஆப்ஷன் 1-ல் தான் நீங்கள் அதிகமான பணத்தைச் சம்பாதித்து இருப்பீர்கள். எப்படி என்று கேட்கிறீர்களா?

அன்றைய தினத்தில் ஆப்ஷன் 1-ல் உங்களுக்கு கிடைத்த ரூ.7 லட்சத்தை உங்கள் விருப்பப் படி முதலீடு செய்திருக்கலாம். சாதாரண மனிதர்கள், நீண்ட நாட்களுக்கு தேவைப் படாத பணத்தை எதில் முதலீடு செய்வார் கள்? எதில் அதிக வருமானம் கிடைக்குமோ, அதில்தான் முதலீடு செய்வார்கள்.
  எதில் அதிக வருமானம் கிடைக்கும்? நீண்ட நாட்களுக்கு முதலீடு செய்யும்போது, முதலில் பங்குச் சார்ந்த முதலீடு, இரண்டா வதாக ரியல் எஸ்டேட், மூன்றாவதாக பாண்டுகள், நான்காவதாக தங்கம் என்கிற ஆர்டரில்தான் அதிக வருமானம் கிடைக்கும்.

ஆக, பங்கு சார்ந்த முதலீடுகள்தான் நீண்ட நாட்களில் உலகளவில் அதிகமான வருமானத்தைத் தந்துள்ளன. இனிமேலும் கொடுக்கும். அதற்குப் பிறகுதான் ரியல் எஸ்டேட், பாண்டுகள், தங்கம் எல்லாம் வருகின்றன. ஆப்ஷன் 1-ஐ தேர்ந்தெடுத்தவர் அன்றைய வரிக்குப் பிந்தைய லாபமான ரூ.7 லட்சத்தை அதிக கண்காணிப்புத் தேவைப் படாத பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தார் என்று வைத்துக்கொள்வோம். கடந்த 20 வருடங்களில் நடப்பிலிருந்த அனைத்து மியூச்சுவல் ஃபண்டுகளும் சராசரியாக 17.92% (ஜனவரி 08, 2017) கூட்டு வட்டியில் வருமானம் தந்துள்ளன. நல்ல ஃபண்டுகள் 24% கூட்டு வட்டியில் வருமானம் தந்துள்ளன. சராசரியாக எடுத்துக்கொண்டால், நீங்கள் அன்று முதலீடு செய்த ரூ.7 லட்சம், இன்றைய தினத்தில் ரூ.1,89,16,790-ஆக இருக்கும். சிறப்பாகச் செயல்படும் ஃபண்டில் முதலீடு செய்திருந்தால், அந்த ரூ.7 லட்சத்தின் தற்போதைய மதிப்பு ரூ.5,17,04,905 ஆகும். இந்தப் பணம் முழுக்க முழுக்க வெள்ளைப் பணம். மேலும், இதற்கு வருமானம் வரி எதுவும் கட்ட வேண்டியதில்லை.

ஆனால், ஆப்ஷன் 2-ஐத் தேர்வு செய்து நீங்கள் தங்கத்தில் ரூ.10 லட்சத்தை முதலீடு செய்திருந்தால், அதன் இன்றைய மதிப்பு சுமார் ரூ.60 லட்சம் ஆகும். (அன்றைய விலை கிராம் சுமார் ரூ.500 ஆகும்; இன்றைய விலை கிராம் சுமார் ரூ.3,000 ஆகும்). இன்று விற்பனை செய்தால் சட்டப்படி வரி கட்டியாக வேண்டும். மேலும், அந்தத் தங்கம் இதுவரை, உங்கள் பேலன்ஸ்ஷீட்டில் ஏறாத சொத்தாகவே இருக்கும். இதேதான் ரியல் எஸ்டேட்டுக்கும். ஒவ்வொரு ஊரிலும் ஒரு விலை சொல்வார்கள். நீங்கள் சரியான விலைக்குத்தான் சொத்தினை விற்கிறீர்களா என்பதே உங்களுக்குத் தெரியாது. அப்படி இருக்கும்போது அன்றைய ரூ.10 லட்சம் முதலீட்டின் மூலம் எவ்வளவு கிடைக்கும் என்பதைத் துல்லியமாக உங்களால் கணக்கிட முடியாது.
   அப்படியே விற்றாலும் வரி கட்டவேண்டும்.

வரித் தாக்கல் ஏன் அவசியம் என்று இப்போது உங்களுக்குப் புரியும். நீங்கள் உங்கள் பணத்தைக் கணக்கில் கொண்டுவந்து, நீங்கள் விரும்பியபடி, அதிக வருமானம் தரும் முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யலாம்!குறுகிய காலத்தில் ஸ்மார்ட்டாக இருப்பதைவிட,
  நீண்ட காலத்தில் ஸ்மார்ட்டாக இருப்பதே புத்திசாலித்தனம்!


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.in

பிறந்தகுழந்தைகளுக்கு டயாப்பர் அணிவிப்பது சரியானதா?

  டயாப்பர் அணிவிக்காமல் இன்றைய சூழ்நிலையில் சமாளிக்க முடிவதில்லை. டயாப்பர் அணிவிக்கக் கூட...

Popular Posts