லேபிள்கள்

ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

கணினி திறம்பட செயல்பட இதைச் செய்யுங்க !

கணினி பயன்பாடு என்பது நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகிவிட்டது. எனினும் அதை முறையாக பயன்படுத்துவதில் பலருக்கு சிக்கல் இருக்கிறது. நம்மைப் போன்று தான் கணினியும். அதை முறையாகப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டுவிட்டால், இடையில் ஏதேனும் பிரச்னை என்றாலும் மிகச் சுலபமாக அதை எதிர்கொண்டுவிடலாம்.
கணினியில் நாம் மேற்கொள்ள வேண்டிய நல்ல பழக்கங்கள்

1. ரீஸ்டார்ட் அவசியம்:

தொடர்ந்து பல மணி நேரங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு முறை "ரீஸ்டார்ட்" செய்திட வேண்டும். இதனால் கம்ப்யூட்டர் "ரெப்ரஸ்" ஆகி புத்துணர்வுடன் செயல்படும்.

2. பேக்கப் - ரொம்ப முக்கியம்

பெரும்பாலானவர்கள் நம் கணினிதானே என்ற அசட்டையில் "பேக்கப்" எடுக்காமல் விட்டுவிடுகின்றனர். நன்றாக இயங்கிக் கொண்டிருந்தாலும், கணினியில் உள்ள முக்கியமான கோப்புகளை பென்டிரைவ், DVD, Memory Card, External Hard Disk போன்ற ஏதேனும் சேமிப்பகங்களில் அவ்வப்பொழுது "பேக்கப்"எடுத்து வைப்பது நல்லது. எந்த நேரத்திலும் கணினி செயல்படாமல் போகும் ஆபத்து உள்ளதால் இதை கட்டாயம் செய்ய வேண்டும்.

3. இடைவேளை அவசியம்

கண்கெட்ட சூரிய நமஸ்காரம் செய்து பயனில்லை. நமக்கு உடல் ஆரோக்கியம் முக்கியம். எனவேதான் மருத்துவர்கள் கணினி முன்பு அதிக நேரம் உட்கார்ந்து பணிபுரிவது மிக ஆபத்து என எச்சரிக்கின்றனர். தவிர்க்க முடியாமல் தொடர்ந்து பணிபுரிபவர்கள் அரை மணி நேரத்திற்கு ஒரு  முறையாவது எழுந்து சென்று உடல் பொசிசனை மாற்றுவது அவசியம்.

4. பாஸ்வேர்ட் 

ஆரம்ப நாட்களிலிருந்து பல வருடங்களாக பாஸ்வேர்ட் மாற்றாமல் பயன்படுத்துபவர்கள் இன்றும் இருக்கின்றனர். இன்றைய காலகட்டத்தில் பாஸ்வேர்ட் மாற்றினால் கூட கம்ப்யூட்டரை Hack செய்து கண்டுபிடித்துவிடுகின்றனர். எனவே அடிக்கடி பாஸ்வேர்ட் மாற்றுவது மிக நல்லது.

5. பல புரோகிராம்கள்

கம்ப்யூட்டரில் ஒரே நேரத்தில் பல புரோகிராம்களை திறந்து வைத்து வேலை செய்திடும்பொழுது கணினிக்கு வேலை பளு கூடுகிறது. இதனால் கம்ப்யூட்டர் வேகம் குறையும்.  தேவையில்லாத புரோகிராம்களை மூடிவிட்டு, தற்பொழுது என்ன தேவையோ அதனை மட்டும் பயன்படுத்தினால் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கும்.

6. கணினி முன் உணவு

கட்டாயம் கணினி முன்பு அமர்ந்தவாறு உணவு உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் மிகப் பலர் கணினியில் பணிபுரிந்துகொண்டே நொறுக்குத் தீனி, டீ, காபி என கலந்து கட்டுகிறார்கள். அது மிகப்பெரிய கெட்டப்பழக்கம். உணவு எடுக்கும்பொழுது தனி அறையில் அமர்ந்து சாப்பிட முயற்சிக்க வேண்டும். இதனால் தேவையில்லாமல் கீபோர்ட், மௌஸ் போன்ற கருவிகளின் இடுக்குகளில் குப்பைகள் சேருவதை தவிர்ப்பதோடு, உடல் நலத்தினையும் காத்திடலாம்.

7. தகவல் அழிப்பு

தேவையில்லை என நினைக்கும் கம்ப்யூட்டரை விற்பதற்கு முன்பு, அதில் உள்ள தகவல்களை அனைத்தையும் அழித்து விடுங்கள். தகவல்களை அழிப்பதால் பிறர் அதை பயன்படுத்த முடியாமல் தடுக்கப்படுகிறது.
https://www.softwareshops.net/2018/11/how-to-maintain-computer-in-tamil.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

பெண்கள் மூக்குத்தி அணிவதற்கு பின்னால் உள்ள சுவாரஸ்யமான தகவல்கள்.

அன்றும் இன்றும் காரணம் தெரியாமல் அணிந்த மூக்குத்தியின் பெருமை பற்றி தெரியுமா ? மூக்குத்தி...

Popular Posts