பிறப்புச் சான்றிதழ் பெறும் வழிகள்! ஒரு டஜன் யோசனைகள்!!
பிறப்புச் சான்றிதழ்  பெறும் வழிகள்!வாழ்க்கையில்  நாம் செய்தாக வேண்டிய பல்வேறு விஷயங்களை அதிக சிரமமின்றி செய்து முடிக்க உதவும் 'ஒரு  டஜன் யோசனைகள்' பகுதியில், இந்த இதழில்  இடம்பெறுவது... உங்கள் வீட்டுக்குப் புதுவரவாக வரும் சின்னஞ்சிறு மனிதர்களுக்குப்  பெறவேண்டிய முக்கிய மற்றும் முதல் அரசு ஆவணமான பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்கான வழிமுறைகள்!
குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள்  குழந்தையின் பிறப்பை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இதற்குக் கட்டணம் எதுவும்  செலுத்தத் தேவையில்லை. கிராமத்தில் வசிப்பவர்கள் கிராம நிர்வாக அலுவலரிடமும்...  பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சியில்  வசிப்பவர்கள் சுகாதார ஆய்வாளரிடமும் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த உடனே  சம்பந்தப்பட்ட அதிகாரி, குழந்தையின் பிறப்பை உறுதி செய்து ஆவணத்தை  வழங்குவார். 15 நாட்களுக்குள் குழந்தையின் பிறப்பு  இணையதளத்திலும் பதிவு செய்யப்படும்.
 குழந்தை பிறந்த  மருத்துவமனை யிலேயே கூட பதிவு செய்ய முடியும். குடும்ப அட்டையின் நகல், குழந்தைக்குப்  பெயர் வைத்திருந்தால், அதையும் சேர்த்துப் பிறப்பை பதிவு  செய்துகொள்ளலாம். சம்பந்தப்பட்ட மருத்துவமனை, உங்கள்  குழந்தையின் பிறப்பை, பிறப்பு - இறப்புப் பதிவு அலுவலரிடம்  பதிவு செய்து, அதற்கான அத்தாட்சி ரசீதை உங்களுக்கு தரும்.  அதை, பிறப்பு - இறப்புப் பதிவு அலுவலரிடம் கொடுத்து  சான்றிதழைப் பெற்றுகொள்ளலாம்.
  
  
குழந்தை பிறந்து 21 நாட்களுக்குள்  பிறப்பை பதிவு செய்யவில்லை எனில், காலதாமதக் கட்டணம் செலுத்த  வேண்டும். 30 நாட்களுக்குள் பிறப்பை பதிவு செய்யும்போது கட்டணமாக  2 ரூபாய் செலுத்த வேண்டும். 30 நாட்களுக்குப்  பிறகு, ஒரு வருடத்துக்குள் எப்போது பதிவு செய்தாலும் தாமதக்  கட்டணம் ரூபாய் 5. குழந்தை பிறந்து ஒரு வருடத்துக்குள் பதிவு  செய்யாவிட்டால், பிறகு நீதிமன்றத்தில் முறையிட்டு, சார்பதிவாளர் அலுவலகத்தில்தான் பதிவு செய்ய முடியும். பல வருடங்களாகியும்  நீங்கள் பிறப்புச் சான்றிதழ் வாங்காமல் இருந்தாலும் நீதிமன்றத்தில் முறையிட்டு,  சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிந்துதான் நீங்கள் பிறப்புச் சான்றிதழ்  வாங்க வேண்டும்.
  
