லேபிள்கள்

ஞாயிறு, 15 ஜூலை, 2018

நலம் நம் கையில் - நோய் தீர்க்கும் கைவைத்தியங்கள்!

நலம் நம் கையில் - நோய் தீர்க்கும் கைவைத்தியங்கள்!
ஹெல்த்ரமேஷ், சித்த மருத்துவர்
முன்பு கூட்டுக்குடும்பமாக இருந்த நாட்களில் எல்லா வீடுகளிலும் முதியவர்கள் இருந்தார்கள். சளி, தலைவலி, காய்ச்சல், வயிற்றுவலி என எளிய பிரச்னைகள் ஏற்பட்டபோது, வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கைவைத்தியங்கள் மூலம் சின்னச் சின்ன நோய்கள் விரட்டப்பட்டன. தனிக்குடும்பங்கள் பெருகிக்கொண்டிருக்கும் இன்றைய நாளில் எதற்கெடுத்தாலும் டாக்டரிடம் ஓடுகிறோம். வீட்டிலேயே செய்யக்கூடிய சின்னச் சின்ன கைவைத்தியங்கள் என்னென்ன... எந்தப் பொருளுக்கு என்ன மருத்துவக் குணம் உண்டென பார்ப்போம்!


எள்
எள்ளை தொடர்ந்து சாப்பிட்டுவர, உடல் எடை கூடும். வலு அதிகரிக்கும். எள் எண்ணெயைக் கோழிமுட்டையின் வெள்ளைப்பகுதியுடன் கலந்து, பருக்கள், கட்டிகள் மீது பூச, கட்டிகளினால் ஏற்படும் வலி நீங்கும். கட்டிகள் மறையும். எள்ளுப் பிண்ணாக்கைத் தினம் ஒரு ஸ்பூன் சாப்பிட்டுவர, சர்க்கரை நோய் கட்டுப்படும்.


சீரகம்
சீரகத்துடன் நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி, தலைக்குக் குளித்துவர, சோர்வு, மயக்கம், கண்நோய், தலைவலி, மந்தம் தீரும். சீரகத்தைப் பொடித்து தினமும் காலை, இரவு சாப்பிட்டுவர, வயிற்று உபாதைகள், அஜீரணம், வயிற்றுப் புண் குணமாகும். உயர் ரத்தஅழுத்தம் கட்டுப்படும். சீரகத்தை நீரில் போட்டு கொதிக்கவைத்து வடிகட்டி அருந்திவர, செரிமானக் கோளாறுகள் நீங்கும்.



பூண்டு
நாட்டுப்பூண்டை பாலில் வேகவைத்துச் சாப்பிட்டுவர, கொழுப்பு, ஊளைச் சதை குறையும். பூண்டுச் சாற்றைத் தேனில் கலந்து நாக்கில் தடவினால், குழந்தைகளின் சிறுநாக்கு வளர்ச்சி பிரச்னை, தொண்டைக்கட்டு, இருமல் நீங்கும்.


ஆமணக்கு எண்ணெய்
கண் நோய்களுக்கு ஆமணக்கு எண்ணெய் நல்ல தீர்வு. உணவில் ஆமணக்கு எண்ணெய் சேர்த்துவந்தால், பார்வைத்திறன் மேம்படும். சருமத்தைப் பாதுகாத்து, மலச்சிக்கல், மலக்கட்டைப் போக்கும்.


சுக்கு
சுக்கை வாயில் இட்டு மெல்ல, பல்வலி தீரும்; அரைத்துப் பற்றுப்போட,
  தலைவலி தீரும். சுக்கை வெந்நீரில் அரைத்து பற்று போட மூட்டுவலி வீக்கம் குறையும். சுக்கைப் பொடித்து அரை சிட்டிகை பாலில் கலந்து சாப்பிட, நன்கு பசி உண்டாகும்.


ஜாதிக்காய்
ஜாதிக்காயைப் பொடித்து நீரில் கொதிக்கவைத்து, வடிகட்டி அருந்த, குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் வயிற்றுப்போக்கு தீரும். ஜாதிக்காயைப் பொடித்து தினமும் ஒருவேளை தேனில் சாப்பிட்டுவர, ஆண்மை பெருகும்; விந்து கெட்டிப்படும்.


கறிவேப்பிலை
கறிவேப்பிலைப் பொடியை உணவாக உட்கொண்டுவர, ரத்தச்சோகை நீங்கும். முடி உதிர்தல் நிற்கும்.


மிளகு
தலையில் புழுவெட்டு உள்ளவர்கள், மிளகுத்தூளுடன் சிறிது வெங்காயச்சாறு, உப்பு கலந்து பூசிவர, நல்ல பலன் கிடைக்கும். பாதிக்கப்பட்ட இடத்தில் முடி முளைக்கும். மிளகுப் பொடியையும் சோம்புப் பொடியையும் சம விகிதத்தில் எடுத்துகொண்டு சிறிது தேனில் கலந்து சாப்பிட, மூலநோய் நீங்கும்.


கொத்தமல்லி விதை
கொத்தமல்லி விதையைப் பொடித்துச் சாப்பிட, குடியின் மீதான ஆர்வம் குறையும்.
கொத்தமல்லி விதைப் பொடியை சோம்புடன் சேர்த்துச் சாப்பிட, புளிச்ச ஏப்பம் நீங்கும்.
கொத்தமல்லி விதை வாய் துர்நாற்றத்தைப் போக்கும்.


கொள்ளு
10 மி.கி கொள்ளை 100 மி.லி நீர் விட்டுக் கொதிக்கவைத்து, பிரசவித்த பெண்களுக்குக் கொடுக்க, உடலில் உள்ள பேறு கால கசடுகள் (நஞ்சு) நீங்கும். கொள்ளை சேர்த்துக் கொதிக்கவைத்த நீருடன் இந்துப்பு கலந்து பருக, சிறுநீரகக் கல் அடைப்பு நீங்கும்.

ஓமம்
ஒரு டீஸ்பூன் ஓமத்தை
  வெந்நீரில் கலந்து கொதிக்கவைத்து, வடிகட்டி அருந்த, வயிற்றுவலி, அஜீரணம் தீரும். ஓமப் பொடியை வெந்நீரில் கலந்து சாப்பிட்டால், வயிற்று மந்தம், வாயுத் தொல்லை நீங்கும்.


வசம்பு
வசம்பைக் கறுக்கிப் பொடித்துத் தேனில்
  குழைத்துக் கொடுக்க, குழந்தைக்கு மாந்தம், இருமல் தீரும். நோய் எதிர்ப்புச் சக்தி மேம்படும்.

கசகசா
கசகசாவை நீரில் கொதிக்கவைத்து, வடிகட்டிக் குடிக்க, தூக்கமின்மை நீங்கி நன்றாக உறக்கம் வரும். கசகசாவைப் பொடித்துப் பாலில் கலந்து சாப்பிட்டுவர, உடல் வலிமை அடையும்; ஆண்மை பெருகும்.


முள்ளங்கி
முள்ளங்கிச் சாற்றைத் தினமும் அருந்திவர, கல்லடைப்பு மற்றும் நீர்க்கட்டு தீரும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.in

கருத்துகள் இல்லை:

விஷ ஜந்துக்கள் கடித்தால் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் குறித்து தெரிந்து கொள்ளலாம்

விஷ ஜந்துக்கள் கடித்து மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் குறித்து கீழே காணலாம். கண்ணாடி விரிய...

Popular Posts