லேபிள்கள்

திங்கள், 15 பிப்ரவரி, 2016

உளுந்து – மருத்துவப் பயன்கள்

நோயின் பாதிப்பு நீங்க:
கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் மிகவும் மோசமாகவும், பலவீனமாகவும் காணப்படும். மேலும் இவர்கள் நோயிலிருந்து விடுபட்டும் நோயாளி போல தோற்றமளிப்பார்கள். இவர்களை தேற்றி தேகத்தை வலுப்படுத்த உளுந்து சிறந்த மருந்தாகும்.
இவர்கள் உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது.
உடல் சூடு தணிய:
இன்றைய அவசர உலகில் நோயின் தாக்கமும் அவசரமாக உள்ளது. இதற்கு காரணம் உடல் சூடுதான். மன அழுத்தம், ஓய்வில்லா உழைப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் உடல் சூடு ஏற்படுகிறது.
உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து பனைவெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.
தாது விருத்தியாக:
உளுந்தை காயவைத்து அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் தாது விருத்தியாகும். நரம்புகளும் புத்துணர்வு பெறும்.
உளுந்து வடை:
உளுந்து வடை பசியை போக்குவதுடன் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். பித்தத்தைக் குறைக்கும்.
எலும்பு முறிவு இரத்தக் கட்டிகளுக்கு:
தடுமாறி விழும்போது உண்டாகும் எலும்பு, தசை முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்து. உளுந்தை நன்கு பொடி செய்து சலித்து வைத்து அதனுடன் தேவையான அளவு முட்டையின் வெள்ளை கரு கலந்து கலக்கி அடிபட்ட இடத்தில் தடவி கட்டு போட்டால் இரத்தக்கட்டு விரைவில் நீங்கும்.
இடுப்பு வலுப்பெற:
சிலர் எப்போதும் இடுப்பில் கை வைத்துக்கொண்டே நிற்பார்கள். இடுப்பு நன்கு வலுவாக இருந்தால்தான் நிமிர்ந்து நடக்க முடியும்.
இடுப்பு வலுவில்லாமல் இருப்பவர்கள் உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.

குழந்தைகளுக்கு:
சிறு குழந்தைகளுக்கு உளுந்து சேர்ந்த இட்லி கொடுப்பது நல்லது. அவை குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுக்கும். மேலும் எலும்புகள் வலுப்பெறும்.
பெண்கள்:
நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கும் கண்டிப்பாக ஊட்டச்சத்து அதிகம் தேவை. இவர்களுக்கு உளுந்தை கஞ்சியாக செய்து கொடுத்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
அல்லது தோல் நீக்காத உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி சேர்த்து அரைத்து களி செய்து நல்லெண்ணெய் மற்றும் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இடுப்பு வலி குணமாகும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

சனி, 13 பிப்ரவரி, 2016

மருந்து மாத்திரை வாங்கும்பொழுது கவனிக்கவேண்டியவை

மருந்து மாத்திரைகளை வாங்கும் போது முதலில் நிதானத்துடன் செயல்படவேண்டும் ஒரு போதும் அவசரம் காட்டக்கூடாது பொருமையுடன் வாங்கவேண்டும்.. மருந்துகளை வாங்கும் போது உரிமம் பெற்ற சில்லறை மருந்து கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும்.

மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்து சீட்டின் அடிப்படையில் அதில் குறிப்பிட்டுள்ள மருந்துகளை மட்டுமே கவனமாக வாங்க வேண்டும். வாங்கிய மருந்து மாத்திரைகளுக்கு கடைக்காரர்களிடமிருந்து விற்பனை ரசீது கேட்டு பெறவும். இது போலி மருந்துகளிடமிருந்து உங்களுக்கு கிடைக்கும் உத்திரவாதமாகும். மருந்துகளை வாங்கும் போது அதன் தொகுதி எண், உற்பத்தி எண், காலாவதியாகும் தேதி ஆகியவற்றை பார்த்து வாங்க வேண்டும்..

மருந்துகளின் மேல் குறிப்பிட்டுள்ள விலையையும், பில்லில் போடப்பட்டுள்ள விலையையும் ஒப்பிட்டு பார்த்து அதில் ஏதாவது தவறுகள் ஏற்பட்டிருந்தால் உரிய அதிகாரிகளிடம் புகார் செய்ய வேண்டும். மருந்துகளை குளிர்ந்த, வெளிச்சம், இல்லாத உலர்ந்த இடத்தில் வைக்கவும். குறிப்பிட்ட‍ சில மருந்து வகைகளை மட்டும் குளிர்ச்சியாக வைத்திருக்க‍ வேண்டியது அவசியம்.

மருந்துகளை குழந்தைகளால் எடுக்க முடியாத, குழந்தைகளின் கண்களில் படாதவாறு வைத்துக்கொள்ள வேண்டும். மருந்துகளை சமையல் அறை, குளியல் அறையில் உள்ள அலமாரிகளில் வைக்காதீர்கள். என்ன தான் ஒரே மாதிரி அரிப்பு ஏற்பட்டாலும் மற்றவரின் நோயின் தன்மை உங்களது போன்று இருந்தாலும் நீங்கள் உபபோகப்படுத்தும் மருந்துகளை அவர்களுக்கு கொடுக்காதீர்கள்.

மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மெடிக்கல் சென்டரில் உங்கள் நோய்க்கு தகுந்தாற் போல மருந்து மாத்திரைகளை வாங்கக்கூடாது-. ஏதேனும் உடல் உபாதைகள் வந்தால் மருத்துவரை அனுகுவது மிக அவசியம்.
http://tamil4health.blogspot.in/2014/04/When-buying-prescription-pills.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

வியாழன், 11 பிப்ரவரி, 2016

மசாஜ் செய்வதால் என்ன பயன்?

இயற்கை மருத்துவத்தில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது மசாஜ். மசாஜ்க்கு மிக நீண்ட வரலாறு உள்ளது. இந்தியா, சீனா, கிரீஸ், ரோம், எகிப்து உட்பட பல நாடுகளில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மசாஜ், நோய் தீர்க்கும் ஒரு சிகிச்சையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. மசாஜ் செய்வது உடல் உறுப்புகள் மற்றும் உடல் அமைப்புக்கு எவ்வாறு நலம் பயக்கிறது என்பதை விரிவாக காண்போம்.

மசாஜ் செய்வதால், தோலில் ஏற்படும் நன்மைகள் ஏராளம். மசாஜ் செய்வதன் மூலம் தோலில் காணப்படும் துளைகள் விரிவடைந்து, உடலில் காணப்படும் தீய கழிவுகள் வியர்வை மூலம் வெளியேறி விடும். மசாஜ், தசைகளின் இறுக்கத்தை குறைத்து, தசை வலியை நீக்குகிறது. கடினமான வேலைகளால் உடல் தசைகளில், "லாக்டிக் ஆசிட்' சேரும். மசாஜ், தசைகளில் சேரும், "லாக்டிக் ஆசிட்'களை நீக்கி, உடலை புத்துணர்ச்சி மற்றும் உற்சாகத்துடன் இருக்க உதவும்.

ரத்த ஓட்டம்:
 
மசாஜ் செய்யப்படும் பகுதிகளில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால், அவ்வுடல் உறுப்புகளுக்கு அதிகளவில் ஊட்டச்சத்து கிடைப்பதுடன், அந்த உறுப்புகளில் நோய் குணமாகும் தன்மையும் அதிகரிக்கும். ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், வீக்கம் போன்றவை ஏற்படுவது குறையும்.

மசாஜ் செய்வதால் ரத்தத்தில் அதிகளவில் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் திறன் மற்றும் அவற்றை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் திறன் அதிகரிக்கும்.
நரம்பு: நரம்புகளில் குறைந்த அழுத்தத்துடன், மெதுவாக மற்றும் மிதமாக செய்யப்படும் மசாஜ், நரம்புகளில் காணப்படும் இறுக்கத்தை குறைத்து, அவற்றை மென்மையாக்கி. சுறுசுறுப்புடன் செயல்பட வைக்கும். நரம்புகளை இளக்கமடைய வைத்து அதன் ஆற்றலை அதிகரிக்கும்.

செரிமான மண்டலம்:
 
வயிற்றில் மசாஜ் செய்வதால் செரிமான மண்டலம் தூண்டப்படுவதுடன், வயிற்றில் காணப்படும் கழிவுகளும் நன்கு வெளியேறும். மேலும் கல்லீரலின் ஆற்றல் அதிகரிப்பதால், உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
சிறுநீர் மண்டலம்: மசாஜ் செய்வது, சிறுநீர் மண்டலத்தை நன்கு செயலாற்ற தூண்டுகிறது. இதனால் அதிகளவில் சிறுநீர் உற்பத்தியாகி, அதன் மூலம் உடல் கழிவுகள் விரைவில் வெளியேறுகின்றன.

