லேபிள்கள்

சனி, 11 நவம்பர், 2017

மின்அதிர்ச்சியும் அதை தடுக்கும் முறைகளும்!

மின்அதிர்ச்சியும் அதை தடுக்கும் முறைகளும்!
நம் வாழ்க்கைக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விஷயங்களில்  மின் அதிர்ச்சிக்கும் பெரும் பங்கு உண்டு! மின் அதிர்ச்சியால் உயிர் இழப்போர்  எண்ணிக்கை ஒரு பக்கம் இருக்க , அதனால் , காயங்கள் அடைந்தோர் , உடல் ஊனமுற்றோர் நிறைய பேர்! இந்த மின் அதிர்ச்சி மிகவும் அபாயகரமானது. இதனால் ஏற்பட கூடிய இழப்புகள் மிக அதிகம்! நாம் இந்த பதிவில் , இல்லத்தில் ஏற்படும் மின் அதிர்ச்சிகளை பற்றியும் அதனை தடுக்கும் முறைகளையும் பற்றி அலச போகிறோம்.
பொதுவாக மின் அதிர்ச்சி ஏற்படும் போது என்னவெல்லாம் நேருகிறது என்று முதலில் பார்க்கலாம்.
1)மின் அதிர்ச்சி

ஏற்படும் போது
,காயங்கள் ஏற்படுகின்றன. அவை தீயினால் ஏற்படும் காயங்களை விட மிக மோசமானவை.
2)கீழறை குறு நடுக்கம்(Ventricular Fibrillation ) உண்டாகிறது. அதாவது , இதயம் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்து விடும். இதயத்தின் கீழறையில் உள்ள தசைகள் நடுங்க ஆரம்பித்து விடும். மாரடைப்பு உண்டாகும். இரத்த அழுத்தம் வீழ்ச்சியடையும். முக்கிய உறுப்புகளுக்கு இரத்த ஓட்டம் தடைப்பட்டு விடும்.

