லேபிள்கள்

திங்கள், 9 மார்ச், 2026

மாம்பழங்களைதண்ணீரில் ஊறவைப்பது ஏன்?

மாம்பழங்களை உட்கொள்வதற்கு முன்பு தண்ணீரில் கழுவ வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. அதை விட தண்ணீரில் அரை மணி நேரமாவது மாம்பழங்களை ஊற வைத்துவிட்டு பின்பு கழுவி உண்பதே சிறந்தது என்பது உணவியல் நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

பெண்கள் மாம்பழங்களை உட்கொள்வது முகப்பரு போன்ற சில தோல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இவற்றை தவிர்க்க மாம்பழங்களை தண்ணீரில் ஊறவைத்து உட்கொள்வதுதான் சரியானது. இந்த நடைமுறையின்போது மாம்பழங்களின் தோல் பகுதிகளில் படிந்திருக்கும் அழுக்குகள், ரசாயனங்கள் அகற்றப்படுவதை தவிர அறிவியல் ரீதியாக வேறு சில நன்மைகளும் கிடைக்கின்றன.

மாம்பழங்கள் இயற்கையாகவே உடலின் வெப்ப நிலையை உயர்த்தும் தன்மை கொண்டது. உடலில் வெப்பத்தை உருவாக்குவதற்கு வித்திடும் தெர்மோஜெனீசிஸ் உற்பத்திக்கு மாம்பழங்கள் வழிவகுக்கும் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, சாப்பிடுவதற்கு முன்பு மாம்பழத்தை 30 நிமிடம் தண்ணீரில் ஊறவைப்பது தெர்மோஜெனீசிஸ் வீரியத்தை குறைக்க உதவும்.

மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைக்கும்போது அவற்றின் ரசாயனங்களின் வீரியம் குறைந்துவிடும். மேலும் மாம்பழத்தின் தண்டு பகுதியில் வெளிப்படும் பாலின் தன்மையையும் கட்டுப்படுத்திவிடும். தாவரங்களால் உற்பத்தி செய்யப்படும் ஒருவகை ரசாயன கலவையான பைட்டோ கெமிக்கல்கள் மாம்பழங்களில் வலுவாக அமைந்திருக்கும். 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைப்பதன் மூலம் அவற்றின் செறிவு அளவை குறைக்கலாம். மேலும் அதிகப்படியான கொழுப்பையும் நீக்கிவிடலாம். மாம்பழங்களை தண்ணீரில் ஊறவைப்பதன் மூலம் அதிகப்படியான அமிலத்தை அகற்றிவிட முடியும்.



--

கருத்துகள் இல்லை:

மாம்பழங்களைதண்ணீரில் ஊறவைப்பது ஏன்?

மாம்பழங்களை உட்கொள்வதற்கு முன்பு தண்ணீரில் கழுவ வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. அதை விட ...

Popular Posts