இதயம்:
 
முறையாக செய்யப்படும் மசாஜ், இதயத்தில் ஏற்படும் பளுவை குறைத்து, அதன் செயல் திறனை அதிகரிக்கிறது. பொதுவாக, மசாஜ் செய்வதற்கு உலர்ந்த கைகளையே பயன்படுத்த வேண்டும்; ஆனால், உடல் அதிக வறட்சி தன்மை உடையதாக இருந்தால் அல்லது உடல் மிகவும் பலவீனமாக இருந்தால், ஈரத் துணி அல்லது மருந்து எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

மசாஜ் செய்வதற்கு நல்லெண்ணெய் பயன்படுத்துவது மிகவும் நல்லது. சிலர் மசாஜ் செய்யும் போது ஏற்படும் உராய்வை தவிர்ப்பதற்காக, டால்கம் பவுடரை பயன்படுத்துகின்றனர். இது உகந்தது அல்ல. இவ்வாறு செய்வதால் தோலில் காணப்படும் துளைகள் அடைபடும்.

மசாஜ் செய்வதை தவிர்க்க வேண்டிய சூழ்நிலைகள்:
* காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் காலங்களில் எவ்வித மசாஜும் செய்யக்கூடாது.

* கர்ப்பிணி பெண்கள் வயிற்றுப் பகுதியில் மசாஜ் செய்வதை தவிர்ப்பது நல்லது.

* வயிற்றுப் போக்கு வாயுப் பிரச்சினை, அப்பென்டிசைட்டிஸ், சிறு குடலில் புண்கள் அல்லது வயிற்றில் கட்டி ஆகிய பிரச்னை உடையவர்கள் வயிற்றில் மசாஜ் செய்வதை தவிர்க்க வேண்டும்.

* தோல் வியாதி உடையவர்களுக்கு மசாஜ் செய்வது பொருத்தமற்றது.
http://tamil4health.blogspot.in/2014/04/benefit-massage.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

ஃபுட் பாய்சன் ஏற்பட என்ன காரணம்?

சமீபத்தில் சிக்கன் பிரியாணியுடன் வேர்க்கடலையும் சேர்த்துச் சாப்பிட்ட சிறுவன் இறந்து போன செய்தியைப் படித்தேன். 

ஃபுட் பாய்சன் ஏற்பட என்ன
  காரணம்? எந்த காம்பினேஷன் உணவுகளைச் சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் ஏற்படும்? 
பதில் சொல்கிறார் டயட்டீஷியன் புவனேஸ்வரி
 

இந்த உணவுகளைச் சாப்பிட்டதால்தான் ஃபுட் பாய்சன் ஏற்பட்டது என்பது தவறான தகவல். சாப்பிட்ட உணவில் என்ன பிரச்னை என்றுதான் பார்க்க
  வேண்டும். வேர்க்கடலையோ, பிரியாணியில் இருந்த சிக்கன் பீஸோ கெட்டுப் போயிருக்கலாம். இரண்டையும் சேர்த்துச் சாப்பிட்டதால்தான் இறந்து  போனான் என்ற தகவலில் உண்மையில்லை. இன்றைக்கு ஃபுட் பாய்சன் அதிகம் நடக்கிறது. 

புரதம் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் கெட்டுப்போகும் தன்மை கொண்டவை. வேர்க்கடலை, பால், அசைவ உணவு வகைகள், எண்ணெய் எல்லாம்
  சீக்கிரமே கெட்டுப் போகும். எண்ணெயில் பொரித்த உணவுகளை சேர்த்து வைத்து சாப்பிட்டால் ஆபத்தும் சேர்ந்து வரும். 

மழை, பனிக்காலத்தில்
  உணவுகள் கெட்டுப் போகக் காரணமாக இருப்பவை பூஞ்சைகள். அரிசி, பருப்பு போன்ற கிச்சனுக்குள் இருக்கும் பொருட்களுக்குள் வந்து உட்கார்ந்து  கொள்ளும் இந்தப் பூஞ்சைகள் பொருளையும் கெடுத்து, நோய்களையும் கொடுத்துவிட்டுப் போகும். 

மளிகைப் பொருட்களில் ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. ஃப்ரிட்ஜுக்குள்தானே இருக்கிறது என்கிற நினைப்பு வேண்டாம். ஃப்ரிட்ஜில்
  ஒரு பொருளில் இருக்கும் பூஞ்சை மற்ற உணவுப் பொருட்களுக்கும் பரவிவிடும். 

கிச்சன் பொருள்களில் பூச்சிகள், பூஞ்சைகள் இருப்பது தெரிந்தால்
  அதை வெயிலில் உலர்த்தி மறுபடியும் பயன்படுத்துவார்கள். வெயிலில் காய வைப்பதால் பூஞ்சைகள் மறைந்துவிடாது. 

அவற்றை உடனடியாக கொட்டிவிடுவது நல்லது. எக்ஸ்பயரி ஆன பொருள்களைப் பயன்படுத்தினாலும் ஃபுட் பாய்சன் ஏற்படும். சிப்ஸ் வகைகளை
  வாங்கும்போது கவனமாக இருங்கள். எண்ணெயில் இருந்து கெட்டுப்போன வாசனை வந்தால் அதைச் சாப்பிடுவது ஆபத்து. 

கெட்டுப்போன
  பழங்களுக்கும் இதே கதிதான். காய்கறிகள், பழங்களை ஃப்ரெஷ்ஷாக வாங்கி பயன்படுத்த வேண்டும். 

ஃப்ரிட்ஜில் உணவுகளை அடைத்து வைக்காமல், கொஞ்சமாக சமைத்துச் சாப்பிடப் பழகுங்கள். பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு முடிந்தவரை
  ஸ்நாக்ஸை நீங்களே தயாரித்து அனுப்புங்கள். 

கடையில் வாங்கிச் சாப்பிடுவதற்கு முன் பலமுறை யோசியுங்கள். மீன் சாப்பிட்ட பிறகு தயிர் சாப்பிடக்
  கூடாது, சிக்கன் சாப்பிட்டதும் பால் சாப்பிடக் கூடாது போன்ற கட்டுக்கதைகளைத் தூக்கி ஓரமாக வைத்து விட்டு, ரிலாக்ஸ் ஆகுங்கள்
www.tamil4health.blogspot.in/2014/04/food-poison.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

இளநீ இளநீ இளநீ..' அருதலையோ இளநீர்

உக்கிரமான போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கொலை வெறியோடு குண்டுகள் அங்கும் இங்கும் தாறுமாறகப் பறக்கின்றன. சில போர் வீரர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு இருக்கிறார்கள். நாளம்; ஊடாக சேலைன் ஏற்ற வேண்டிய நிலையில் சிலர் இருந்தபோதும் சேலைனுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது.
மருத்துவர்கள் கையைப் பிசைந்து கொண்டு நிற்கவில்லை. அருகில் உள்ள மரத்தின் கனியைப் பறித்து அதில் உள்ள நீரை சேலைனாக நாளம் ஊடாக ஏற்றுகிறார்கள். போர் வீரர்களது உயிர் காக்கப்பட்டது.

போரிடும் இரு பக்க வீர்களுக்கும் அவ்வாறு சிகிச்சை செய்யபட்டமை பதிவாகியுள்ளது.

போரிட்டவர்கள் ஜப்பானியர்களும் ஆங்கிலேயர்களும். சேலைனாக ஏற்றப்பட்டு உயிர் காத்த திரவம் இளநீர். இது இரண்டாவது உலகமகா யுத்தக் காட்சி.

இலங்கையர்களான நாங்கள் என்றும் இளநிப் பிரியர்களாவே இருக்கிறோம். இங்கு பெரும்பாலானவர்களின் வீடுகளில் ஒரு செவ்விளநீர் மரமாவது அலங்காரமாகக் காட்சி தரும். அவற்றில் மஞ்சள் நிற காய்கள் குலை குலையாகத் தொங்கிக் கொண்டிருக்கும் காட்சி ரம்யமானது.
வீதி ஓரங்களில் செவ்விளர்க் குலைகள் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். தாகத்திற்கு இதமான பானமாகவும், சலக்கடுப்பைத் தணிக்கவும், உடல் சூட்டைத் தணிக்கவும் என ஒவ்வொருவம் வேறு வேறு தேவைகளுக்காக இளநீரை நாடுகிறார்கள்.
ஓவ்வொரு காயிலும் சுமார் 200 முதல் 1000 மில்லி லீட்டர் அளவு இளநீர் கிடைக்கிறது. 5 மாதங்களுக்கு உட்பட்ட காயின் இளநீர் உவர்த்தன்மை கொண்டது. காலம் செல்லச் செல்ல அதன் சுவை அதிகரிக்கும். இருந்த போதும் முற்றிய தேங்காயில் நீர் வற்றிவிடும்.