3) மின் அதிர்ச்சி , நம் உடம்பின் நரம்பு கட்டுபாட்டை கடுமையாக குறுக்கிட்டு பெருத்த பாதிப்பை விளைவிக்கும். இதனால் இருதய கோளாறும் , நுரையீரலில் பிரச்சனையும் உடனே ஏற்பட்டு விடும்.
4) கடைசியாக , மின் அதிர்ச்சி ஏற்பட்ட மனிதனின் உயிரையே வாங்கிவிடும்.
மின்சார அதிர்ச்சியானது , நம் உடம்பினுள்ளே பாய்ந்த மின்சாரத்தின் அளவினை பொறுத்து வேறுபடும். மின் அதிர்ச்சியின் போது உடம்பினுள்ளே பாயும் மின்சாரத்தின் அளவு , மின் அழுத்தத்தையும் (Voltage), நம் உடம்பின் எதிர்க்கும் தன்மையையும் (Resistance) பொறுத்த ஒரு விஷயம். மின் அழுத்தம் அதிகமாகவும் , உடம்பின் எதிர்க்கும் தன்மை குறைவாகவும் இருக்கும் பொழுது , அதிக அளவு மின்சாரம் பாயும்.
உயர் மின் அழுத்தத்தினால் ஏற்படும் மின் அதிர்ச்சியின் போது மனிதன் தூக்கி எறியப்படுவான்! 240V போன்ற குறைந்த மின் அழுத்தத்தில் , மின் அதிர்ச்சி ஏற்படும் போது , மனிதனின் தசைகள் சுருங்குகின்றன! தசைகள் சுருங்குவதால் , மனிதன் மின் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் சிக்கி கொள்கிறான்! இந்த நிலைமையும் பயங்கரமான ஒன்று தான்! அந்த நிலைமையின் தீவிரம் , அவன் எவ்வளவு நேரம் , மின் அதிர்ச்சிக்கு உள்ளாகிறான் என்பதை பொறுத்தது!
உலர்ந்த சருமம் அதிக எதிர்ப்பை காட்டும்! மேலும் , நம் உடம்பில் பாதுகாப்பு கவசம், அதாவது கைகளுக்கு ரப்பரில் ஆன கையுறைகள் , கால்களுக்கு ரப்பரில் ஆன காலணிகள் ஆகியவை அணிந்திருக்கும் போது , பெரிதாய் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் கைகள் ஈரமாக இருக்கும் பொழுது , உடம்பு வியர்த்து கொட்டும் பொழுதெல்லாம் நம் உடம்பின் எதிர்ப்பை காட்டும் தன்மை மிகவும் குறைந்து போகும். நம் உடம்பில் ஓடும் குருதியும் எதிர்ப்பை சுத்தமாக காட்டாது! அத்தகைய தருணங்களில் மின் அதிர்ச்சி ஏற்படும் பொழுது , மின்சாரம் உடம்பில் உள்ள மின்னணுக்களின் வழியாக பாயும்.அதிகமான வெப்பம் உண்டாகும். இதனால் தான் மின்சாரம் பாயும் பொழுது, உடம்பில் தீ காயங்கள் ஏற்படுகின்றன!
உயர் மின் அழுத்தத்தினால், மின் அதிர்ச்சி உண்டாகும் போது , மனிதன் கரி கட்டையாகி விடுவதுண்டு!
மின்சாரம் பாயும் கம்பியை தெரியாமல் பிடிக்கும் போதோ ,இல்லை குளியல் தொட்டியின் உள்ளே இருக்கும் போது மின் அதிர்ச்சி ஏற்படும் போதோ , எந்த வித தீக்காயங்களும் கண்ணுக்கு புலப்படாமலேயே ,மரணம் உடனடியாக ஏற்படும். ஏனெனில் , மின் அதிர்ச்சியின் தாக்கம் , நம் சருமம் எவ்வளவு பரப்பளவுக்கு மின்சாரத்தை தொட்டு கொண்டு இருக்கிறது என்பதை பொறுத்தது!
மின் அதிர்ச்சி ஏற்படாமல் தடுக்க என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அடுத்து பார்க்கலாம். அவை ,
1) வீட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் ஒட்டுமொத்த மின் இணைப்புகளுக்கும் , மண் இணைப்பு (Earthing) கொடுக்கப்பட வேண்டும்.
2)குழந்தையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட மின்குதைகுழி(Electric Socket)உபயோகப்படுத்துவது நலம் பயக்கும்.
3)வீட்டில் உள்ள மின்கம்பிகளை(Electric Wires ) , கைகளால் தொடும் போது, மின்பாயாமல் இருக்க அதன் மேல் கொடுக்கப்பட்டிருக்கும் காப்பை(Insulation ) அவ்வப்பொழுது சரி பார்த்து கொள்ளுவது நல்லது.
மிண் இணைப்பு என்றால் என்ன??
நம் வீடுகளில்
  கொடுக்கப்படும் மின் இணைப்புகளில் இந்த மண் இணைப்பு மிகவும் முக்கியமானது.  மின் இணைப்பில் , மொத்தம் மூன்று கம்பிகள் உண்டு. அவை ,
1)மின்சார கம்பி (Live
  wire )
2)மின்சாரம் இல்லா கம்பி (Neutral wire )
3)மண் இணைப்பு கம்பி (Earth
  wire )
இந்த மண் இணைப்பு கம்பியின் ஒரு முனை , வீட்டுக்கு வெளியே , மண்ணுக்கு அடியில் , மிக ஆழத்தில் , ஒரு செம்பு தகடோடு இணைக்கபட்டிருக்கும். மறு முனை நம் வீட்டில் உள்ள மெயினோடு (Main ) இணைக்கபட்டிருக்கும். மின்சாரம் , அதிக எதிர்ப்பு இல்லாத பாதையை தேர்வு செய்வதால் , இவ்வாறு மண் இணைப்பு கொடுக்கப்படும் போது , ஏதேனும் அசம்பாவிதத்தால் உண்டாகும்  மின் சக்தி எழுச்சியை(Power  Surge) , எந்த தீங்கும் விளைவதற்கு முன்னே ,பத்திரமாக மண்ணுக்கு  அனுப்பி வைத்து விடும்.
மேலும் , இந்த மண் இணைப்பானது , நம் வீட்டு உபகரணங்களையும் பாதுகாக்கவல்லது! எப்படி பாதுகாக்கிறது என்றால் , நம் வீட்டு உபகரணங்களில் காணப்படும் , மூன்று கம்பி மின்செருகி மூலமாக!
நம் வீடுகளில் உள்ள மின் உபகரணங்களில் , உலோக உடம்பை கொண்ட மின் சாதனங்களான மோட்டார்,மைக்ரோவேவ் அவன் , அயன் பாக்ஸ்  போன்றவற்றின் , உள்ளே ஏதேனும் காரணங்களால் , மின்சார  கசிவு ஏற்படுமாயின் , அந்த சாதனம் மொத்தமும் மின்சாரம் பாய ஆரம்பித்து விடும். அந்நேரம் , நாம் ஏதேச்சையாக , அதை தொட நேரின் , நம் உடம்பு வழியாக , மின்சாரம் பாய்ந்து , பூமியை அடைந்து விடும்! ஆனால் , ஒழுங்காக , மண் இணைப்பு கொடுத்திருந்தால் , இத்தகைய ஆபத்து நேராது!
மின்செருகியில்(Plug ), மொத்தம் மூன்று முள்கள்(Pins ) உண்டு.  அதிலே  காணப்படும் மூன்று முள்களில் , ஒன்று மட்டும் , அளவில் சற்று பெரியதாய் , நீளமாய் காணப்படும். அது  தான் மண் இணைப்பு முள்! அது ஏன் , அளவில் பெரியதாய் இருக்கிறது என்றால் , நாம் ஒவ்வொரு தடவையும்
மின்செருகியை , மின்குதைகுழியில்(Electric Socket)  செருகும் போதும், மற்ற இரு முற்களை காட்டிலும் , முதன்மையாக இந்த மண் இணைப்பு முள் இணைந்து கொள்கிறது! மேலும் , நாம் ஒவ்வொரு தடவையும், மின்செருகியை நீக்கும் போது, கடைசியாக இணைப்பில் இருந்து நீங்குவது , இந்த மண் இணைப்பு முள் தான்!இவ்வாறு மண் இணைப்பு, தொடர்ச்சியாக கிடைப்பதால் , நம் பாதுகாப்பு அதிகரிக்கிறது! மேலும் , மின்செருகியை , தவறாக  யாரும் செருகி விடக் கூடாது என்பதற்காகவும் , பாதுகாப்பை மனதில் கொண்டும்  , மண் இணைப்பு முள்ளின் அளவை , மற்ற இரு முற்களை காட்டிலும் , சற்றே அதிகரித்து இருக்கின்றனர்!
குழந்தையின் பாதுகாப்பை மனதில் வைத்து உருவாக்கப்படும், மின்குதைகுழியில் , குழிகள்(Holes) சார்த்தி(close) வைக்க படுகின்றன!  எப்பொழுது , மண் இணைப்பு முள் , மின்குதை குழியில் , உள்நுளைகிறதோ , அந்த சமயங்களில்  மட்டும், இந்த சார்த்தி(Shutter ) திறந்து கொள்ளும்!  ஆக , குழந்தைகள் விளையாட்டு போக்கில் , எதையும் இந்த மின்குதைகுழியில்(Electric Socket) நுழைத்து விட முடியாது!
ஒருவாறு மண் இணைப்பின் அவசியத்தை உணர்ந்தாயிற்று, இப்பொழுது இந்த மண் இணைப்பில் ஏதேனும் தவறு , உங்கள் அறிவுக்கு எட்டாமல் நிகழ்ந்து விட்டால் என்ன செய்வது???
என்னம்மா குண்ட தூக்கி போடுற என்று அலறி விட்டீர்களா?? பதட்டம் வேண்டாம்.. அத்தகைய சூழ்நிலையை சமாளிக்கவும் வழி இருக்கிறது! அது தான்
  RCD  என்று அழைக்கப்படும் Residual current  detectors. இதை RCCB(Residual  current circuit breakers ) என்றும் அழைப்பர்!
இந்த RCD  என்றால் என்ன??
RCD என்பது  , மின்சார அதிர்ச்சி ஏதும்  ஏற்படாமல் நம்மை முழுமையாக பாதுகாக்கும் ஒரு சாதனம்! சொன்னா நம்ப மாட்டீங்க , இந்த RCD பாதுகாப்பு இருக்கும் பொழுது , தெரியாமல் மின்சாரம் பாயும் கம்பியை தொட்டு விட்டால் கூட , எந்த வித மின் அதிர்ச்சியும் ஏற்படாது! ஆச்சரியமாக இருக்குது அல்லவா
இந்த RCD எப்பொழுதெல்லாம் , தனக்கு வரையறுக்கப்பட்ட பாதையை விட்டு விலகி பாயும் மின்சாரத்தை கண்டு கொள்கிறதோ, அப்பொழுதெல்லாம் , கண் இமைக்கும் பொழுதில் , செயல்பட்டு ,தவறு நேர்ந்த மின்சார உபகரணத்துக்கு , மின்சார விநியோகத்தை  நிறுத்தி விடும்! இதனால் , மின் அதிர்ச்சி எதுவும் ஏற்படுவது தவிர்க்கபடுகிறது!
அப்போ இந்த RCD போதுமா?? மண் இணைப்பு அவசியம் இல்லையா?? என்று நீங்கள் யோசனை செய்வது புரிகிறது! இரண்டுமே அவசியம் தான்!  மின் இணைப்புகளில்  ஏற்படக்கூடிய தவறுகள் இரண்டு ,
1)குறுகிய சுற்று (Short Circuit )
2)அதிகப்படியான மின் சுமை (Over Load Power
  )
1)குறுகிய சுற்று
மின்சாரம் தனக்கு வரையறுக்கப்பட்ட பாதையை விட்டு விலகி , வேறு அதிக எதிர்ப்பு இல்லாத பாதையை தேர்ந்து எடுத்து கொள்வதே குறுகிய சுற்று! உங்கள் வீட்டு மிக்சியை போடுகிறீர்கள்! மின்சாரம் மின்செருகி வழியாக நுழைந்து , மிக்சியின் உள்ளே இருக்கும் மோட்டாரை சுற்றினால் தான் , சட்னியை அரைக்க முடியும்!
  மிக்சியின் காப்பிடப்பட்ட , மின்கம்பி , காப்பு பிரிந்தது அறியாது நீங்கள் கை வைத்து அதை தொட்டு விடும் போது , உங்கள் கை வழியே ஒரு குறுகிய சுற்று உண்டாகி விடுகிறது!  அவ்வாறு குறிகிய சுற்று உண்டாகும் போது , மின்சார கம்பியில் , அதிகப்படியான மின்சாரம் பாயும்! அதாவது , சாதரணமான நிலையில் , மிக்சியை போடும் போது , அதனுடைய மின்சார கம்பியில் பாயும் மின்சாரத்தை காட்டிலும் அதிக அளவு மின்சாரம் பாயும்! இவ்வாறு , தவறு நேரும் போது , பாயும் மின்சாரத்தின் அளவை உணர்ந்து , உடனடியாக , அந்த உபகரணத்துக்கு , மின்சார விநியோகத்தை நிறுத்தி விடும் இந்த RCD. இதனால் உபகரணத்துக்கும் பாதுகாப்பு , மிக்சியை உபயோகம் செய்தவருக்கும் பாதுகாப்பு!
2)அதிகப்படியான மின் சுமை(Power Over  Load)
மின் சுமை என்பது யாதெனின் , ஒரே நேரத்தில் , பல வீட்டு உபகரணங்களை உபயோகிக்கும் போது , மின்சாரத்தின் அளவு , மின்சார கம்பி அதனை தாங்கி கொள்ளும் அளவினை விட அதிகமாக இருக்கும் பொழுது , அதற்கு ஏற்றாற் போல் உருகி எல்லாம் அமைய பெற்றிருந்தால் , எந்த ஒரு பிரச்சனையும் இல்லை! உருகியானது , தன்னை தானே , உருக்கி கொண்டு , மின்சாரத்தை நிறுத்தி விடும்! ஆனால் , உருகி , சரியாக தேர்ந்தெடுக்க படாமல் போகும் போது , அது உருகாது! மாறாக , மின்சாரத்தை தடுத்து நிறுத்தாமல் ,  ஓட விட்டு விடும்! அத்தகைய நிலைமையில் என்ன நடக்கும் , மின்சாரகம்பி சூடாகி , தீ பிடித்து எரிய ஆரம்பித்து விடும்! நினைத்தாலே , அடி வயிறு கலங்குகிறது அல்லவா! இது போன்ற பேராபத்து , எதுவும் வராமல் காப்பதே இந்த RCD யின் வேலை!
மண் இணைப்பு மிக அவசியம் தான்!  ஏனெனில் , தவறுதலாய் பாயும் மின்சாரம்  , மண் இணைப்பு கொடுத்திருந்தால் , எந்த பிரச்சனையும் இல்லாமல் , மண்ணுக்குள் பாய்ந்து விடும்.
RCD யானது , தவறுதலாய் பாயும் மின்சாரத்தை , எந்த ஒரு பயங்கரமும் நேருவதற்கு முன்னே , உடனடியாக உணர்ந்து , மின்சார விநியோகத்தையே  நிறுத்தி விடும்!
இது இருந்தால் அது தேவை இல்லை , அது இருந்தால் இது தேவை இல்லை என்று நினைக்காதீர்கள்! இரண்டுமே அவசியம்!இரண்டுமே , நம் இரு கண்கள் போல தான்! RCD யால் நம் குடும்பத்தினரின் பாதுகாப்பு இன்னும் அதிகரிக்குமே தவிர குறையாது!
என்ன எலெக்ட்ரீசியனை பார்க்க கிளம்பிடீங்க போல!!


