லேபிள்கள்

வியாழன், 9 நவம்பர், 2017

மூன்று மாத ‘இத்தா’ ஏன்?

மூன்று மாத 'இத்தா' ஏன்?
குர்ஆனை ஆராய்ந்து அதன் அறிவியல் உண்மைகளை கண்டறிந்து பல கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் இஸ்லாதை தனது வாழ்வியல் நெறியாக ஆக்கிக்கொண்டுள்ளனர். குர்ஆன் மனிதனுக்கு ஏற்ற வேதம் என்பதை அதன் கருத்துக்களும் கட்டளைகளுக்கும் பல வகைகளில் நிருபித்து கொண்டு இருகின்றது. நவீன காலத்தில் கண்டுபிடித்து சொல்லபடுபவைகளை குர் ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியிருப்பதை கண்டு பல ஆய்வார்கள் இஸ்லாத்தில் தன்னை இணைத்து கொண்டுள்ளனர்.

அந்த வரிசையில் யூத மதத்தை சேர்ந்த ராபர்ட் கில்ஹாம் என்ற மருத்துவர் அவரின் மருத்துவ ஆய்வு முடிவுகளை குர் ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறி இருப்பதை கண்டு வியந்து இஸ்லாத்தை தழுவி உள்ளதாக சூடானில் இருந்து வெளிவரும் "சூடான் விஷன் " என்ற  தினசரி பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
சூடானை சேர்ந்த பேராசிரியர் ஹாஸிம் மசாவின் நண்பரான ராபர்ட் கில்ஹாம், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவ ஆய்வு நிறுவனத்தில் மரபணுரீதியான ஆராய்சிகளில் ஈடுபட்டு வந்தார். குறிப்பாக இவர் கணவன் மூலம் மனைவியிடம் ஏற்படும் மரபணு தடயங்களை ஆய்வு செய்துவந்தார். கணவனை விட்டு ஒரு மனைவி பிரிந்தாலும் கணவனின் மரபணு தடயங்கள் மனைவியிடம் இருந்து உடனே மறைவதில்லை, கணவனை விட்டு பிரிந்த பிறகும் 3 மாதத்திற்க்கு அந்த மரபணு தடயங்கள் மனைவியிடம் இருக்கும் என தனது ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்.
அதாவது கணவனை பிரிந்த மனைவி 3 மாதத்திற்க்குள் வேறு ஒருவரை திருமணம் செய்து பின்னர் அவரால் பிறக்கும் குழைந்தைகளை மரபணு பரிசோதனை செய்து பார்த்தால் முந்ததையை கணவரின் மரபணுவின் தடயங்களும் அந்த குழந்தைகளிடம் இருக்கும். இரண்டாவது கணவர் இப்படி தனது குழந்தைகளை மரபணு சோதனை செய்து இவன் எனக்கு பிறக்கவில்லை என முடிவு செய்துவிட்டால் அந்த குழந்தையின் எதிர்காலம் பாதிக்கபடும். எனவே கணவனை பிரிந்த மனைவி 3 மாத்திற்க்கு பிறகு வேறு ஒருவரை திருமணம் செய்தால் புதிய கணவருக்கு பிறக்கும் பிள்ளைகளை மரபணு சோதனைக்கு உட்படுத்தினால் பழைய கணவரின் மரபணு தடயங்கள் இருக்காது என்பதுதான் அவரின் ஆயுவின் முடிவுகள்.
இந்த ஆய்வு முடிவை ராபர்ட் கில்ஹாம் தனது முஸ்லீம் நண்பரான பேராசிரியர் ஹாஸிம் மசாவிடம் கூறுகையில் இதை இஸ்லாம் எங்களுக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி கொடுத்துள்ளது, கணவன் மனைவியிடயே விகாரத்து நடந்தால் மனைவி 3 மாதம் இத்தா இருக்க வேண்டும் அதாவது அந்த 3 மாதமும் அந்த பெண்மணி வேறு யாரையும் திருமணம் செய்ய கூடாது என இஸ்லாத்தில் உள்ள விவாகரத்து சட்டத்தை விளக்கியுள்ளார். இதை கேட்டு வியந்து போன மருத்துவர் ராபர்ட் கில்ஹாம் இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்று கொண்டுள்ளார். தனது நண்பர் இஸ்லாத்தை தழுவிய இந்த நற்செய்தியை பேராசிரியர் ஹாஸிம் மசாவி தனது மற்றொரு நண்பரான பேராசிரியர் முஹம்து அப்துல்லாஹ் அல்-ரயாஹ்விடம் தெரிவித்துள்ளார், இந்த பேராசிரியர் முஹம்து அப்துல்லாஹ் அல்-ரயாஹ் அவர்களின் கட்டுரைதான் சூடான் நாட்டு பத்திரிக்கையான "சூடான் விஷன் " வெளியிட்டுள்ளது.
பின்னர் இந்த செய்தி உலகின் பல்வேறு பத்திரிக்கைகளின் வெளியானது, இந்த செய்தியினால் இன்னும் பலர் இஸ்லாத்தை தழுவி விடுவார்களே என அஞ்சிய யூதர்கள் இந்த செய்தி உண்மையில்லை எனவும், ராபர்ட் கில்ஹாம் என்று ஒரு மனிதரே இல்லை எனவும் பொய் பிரச்சாரம் செய்தனர். உடனே யூதர்களின் இந்த பொய் பிரச்சாரத்திற்க்கு மறுப்பு தெரிவித்து பேராசிரியர் முஹமது அப்துல்லாஹ் அல்-ரயாஹ் அவர்கள் மீண்டும் ஒரு கட்டுரையை சூடான் விஷம் பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளார். அதில் அவர்  ராபர்ட் கில்ஹாம் இஸ்லாத்தை தழுவியது உண்மை எனது நண்பர் பேராசிரியர் ஹாஸிம் மசாவின் நண்பர்தான் ராபர்ட் கில்ஹாம் என்பவர், இதை பொய் என சொல்பவர்கள்தான் பொய் சொல்கின்றார்கள். இஸ்லாத்தின் வளர்ச்சியை பொருக்க முடியாதவர்கள்தான் இப்படி உண்மையை மறைக்க பார்க்கின்றனர். என தனது தகவலை மறுத்தவர்களை கண்டித்துள்ளார்யார் இஸ்லாத்திற்க்கு எதிராக என்ன பொய் பிரச்சாரம் செய்தாலும் அல்லாஹ் தனது மார்க்கத்தை மேலோங்க செய்தே வைத்து இருகின்றான். அல்ஹம்துலில்லாஹ்
இந்த செய்தி கடந்த ஆண்டு சூடானில் இருந்து வெளிவரும் "சூடான் விஷன்" என்ற தினசரி பத்திரிக்கையில் வெளிவந்துள்ளது..


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

சமையல் எண்ணெய்களுக்கு எக்ஸ்பயரி தேதி உண்டா?"

விகடனின் 'Doubt of common man' பக்கத்தில் சுந்தரம் என்ற வாசகர் , " நாம் பயன்படு...

Popular Posts