சுதேச வைத்திய முறைகளான ஆயள்வேதம், சித்த மருத்துவம் போன்றவற்றில் அதிகமாகப் பயன்படுகிறது.

அதேபோல நவீன மருத்துவ முறையிலும் இதற்கு நிறைய இடம் உண்டு.

இதில் உள்ளவை என்ன?

இது இனிப்புள்ள பானம். அதில் சுலபமாக உறிஞ்சப்படக் கூடிய இனிப்பும், பொட்டாசியம் சோடியம் போன்ற கனிமங்களும் நிறைய உண்டு.
ஆச்சரியமான நல்ல விடயம் என்னவென்றால் இது நீராகராமாக இருந்தபோதும் அதில் நார்ப்பொருள் 11 சதவிகிதம் இருக்கிறது என்பதாகும். இது கரையக் கூடிய நார்ப்பொருள் (Soluble fibre) என்பது குறிப்பிடக் கூடியதாகும். கொழுப்பு மிகக் குறைவாக ஒரு சதவிகிதம் மட்டுமே இருக்கிறது. மாறாக தேங்காய்ப் பாலில் கொழுப்பு மிக அதிகமாக உள்ளது என்பது யாவரும் அறிந்ததே. கொலஸ்டரோல் அறவே கிடையாது

இதன் பயன்பாடுகள்

நீராகரமாக அருந்துவதற்கு ஏற்ற நல்ல பானம். இன்று இளைஞர்களும், யுவதிகளும் ஏனையோரும் தாகம் எடுக்கும்போதும், உணவு உண்ணும் போதும் மென்பானங்களை அருந்துகிறார்கள். அவற்றில் சீனிச் சத்து மிக அதிகமாக உள்ளது.
அவற்றால் ஏற்படும் எடை அதிகரிப்பு, நீரிழிவு போன்ற பிரச்சனைகள் இளநீரால் ஏற்படாது. அதனுடைய இயற்கையான தன்மையும், அதன் காரமும் இனிப்பும் சேர்ந்த சுவையும், ஐஸ் இல்லாமலே குளிர்மை உண்ர்வை ஊட்டும் தன்மையும் உடலுக்கு புத்துணர்ச்சியைத் தருகிறது.

வயிற்றோட்ட நோய் ஏற்படும் போது உடலில் நீரிழப்புத் தன்மை ஏற்படாதிருக்க மீள நீரூட்டும் பானத்தை (ORS) உலக சுகாதார ஸ்தாபனம்
 (WHO) சிபார்சு செய்கிறது. அதிலுள்ள விரைவில் சமிபாடடையக் கூடிய இனிப்பும், பொட்டசிய சத்தும் அதற்குக் காரணமாகும்.

இளநீரில் அமைனோ அமிலங்கள், கனிமங்கள், நொதியங்கள், கொழுப்பு அமிலங்கள் போன்றவையும் இருக்கிறது. இதனால் இது சற்று தடிப்புத்தன்மை கொண்டபோதும் ழுசுளு சை ஒத்த பலன்; கிடைக்கிறது. குழந்தைகளும் பெரியவர்களும் வயிற்றோட்ட நோயின் போது இதை அருந்துவதால் நீரிழப்பு நிலை ஏற்படாது தடுப்பதுடன் நாளம் ஊடாக சேலைன் ஏற்றுவதையும் தடுக்கலாம்.
விளையாட்டு வீரர்களுக்கான பானமாகவும் இதைப் பலரும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் கடுமையான விளையாட்டின் போது வியர்வையாக வெளியேறும் சோடியம் கனிமத்தையும், இழக்கபடும் கலோரிச் சத்தையும் இது ஈடு செய்யப் போதுமானது அல்ல என்ற கருத்தை சில ஸ்போர்ட்ஸ் மருத்துவ வைத்தியர்கள் முன் வைக்கிறார்கள்.

வெகிர்குரு, கொப்பளிப்பான் போன்ற நோய்களின் போது சருமத்தில் இது பூசக் கூடியது என சில மருத்துவர்கள் சிபார்சு செய்கிறார்கள். ஆயினும் இது பற்றிய அனுபவபூர்வமான அறிவு என்னிடம் இல்லை.

சலக்கடுப்பு நோய்க்கு கை வைத்தியமாக பலர் இளநீர் இருந்துவதுண்டு. அது கொடுக்கும் குளிர்மை உணர்வும், அதிலுள்ள பொட்டாசியச் செறிவும் காரணமாக இருக்கலாம்.

ஆயினும் சிறுநீரக செயலியப்பு நோயுள்ளவர்களுக்கு இதிலுள்ள அதிக பொட்டாசியம் சத்து ஆபத்தானது என்பதை மறக்கக் கூடாது. அதேபோல அற்ரீனல் செய்பாட்டுக் குறைபாடு, பாம்புக் கடி போன்றவற்றின் போதும் இதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

நீரிழிவு நோயுள்ளவர்களும் இளநீர் அருந்தலாம். அதில் இனிப்பு உள்ள போதும், அது மென்பானங்களில் உள்ளது போல அதிக செறிவில் இல்லை. இளநீரில் நார்ப்பொருளும் சேர்ந்து இருப்பதால் சாதாரண சீனி போல குருதியில் சீனி அளவை அதிகரிக்காது. உடல் எடையை அதிகரிக்கவும் மாட்டாது. ஒமேகா 3 கொழுப்பு இருப்பதும் நல்ல விடயமாகும்.

உயர் இரத்த அழுத்த நோயுள்ளவர்களுக்கு இது ஏற்ற பானமாகும். சில ஆய்வுகள் இளநீரானது பிரசரைக் குறைக்க உதவும் என்கின்றன. அதிலுள்ள அதிக பொட்டாசியம் இதற்குக் காரணமாகும். மாறாக உப்பில் உள்ள சோடியம் பிரசரை அதிகரிக்கிறது என்பதை அறிவீர்கள்தானே. வாழைப்பழத்திலும் பொட்டாசியம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தவறான கருத்துக்கள்

பெரும்பாலனவர்கள் கருதுவதுபோல இது குளிர்மையான பானம். சளித் தொல்லையைக் கொண்டுவரும், அதை மேசமாக்கும் என்பவை தவறான கருத்துகளாகும். சளி, ஆஸ்த்மா போன்ற நோயுள்ளவர்களும் தாராளமாக அருந்தலாம்.

இளநீர் பிரியர்கள் அது மாரடைப்பு பக்கவாதம் போன்றவற்றைத் தடுக்கும். உணவு ஜீரணமடைவதை அதிகரிக்கும். முதுமையடைவதைத் தடுக்கும் என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால் இவை விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட முடிவுகள் அல்ல.

இறுதியாகச் சொல்வதானால்
  • இளநீர் நல்ல பானம். மென்பானங்கள், 
  • இனிப்பூட்டப்பட்ட பழச்சாறுகள் போன்றவற்றை விட மேலானது. 
  • இயற்கையான பானமான இது புத்துணர்ச்சி ஏற்படுத்தக் கூடியது. 
  • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எவரும் அருந்தக் கூடியது. 
  • மருத்துவ ரீதியாகவும் நன்மைகளைத் தரக் கூடியது. 
  • நிரிழிவு, பிரஷர், சளித்தொல்லை இருதய நோயுள்ளவர்கள் என யாவரும் அருந்தக் கூடியது.
ஆனால் சிறுநீரக செயலிழப்பு நோயுள்ளவர்களுக்கு ஆகாது.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்
http://hainallama.blogspot.in/2014/04/blog-post_28.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

முதுமையில் இளமை!

