லேபிள்கள்

வெள்ளி, 26 ஜூன், 2026

புகைப் பிடிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து பார்க்கலாம்.

புகைபிடிப்பதை நிறுத்தினால் ஏற்படும் மாற்றங்கள்?

புகைபிடிப்பதை நிறுத்திய 20 நிமிடத்தில் இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் சீராக இயங்க ஆரம்பிக்கிறது.

12 மணி நேரத்தில் ரத்தத்தில் கார்பன் மோனாக்சைடு அளவு படிப்படியாக குறைந்து சீராகிறது. 2- 12 வாரங்களில் உடல் இயக்கம் சீராகிறது, நுரையீரல் செயல்பாடுகள் அதிகரிக்கிறது.

1-9 மாதங்களில் இருமல் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் குறைகிறது. 1 வருடத்தில் இதய நோய் வருவதற்கான ஆபத்து பாதியாகக் குறைகிறது.5 வருடங்களில் பக்கவாதம் வருவதற்கான ஆபத்துகள் குறைகின்றன.

10 ஆண்டுகளில் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து பாதியாகக் குறைகிறது. வாய், தொண்டை, சிறுநீர்பை புற்றுநோய், கணைய நோய்கள் வருவதற்கான ஆபத்துகள் குறைகிறது.

15 ஆண்டுகளில் இதய நோய் வருவதற்கான ஆபத்து முற்றிலும் குறைகிறது.

புகைப்பிடிப்பதை கைவிடுவதால் ஏற்படும் நன்மைகள்

30 வயதில் புகைபிடிப்பதை நிறுத்தினால் 10 வருடங்கள் வரை உயிர் வாழலாம். 40 வயதில் நிறுத்தினால் 9 வருடங்கள் உயிர் வாழலாம். 50 வயதில் நிறுத்தினால் 6 வருடங்கள் உயிர் வாழலாம். 60 வயதில் நிறுத்தினால் 3 வருடங்கள் வரை உயிர் வாழலாம்.

மாரடைப்பு வந்தவர் புகைபிடிப்பதை நிறுத்தினால், இன்னொரு முறை மாரடைப்பு வருதற்கான வாய்ப்புகள் 50 சதவிகிதமாக குறைகிறது.

மற்ற நன்மைகள் புகைபிடிப்பதை நிறுத்தினால் ஆண்மைக் குறைவு, கருத்தரித்தல் பிரச்சினை, குறை பிரசவம், குறைந்த எடையில் குழந்தை பிறப்பது, கருச்சிதைவு ஆகியவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைகிறது.

இன்றே புகைப்பதை நிறுத்திப்பாருங்கள், உங்கள் உடலிலும் இத்தகைய மாற்றங்களை கண்டு நீண்ட நாட்கள் உயிரோடு வாழலாம்.



--

கருத்துகள் இல்லை:

புகைப் பிடிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து பார்க்கலாம்.

புகைபிடிப்பதை நிறுத்தினால் ஏற்படும் மாற்றங்கள் ? புகைபிடிப்பதை நிறுத்திய 20 நிமிடத்தில் இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் சீரா...

Popular Posts