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வியாழன், 9 நவம்பர், 2017

மூன்று மாத ‘இத்தா’ ஏன்?

மூன்று மாத 'இத்தா' ஏன்?
குர்ஆனை ஆராய்ந்து அதன் அறிவியல் உண்மைகளை கண்டறிந்து பல கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் இஸ்லாதை தனது வாழ்வியல் நெறியாக ஆக்கிக்கொண்டுள்ளனர். குர்ஆன் மனிதனுக்கு ஏற்ற வேதம் என்பதை அதன் கருத்துக்களும் கட்டளைகளுக்கும் பல வகைகளில் நிருபித்து கொண்டு இருகின்றது. நவீன காலத்தில் கண்டுபிடித்து சொல்லபடுபவைகளை குர் ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியிருப்பதை கண்டு பல ஆய்வார்கள் இஸ்லாத்தில் தன்னை இணைத்து கொண்டுள்ளனர்.

அந்த வரிசையில் யூத மதத்தை சேர்ந்த ராபர்ட் கில்ஹாம் என்ற மருத்துவர் அவரின் மருத்துவ ஆய்வு முடிவுகளை குர் ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறி இருப்பதை கண்டு வியந்து இஸ்லாத்தை தழுவி உள்ளதாக சூடானில் இருந்து வெளிவரும் "சூடான் விஷன் " என்ற  தினசரி பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
சூடானை சேர்ந்த பேராசிரியர் ஹாஸிம் மசாவின் நண்பரான ராபர்ட் கில்ஹாம், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவ ஆய்வு நிறுவனத்தில் மரபணுரீதியான ஆராய்சிகளில் ஈடுபட்டு வந்தார். குறிப்பாக இவர் கணவன் மூலம் மனைவியிடம் ஏற்படும் மரபணு தடயங்களை ஆய்வு செய்துவந்தார். கணவனை விட்டு ஒரு மனைவி பிரிந்தாலும் கணவனின் மரபணு தடயங்கள் மனைவியிடம் இருந்து உடனே மறைவதில்லை, கணவனை விட்டு பிரிந்த பிறகும் 3 மாதத்திற்க்கு அந்த மரபணு தடயங்கள் மனைவியிடம் இருக்கும் என தனது ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்.
அதாவது கணவனை பிரிந்த மனைவி 3 மாதத்திற்க்குள் வேறு ஒருவரை திருமணம் செய்து பின்னர் அவரால் பிறக்கும் குழைந்தைகளை மரபணு பரிசோதனை செய்து பார்த்தால் முந்ததையை கணவரின் மரபணுவின் தடயங்களும் அந்த குழந்தைகளிடம் இருக்கும். இரண்டாவது கணவர் இப்படி தனது குழந்தைகளை மரபணு சோதனை செய்து இவன் எனக்கு பிறக்கவில்லை என முடிவு செய்துவிட்டால் அந்த குழந்தையின் எதிர்காலம் பாதிக்கபடும். எனவே கணவனை பிரிந்த மனைவி 3 மாத்திற்க்கு பிறகு வேறு ஒருவரை திருமணம் செய்தால் புதிய கணவருக்கு பிறக்கும் பிள்ளைகளை மரபணு சோதனைக்கு உட்படுத்தினால் பழைய கணவரின் மரபணு தடயங்கள் இருக்காது என்பதுதான் அவரின் ஆயுவின் முடிவுகள்.
இந்த ஆய்வு முடிவை ராபர்ட் கில்ஹாம் தனது முஸ்லீம் நண்பரான பேராசிரியர் ஹாஸிம் மசாவிடம் கூறுகையில் இதை இஸ்லாம் எங்களுக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி கொடுத்துள்ளது, கணவன் மனைவியிடயே விகாரத்து நடந்தால் மனைவி 3 மாதம் இத்தா இருக்க வேண்டும் அதாவது அந்த 3 மாதமும் அந்த பெண்மணி வேறு யாரையும் திருமணம் செய்ய கூடாது என இஸ்லாத்தில் உள்ள விவாகரத்து சட்டத்தை விளக்கியுள்ளார். இதை கேட்டு வியந்து போன மருத்துவர் ராபர்ட் கில்ஹாம் இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்று கொண்டுள்ளார். தனது நண்பர் இஸ்லாத்தை தழுவிய இந்த நற்செய்தியை பேராசிரியர் ஹாஸிம் மசாவி தனது மற்றொரு நண்பரான பேராசிரியர் முஹம்து அப்துல்லாஹ் அல்-ரயாஹ்விடம் தெரிவித்துள்ளார், இந்த பேராசிரியர் முஹம்து அப்துல்லாஹ் அல்-ரயாஹ் அவர்களின் கட்டுரைதான் சூடான் நாட்டு பத்திரிக்கையான "சூடான் விஷன் " வெளியிட்டுள்ளது.
பின்னர் இந்த செய்தி உலகின் பல்வேறு பத்திரிக்கைகளின் வெளியானது, இந்த செய்தியினால் இன்னும் பலர் இஸ்லாத்தை தழுவி விடுவார்களே என அஞ்சிய யூதர்கள் இந்த செய்தி உண்மையில்லை எனவும், ராபர்ட் கில்ஹாம் என்று ஒரு மனிதரே இல்லை எனவும் பொய் பிரச்சாரம் செய்தனர். உடனே யூதர்களின் இந்த பொய் பிரச்சாரத்திற்க்கு மறுப்பு தெரிவித்து பேராசிரியர் முஹமது அப்துல்லாஹ் அல்-ரயாஹ் அவர்கள் மீண்டும் ஒரு கட்டுரையை சூடான் விஷம் பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளார். அதில் அவர்…  ராபர்ட் கில்ஹாம் இஸ்லாத்தை தழுவியது உண்மை எனது நண்பர் பேராசிரியர் ஹாஸிம் மசாவின் நண்பர்தான் ராபர்ட் கில்ஹாம் என்பவர், இதை பொய் என சொல்பவர்கள்தான் பொய் சொல்கின்றார்கள். இஸ்லாத்தின் வளர்ச்சியை பொருக்க முடியாதவர்கள்தான் இப்படி உண்மையை மறைக்க பார்க்கின்றனர். என தனது தகவலை மறுத்தவர்களை கண்டித்துள்ளார்…யார் இஸ்லாத்திற்க்கு எதிராக என்ன பொய் பிரச்சாரம் செய்தாலும் அல்லாஹ் தனது மார்க்கத்தை மேலோங்க செய்தே வைத்து இருகின்றான். அல்ஹம்துலில்லாஹ்…
இந்த செய்தி கடந்த ஆண்டு சூடானில் இருந்து வெளிவரும் "சூடான் விஷன்" என்ற தினசரி பத்திரிக்கையில் வெளிவந்துள்ளது..