மனிதனாக பிறந்த யார்தான் எப்போதும் இளமையாக இருப்பதை விரும்ப மாட்டார்கள்.
இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் தங்களை இளமையானவராக உணரவும், வெளிக்காட்டி கொள்ளவும் பல வழிகளை ஆர்வமுடன் தேடுகின்றனர்.
அந்த வழிகள் சத்தான உணவுகளை உண்பதன் மூலம் கிடைக்கின்றன.
கொய்யாப்பழம்
கொய்யாப்பழத்தில் வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துகள் அடங்கியுள்ளன, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புகளும் இதில் காணப்படுகின்றன,
கொய்யாவின் தோலில் தான் அதிக சத்துக்கள் உள்ளன, முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது.
தோல் வறட்சியை நீக்கி முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது.
சால்மன்
சருமத்தை மிருதுவாக வைக்க பெண்கள் வாரத்திற்கு ஒரு முறை 12 அவுன்ஸ் சால்மன் மீனை உண்ண வேண்டும் என்று அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் பரிந்துரைக்கிறது.
சால்மனில் வைட்டமின் பி12, வைட்டமின் டி ஆகியவை செறிந்துள்ள ஒமெகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. உடலின் கட்டிகளை குறைக்கிறது. இது நாள்பட்ட நோயின் தீவிரத்தை குறைக்கிறது.மேலும் 50 வயதினை கடந்த பெண்களின் பொதுவான பிரச்சனையான இரத்த அழுத்தத்தினை குறைக்கிறது.
பசுமையான இலை கீரைகள்
பசலைக்கீரை, கொலார்டூ கீரைகள், ரோமன் லெட்யூஸ் மற்றும் ஸ்விஸ் கேரட் ஆகியவை வைட்டமின் சி, வைட்டமின் கே, போலிக் அமிலம், இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ள பசுமையான காய்கறிகள் ஆகும்.
க்ரீன் கேரட்டில் உள்ள வைட்டமின் பி இதயத்திற்கும், நினைவாற்றலுக்கும் நல்லது. வைட்டமின் ஏ சரும செல்களை புதுப்பிக்க உதவுகிறது. மேலும் எண்ணற்ற பச்சை காய்கறிகளில் கண்டறியப்பட்டுள்ள லுடேயின் பார்வை திறனை பாதுகாக்கிறது. பச்சை காய்கறிகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடண்ட் முகத்தின் கோடுகளையும், சுருக்கங்களையும் தடுக்கிறது.
பொதுவாக பச்சை காய்கறிகளில் காணப்படும் லைகோஃபைன், லூடென் மற்றும் பீட்டா கரோட்டீன் சருமத்தின் முதுமைக்கு காரணமான புறஊதாக் கதிர்களை தடுக்கிறது.
கீரைகளில் காணப்படும் சத்துக்கள், இதய நோய், ஆஸ்துமா மற்றும் முடக்கு வாதம் ஆகிய நோய்க்கு எதிராக போரிடுகிறது. மேலும் சில குறிப்பிட்ட வகை புற்றுநோய்களையும் தடுக்கிறது.
பூண்டு
பூண்டில் சுவையும், நன்மையும் சம அளவில் கலந்துள்ளன. கல்லீரலின் இயக்கு திறனை அதிகரிக்கவும், நச்சுகளை அகற்றவும் பூண்டு துணை புரிகிறது.செல் சீரழிவினை தடுக்கிறது. இரத்த அழுத்தத்தை குறைத்து, இதய நோய்களை தடுக்கிறது.
பட்டியலிலுள்ள மற்ற உணவு வகைகளை போலவே பூண்டிலும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் செறிந்து காணப்படுகிறது. இது அசாதாரண செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த உதவுகிறது. விழிப்புணர்விற்காக மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தினை அதிகரிக்கிறது.
நன்றி
http://www.thoothuonline.com/archives/55424

http://seasonsnidur.com/2014/04/

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

புதன், 3 பிப்ரவரி, 2016

கருஞ்சீரகத்தில் நிவாரணம் உண்டா?

மௌலவி. யூனுஸ் தப்ரீஸ் ( இலங்கை சத்தியக் குரல் ஆசிரியர் )
"கருஞ்சீரகத்தில் சாவைத் (மரணத்தைத்) தவிர அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் ( ஆதாரம் புகாரி, 5688 முஸ்லிம் 4451 )
இதே கருத்தை தரக்கூடிய மற்றொரு ஹதீஸ் முஸ்லிமில் 4452-ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிலே கருஞ்சீரகத்திலே நோய்க்கான நிவாரணம் இல்லாமல் இல்லை மரணத்தைத் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
கருஞ்சீரகம் சம்பந்தப்பட்ட எல்லா ஹதீஸ்களும் நிராகரிக்கப்பட வேண்டிவைகளே என்று இன்றைய நவீன கண்டுப்பிடிப்பாளர்கள் கூறிவருகிறார்கள்.
குர்ஆனுக்கு முரண் என்று ஆரம்பித்து இப்போது இந்த செய்தி நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என்று மறுக்குகிறார்கள்? கேன்சர் நோயாளிக்கு கருஞ்சீரகத்தை கொடுத்து நோயை இல்லாமல் காட்டுங்கள் என்று பகுத்தறிவு வாதம் பேசுகிறார்கள்.
புத்திக்குப் படவில்லை, நடைமுறைக்குச் சாத்தியமில்லை என்று பார்த்தால் நபியவர்களால் மருத்துவம் சம்மந்தமாக சொல்லப்பட்ட அனைத்து செய்திகளும் மறுக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்ப்படும்.
ஹதீஸ்கள் ஸஹீஹாக இருந்தாலும் நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்ற நிலையில் உள்ளார்கள். எது இப்படியோ இக் கட்டரையை நிதானமாகவும் பக்கச்சார்பில்லாமலும் நடு நிலையோடு வாசித்திப் பாருங்கள், விளக்கம் பொருத்தம் என்றால் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் விட்டுவிடலாம்.
ஒரு நோயாளி வைத்தியரிடம் சென்று நீங்கள் தரும் மருந்தின் மூலம் நோய் உடனே குணமாக வேண்டும், இல்லாவிட்டால் நீங்கள் பொய் டாக்டர், நீங்கள் தரும் மருந்தும் பொய் மருந்து என்று யாராவது கூறினால், உனக்கு என்ன பைத்தியமா? என்று கேட்பார்கள்.
சில நேரங்களில் உடனே குணமாகலாம், சில நேரங்களில் ஒரு கிழமை ஆகலாம், ஒரு மாதமாகலாம், ஒரு வருடம் ஆகலாம், ஏன் அதிகமான காலம் நோயிலேயே இருக்கலாம். நோயிக்கான நூறு வீதம் சரியான மருந்தாக இருந்தாலும் அல்லாஹ்வுடைய நாட்டம் இருக்க வேண்டும்.
பின்வரும் ஹதீஸை கவனியுங்கள், ஒவ்வொரு நோயிக்கும் நிவாரணம் ஒன்று உண்டு நோயிக்குரிய நிவாரணம் சரியாக அமைந்து விட்டால் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் அனுமதியால் (குணம்) எற்ப்பட்டுவிடும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( முஸ்லிம் 4432 )
