லேபிள்கள்

வியாழன், 26 மார்ச், 2026

ஆரோக்யமாக வாழகட்டாயம் தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்...!


🌟 நாம் அன்றாடம் செய்யும் சில சாதாரண பழக்கவழக்கங்கள் கூட நோய் பாதிப்பினை ஏற்படுத்துகிறது. இப்பழக்கங்கள் நம் உடல்நலத்தில் சிறிது சிறிதாக பாதிப்பினை ஏற்படுத்தி நம்மை கொல்லும் விஷமாகிறது.

🌟 நம்மில் பல பேரிடம் இருக்கும் கெட்டப்பழக்கம் நகம் கடித்தல் ஆகும். நாம் விரலில் உள்ள நகத்தினை கடிக்கும்போது அதில் உள்ள கிருமிகள் நமது உடலுக்குள் சென்று நோய் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

🌟 நமது விரலில் ஏராளமான கிருமிகள் நிறைந்து இருக்கும். மூக்கு மற்றும் வாயில் நாம் விரலை வைப்பதால் நம் கையில் உள்ள கிருமிகள் உடலுக்குள் எளிதாக சென்று நோய் பாதிப்பினை ஏற்படுத்துகிறது.

🌟 தரம் குறைவான கண்ணாடியினை பயன்படுத்தி சூரியனை பார்க்கும்போது அதிலிருந்து வரும் ஊதாக்கதிர்கள் நேரடியாக நமது கண்ணின் கருவிழியினை தாக்கி பார்வை குறைபாடுகளையும், சில சமயங்களில் புற்றுநோய் போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது.

🌟 கால்மேல் கால் போட்டு அமர்வதால் இரத்தநாளங்களில் பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும், இதனால் உயர் மனஅழுத்தம், நரம்பு சிதைவு போன்ற பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

🌟 உச்சி முதல் உள்ளங்கால் வரை போர்த்திக் கொண்டு தூங்கும்போது கார்பன்-டை-ஆக்சைடு அளவுக்கு அதிகமாக அதிகரித்து மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

🌟 தொடர்ந்து செல்போனில் ஹெட்ஃபோனை உபயோகிப்பதால் நோய்தொற்று ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாது, காது கேட்கும் திறனும் குறைகிறது.

🌟 அதிக எடையுள்ள பைகளை நாம் எடுத்து செல்லும்போது நமக்கு தோல் வலி, முதுகு தண்டு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

🌟 அதிக உயரமுள்ள செருப்புகளை அணியும்போது, குதிகாலில் எலும்பு முறிவு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

🌟 காலை உணவானது ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம். இதனை தவிர்க்கும்போது உடல் ஆற்றலை குறைத்து, உடல் எடையினை அதிகரிக்க செய்கிறது.

🌟 ஜங்க் உணவுகளை வாரத்திற்கு 4-5 முறை சாப்பிட்டால், உடலில் நிச்சயம் பிரச்சனை ஏற்படும்.

🌟 நண்ட நாட்கள் ஃப்ரிட்ஜில் வைத்த உணவுகளைச் சாப்பிடுவதால் வயிற்று உபாதைகளும், செரிமானப் பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. கண்களுக்குத் தெரியாத பூச்சிகள் உணவுகளின் மேல் படர்ந்திருக்கும். இது, வயிற்று உபாதைகளை ஏற்படுத்தும்.



--

கருத்துகள் இல்லை:

ஆரோக்யமாக வாழகட்டாயம் தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்...!

🌟 நாம் அன்றாடம் செய்யும் சில சாதாரண பழக்கவழக்கங்கள் கூட நோய் பாதிப்பினை ஏற்படுத்துகிறது. இப...

Popular Posts