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

செவ்வாய், 7 நவம்பர், 2017

தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை
தன்னம்பிக்கை ஒரு மனிதரை தன்னம்பிக்கை மிக்கவர் என்று நாம் சொல்லுகிறோம் என்றால் அவர் எந்தச் சூழலிலும் எந்த புதிய இடத்திலும் தன் சமநிலையை (Balanced State of Mind) தவறவிடாமல் மனதில் துளியும் அச்சமில்லாமல் மிக எளிதில் அந்தச் சூழலில் அந்த இடத்தில் நடத்திக்கொள்ளும் ஆற்றல் மிக்கவர் என்று பொருள் கொள்ளலாம். ஆங்கில அகராதியில் self–confidence என்றசொல்லிற்கு பொருளைப் படித்துப் பார்த்தால் Belief in one's own abilities என்றிருக்கிறது. அதாவது ஒருவர் தன் திறமைகளின் ஆற்றல்களின் மேல் வைத்துள்ள நம்பிக்கை.
அவரால் எந்தச் சூழ்நிலையிலும் அசௌகரியமாக உணராமல் சௌகரியமாக (Comfortable) உணர்கிறார் என்று பொருள். அவருடைய Comfort zone எல்லை பரந்து விரிந்திருக்கிறது.உங்கள் தன்னம்பிக்கையை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்றால் உங்களுடைய Comfort Zone எல்லையை மேலும் மேலும் விஸ்தரித்துக் கொண்டே செல்ல வேண்டும். இந்த உங்களின் Comfort zone எல்லையை அதாவது உங்களின் தன்னம்பிக்கை அளவை எப்படி அதிகரித்துக் கொள்வது?
உங்களின் தன்னம்பிக்கையை உயர்த்திக் கொள்ள நீங்கள் செய்ய வேண்டிய மூன்று முக்கிய, தலையாய விஷயங்கள் என்னவென்றால்…

  1.     அறிவாற்றல் (Knowledge) பெருக்கிக் கொள்ளல்
  2.     செயலாற்றல் (Functional Skill) வளர்த்துக் கொள்ளல்
  3.     நேர்மறை மனோபாவம் (Positive Mental Attitude) உருவாக்கிக் கொள்ளல்.
ஒரு வரைபடத்தின் மூலம் இந்த தன்னம்பிக்கை வளர்ச்சியை புரிந்து கொள்ள முயல்வோம்.
இதன் அடிப்படையில் தான் கல்வி முறையை உருவாக்கிய அறிஞர்கள் வகுப்பறையில் ஆசிரியர்கள் வாயிலாக அறிவாற்றலைப் பெருக்கு வதற்கும், பெற்றஅறிவை, கற்ற செய்திகளை வாழ்க்கையில் பயன்படுத்தி வெற்றி காண்பதற்காக செயலாற்றலை வளர்த்துக் கொள்ள கல்வித் திட்டத்தில் சோதனைச்சாலை செயல்முறைப் பயிற்சிகளும், தொழில்முறை பழகுனர் பயிற்சிக்கால பணியும், மாதிரி திட்ட அல்லது துறைசார்ந்த திட்ட அறிக்கைகள் தயாரித்தல், பணியிடங்களை பார்வை செய்தல் முதலிய செயலாற்றல் வளர்ச்சி பயிற்சிகளும் உள்ளன.
துரதிஷ்டவசமாக நேர்மறை மானோபாவத்தை Positive Mental Attitude (PMA) எப்படி வளர்த்துக் கொள்ளுவது என்பதைப் பற்றி எந்த பல்கலைக் கழகங்களும் பாடத்திட்டம் வைத்திருக்கவில்லை. ஒவ்வொருவரும் அவர்களாக பாடத்திட்டம் வைத்திருக்கவில்லை. ஒவ்வொருவரும் அவர்களாகவே வாழ்க்கையில் பட்டறிவின் மூலம் இந்த மானோ பாவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.
நேர்மறை மனோபாவம் என்பது எல்லா செயல்பாடுகளிலும் நன்மை தரத்தக்கவைகளையே பார்க்கிற மனபாவம். Try to Profit out from the Loses என்பது போல சாதகமற்றவைகளில் சாதகமான அம்சங்களை பார்க்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும். நம்முடைய பழக்கத்தில் "புத்திக்கொள்முதல்" என்று ஒரு வழக்குச் சொல் பழக்கத்திலிருக்கிறது. இது எதைக் குறிக்கிறது என்றால் ஒரு செயல்பாடு எதிர்பார்த்த பலனைத் தராதபோது அந்த அனுபவம் நமக்கு ஒரு அறிவூட்டும் அனுபவமாக ஆகிறபோது அது நமக்கு "புத்திக் கொள்முதல்" தானே.
நீங்கள் எவ்வளவுதான் அறிவாற்றலிலும், செயலாற்றலிலும் திறமைசாலியாக இருந்தாலும் இந்த நேர்மறை மனோபாவம் இல்லையென்றால் வெற்றி பெறவியலாது. வாழ்க்கையின் தலையாய இலட்சியமாக "ஆனந்தம்" என்பதை அனுபவிக்கவும் இயலாது.
அறிவாற்றலைப் பெருக்கிக் கொள்ள "ஆர்வத்தை உருவாக்குங்கள்" புதியன அறிந்து கொள்ள வேண்டும் என் "Inquestive Nature" உங்கள் பண்பாக மாறட்டும். புத்தகங்களை நேசியுங்கள். நிறைய வாசியுங்கள். ஒரு Intellectual Personality (அறிவார்ந்த ஆளுமை)யை வளர்த்துக்கொள்ளுங்கள். கற்றவர்களோடும். நட்பை உருவாக்கிக்கொள்ளுங்கள். உங்களது இல்லத்தில் ஒரு சிறிய நூலகத்தை உருவாக்குங்கள். வாசித்த விஷயங்களை நண்பர்களோடும் அறிஞர்களோடும் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் கலந்துரையாடுங்கள்.
நன்றி: மாசிலாமணி ந


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

ஞாயிறு, 5 நவம்பர், 2017

கஞ்சி தண்ணிய குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்


கஞ்சி தண்ணிய குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

இன்றைய காலத்தில் பிரஸர் குக்கர், எலக்ட்ரிக் குக்கர் வந்துவிட்டதால், பலரும் அக்காலத்தில் சாதம் வடித்து சாப்பிடும் முறையை மறந்துவிட்டனர். ஆனால் சாதத்தை குக்கரில் சமைத்து சாப்பிடுவதை விட, வடித்த சாதம் சாப்பிடுவது தான் நல்லது.

அதுமட்டுமின்றி அப்படி வடித்த சாதத்தின் போது வடிகட்டிய நீரில் சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. சொல்லப்போனால் சாதத்தை விட, அந்த நீரில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது எனலாம்.

அக்காலத்தில் நம் முன்னோர் அரிசி சாதத்தை சாப்பிட்டும் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு, அவர்கள் கடுமையாக உழைத்தது மட்டுமின்றி, இந்த சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை குடித்து வந்ததும் என்று கூட சொல்லாம்.
சாதம் வடிச்ச கஞ்சி தண்ணிய குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!



எனர்ஜி :-
சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடித்தால், உடலின் ஆற்றல் தக்க வைக்கப்படும். அதனால் தான் விவசாயிகள் காலையில் விவசாயம் செய்ய தோட்டத்திற்கு செல்லும் முன் வடித்த கஞ்சி நீரை குடித்து வருகிறார்கள். இதனால் அவர்கள் நன்கு எனர்ஜியுடன் நீண்ட நேரம் வெயிலில் வேலை செய்ய முடிகிறது

இரைப்பைக் குடல் அழற்சி :-
சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் இரைப்பைக் குடல் அழற்சியைத் தடுக்கும். ஆகவே அவ்வப்போது சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடித்து வாருங்கள்.

உடல் வெப்பத்தைத் தணிக்கும் :-
சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் உடலின் வெப்பநிலையை சீராக பராமரிக்க உதவும். அதனால் தான் கோடையில் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடிக்க சொல்வார்கள் நம் முன்னோர்கள்.

புற்றுநோயைத் தடுக்கும் :-
வடிச்ச கஞ்சி தண்ணீரை ஒருசில புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கும் திறன் கொண்டவை. ஆகவே புற்றுநோய் உள்ளவர்கள் இதனை குடித்து வந்தால், புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கலாம்.

மலச்சிக்கல் :-
சாதம் வடித்த கஞ்சித் தண்ணீர் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். எப்போது நீங்கள் மலச்சிக்கலால் அவஸ்தைப்படுகிறீர்களோ, அப்போது ஒரு டம்ளர் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

கார்போஹைட்ரேட் :-
சாதம் வடித்த கஞ்சி தண்ணீரில் கார்போஹைட்ரேட் வளமையாக நிறைந்துள்ளது. ஆகவே உடல் எடையை அதிகரிக்க நினைப்போர் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை தினமும் குடித்து வந்தால், நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.

சூரியனிடமிருந்து நல்ல பாதுகாப்பு தரும் :-
சாதம் வடித்த கஞ்சி தண்ணீரில் உள்ள ஓரிசனோல் என்னும் பொருள், சூரியனின் புறஊதாக் கதிர்களில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும். அதுவும் சருமத்தின் உட்பகுதியிலும் சரி, வெளிப்பகுதியிலும் சரி.
http://www.tamilyes.com/t52406-topic
--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வெள்ளி, 3 நவம்பர், 2017

பிறப்புச் சான்றிதழ் பெறும் வழிகள்! ஒரு டஜன் யோசனைகள்!!

பிறப்புச் சான்றிதழ் பெறும் வழிகள்! ஒரு டஜன் யோசனைகள்!!

 
பிறப்புச் சான்றிதழ் பெறும் வழிகள்!வாழ்க்கையில் நாம் செய்தாக வேண்டிய பல்வேறு விஷயங்களை அதிக சிரமமின்றி செய்து முடிக்க உதவும் 'ஒரு டஜன் யோசனைகள்' பகுதியில், இந்த இதழில் இடம்பெறுவது... உங்கள் வீட்டுக்குப் புதுவரவாக வரும் சின்னஞ்சிறு மனிதர்களுக்குப் பெறவேண்டிய முக்கிய மற்றும் முதல் அரசு ஆவணமான பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்கான வழிமுறைகள்!
குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் குழந்தையின் பிறப்பை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இதற்குக் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. கிராமத்தில் வசிப்பவர்கள் கிராம நிர்வாக அலுவலரிடமும்... பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சியில் வசிப்பவர்கள் சுகாதார ஆய்வாளரிடமும் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த உடனே சம்பந்தப்பட்ட அதிகாரி, குழந்தையின் பிறப்பை உறுதி செய்து ஆவணத்தை வழங்குவார். 15 நாட்களுக்குள் குழந்தையின் பிறப்பு இணையதளத்திலும் பதிவு செய்யப்படும்.

 குழந்தை பிறந்த மருத்துவமனை யிலேயே கூட பதிவு செய்ய முடியும். குடும்ப அட்டையின் நகல், குழந்தைக்குப் பெயர் வைத்திருந்தால், அதையும் சேர்த்துப் பிறப்பை பதிவு செய்துகொள்ளலாம். சம்பந்தப்பட்ட மருத்துவமனை, உங்கள் குழந்தையின் பிறப்பை, பிறப்பு - இறப்புப் பதிவு அலுவலரிடம் பதிவு செய்து, அதற்கான அத்தாட்சி ரசீதை உங்களுக்கு தரும். அதை, பிறப்பு - இறப்புப் பதிவு அலுவலரிடம் கொடுத்து சான்றிதழைப் பெற்றுகொள்ளலாம்.

குழந்தை பிறந்து 21 நாட்களுக்குள் பிறப்பை பதிவு செய்யவில்லை எனில், காலதாமதக் கட்டணம் செலுத்த வேண்டும். 30 நாட்களுக்குள் பிறப்பை பதிவு செய்யும்போது கட்டணமாக 2 ரூபாய் செலுத்த வேண்டும். 30 நாட்களுக்குப் பிறகு, ஒரு வருடத்துக்குள் எப்போது பதிவு செய்தாலும் தாமதக் கட்டணம் ரூபாய் 5. குழந்தை பிறந்து ஒரு வருடத்துக்குள் பதிவு செய்யாவிட்டால், பிறகு நீதிமன்றத்தில் முறையிட்டு, சார்பதிவாளர் அலுவலகத்தில்தான் பதிவு செய்ய முடியும். பல வருடங்களாகியும் நீங்கள் பிறப்புச் சான்றிதழ் வாங்காமல் இருந்தாலும் நீதிமன்றத்தில் முறையிட்டு, சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிந்துதான் நீங்கள் பிறப்புச் சான்றிதழ் வாங்க வேண்டும்.

பிறப்புச் சான்றிதழ் பெறும்போது குழந்தைக்குப் பெயர் வைக்கப்படாமல் இருந் தால், பின்னர் குழந்தையின் ஒரு வயதுக்குள் மீண்டும் சம்பந்தப்பட்ட அலுவலகம் சென்று, சான்றிதழில் குழந்தை யின் பெயரைப் பதிந்து பெற்றுக் கொள்ளலாம்.
 சான்றிதழில் குழந்தையின் பெயரில் ஏதேனும் எழுத்துப்பிழை அல்லது தவறு இருந்தால் பிறப்பு /இறப்பு பதிவாளரிடம் மனு செய்து திருத்திக்கொள்ளலாம். பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென்றால், செய்தித்தாள்களில் அறிவிப்பாக வெளியிட்டு, பின்னர் முறையாக விண்ணப்பித்து, அரசு கெஜெட் மூலமாக மட்டுமே மாற்றமுடியும்.
 பிறப்புச் சான்றித ழில் பெற்றோரின் பெயர் அல்லது முகவரியில் பிழை இருந்தால், பெயர் பதிவு செய்த அலு வலகத்தில் பெற்றோரின் வாக்காளர் அடையாள அட்டை அல்லது குடும்ப அட்டையைக் கொடுத்து திருத்தத்துக்கு விண்ணப் பிக்கலாம்.
 பிறப்புச் சான்று எங்கெல்லாம் கட்டாயம்?
பள்ளிச் சேர்க்கை, பாஸ்போர்ட், சட்டபூர்வ ஆவணங்கள் பெற, இன்ஷூரன்ஸ் க்ளெய்ம், சொத்துப் பிரிவினைகள், புதிய வாக்காளர் அட்டை பெற.
பிறந்த தேதி, பிறந்த இடம், பெற்றோர் பெயர்கள் போன்றவற்றுக்கு பிறப்புச் சான்றிதழ் மட்டுமே முதன்மை சட்டபூர்வ ஆவணம் என்பதை நினைவில் கொள்க.

தாய், பிரசவத்துக்கு பிறந்த வீட்டுக்கு வந்து, அந்த ஊர் மருத்துவமனையில் குழந்தை பெற்றிருக்கலாம். அதுபோன்ற சந்தர்ப்பங்களில், குழந்தை எந்த ஊரில் பிறந்ததோ அந்த ஊரில்தான் பிறப்பை பதிவு செய்ய முடியும். குழந்தையின் பெற்றோ ருடைய வசிப்பிடத்தில் பதிவு செய்ய முடியாது.

பிறப்புப் சான்றிதழுக்கு உரிய அனைத்து விதிகளும் இறப்புச் சான்றிதழ் பெறுவதற்கும் பொருந்தும். ஒருவரின் வசிப்பிடம் எதுவாக இருந்தாலும், எந்த ஊரில் இறக்கிறாரோ அங்குதான் இறப்பினைப் பதிவு செய்து சான்றிதழ் பெற முடியும். ஒருவர் இறந்து ஒரு வாரத்துக்குள் அவரது இறப்பினை பதிவு செய்ய வேண்டும். 21 நாட்களுக்குப் பிறகு என்றால், சார்பதிவாளர் அலுவலகத்தில்தான் இறப்புச் சான்றிதழைப் பெற இயலும்.

சில இடங்களில் அலுவல் தேவைக்கு குழந்தையின் அசல் பிறப்புச் சான்றிதழ் கேட்பார்கள். இதனால் எத்தனை எண்ணிக்கை யில் நகல்கள் வேண்டுமோ அதைக் குறிப்பிட்டு, உரிய அலுவலகத்தில் விண்ணப்பித்து, அதற்குரிய கட்டணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.

பிறப்புச் சான்றிதழ் தொலைந்து விட்டால். சான்றிதழின் நகலுடன் குடும்ப அட்டையை இணைத்து... நீங்கள் இதற்கு முன் எங்கு பதிவு செய்தீர் களோ, அதே அலுவலகத்தில் மீண்டும் விண்ணபிக்கலாம். உங்களிடம் நகலும் இல்லையென்றால்... குடும்ப அட்டையின் நகல், நீங்கள் பிறந்த தேதி, பிறந்த இடம் ஆகியவற்றை கூறினால் போதும். இதற்கான கட்டணம் 20 ரூபாய்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

புதன், 1 நவம்பர், 2017

கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் கவனிக்க வேண்டிய 8 வழிகள்!

கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் கவனிக்க வேண்டிய 8 வழிகள்!

கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் கவனிக்க வேண்டிய 8 வழிகளை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியின் கண் சிகிச்சைப் பிரிவுப் பேராசிரியர் கே. கண்மணி.
* உரிய மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சிறந்த நிறுவனத்தின் தரமான தயாரிப்பைப் பயன்படுத்த வேண்டும்.