எவ்வளவு தான் மருந்து குடித்தாலும் அல்லாஹ்வுடைய நாட்டம் சரியாக இருக்கவேண்டும்.
மருந்தைப் பொருத்தவரை அது பாணி வகையாக இருக்கலாம் அல்லது மாத்திரையாக இருக்கலாம், அவைகள் பல கலவைகளால் தான் தயாரிக்கப் படுகிறது. அதுபோல கருஞ்சீரகம் ஏனைய மருந்து கலவைகளுடன் கலக்கப்பட்டு இன்று சந்தைகளில் விற்பனைகளில் இருப்பதை அனைவரும் அறிவார்கள்.
கருஞ்சீரகத்தால் தாயரிக்கப்பட்ட மாத்திரைகள் மற்றும் தைலங்கள், பாணிகள் மூலம் அதிகமான மக்கள் நிவாரணம் அடைந்து வருகிறார்கள்.
ஹதீஸுடைய பிரதிபலிப்பு சரியாகத்தானே உள்ளது. பிறகு ஏன் ஹதீஸ் புத்திக்குப் படவில்லை, நடைமுறைக்குச் சாத்தியம் இல்லை என்று எப்படி கூற முடியும்?
கருஞ்சீரகத்தை ஆய்வு செய்து இதில் நோய்க்கும் நிவாரணம் இல்லை என்று கண்டுப் பிடித்தீர்களா?
பொதுவாக எந்த நோயாக இருந்தாலும் அதற்கான மருந்து குறிப்பிட்ட காலத்திற்கு வேலை செய்யும். நோய் முத்திவிட்டது என்றால் மனிதன் மரணிக்கின்ற வரை மருந்தோடு காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறான். எனவே கென்சர் நோய்க்கு கருஞ்சீரகத்தை பயன்படுத்தி நோயை குணப்படுத்தினால் தான் அந்த ஹதீஸை ஏற்றுக்கொள்வோம் இல்லாவிட்டால் ஹதீஸ் ஸஹீஹாக இருந்தாலும் எற்றுக் கொள்ளமாட்டோம் என்று சொல்வது தனது அறிவீனத்தை உறுதிப் படுத்துகிறது. கென்சர் ஆரம்பத்திலே கண்டு பிடிக்கப்பட்டால் அதற்கான மருந்தைக் கொடுத்து நோயை கட்டுப்படுத்தி விடுகிறார்கள். நோய் முத்திவிட்டது என்றால், அதற்காக கண்டுப் பிடிக்கப்பட்ட மருந்தே வேலை செய்யாமல் கடைசி வரை அதே நோயிலே மரணிக்கும் நிலையை காண்கிறோம். எனவே கருஞ்சீரகத்தைப் பொருத்தவரை இன்று பல நோய்களுக்கு மருந்தாக பயன் படுத்தப்பட்டு வருகிறது.
இவர்கள் சொல்வது போல நடைமுறைப் படுத்தியப் பின்தான் அதுவும் குணமானால்தான் என்றால், கீழ் வரும் வசனத்தை எப்படி புரிந்து கொள்வது? அல்லாஹ் குர்ஆனில் 16 ம் அத்தியாயம் 68, 69,ம் வசனங்களில்
….. அதில் மனிதர்களுக்கு (நோயிக்கான) நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது. என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். அதாவது தேனில் நிவாரணம் உண்டு
என்கிறான். இப்போது ஒரு நோயாளிக்கு தேனை குடிக்க கொடுத்து குணமானால் தான் இந்த குர்ஆன் வசனத்தை ஏற்றுக் கொள்வோம், நிரூபித்துக் காட்டுங்கள்? என்று இந்த குர்ஆன் வசனத்தை அணுகுவதா? நபி (ஸல) அவர்களின் காலத்தில் வயிற்று வலியால் துடித்த ஒருவருக்கு தேன் குடிக்க கொடுக்கப்பட்டு நிவாரணம் பெற்ற செய்தியை புகாரி 5684-ல் காணலாம்.
ஒரு வயிற்று வலி நோயாலிக்கு தேனை குடிக்க கொடுத்து குணமாகா விட்டால் இந்த குர்ஆன் வசனத்தை நிராகரிப்பதா? அல்லது பொருத்தமான விளக்கத்தை கொடுப்பதா? இவர்கள் கூறுவது போல முடி வெடுத்தால் இது போல பல குர்ஆன் வசனங்ளை நிராகரிக்க வேண்டி வரும்? நவூது பில்லாஹ் அல்லாஹ நம்மைப் பாதுகாக்க வேண்டும்.
இன்று அதிகமான மருந்துகளில் தேனும் ஒரு மருந்தாக சேர்க்கப்படுகிறது. எனவே எங்கள் தலைவர் இதை வாபஸ் வாங்குகின்ற வரை நாங்களும் வாபஸ் வாங்க மாட்டோம் என்று மார்க்கத்தில் பிடிவாதம் பிடிக்கக் கூடாது.
நடை முறைப் படுத்திவிட்டு தான் ஒரு ஹதீஸை ஏற்றும்கொள்வோம் என்றால் பின் வரும் ஹதீஸ்ளை எப்படி ஏற்றுக்கொள்வது?
வலியுள்ள இடத்தில் கை வைத்து 3 தடவைகள் பிஸ்மியும், 7 தடவைகள் அவூது பில்லாஹி வ குத்ரதிஹி மின் ஷர்ரிமா அஜிது வ அஹாதிரு என்று கூறுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( முஸ்லிம் 4430 ) இந்த ஹதீஸின்படி ஒருவருக்கு வலியுள்ள இடத்தில் கை வைத்து இந்த துஆவை ஓதி வலி நீங்கா விட்டால் இந்த ஹதீஸுடைய நிலை என்ன? மேலும் காய்ச்சல் நரகத்தின் அனல் அதை தண்ணீரால் அணையுங்கள் என்றார்கள். ( முஸ்லிம் 4443 ) காய்ச்சலில் உள்ளவர் தண்ணீரைப் பயன் படுத்துகிறார் குணம் கிடைக்கவில்லை இந்த ஹதீஸின் நிலை என்ன? எப்படி விளங்க வேண்டும்? சின்ன பிள்ளைகளுக்கு கடுமையான காய்ச்சல் வந்து ஆஸ்பத்திரிக்கு எடுத்து போனால் மருந்துக் கொடுப்பதோடு முதல் உதவி சிகிச்சையாக தண்ணீரில் புடவையை நனைத்து துடைக்கச் சொல்வதை காணலாம். அறிவுக்குப் பொருந்தவில்லை என்று ஸஹீஹான ஹதீஸை தட்டுவது புத்திசாலி கிடையாது.
அது போல சூரா பாதிஹாவை ஓதி விஷத்திலிருந்து நிவாரணம் பெற்ற ஹதீஸை புகாரியில் காணலாம். விஷக்கடிக்கு ஓதிப்பார்த்து குணமாகவில்லை என்றால் ஹதீஸ் ஸஹீஹாக இருந்தாலும் தட்டவேண்டும் என்ற முடிவுக்கு வருவதா? பொருத்தமான விளக்கத்தை கொடுப்பதா?
மேலும் " (சமையல்) காளான் மன்னு வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( புகாரி 5708 )
கண் நோயுடைய ஒருவருக்கு களானின் சாறைக் குடிக்கக் கொடுத்து நிவாரணம் கிடைக்கா விட்டால், இந்த ஹதீஸை தட்டுவதா? அல்லது பொருத்தமான விளக்கத்தை கொடுப்பதா? மேலும் ஒற்றைத் தலை வலிக்கு நபி (ஸல்) அவர்கள் குருதி உறிஞ்சி எடுத்தார்கள். ( புகாரி 5701 )
பொதுவாக குறுதி உறிஞ்சி எடுப்பதின் மூலம் நோயிக்கு நிவாரணம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய பல ஹதீஸ்களை காணலாம். குறுதி உறிஞ்சி எடுத்து நிவாரணம் கிடைக்கா விட்டால்? இந்த ஹதீஸ்களின் நிலை என்ன? எனவே இவர்கள் ஹதீஸை அணுகுவதுப் போல அணுகினால் மருத்துவம் சம்பந்தமாக சொல்லப் பட்ட எல்லா ஹதீஸ்களையும் மறுக்க வேண்டிய நிலைக்கு ஆளாக வேண்டும். சிந்தியுங்கள் செயல்படுங்கள். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
http://www.islamkalvi.com/portal/?p=75316