  
பிறப்புச் சான்றிதழ்  பெறும்போது குழந்தைக்குப் பெயர் வைக்கப்படாமல் இருந் தால், பின்னர்  குழந்தையின் ஒரு வயதுக்குள் மீண்டும் சம்பந்தப்பட்ட அலுவலகம் சென்று, சான்றிதழில் குழந்தை யின் பெயரைப் பதிந்து பெற்றுக் கொள்ளலாம்.
 சான்றிதழில் குழந்தையின்  பெயரில் ஏதேனும் எழுத்துப்பிழை அல்லது தவறு இருந்தால் பிறப்பு /இறப்பு பதிவாளரிடம்  மனு செய்து திருத்திக்கொள்ளலாம். பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென்றால், செய்தித்தாள்களில்  அறிவிப்பாக வெளியிட்டு, பின்னர் முறையாக விண்ணப்பித்து,  அரசு கெஜெட் மூலமாக மட்டுமே மாற்றமுடியும்.
 பிறப்புச் சான்றித ழில்  பெற்றோரின் பெயர் அல்லது முகவரியில் பிழை இருந்தால், பெயர் பதிவு  செய்த அலு வலகத்தில் பெற்றோரின் வாக்காளர் அடையாள அட்டை அல்லது குடும்ப அட்டையைக்  கொடுத்து திருத்தத்துக்கு விண்ணப் பிக்கலாம்.
 பிறப்புச் சான்று  எங்கெல்லாம் கட்டாயம்?
பள்ளிச் சேர்க்கை, பாஸ்போர்ட், சட்டபூர்வ ஆவணங்கள் பெற, இன்ஷூரன்ஸ் க்ளெய்ம், சொத்துப் பிரிவினைகள், புதிய வாக்காளர் அட்டை பெற.
பிறந்த தேதி, பிறந்த இடம், பெற்றோர் பெயர்கள் போன்றவற்றுக்கு பிறப்புச் சான்றிதழ் மட்டுமே முதன்மை சட்டபூர்வ ஆவணம் என்பதை நினைவில் கொள்க.
  
  
பள்ளிச் சேர்க்கை, பாஸ்போர்ட், சட்டபூர்வ ஆவணங்கள் பெற, இன்ஷூரன்ஸ் க்ளெய்ம், சொத்துப் பிரிவினைகள், புதிய வாக்காளர் அட்டை பெற.
பிறந்த தேதி, பிறந்த இடம், பெற்றோர் பெயர்கள் போன்றவற்றுக்கு பிறப்புச் சான்றிதழ் மட்டுமே முதன்மை சட்டபூர்வ ஆவணம் என்பதை நினைவில் கொள்க.
தாய், பிரசவத்துக்கு  பிறந்த வீட்டுக்கு வந்து, அந்த ஊர் மருத்துவமனையில் குழந்தை பெற்றிருக்கலாம்.  அதுபோன்ற சந்தர்ப்பங்களில், குழந்தை எந்த ஊரில் பிறந்ததோ அந்த  ஊரில்தான் பிறப்பை பதிவு செய்ய முடியும். குழந்தையின் பெற்றோ ருடைய வசிப்பிடத்தில்  பதிவு செய்ய முடியாது.
  
  
பிறப்புப் சான்றிதழுக்கு  உரிய அனைத்து விதிகளும் இறப்புச் சான்றிதழ் பெறுவதற்கும் பொருந்தும். ஒருவரின்  வசிப்பிடம் எதுவாக இருந்தாலும், எந்த ஊரில் இறக்கிறாரோ அங்குதான் இறப்பினைப்  பதிவு செய்து சான்றிதழ் பெற முடியும். ஒருவர் இறந்து ஒரு வாரத்துக்குள் அவரது  இறப்பினை பதிவு செய்ய வேண்டும். 21 நாட்களுக்குப் பிறகு  என்றால், சார்பதிவாளர் அலுவலகத்தில்தான் இறப்புச் சான்றிதழைப்  பெற இயலும்.
  
  
சில இடங்களில் அலுவல்  தேவைக்கு குழந்தையின் அசல் பிறப்புச் சான்றிதழ் கேட்பார்கள். இதனால் எத்தனை  எண்ணிக்கை யில் நகல்கள் வேண்டுமோ அதைக் குறிப்பிட்டு, உரிய  அலுவலகத்தில் விண்ணப்பித்து, அதற்குரிய கட்டணம் செலுத்திப்  பெற்றுக் கொள்ளலாம்.
  
  
பிறப்புச் சான்றிதழ்  தொலைந்து விட்டால். சான்றிதழின் நகலுடன் குடும்ப அட்டையை இணைத்து... நீங்கள்  இதற்கு முன் எங்கு பதிவு செய்தீர் களோ, அதே அலுவலகத்தில் மீண்டும் விண்ணபிக்கலாம்.  உங்களிடம் நகலும் இல்லையென்றால்... குடும்ப அட்டையின் நகல், நீங்கள்  பிறந்த தேதி, பிறந்த இடம் ஆகியவற்றை கூறினால் போதும்.  இதற்கான கட்டணம் 20 ரூபாய்.
--

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக