லேபிள்கள்

புதன், 3 பிப்ரவரி, 2016

கருஞ்சீரகத்தில் நிவாரணம் உண்டா?

மௌலவி. யூனுஸ் தப்ரீஸ் ( இலங்கை சத்தியக் குரல் ஆசிரியர் )
"கருஞ்சீரகத்தில் சாவைத் (மரணத்தைத்) தவிர அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் ( ஆதாரம் புகாரி, 5688 முஸ்லிம் 4451 )
இதே கருத்தை தரக்கூடிய மற்றொரு ஹதீஸ் முஸ்லிமில் 4452-ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிலே கருஞ்சீரகத்திலே நோய்க்கான நிவாரணம் இல்லாமல் இல்லை மரணத்தைத் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
கருஞ்சீரகம் சம்பந்தப்பட்ட எல்லா ஹதீஸ்களும் நிராகரிக்கப்பட வேண்டிவைகளே என்று இன்றைய நவீன கண்டுப்பிடிப்பாளர்கள் கூறிவருகிறார்கள்.
குர்ஆனுக்கு முரண் என்று ஆரம்பித்து இப்போது இந்த செய்தி நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என்று மறுக்குகிறார்கள்? கேன்சர் நோயாளிக்கு கருஞ்சீரகத்தை கொடுத்து நோயை இல்லாமல் காட்டுங்கள் என்று பகுத்தறிவு வாதம் பேசுகிறார்கள்.
புத்திக்குப் படவில்லை, நடைமுறைக்குச் சாத்தியமில்லை என்று பார்த்தால் நபியவர்களால் மருத்துவம் சம்மந்தமாக சொல்லப்பட்ட அனைத்து செய்திகளும் மறுக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்ப்படும்.
ஹதீஸ்கள் ஸஹீஹாக இருந்தாலும் நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்ற நிலையில் உள்ளார்கள். எது இப்படியோ இக் கட்டரையை நிதானமாகவும் பக்கச்சார்பில்லாமலும் நடு நிலையோடு வாசித்திப் பாருங்கள், விளக்கம் பொருத்தம் என்றால் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் விட்டுவிடலாம்.
ஒரு நோயாளி வைத்தியரிடம் சென்று நீங்கள் தரும் மருந்தின் மூலம் நோய் உடனே குணமாக வேண்டும், இல்லாவிட்டால் நீங்கள் பொய் டாக்டர், நீங்கள் தரும் மருந்தும் பொய் மருந்து என்று யாராவது கூறினால், உனக்கு என்ன பைத்தியமா? என்று கேட்பார்கள்.
சில நேரங்களில் உடனே குணமாகலாம், சில நேரங்களில் ஒரு கிழமை ஆகலாம், ஒரு மாதமாகலாம், ஒரு வருடம் ஆகலாம், ஏன் அதிகமான காலம் நோயிலேயே இருக்கலாம். நோயிக்கான நூறு வீதம் சரியான மருந்தாக இருந்தாலும் அல்லாஹ்வுடைய நாட்டம் இருக்க வேண்டும்.
பின்வரும் ஹதீஸை கவனியுங்கள், ஒவ்வொரு நோயிக்கும் நிவாரணம் ஒன்று உண்டு நோயிக்குரிய நிவாரணம் சரியாக அமைந்து விட்டால் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் அனுமதியால் (குணம்) எற்ப்பட்டுவிடும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( முஸ்லிம் 4432 )
எவ்வளவு தான் மருந்து குடித்தாலும் அல்லாஹ்வுடைய நாட்டம் சரியாக இருக்கவேண்டும்.
மருந்தைப் பொருத்தவரை அது பாணி வகையாக இருக்கலாம் அல்லது மாத்திரையாக இருக்கலாம், அவைகள் பல கலவைகளால் தான் தயாரிக்கப் படுகிறது. அதுபோல கருஞ்சீரகம் ஏனைய மருந்து கலவைகளுடன் கலக்கப்பட்டு இன்று சந்தைகளில் விற்பனைகளில் இருப்பதை அனைவரும் அறிவார்கள்.
கருஞ்சீரகத்தால் தாயரிக்கப்பட்ட மாத்திரைகள் மற்றும் தைலங்கள், பாணிகள் மூலம் அதிகமான மக்கள் நிவாரணம் அடைந்து வருகிறார்கள்.
ஹதீஸுடைய பிரதிபலிப்பு சரியாகத்தானே உள்ளது. பிறகு ஏன் ஹதீஸ் புத்திக்குப் படவில்லை, நடைமுறைக்குச் சாத்தியம் இல்லை என்று எப்படி கூற முடியும்?
கருஞ்சீரகத்தை ஆய்வு செய்து இதில் நோய்க்கும் நிவாரணம் இல்லை என்று கண்டுப் பிடித்தீர்களா?
பொதுவாக எந்த நோயாக இருந்தாலும் அதற்கான மருந்து குறிப்பிட்ட காலத்திற்கு வேலை செய்யும். நோய் முத்திவிட்டது என்றால் மனிதன் மரணிக்கின்ற வரை மருந்தோடு காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறான். எனவே கென்சர் நோய்க்கு கருஞ்சீரகத்தை பயன்படுத்தி நோயை குணப்படுத்தினால் தான் அந்த ஹதீஸை ஏற்றுக்கொள்வோம் இல்லாவிட்டால் ஹதீஸ் ஸஹீஹாக இருந்தாலும் எற்றுக் கொள்ளமாட்டோம் என்று சொல்வது தனது அறிவீனத்தை உறுதிப் படுத்துகிறது. கென்சர் ஆரம்பத்திலே கண்டு பிடிக்கப்பட்டால் அதற்கான மருந்தைக் கொடுத்து நோயை கட்டுப்படுத்தி விடுகிறார்கள். நோய் முத்திவிட்டது என்றால், அதற்காக கண்டுப் பிடிக்கப்பட்ட மருந்தே வேலை செய்யாமல் கடைசி வரை அதே நோயிலே மரணிக்கும் நிலையை காண்கிறோம். எனவே கருஞ்சீரகத்தைப் பொருத்தவரை இன்று பல நோய்களுக்கு மருந்தாக பயன் படுத்தப்பட்டு வருகிறது.
இவர்கள் சொல்வது போல நடைமுறைப் படுத்தியப் பின்தான் அதுவும் குணமானால்தான் என்றால், கீழ் வரும் வசனத்தை எப்படி புரிந்து கொள்வது? அல்லாஹ் குர்ஆனில் 16 ம் அத்தியாயம் 68, 69,ம் வசனங்களில்
….. அதில் மனிதர்களுக்கு (நோயிக்கான) நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது. என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். அதாவது தேனில் நிவாரணம் உண்டு
என்கிறான். இப்போது ஒரு நோயாளிக்கு தேனை குடிக்க கொடுத்து குணமானால் தான் இந்த குர்ஆன் வசனத்தை ஏற்றுக் கொள்வோம், நிரூபித்துக் காட்டுங்கள்? என்று இந்த குர்ஆன் வசனத்தை அணுகுவதா? நபி (ஸல) அவர்களின் காலத்தில் வயிற்று வலியால் துடித்த ஒருவருக்கு தேன் குடிக்க கொடுக்கப்பட்டு நிவாரணம் பெற்ற செய்தியை புகாரி 5684-ல் காணலாம்.
ஒரு வயிற்று வலி நோயாலிக்கு தேனை குடிக்க கொடுத்து குணமாகா விட்டால் இந்த குர்ஆன் வசனத்தை நிராகரிப்பதா? அல்லது பொருத்தமான விளக்கத்தை கொடுப்பதா? இவர்கள் கூறுவது போல முடி வெடுத்தால் இது போல பல குர்ஆன் வசனங்ளை நிராகரிக்க வேண்டி வரும்? நவூது பில்லாஹ் அல்லாஹ நம்மைப் பாதுகாக்க வேண்டும்.
இன்று அதிகமான மருந்துகளில் தேனும் ஒரு மருந்தாக சேர்க்கப்படுகிறது. எனவே எங்கள் தலைவர் இதை வாபஸ் வாங்குகின்ற வரை நாங்களும் வாபஸ் வாங்க மாட்டோம் என்று மார்க்கத்தில் பிடிவாதம் பிடிக்கக் கூடாது.
நடை முறைப் படுத்திவிட்டு தான் ஒரு ஹதீஸை ஏற்றும்கொள்வோம் என்றால் பின் வரும் ஹதீஸ்ளை எப்படி ஏற்றுக்கொள்வது?
வலியுள்ள இடத்தில் கை வைத்து 3 தடவைகள் பிஸ்மியும், 7 தடவைகள் அவூது பில்லாஹி வ குத்ரதிஹி மின் ஷர்ரிமா அஜிது வ அஹாதிரு என்று கூறுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( முஸ்லிம் 4430 ) இந்த ஹதீஸின்படி ஒருவருக்கு வலியுள்ள இடத்தில் கை வைத்து இந்த துஆவை ஓதி வலி நீங்கா விட்டால் இந்த ஹதீஸுடைய நிலை என்ன? மேலும் காய்ச்சல் நரகத்தின் அனல் அதை தண்ணீரால் அணையுங்கள் என்றார்கள். ( முஸ்லிம் 4443 ) காய்ச்சலில் உள்ளவர் தண்ணீரைப் பயன் படுத்துகிறார் குணம் கிடைக்கவில்லை இந்த ஹதீஸின் நிலை என்ன? எப்படி விளங்க வேண்டும்? சின்ன பிள்ளைகளுக்கு கடுமையான காய்ச்சல் வந்து ஆஸ்பத்திரிக்கு எடுத்து போனால் மருந்துக் கொடுப்பதோடு முதல் உதவி சிகிச்சையாக தண்ணீரில் புடவையை நனைத்து துடைக்கச் சொல்வதை காணலாம். அறிவுக்குப் பொருந்தவில்லை என்று ஸஹீஹான ஹதீஸை தட்டுவது புத்திசாலி கிடையாது.
அது போல சூரா பாதிஹாவை ஓதி விஷத்திலிருந்து நிவாரணம் பெற்ற ஹதீஸை புகாரியில் காணலாம். விஷக்கடிக்கு ஓதிப்பார்த்து குணமாகவில்லை என்றால் ஹதீஸ் ஸஹீஹாக இருந்தாலும் தட்டவேண்டும் என்ற முடிவுக்கு வருவதா? பொருத்தமான விளக்கத்தை கொடுப்பதா?
மேலும் " (சமையல்) காளான் மன்னு வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( புகாரி 5708 )
கண் நோயுடைய ஒருவருக்கு களானின் சாறைக் குடிக்கக் கொடுத்து நிவாரணம் கிடைக்கா விட்டால், இந்த ஹதீஸை தட்டுவதா? அல்லது பொருத்தமான விளக்கத்தை கொடுப்பதா? மேலும் ஒற்றைத் தலை வலிக்கு நபி (ஸல்) அவர்கள் குருதி உறிஞ்சி எடுத்தார்கள். ( புகாரி 5701 )
பொதுவாக குறுதி உறிஞ்சி எடுப்பதின் மூலம் நோயிக்கு நிவாரணம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய பல ஹதீஸ்களை காணலாம். குறுதி உறிஞ்சி எடுத்து நிவாரணம் கிடைக்கா விட்டால்? இந்த ஹதீஸ்களின் நிலை என்ன? எனவே இவர்கள் ஹதீஸை அணுகுவதுப் போல அணுகினால் மருத்துவம் சம்பந்தமாக சொல்லப் பட்ட எல்லா ஹதீஸ்களையும் மறுக்க வேண்டிய நிலைக்கு ஆளாக வேண்டும். சிந்தியுங்கள் செயல்படுங்கள். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
http://www.islamkalvi.com/portal/?p=75316


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

உங்கள் பைக்கை நீங்களே பராமரிக்க உதவும் சில முக்கிய டிப்ஸ்கள்.

  மோட்டார் சைக்கிள் வைத்திருப்பவர்களுக்கு அதை பற்றிய அனைத்து விவரங்கள் மற்றும் எப்படி ரிப்பேர் செய்வது என்பது தெரிந்திருக்க வேண்டும் என்ற அவ...

Popular Posts