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

திங்கள், 1 பிப்ரவரி, 2016

பிறரை இழிவாக எண்ணாதீர்கள்

- மௌலவி யூனுஸ் தப்ரீஸ் (இலங்கை சத்தியக்குரல் ஆசிரியர்)
இஸ்லாத்தின் பார்வையில் பாவங்களுக்கு இரண்டு விதமான தண்டனையை நாம் காணலாம். ஒரு விதமான பாவத்தை பொறுத்தவரை திருடினால் பாவம். அதற்குத் தண்டனை இந்த உலகில் கை வெட்டப்படுதல். திருமணம் முடித்து விபச்சாரம் செய்வது பாவம். அதற்குத் தண்டனை இவ்வுலகில் கல்லெறிந்து கொல்லப்படுதல். மேலும் திருமணம் முடிக்காமல் விபச்சாரம் செய்வது பாவம். அதற்கு நூறு சாட்டையடி. மேலும் அவதூறு சொல்வது பாவம். அதற்கு சாட்டையடி. இப்படி உலகிலேயே பாவத்திற்கான பரிகாரத்தை இஸ்லாம் காட்டியுள்ளது.

இரண்டாவது வகையான பாவம். அவைகளை செய்வதால் மறுமையில் தண்டனை. உதாரணத்திற்கு புறம் பேசுவது, கோள் சொல்வது, இட்டுக்கட்டுவது. இப்படியான பாவங்களைக் குறிப்பிடலாம். ஆனால், சமுதாயத்தில் முதல் வகையான பாவத்தை பயப்படுகிறார்கள். அதேநேரம் இரண்டாவது வகையான பாவத்தை தாராளமாக, நாளாந்தம் செய்வதைக் காணலாம்.
திருடினால் கைதான் வெட்டப்படும். விபச்சாரம் செய்தால் உயிர்தான் போகும். அவதூறு பேசினால் சாட்டையடிதான் கிடைக்கும். ஆனால், புறம் பேசினால் நரகம், கோள் பேசினால் நரகம், இட்டுக் கட்டினால் நரகம். எந்தப் பாவம் கடுமையானது என்று இப்போது சிந்தியுங்கள். நரகத்திற்குரிய பாவத்தை சர்வ சாதாரண மாகக் செய்வதை பயப்பட வேண்டும்.
அந்த வரிசையில்தான் பிறரை இழிவாக எண்ணுவதும் நரகத்திற்கு இழுத்துச் செல்லும் பாவங்களில் அடங்குகிறது. ஏன் என்றால், ஒருவரை நாம் இழிவாக நினைப்பது இது ஜாஹிலியத்துக் கால பழக்கமாகும். அப்படி நினைப்பதால் நம்மை அறியாமல் நமது உள்ளத்தில் நான் என்ற பெருமை வந்து விடுகிறது. பிறரை இழிவாக நினைப்பதின் மூலம் அல்லது பேசுவதன் மூலம் புறம், கோள், பொய் போன்ற பாவங்கள் தன்னை அறியாமல் வந்து விடுகிறது.
எனவே அன்பு வாசகர்களே! இந்தக் கட்டுரையின் நோக்கம் நம்மிடத்தில் எவரையும் பற்றி தப்பான எண்ணம் வந்து விடக்கூடாது, அதை விட்டும் நாம் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்பதை பதிய வைத்துக் கொள்ளுங்கள்.
பிறரை இழிவாக எண்ணுவது இன்று படித்த உயர் மட்டத்திலிருந்து சாமானியர்கள் வரை சர்வ சாதாரணமாக இருப்பதைக் காணலாம். உதாரணத்திற்கு ஒரு சில அதிபர்கள் தனக்கு கீழே உள்ள ஆசிரியர்களை அல்லது காரியாலயத்தில் பணி புரிவோரை குறைவாக, இழிவாக எண்ணுவது நான் இந்தப் பாடசாலையில் பெரிய அதிபர் என்று ஏனைய ஆசிரியர்களோடு கடுகடுப்பாக அல்லது அலட்சியமாக இருப்பதைக் காணலாம்.
இந்த எண்ணத்தினால் பெருமை என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஒரு சில அதிகாரிகள் தனக்கு கீழ் பணி புரிபவர்களை இழிவாகக் கருதுவதன் மூலம் பெருமை என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். சில பள்ளி நிர்வாகிகளினால் முஅத்தின்கள் இழிவாகக் கருதப்படுகிறார்கள். சில மௌலவிமார்களால் சில மௌலவிமார்கள் இழிவாகக் கருதப்படுகிறார்கள்.
இன்று மௌலவிமார்களிடம் தன்னை அறியாமல் இப்படியான நிலை உருவாதை சாதாரணமாகக் காணலாம். சில மௌலவிமார்கள் சிலரைப் பார்த்து அவர்களுக்கு எங்களை போல பயான் செய்யத் தெரியாது என்று இழிவாக எண்ணுவதன் (பேசுவதன்) மூலம் பாவத்தை சம்பாதிக்கிறார்கள். வேறு சிலர் எங்கள் அமைப்பிற்கு நிறைய பணம், வசதி வாய்ப்பு உள்ளது என்று அப்படி இல்லாத அமைப்பை இழிவாகக் கருதுவது. இதனால் பாவத்தைத் தேடிக் கொள்கிறார்கள்.
வேறு சிலர் எங்களிடத்தில் பெரிய, பெரிய மௌலவிகள் இருக்கிறார்கள். அவர்களிடத்தில் யார் இருக்கிறார்கள் என்று ஜாஹிலிய்யது பெருமை அடிப்பது. இதனால் பாவத்தைத் தேடுகிறார்கள். வேறு சிலர் இதற்கு நாங்கள்தான் தகுதி. அவர்கள் எப்படிச் செய்வது என்று பேசி பாவத்தை தேடிக் கொள்வது. வேலியே பயிரை மேய்ந்த கதையாக சில உலமாக்க ளிடம் இப்படியான தீய பழக்கங்கள் குடி கொண்டிருப்பதை நாம் சொல்லி வாசகர்கள் அறிய வேண்டிய அவசியமில்லை.
இன்று சில மௌலவிமார்களை திருத்தக் கூடிய அளவிற்கு பொதுமக்கள் வந்து விட்டார்கள். சிலர் யாருடனும் சரியாகப் பேச மாட்டார்கள். எல்லா விதத்திலும் அவர்களுக்கு சமமானவர்களிடம் மட்டும் சிரிப்பது, பேசுவது. கட்டாயம் இப்படியான விடயங்களை சகலரும் தவிர்ந்துகொள்ள வேண்டும்.
அதேபோல சில செல்வந்தர்கள் ஏழைகளைக் கண்டால் ஏளனமாக எண்ணுவது. ஏழைகளை கணக்கெடுக்கவும் மாட்டார்கள். ஏழைகள் அமரும் சபையில் சமமாக அமர மாட்டார்கள். இதுவே பிறரை இழிவாகக் கருதுவதற்கு சமமாகும். இதனால் பெருமை தானாக வருகிறது. நரகத்தை இதன் மூலம் தேடிக் கொள்கிறார்கள்.
இன்னும் சிலர் அந்தஸ்தால் பிறரை இழிவாகக் கருதுவது எனக்கு பெரிய மாளிகை போல வீடு, அவருக்கு வீடில்லை, எனக்கு பல வாகனம். அவருக்கு வாகனம் இல்லை. நான் பல கோடி ரூபாய்களில் தொழில் புரியும் செல்வந்தர். அவர் கூலி வேலை செய்பவர் என்று பிறரை இழிவாகக் கருதுவதன் மூலம் பெருமை என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
சிலர் நான் மிகவும் அழகுடையவனாக இருக்கிறேன். வேறு சிலர் நான் பலசாலியாக இருக்கிறேன் என்று பிறரை இழிவாகக் கருதுவது இப்படி நரகத்திற்குரிய பாவத்தை பயப்படாமல் செய்யக் கூடிய நிலையைக் காணலாம். இதைப் பற்றி குர்ஆனும் ஹதிஸும் என்ன சொல்கிறது என்பதைத் தொடர்ந்து அவதானிப்போம்.
விசுவாசிகளே! ஒரு சமூகத்தால் மற் றொரு சமூகத்தாரை பரிகாசம் செய்ய வேண்டாம். அவர்களை விட இவர்கள் மிகச் சிறந்தவர்களாக இருக்கலாம். மேலும் எந்தப் பெண்களும் மற்ற எந்தப் பெண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். அவர்கள் இவர்களை விட மிகச் சிறந்தவர்களாக இருக்கலாம். உங்களில் சிலர் சிலரை குறை கூறவும் வேண்டாம். உங்கள் சிலர் சிலரை பட்டப் பெயரால் அழைக்கவும் வேண்டாம். விசுவாசங் கொண்ட பிறகு தீய பெயரால் அழைப்பது கெட்டதாகி விட்டது. எவர்கள் தவ்பா செய்து மீளவில்லையோ அவர்கள் அநியாயக்காரர்கள். (49:11)
இந்த வசனத்தில் ஒரு முஃமின் எப்படி பிறரோடு நடந்துகொள்ள வேண்டும் என்ப தைப் படைத்தவன் பாடம் நடத்துகிறான். நான் அவர்களை விட சிறப்புக்குரியவன் என்று எவரும் நினைக்கக் கூடாது. பிறரை குறை கூறிக் கொண்டே திரியவும் கூடாது. ஆனால், இந்தக் குர்ஆன் வசனம் இன்று புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
மேலும் தொடர்ந்து அந்த சூராவில்,
"விசுவாசிகளே! எண்ணத்தில் (தவறான) பெரும்பாலானவற்றை தவிர்த்துக் கொள்ளுங்கள். (ஏனெனில்) நிச்சயமாக சில எண்ணங்கள் பாவமாகும். மேலும் நீங்கள் துருவித் துருவி விசாரிக்கவும் வேண்டாம். உங்களில் சிலர் சிலரை புறம் பேசவும் வேண்டாம். (49:12)
இந்த வசனத்தின் மூலம் யாரையும் தவறான முறையில் நினைக்கக் கூடாது என்று கூறுகிறான். பேசுவது வேறு நினைக்கவே வேண்டாம் என்கிறான். அதுபோல எதற்கெடுத்தாலும் குறை கூறிக் கொண்டே இருப்பது இங்கு ஒரு விடயத்தை நாம் அவதானிக்க வேண்டும். எவர் இப்படி அடிக்கடி குறை பேசுகிறாரோ அவரிடம் நிறைய குறைகள் நிறைந்திருக்கும்.
ஒரு மனிதரிடம் ஒரு குறையை நாம் காண்கிறோம் என்றால், அவரை நேரடியாக சந்தித்து, நேரடியாக அந்த விடயத்தை எடுத்துக் கூறுங்கள். அதை விட்டு விட்டு, நாளுபேருக்கு மத்தியில் சுவாரஷ்யமாக குறைகளை பேசுவோம் என்றால் அல்லாஹ் நம்மை இது போல பேசவைத்து விடலாம்? அல்லாஹ்வைப் பயந்துகொள்ள வேண்டும்.
அதேபோல் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்: "தலைமுடி சுருண்ட கருப்பு நிற அடிமை உங்களுக்கு தலைவராக நியமிக்கப்பட்டாலும் அவருக்கு நீங்கள் கட்டுப்பட வேண்டும்".
ஆனால், இன்று தனக்கு பிடிக்க வில்லை என்பதற்காக கட்டுப்பட மாட்டோம் அல்லது குறை கூறிக் கொண்டு திரிவதைக் காணலாம். அவருக்கு அரபு தெரியுமா? அவருக்கு பயான் செய்யத் தெரியுமா? அவருக்கு பண வசதி இருக்கிறதா? அவர் அசிங்கமாக இருக்கிறார்? என்று பலவாறாகப் பேசுவதன் மூலம் நரகத்திற் கான வழியை தேர்ந்தெடுக்கிறார்கள்?
"நிச்சயமாக இறையச்சம் உடையோரே அல்லாஹ்விடம் மிகச் சிறந்தவர்" என்று அல்லாஹ் கூறுகிறான். (49:13)
அதேபோல் "நிச்சயமாக அல்லாஹ் உங்கள் உடம்புகளையோ, பொருட்களையோ பார்க்க மாட்டான். உங்கள் உள்ளங்களையும், இன்னும் அமல்களையும்தான் பார்க்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
எனவே, இனவெறி, மொழி வெறி, நிற வெறியை ஒரு பக்கம் தூக்கி வீசிவிட்டு, இறையச்சத்திற்கும் மனத் தூய்மைக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். யார் தவறு செய்தாலும் இஸ்லாத்தில் தண்டனை வழங்கப்படும். குறிப்பாக பயான்களை உபதேசமாகப் பேசிவிட்டு அதிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளா விட்டால் நரகில் குடல்கள் வெளியே தள்ளப்பட்டு, கழுதை ஒரு செக்கை சுற்றி சுற்றி வருவதைப் போல் இவர் கடுமையாக வேதனை செய்யப்படும்போது நரகில் ஏனையவர்கள் அம்மனிதனை நோக்கி, உலகில் மக்களுக்கு நல்லதைத்தானே சொல்லிக் கொண்டிருந்தாய் எனக் கேட்கும்போது, அதற்கு நல்லதைச் சொன்னேன். அதை நான் நடைமுறைப்படுத்தவில்லை என்று கூறுவான். (முஸ்லிம் 5713)
எனவே, அன்புக்குரியவர்களே பிறரை குறை சொல்வது, இழிவாக நினைப்பது, புறம் பேசுவது, கோள் சொல்வது, அவதூறு சொல்வது, பெருமையாக தன்னை நினைப்பது போன்ற நரகத்திற்குரிய பாவங்களை விட்டும் நாம் ஒதுங்கி, சுவனத்திற்குரிய அமல்களை செய்வதற்கு படைத்த இறை வன் நமக்கு அருள்பாலிப்பானாக.
http://www.islamkalvi.com/portal/?p=75312