* அணிவதற்கான பயிற்சியினைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
* முகம் பார்க்கும் கண்ணாடி முன் நின்று அணிய வேண்டும்.
[You must be registered and logged in to see this image.]
* மின் விசிறியை அணைத்துவிட்டு அணிய வேண்டும். இல்லாவிட்டால் லென்ஸ் காற்றில் பறக்கும் வாய்ப்பு உண்டு.
* லென்ஸ் தவறி விழுந்தாலும், கீறல் ஏற்பட்டுவிடாதபடி கீழே ஒரு சுத்தமான துணி இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
* நகக் கீறல் லென்ஸில் ஏற்படாமல் இருக்க நகத்தை ஒட்ட நறுக்க வேண்டும்.
* கண்ணுக்குச் சொட்டு மருந்து போடும்போது லென்ஸைக் கழற்றிவிடவும்.
* லென்ஸ் அணிபவர்கள் கண்ணுக்கு மை போடக்கூடாது.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

ஞாயிறு, 29 அக்டோபர், 2017

சோர்வு அதிகமாக இருக்கா ?

சோர்வு அதிகமாக இருக்கா ?

இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் பெண்களுக்கு சோர்வு, அமைதியின்மை, மயக்கம், போன்றவை
ஏற்படுவது சகஜம். இ?து போன்று அடிக்கடி ஏற்பட்டால் அது ஏதேனும் உடல் கோளாறின் அறிகுறியாக
இ?ருக்கலாம். அதனால் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது அவசியம். குடும்ப டாக்டரிடம் ஆலோசனை
பெறலாம். ஆனால் சில பெண்களுக்கு வேலைக்குச் செல்வதாலும்,வீட்டில் அயராத வேலைகள் இ?ருப்பதாலும்
உடலில் சத்து குறைந்து பலகீனம்
ஏற்படலாம். இ?வற்றை சரிவிகித உணவு முறை பழக்கத்தின் மூலம் மாற்றிவிடலாம். புத்துணர்ச்சியுடன்
விளங்கலாம்.


பெரும்பாலான பெண்களுக்கு காலை உண்வு சாப்பிடுவதற்கு நேரம் ?ருக்காது. அதற்காக காலை உணவை
தவிர்த்துவிடுகின்றனர். அவ்வாறு செய்வது மிகவும் தவறு. இரவில் நீண்ட நேர தூக்கத்திற்கு பிறகு அன்றைய
நாளில் உடலும் மனமும் நன்கு வேலை செய்யத் தயாகராக இ?ருக்கும். அப்போது அதற்குரிய சத்துக்களை
தந்தால்தான் அன்று முழுவதும் சுறுசுறுப்பாக வேலை செய்யமுடியும். மேல் நாட்டில் காலை உண்வைத்தான்
முக்கியமாக கருதுவார்கள்.

அவ்வாறு காலை வேளையில் அமர்ந்து ஆற அமர சாப்பிட முடியாதவர்கள் சத்து மாவில் கஞ்சி செய்து
சாப்பிடலாம். பாதம் பருப்பு நான்கு என்ற கணக்கில் எடுத்து இ?ரவில் ஊறப் போட்டு விடவேண்டும்.
காலையில் அந்த பருப்பு தோல் நீக்கி சாப்பிடலாம். பேரீச்சம் பழங்களை சாப்பிடலாம். ஏதாவது முளை
கட்டிய பயறு வகையை சேர்த்துக் கொள்வது அவசியம். நெய் கொழுப்பு சத்து மிகுந்தது என்று கூறப்பட்டாலும்
பலகீனமான பெண்களுக்கு ஊட்டம்
தரக்கூடியது, துவரம் பருப்பு, பயத்தம் பருப்பை குழைய வேகவிட்டு, அதில் ?ரண்டு டீஸ்பூன்கள் நெய் கலந்து
சாப்பிட்டு வர உடலுக்கு தெம்பு கிடைக்கும்.

நெல்லிக்காய்களை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது. நெல்லிக்காய் கிடைக்காத காலத்தில் நெல்லிவத்தில்
தயிர் கலந்து பச்சடி போல் உண்ணலாம். மிக களைப்பாக உணரும் போது மிதமான சூடில் உள்ள வெந்நீரில் ஒரு
டீஸ்பூன் தேன் கலந்து பருகலாம். எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து பருகலாம். மோரில் சுக்கு மற்றும்
புதினா கலந்து பருகினால் புத்துணர்வு கிடைக்கும்.

வாரம் ஒரு முறையாவது ஏதேனும் பழச்சாறு அல்லது காய்கறிச்சாற்றை வீட்டிலேயே செய்து நிறைய குடிப்பது
நல்லது. பீட் ரூட், காரட் போன்றவற்றிலிருந்து சாறு எடுத்துக் குடிக்கலாம். வேப்பங்கொழுந்துகளை
அவ்வப்போது பறித்து மென்று தின்ன வேண்டும். சற்று கசக்கும் ஆனாலும் பரவாயில்லை
http://www.tamilyes.com/t52454-topic

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வெள்ளி, 27 அக்டோபர், 2017

உங்கள் படுக்கை பாதுகாப்பானதா?

உங்கள் படுக்கை பாதுகாப்பானதா?


நள்ளிரவிலோ, உறக்கம் கலையும் விடியற்காலையிலோ சிலருக்கு அடுக்கடுக்கான தும்மலும், சில நேரங்களில் இருமலும் பாடாகப்படுத்தும். கண்களில் எரிச்சலும் ஏற்பட்டு தூங்க விடாமல் செய்யும். நல்லாத்தானே இருந்தோம்… திடீர்னு ஏன் இப்படி? சளி பிடிக்கப் போகுது போல…" என முன்ஜாக்கிரதை முத்தண்ணா-முத்தம்மாக்களாக இருமல், தும்மலுக்கான மாத்திரைகளை சாப்பிட்டு அந்த நேர இம்சையிலிருந்து தப்பித்து விடுவார்கள். அந்த திடீர் இருமல், தும்மலுக்கான காரணம் மட்டும் தெரியாது!கண்ணுக்கு தெரியாமல் தலையணை, மெத்தைகளில் வாழும் டஸ்ட் மைட் (Dust mites) பூச்சிகள்தான் இதற்குக் காரணம்" என்கிறார் அலர்ஜி மற்றும் ஆஸ்துமா சிறப்பு மருத்துவர் ஜரீன் முகமத்.

நமது படுக்கையில் வாழும் இந்தப் பூச்சிகள் செய்யும் தீங்குகள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து பேசுகிறார் அவர்.டஸ்ட் மைட் பூச்சிகள் நேரடியாக கண்ணுக்குத் தெரியாது. மைக்ராஸ்கோப்பில் மட்டுமே பார்க்க முடியும். இவை பல நாட்களாக சுத்தம் செய்யாத மெத்தைகள், தலையணைகள், போர்வைகளில் உயிர் வாழும். மனிதனின் இறந்த செல்களை உண்டு உயிர் வாழும். துணிகளில் உள்ள செயற்கை இழைகளையும் உண்ணும். இந்த டஸ்ட் மைட் பூச்சிகள் செய்யும் அலர்ஜியானது ஒரு சீசனுக்கு மட்டும் வருவதல்ல… ஒரு முறை தலையணை, மெத்தைகளில் வந்துவிட்டால் வருடம் முழுவதும் இருக்கும். டஸ்ட் மைட் அலர்ஜியை உடனடியாககண்டுபிடிக்கவும் முடியாது.

