லேபிள்கள்

செவ்வாய், 16 டிசம்பர், 2025

சமையல் எரிவாயு உருளை தீரும் சமயத்தில் அதில் கசிவு ஏற்பட்டு வாடை வீசுவது ஏன்?

சமையல் எரிவாயுவிற்கு வாசனை கிடையாது. பாதுகாப்பு கருதி அதில் வாசனை சேர்க்கப் படுகிறது. இந்த வாசனை எரிவாயு கசிவை அறிய உதவுகிறது.

எரிவாயு உருளையினுள் திரவமயமான பெட்ரோலிய வாயு நிரப்புவதற்கு முன்பு வாசனை திரவம் நிரப்பப்படுகிறது. எரிவாயு வாசனை திரவத்துடன் கலந்து வாயு ரூபத்தில் வெளிவந்து அடுப்பு பர்னரில் முழுவதுமாக எரிந்து விடும்.

எரிவாயு தீர... தீர... திரவ பெட்ரோலிய வாயு குறைந்து, வாசனை திரவத்தின் சதவீதம் கூடி, பர்னரில் எரிவாயு முழுவதுமாக எரியும். அதே சமயத்தில் அளவுக்கு அதிகமான வாசனை வெளிவரும்.

இதுவே எரிவாயு உருளை தீரும் சமயத்தில் வாசனை அதிகமாக வெளிவருவதற்கான காரணம் ஆகும்.



--

கருத்துகள் இல்லை:

சொத்தை பல் வலியால்இரவு தூக்கமே பாழாகுதா? அதை தவிர்க்க இதோ சில வழிகள்...

ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் வாய் சுகாதாரம் மிகவும் முக்கியம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக சி...

Popular Posts