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

வெள்ளி, 29 ஜனவரி, 2016

கம்பியூட்டரில் நாம் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு...!

இன்றைக்கு கம்ப்யூட்டரில் பிரச்னைகள் ஏற்பட்டு, இயங்காமல் போவதும், இயக்கம் எதிர்பார்த்தபடி இல்லாமையும், அடிக்கடி நடக்கும் சம்பவங்களாகும்.

ஆனால், எதனால் இந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று அறிந்து கொள்வதும் ஒரு பிரச்னையாக நமக்குத் தோன்றும். பிரச்னைக்குரிய காரணம் ஹார்ட்வேர் சாதனங்களினாலா அல்லது சாப்ட்வேர் தொகுப்பினாலா என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடிவதில்லை.

ஏனென்றால், இந்த இரண்டு வகை காரணங்களினால் ஏற்படும் பிரச்னைகள் ஒரே மாதிரியாகத் தோற்றமளிக்கும். எடுத்துக் காட்டாக, புளு ஸ்கிரீன் ஆப் டெத் எனப்படும் இயக்க முடக்கம், ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் ஆகிய இரண்டாலும் ஏற்படலாம். இவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

ரொம்ப ஸ்லோவா கம்பியூட்டர் இயங்குகிறது

இந்த பிரச்னை எல்லாருக்கும் ஏற்படுவது. அதிக எண்ணிக்கையில், கம்ப்யூட்டர் தொடங்கும்போதே இயங்கத் தொடங்கும் சாப்ட்வேர் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்த பின்னர், கம்ப்யூட்டர் அவற்றின் சுமை தாங்காமல், இயக்க வேகத்தினைக் குறைவாக்கும்.

அல்லது ஏதேனும் மால்வேர் தாக்கினால், அப்போதும் வேகம் குறையத் தொடங்கும். ஆனால், நாம் என்ன எண்ணுகிறோம். கம்ப்யூட்டர் வாங்கி பல ஆண்டுகள் அல்லது மாதங்கள் ஆகிவிட்டன.

அதனால், இயக்க வேகம் குறைந்துவிட்டது என்று முடிவு கட்டுகிறோம். இந்த சிந்தனை தொடர்ந்து இருப்பதனால், கம்ப்யூட்டரை மூட்டை கட்டி வைத்துவிட்டு, புதிய கம்ப்யூட்டரை வாங்கிப் பயன்படுத்துகிறோம். இது தவறான கணிப்பாகும்.

கம்ப்யூட்டரின் செயல்வேகம் குறைகிறது என்றால், அதற்குக் காரணம் சாப்ட்வேர் பிரச்னையாகும். ஹார்ட்வேர் சாதனங்களில் பிரச்னை ஏற்பட்டால், இயக்கம் முடங்கிப் போகுமே ஒழிய, வேகம் குறையாது. சில நேரங்களில், சி.பி.யு. அதிக சூடாகிப் போனால், வேகம் குறையலாம். ஆனால், இது எப்போதாவது ஏற்படுவதுதான்.

புளூ ஸ்கிரீன் ஆட் டெத்

விண்டோஸ் இயக்கத்தில், அது முடங்கிச் செயலற்றுப் போகும் நிலை ஏற்பட்டால், புளு ஸ்கிரீன் ஆப் டெத் என்னும் நிலை காட்டப்படும். ஆனால், புதிய விண்டோஸ் இயக்கத் தொகுப்புகள் பழைய தொகுப்புகளைப் போலின்றி, நிலையாக இயங்குகின்றன.

நல்ல ஹார்ட்வேர் சாதனங்களுடன், சிறப்பான ட்ரைவர் புரோகிராம்களுடன் இயங்கும் ஒரு சிஸ்டம், என்றைக்கும் புளு ஸ்கிரீன் ஆப் டெத் என்ற நிலைக்குச் செல்லாது.

ஆனால், அடிக்கடி இந்த ஸ்கிரீன் தோன்றினால், உங்கள் ஹார்ட்வேர் சாதனங்களில் ஒன்றில் பிரச்னை இருக்கலாம். அல்லது, தவறான ட்ரைவர் புரோகிராம்களால் ஏற்படலாம்.

நீங்கள் சாப்ட்வேர் புரோகிராம் ஒன்றினை அண்மையில் கம்ப்யூட்டரில் பதிந்திருந்தாலோ, அல்லது ஹார்ட்வேருக்கான ட்ரைவர் புரோகிராம்களை மாற்றியிருந்தாலோ, அந்த நேரத்தினை அடுத்து, புளு ஸ்கிரீன் ஏற்பட்டால், புரோகிராமினை அன் இன்ஸ்டால் செய்திடுங்கள்.

அல்லது ட்ரைவர் புரோகிராமினை மாற்றுங்கள். ட்ரைவர் புரோகிராம் எதனையும் மாற்றாத நேரத்தில், கம்ப்யூட்டரில் புளு ஸ்கிரீன் தோன்றுகிறது என்றால், நிச்சயமாக உங்கள் சிஸ்டத்தின் ஹார்ட்வேர் சாதனம் ஒன்றில்தான் பிரச்னை என்று உறுதியாகச் சொல்லலாம்.

கம்ப்யூட்டர் தொடங்க மறுக்கிறது

உங்கள் கம்ப்யூட்டர் பூட் ஆகவில்லை என்றால், இது ஹார்ட்வேர் அல்லது சாப்ட்வேர் பிரச்னையாக இருக்கலாம். விண்டோஸ் இயங்கத் தொடங்கி, பாதியிலேயே தன்னை முடக்கிக் கொள்கிறதா?

அல்லது கம்ப்யூட்டர் தன் ஹார்ட் ட்ரைவினை உணர்ந்து கொள்ளாமல் இருக்கிறதா? அல்லது உள்ளிருக்கும் சாதனங்களுக்கு மின் சக்தி செல்லாமல் இருக்கிறதா? இதற்கெல்லாம் காரணம் நிச்சயம் ஹார்ட்வேர் பிரச்னைகளாகத்தான் இருக்கும்.

ஹார்ட் ட்ரைவ்

உங்களுடைய ஹார்ட் ட்ரைவ் செயல்படத் தவறினால், அதில் உள்ள பைல்கள் கெட்டுப் போயிருக்கலாம். பைல் ஒன்றைப் பெற முயற்சிக்கையில் அல்லது ஹார்ட் ட்ரைவில் எழுத முயற்சிக்கையில், ஹார்ட் ட்ரைவ் அதிக நேரம் எடுக்கலாம். இதனால், விண்டோஸ் பூட் ஆகாமல் நின்றுவிடலாம்

ரேம்

சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம்கள், தங்களுக்கான டேட்டாவினை ராம் நினைவகத்தில் தற்காலிகப் பயன்பாட்டிற்கு எழுதி வைக்கின்றன. ரேம் நினைவகத்தில் பிரச்னை ஏற்பட்டால், இந்த டேட்டாவில் சிறிதளவு மட்டுமே நினைவகத்தில் எழுதப்பட்டு, நமக்கு தவறான முடிவுகள் காட்டப்படும். இது இறுதியில், அப்ளிகேஷன் புரோகிராம் இயக்க முடக்கம், புளு ஸ்கிரீன் மற்றும் பைல் கெட்டுப்போதல் ஆகியவற்றில் முடியும்.

மதர்போர்ட்

மதர்போர்டில் ஏற்படும் பிரச்னைகளின் தன்மையினை அறிவது மிகவும் கடினமான செயலாகும். எப்போதாவதுதான் மதர் போர்டு மூலம் பிரச்னை ஏற்படும். ஏற்படுகையில், வேறு அறிகுறிகள் காட்டப்படாமல், புளு ஸ்கிரீன் காட்டப்படும்.

மின்சக்தி

மின் சக்தி பெறுவதிலும், அதனைப் பல்வேறு சாதனப் பிரிவுகளிடையே பங்கிட்டுக் கொள்வதிலும் பிரச்னை ஏற்பட்டால், இதனை அறிதலும் எளிதான செயல் அல்ல. சில வேளைகளில், குறிப்பிட்ட பகுதிக்குத் தேவைக்கு மேல், மின் சக்தி வழங்கப்படலாம். இதனால், அந்தச் சாதனப் பகுதி பழுதடையலாம். செயல்பாட்டில் தவறுகள் ஏற்படலாம். மின் சக்தி முழுமையாக சென்றடையாவிட்டால், கம்ப்யூட்டர் இயங்காது. அதன் பவர் பட்டனை அழுத்தினால் ஒரு மாற்றமும் ஏற்படாது.

சி.பி.யு

சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட் இயங்காமல் போனாலும், கம்ப்யூட்டர் இயக்கம் பூட் ஆகாது. சி.பி.யு. அளவிற்கு மேலாக வெப்பமாக ஆனாலும், புளு ஸ்கிரீன் கிடைக்கும். எடுத்துக்காட்டாக, கேம் ஒன்றை இயக்கிக் கொண்டிருந்தால், அல்லது வீடியோ ஒன்றை இயக்கிக் கொண்டிருந்தால், அதற்கு சி.பி.யு.வின் திறன் அதிகத் தேவை ஏற்பட்டு, சி.பி.யு. சூடாகி, தொடர்ந்து இயங்க முடியாமல், புளு ஸ்கிரீன் காட்டப்படும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

புதன், 27 ஜனவரி, 2016

ஹார்ட்வேர் பிரச்னைகளும் தீர்வுகளும்..!.

கம்ப்யூட்டர் முடங்கிப் போனால், உடனே நாம் அது எதனால் ஏற்பட்டிருக்கும் என எண்ணாமல், ஏதாவது செய்து, அதனை மீண்டும் இயக்க மாட்டோமா என்று தான் முயற்சிப்போம்.

இந்த முயற்சி கன்னா பின்னா என, எதனையும் மேற்கொள்ளத் தூண்டும். முடங்கிப் போவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், ஹார்ட்வேர் பிரச்னைகள் சிலவும் இருக்கலாம். எனவே, இங்கு ஹார்ட்வேரில் எங்கு, என்ன காரணங்களுக்காக பிரச்னைகள் ஏற்படலாம் என சில தரப்பட்டுள்ளன.

1. சரியான மின்சாரம் இல்லாமல் மதர் போர்டு திடீரென முடங்குகிறது:

எஸ்.எம். பி.எஸ். செக் செய்திடவும். அல்லது ராம் மெமரி சரியாக வேலை செய்கிறதா என்பதைச் சோதனை செய்திடவும். உங்கள் சாப்ட்வேர் காப்பி செய்யப்பட்டது என்றால், அதிலிருந்தும் பிரச்சினை ஏற்படலாம். சி.பி.யு. மேல் உள்ள சிறிய விசிறி சரியாகச் செயல்படவில்லை என்றாலும் இந்த எர்ரர் காட்டப்படும்.

2. மானிட்டரின் ஸ்கிரீன் காட்சி ஆடுகிறது:

டிஸ்பிளே கார்டு சரியாகப் பொருத்தப் பட்டுள்ளதைச் சோதிக்கவும். ஏதேனும் வைரஸ் புரோகிராம் உள்ளே புகுந்தும் இந்த வேலையைச் செய்திடலாம். அல்லது வீடியோ மெமரியில் பிரச்சினை இருக்கலாம்.

3. திரைக் காட்சி அதிர்கிறது:

மானிட்டரைச் சுற்றி ஏதேனும் காந்த அல்லது ரேடியோ அலைகள் உருவாகலாம்.

4. சி.பி.யு. கேபினட்டில் லேசாக ஷாக் அடிக்கிறது:

கம்ப்யூட்டருக்கான மின் இணைப்பின் எர்த் இணைப்பு சரியில்லாமல் இருக்கலாம். எனவே மெயின் பவர் கேபிளைச் சோதிக்கவும்.

5. Non System Disk Error:

சி.டி. டிரைவில் பூட் பண்ண முடியாத வேறு டிஸ்க் இருக்கலாம். அல்லது ஹார்ட் டிஸ்க்கிற்கான சீமாஸ் செட் அப்பில் தவறு இருக்கலாம். ஹார்ட் டிஸ்க்கில் பார்ட்டிஷன் உருவாக்கப்படாமல் இருக்கலாம். ஹார்ட் டிஸ்க் பார்ட்டிஷன் பார்மட் செய்யப்படாமல் இருக்கலாம்.

6. Missing Operating System:

சிஸ்டம் இயக்குவதற்கான பைல்கள் இல்லாமல் இருக்கலாம் - குறிப்பாக Command.com என்னும் பைல். இதனுடன் IO.sys, MS_DOS.sys ஆகிய பைல்களும் ஒரு சிஸ்டம் இயங்க முதல் தேவைகளாகும். இவை சரியாக உள்ளனவா என்று பார்க்கவும்.

7. Missing Command Interpretor:

Command.com பைல் கரப்ட் ஆகி இருக்கலாம். அல்லது வைரஸ் பாதித்திருக்கலாம். அல்லது அழிக்கப்பட்டிருக்கலாம்.

8. IO Error:

சீமாஸ் செட்டிங்ஸில் ஹார்ட் டிஸ்க் எந்த வகை என்று தரப்பட்டிருப்பது சரியாக இல்லை. பார்மட்டிங் செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டம் சரியானதல்ல.

9. Divide Over Flow எர்ரர் மெசேஜ்:

சில டைரக்டரிகள் அல்லது பைல்கள் கிராஷ் ஆகி இருக்கலாம். CHKDSK/F அல்லது SCANDISK பயன்படுத்தி அவற்றைச் சரி செய்திடவும்.

10. கம்ப்யூட்டர் செயல்படுகையில் ஹார்ட் டிஸ்க்கிலிருந்து சத்தம் வருகிறது:

சீரான மின்சாரம் தரப்படவில்லை. கேபிள்கள் சரியாகப் பொருத்தப்படவில்லை. ஹார்ட் டிஸ்க்குகளில் Y கனக்டர் கேபிள் பொருத்தப்பட்டிருந்தால் எடுத்துவிட்டு சரியான கேபிளைப் பொருத்தவும். ஹார்ட் டிஸ்க் பலவீனமாக இருக்க வேண்டும். அல்லது பெரும் அளவில் பேட் செக்டார்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்.

11. ஹார்ட் டிஸ்க் ப்ராசஸ் செய்கையில் முடங்கி நிற்கிறது:

CHKDSK/F அல்லது SCANDISK பயன்படுத்தி பேட் செக்டார்களைச் சோதø செய்திடவும். நிறைய இருந்தால் மீண்டும் ஹார்ட் டிஸ்க்கினை பார்மட் செய்திடவும்.

12. Hard Disk Not Detected:

பவர் கனெக்டர் களைச் சோதனை செய்திடவும். டேட்டா கேபிள்களைச் சரி பார்க்கவும். ஜம்ப்பர்களைச் சோதனை செய்திடவும்.

13. ஹார்ட் டிஸ்க் பார்ட்டிஷன் காட்டப்படவில்லை:

ஹார்ட் டிஸ்க்கை பார்மட் செய்த ஆப்பரேட்டிங் சிஸ்டம், தற்போதுள்ள மதர்போர்டுடன் இணைந்து போகவில்லை.

14. MMX/DLL FILE MISSING:

இந்த பைல்கள் பவர் திடீரென நின்று போனதால் கரப்ட் ஆகி இருக்கலாம். அல்லது வைரஸ் பாதித்திருக்கலாம். எனவே இந்த பைல்களை வேறு ஒரு கம்ப்யூட்டரிலிருந்து காப்பி செய்து இதற்கு மாற்றவும்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

உயில் எழுதுவதற்கு முன்பு மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.

குடும்பத்திற்கு உணவளித்து வந்த முக்கிய நபர் அல்லது பாதுகாவலர் இறந்த பிறகு குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்படும் சண்டை சொத்து சம்பந்தமானதா...

Popular Posts