படுத்து அயர்ந்து தூங்கிய பின்னர் சில மணி நேரம் கழித்தே டஸ்ட் மைட் உருவாக்கும் துகள்கள் மூக்கினுள் சென்று தனது வேலையை ஆரம்பிக்கும். தும்மல் அல்லது இருமல் தொடரத் தொடங்கும். நடு இரவில் அல்லது விடியற்காலையில் மட்டுமே முழுமையாக டஸ்ட் மைட் அலர்ஜி தனது வேலையைக் காட்டும். நெடுநாளாக சுத்தப்படுத்தப்படாத குஷன் சோபாக்களில் கூட டஸ்ட் மைட் வாழும்.சிறிய அளவு சுவாசத்தில் கலந்தால் கூட கூருணர்ச்சியை தூண்டி பிரச்னையை உருவாக்கும். கதகதப்பான வெப்பநிலையில் அல்லது ஈரப்பதமுள்ள சூழலில் மட்டுமே டஸ்ட் மைட் பூச்சிகளால் வாழ முடியும். இவை வளர்வதற்கு உகந்த வெப்பநிலை 70 டிகிரி ஃபாரன்ஹீட்.சிலர் வீட்டை சுத்தமாக வைத்திருந்தாலும் கூட, அவர்களுக்கு இவ்வகை அலர்ஜி இருக்கும். அவர்களின் பரம்பரையில் யாருக்காவது இவ்வகை அலர்ஜி இருந்தால் சிறிய அளவு டஸ்ட் மைட் பூச்சிகள் கூட ஒவ்வாமையை உருவாக்கிவிடும். வீட்டையும் படுக்கையறையையும் சுத்தமாக வைத்துக் கொள்ளாதவர்களுக்கு, இந்த அலர்ஜி வருவதற்கான வாய்ப்பு அதிகம். டஸ்ட் மைட் மட்டும் அலர்ஜியைஉருவாக்குவதில்லை. அது உருவாக்கும் ஒரு வகை வீண் புரதமும் அலர்ஜியை உருவாக்கும். ஒரு டஸ்ட் மைட் ஒரு நாளைக்கு குறைந்தது 20 வீண் புரதங்களை வெளியிடுகிறது. டஸ்ட் மைட் அழிந்தாலும், அது உருவாக்கும் வீண் புரதங்கள் அழியாமல் தும்மல், இருமலை உருவாக்கிக்கொண்டே இருக்கும். டஸ்ட் மைட் அலர்ஜி உள்ளவர்களுக்கு அவர்களது ஒவ்வாமை அளவை பார்த்து அலர்ஜி மருத்துவரால் சிகிச்சை அளிக்கப்படும். பொதுவாக இவர்களின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்தும் அலர்ஜியை கட்டுப்படுத்தும் மருந்துகள் கொடுப்போம். இவற்றை குறிப்பிட்ட கால இடைவெளியில் எடுத்துக் கொண்டால் டஸ்ட் மைட் அலர்ஜியை கட்டுப்படுத்தி விடலாம். இந்த மருந்துகளை வாய் வழியாகவே எடுத்துக் கொள்ளலாம். ஊசி வடிவில் போட்டுக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது…" என்கிறார் டாக்டர் ஜரீன் முகமத்.

கட்டுப்படுத்தும் முறைகள் அலர்ஜியை கட்டுப்படுத்தும் உறைகள் தலையணை, மெத்தை, சோபாவுக்கு கிடைக்கிறது. இவ்வகை உறைகளை பயன்படுத்தினால் டஸ்ட் மைட் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம்.படுக்கையில் விரிக்கும் துணிகளையும், தலையணை, மெத்தை உறைகளையும், திரைச்சீலைகளையும் வாரம் ஒருமுறையாவது சுடுதண்ணீர் கொண்டு சுத்தமாக துவைக்க வேண்டும்.துணியை உலர்த்தும் கருவியான டிரையர் கொண்டு (130 டிகிரி ஃபாரன்ஹீட்வெப்ப நிலை) மெத்தையை தேவைப்படும் போது உலர்த்தினால் டஸ்ட் மைட் பூச்சிகள் பெருகாமல் பார்த்துக் கொள்ளலாம்.சுத்தம் செய்யும் போது, மூக்கில் எந்த துகள்களும் போகாதபடி, முகமூடியை அணிந்து கொள்வது அவசியம்.அதிக குளிரான இடங்களில் மெத்தைகளை, உறைகளை வைத்தாலும் டஸ்ட் மைட்கள் அழிந்துவிடும். வீட்டில் ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தூசிகள் எளிதாக உள்ளே போகாதவாறு உள்ள துணிகளை பயன்படுத்தலாம். அதை தகுந்த கால இடைவெளிகளில் சுத்தம் செய்வதும் முக்கியம்.சுத்தமாக கழுவி வைக்கக்கூடிய பொம்மைகளை மட்டுமே வீட்டில் பயன்படுத்த வேண்டும். புத்தக அலமாரிகள், நகைப்பெட்டிகள், செய்தித்தாள்கள் வைக்கும் இடம் ஆகியவற்றை தூசி படியாமல் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.மெத்தையை மாதம் ஒரு முறையாவது மொட்டை மாடியில் நல்ல வெயிலில் உலர விட்டால் டஸ்ட் மைட் பூச்சிகள் ஓரளவு அழிந்துவிடும்
http://www.tamilyes.com/t52964-topic

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

புதன், 25 அக்டோபர், 2017

இரவு நன்றாக தூங்க

இரவு நன்றாக தூங்க

கடுமையான வேலைப்பளு, மன அழுத்தம், ஓய்வே இல்லாமல் அலைச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், நன்றாக தூங்க வேண்டும் என ஆசைப்படுவர். இதனால் இரவு வீட்டிற்கு சென்றவுடன் உடைகளை மாற்றி விட்டு கடகடவென சாப்பிடுவார்கள். உடனே டிவியை பார்த்தபடி படுக்கைக்கு செல்வார்கள். மனைவியே, குழந்தைகளே எதாவது கேட்டால் கோபம் கொப்பளிக்கும். இவர்களுக்கு இரவு நீண்ட நேரமாகியும் தூக்கம் வராது.இதன் காரணமாக மறுநாள் காலை சீக்கரம் எழுந்திரிக்கலாம் சோம்பல் ஏற்படும். பின்னர் அலுவலகம் சென்றாலும் மந்தமான நிலையிலேயே உடல் இருக்கும். மனமும் சோர்வடையும். தூக்கம் வரவில்லை என்ற புலம்பலே இது போன்றவர்களிடம் அதிகம் கேட்கும்."அப்படிப்பட்டவர்கள், தங்கள் வாழ்க்கை முறையை சிறிது மாற்றினால் இரவில் நன்றாக தூங்கலாம்.



"என்கின்றனர் நிபுணர்கள்.தினமும் வேலை முடிந்த உடனேயே படுக்கைக்கு சென்று விடக்கூடாது. வீட்டிற்கு வந்த உடன், நன்றாக குளித்து, ஒரு டம்ளர் பால் குடிக்க வேண்டும். 'டிவி' மற்றும் கம்ப்யூட்டர்களை ஆப் செய்ய வேண்டும். அடுத்த நாள் அணிய வேண்டிய ஆடைகளை எடுத்து வைக்க வேண்டும். பின்னர், இதமான இசையை ரசித்த படி அடுத்த நாள் வேலையை திட்டமிட வேண்டும். இவ்வாறு மனதை அமைதிப்படுத்தி விட்டு தூங்கச் சென்றால், நன்றாக தூக்கம் வரும்.இரவு உணவை சாப்பிட்ட உடனேயே தூங்க செல்லக்கூடாது. 60 முதல் 90 நிமிடங்கள் கழிந்த பின்னர் தூங்கச் சென்றால் தான் நன்றாக தூக்கம் வரும். இடைப்பட்ட நேரத்தில் வாழ்க்கை துணையுடன் சிறிது மனம் விட்டு பேசுங்கள். அன்றைய சுவாரஸ்சிய சம்பவங்களை பேசி மகிழுங்கள். இதனால் மனமும் ரிலாக்ஸாக இருக்கும். தூக்கமும் நன்றாக வரும். பிரிட்டனில் நடந்த ஆய்வில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilyes.com/t53026-topic

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

திங்கள், 23 அக்டோபர், 2017

மல்டிபிள் பலன்கள் தரும் 10 எண்ணெய்கள்

மல்டிபிள் பலன்கள் தரும் 10 எண்ணெய்கள்
எண்ணெய்கள்
தலைவலி, காய்ச்சல் என்றால் மாத்திரை எடுத்துக்கொள்கிறோம். ஆனால், அதற்கான காரணத்தை கண்டறிந்து சிகிச்சை எடுப்பது இல்லை. ஒரு மருத்துவம், உடலுக்கும் மனதுக்கும் சேர்ந்து சிகிச்சை அளித்தால் எப்படி இருக்கும்? நறுமண எண்ணெய் சிகிச்சை இதைச் செய்கிறது. மனதையும் உடலையும் ஒருநிலைப்படுத்தி பிரச்னைக்குத் தீர்வு காண உதவுகிறது நறுமண சிகிச்சை.
  மூக்கில், உள்ள சிறு முடிகள் (Cillia) வாசனையை உள்வாங்கி மூளைக்கு அனுப்பும். மூளையானது மற்ற உறுப்புகளுக்குக் கட்டளையிடுவதால் நோய்கள் தீரவும், நோய்களின் தீவிரம் குறையவும் வாய்ப்புகள் அதிகம். பூக்கள், பழங்கள், மூலிகைகள் போன்றவற்றை நுகர்ந்தோ, அதைச் சருமத்தில் பூசியோ நற்பலன்களைப் பெற முடியும்.


லெமன் எண்ணெய் (Lemon oil)
  – 25கி – ரூ85

புண், மரு சரியாகும்.
சிறந்த கிளென்ஸர். சருமத்தின் உட்புறத் தோலில் உள்ள அழுக்கைச் சுத்தம்செய்யக்கூடியது.
உடலில் உள்ள செல்களுக்குப் புத்துயிர் தரக்கூடியது. பாதித்த செல்களை இயல்பாக்கும்.
சென்சிட்டிவ் சருமத்தினருக்கு மட்டும் எரிச்சல் கொடுக்கலாம். மற்ற அனைத்துச் சருமத்தினருக்கும் ஏற்ற எண்ணெய் இது.
முகத்தில் வரக்கூடிய கரும்புள்ளிகளைக் குணமாக்கும்.
முகத்தைப் புத்துணர்வாக்கும்.

லாவெண்டர் எண்ணெய் (Lavender oil)  – 25கி – ரூ350
ஐந்து நிமிடங்கள் சுவாசித்தால் நல்ல தூக்கத்தைப் பெறலாம்.
பூச்சிக்கடி, சரும நோய்கள் சரியாகும்.
நகம் உடையும் பிரச்னை இருப்பின், நகத்தைச் சுற்றி தடவி வர நகங்கள் ஆரோக்கியமாகும்.
பாத வெடிப்புகளைக் குணமாக்கும்.

இஞ்சி எண்ணெய் (Ginger oil) – 25கி – ரூ450
[You must be registered and logged in to see this image.]
உடலில் சேரும் கொழுப்பைத் தடுக்கும். மலமிளக்கியாகவும் செயல்படும்.
தொப்பை இருப்பவர்கள், இந்த எண்ணெயைத் தடவி மசாஜ் செய்துவர கொழுப்பைக் கரைக்க உதவும்.
செல்லுலாயிட் என்ற கொழுப்பு, சருமத்தில் எங்கு வேண்டுமானாலும் படியலாம். அதைக் கரைக்கும்.
வெந்நீரில் இரண்டு சொட்டுகள் விட்டு வாய் கொப்பளித்தால், தொண்டைவலி, வறட்டு இருமல் குணமாகும்.

யூகலிப்டிக்ஸ் எண்ணெய் (Eucalyptics oil) –
  25கி – ரூ125
மூக்கடைப்பு, தலைவலி, நீர் கோத்தல், சைனஸ் பிரச்னைக்கு நிவாரணம் அளிக்கும்.
மனச்சோர்வு நேரத்தில்,
  இந்த எண்ணெயைப் பஞ்சில் நனைத்து, ஐந்து நிமிடங்கள் சுவாசிக்கலாம்.
தலைமுடியில் துர்நாற்றம் வீசும், பிரச்னையைப் போக்கும்.
சுவாசப் பாதைகளில் உள்ள பிரச்னைகளைச் சரிசெய்யும்.
தலைவலி, தலை பாரம் தீரும்.

பெப்பர்மின்ட் எண்ணெய் (Peppermint oil) 25கி – ரூ70
மென்தால் இருப்பதால், சுவாசப் பாதையில் உள்ள அடைப்புகள் நீங்கும்.
சருமத்தில் அடைபட்டிருக்கும் அழுக்கைப் போக்கும்.
கை, கால்கள் போன்ற இடங்களில் திடீர் வீக்கம் வரும்போது, இந்த எண்ணெயைத் தடவி மசாஜ் கொடுக்கையில் வலி நீங்கும்.

மிளகு எண்ணெய் (Black pepper oil) – 25கி – ரூ500
மூட்டுவலி, முடக்குவாதம், எலும்புருக்கியால் ஏற்படும் வலிக்கு நிவாரணியாகச் செயல்படும்.
சிறந்த வலி நிவாரணி. உடனடியாக வலி குறையும்.
ஒற்றைத் தலைவலி, இடுப்பு வலி சரியாகும்.
மாதவிடாய் சுழற்சி சரியாக இல்லாதோருக்கு, இந்த எண்ணெயைத் தடவி மசாஜ் கொடுத்துவர மாதவிலக்கு சீராகும்.

ரோஸ்மெரி எண்ணெய் (Rosemary oil) – 25கி –
 ரூ200
கூந்தலுக்கு கிளென்ஸராகச் செயல்படும்.
பொடுகு நீங்கும். கூந்தல் வளர உதவும்.
எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது, இரண்டு சொட்டு ரோஸ்மெரி எண்ணெய்விட்டு குளித்தால், கூந்தல் பளபளப்புடன், ஃபிரெஷ்ஷாக இருக்கும்.
ரோஸ்மெரியைப் பயன்படுத்தும் அளவு மிகவும் முக்கியம். தெரப்பிஸ்ட் பரிந்துரைத்த அளவைத் தாண்டினால், வலிப்பு நோய் வரலாம்.
குளிக்கும் நீர், ஃபேஷியல் கலவை, கூந்தலில் தடவும் எண்ணெயோடு இரண்டு சொட்டுகள் ரோஸ்மெரி எண்ணெயைக் கலந்திட இரட்டிப்புப் பலன்களைப் பெற முடியும்.

டீ ட்ரீ எண்ணெய் (Tea Tree oil) 25கி –
 ரூ200
ஆன்டிசெப்ட்டிக்காக பயன்படும். முகப்பருக்கள், எண்ணெய் வழிதல், பொடுகு, படை, தேமல், அலர்ஜி, பூச்சிக்கடி, கொப்புளங்களுக்கு மருந்தாகச் செயல்படும்.
காயங்களை சுத்தப்படுத்தி சுகாதாரமாக வைக்க உதவும்.
அக்கி, அம்மைத் தழும்புகள் சரியாகும்.
சிடர்வுட் எண்ணெய் (Ciderwood oil) – 25கி –
 ரூ50
தேவதாரூ என்ற மூலிகையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் இது. பார்க்கத் தெளிவாகவும், எடை குறைந்தும் இருக்கும்.
சருமத்தில் ஆன்டிசெப்டிக்காகச் செயல்பட்டு, தொற்றுகளை நீக்கும். சருமத்தை மிருதுவாக்கி ஆரோக்கியமாக்கும்.
கால், முழங்காலில் நீர் கோத்து மூட்டுக்கள் வீங்கும் பிரச்னைக்கு
  நல்ல தீர்வு.
பிசுக்கான பொடுகு, எண்ணெய் வழிதல் பிரச்னையைப் போக்கும்.
முகப்பரு, அரிப்பு, சொரி போன்ற சருமத் தொல்லைகளை நீக்கும்.

ஸ்வீட் ஆரஞ்சு எண்ணெய் (Sweet orange oil) 25கி –
 ரூ125
கிளென்ஸராகச் செயல்படும். முகத்தில் வழியும் எண்ணெய்ப் பசையை நீக்கும்.
ஆரஞ்சின் தோலில் இருந்து எடுக்கக்கூடிய எண்ணெய் ஒரு மூட் க்ரியேட்டராகச் செயல்படும்.
மாணவர்களுக்கு, கவனக்குறைவு, சோர்வான உணர்வு இருப்பின், கைக்குட்டையில் இரண்டு சொட்டுகள் விட்டு, அவ்வப்போது நுகர்ந்தால் நல்ல பலன் தெரியும்.
சோர்வைப் போக்கும். வீட்டில் இரண்டு சொட்டுகள் விட்டால், இந்த வாசனை மனதை ரம்மியமாக்கும்.
சரும துர்நாற்றத்தைப் போக்கும்.
வயதானவர்களின் மனநிலையை உற்சாகமாக்க இந்த எண்ணெய் உதவியாக இருக்கும்
http://www.tamilyes.com/t53241-10

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

நாம் தூங்கும் போர்வையை ஏன் மடித்து வைக்க வேண்டும் தெரியுமா?

நாம் தூங்கும் போர்வையை பல வேளைகளிலும் ஒழுங்காக மடித்து வைப்பதில்லை. ஆனால் மடித்து வைக்க வேண்டும் என்று நம் முதியோர்கள் கூறுவார்கள்...

Popular Posts