முன்பெல்லாம் காட்டன் துணிகளையே குழந்தைகளுக்கு பயன்படுத்தும் வழக்கம் இருந்தது. டாக்டர்ளும் டயப்பர் பயன் படுத்துவதை ஊக்குவிக்க மறுப்பர்.
இதனால் டயப்பர் பயன்படுத்துவது என்பது பயண நேரங்களுக்கு மட்டும் என்றிருந்தது. ஆனால், இன்றைக்கோ இது அன்றாட வழக்கமாகிவிட்டது. இதனால் பல பிரச்னைகள் ஏற்பட்டாலும் இதன் உபயோகம் அதிகரித்தே வருகிறது. வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் ஒரு முக்கிய பாதிப்பு டயப்பர் ரேஷ்.
நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு டயப்பர் அணிவீர்கள் என்றால், குழந்தை அடிக்கடி சிணுங்கி அழுதால், ரேஷ் பிரச்னையா என முதலில் கவனியுங்கள். இது குழந்தைகளுக்கு ஏற்படும் பொதுவான வலி நிறைந்த தோல் அலர்ஜி போன்ற புண் ஆகும். பாதிப்பு மோசமடைவதைத் தடுக்க டயப்பர் ரேஷிற்கு எவ்வாறு சிகிச்சையளிப்பது என்பதை பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் தெரிந்துகொள்வது அவசியம்.ரேஷ் பாதிப்பு! டயப்பர் ரேஷ் என்பது சிவப்பு, வலிமிகுந்த புண்.
இது சூடான, ஈரமான சூழலில் வரக்கூடியது. தொடை மற்றும் புட்டம் பகுதியை பாதிக்கும். பாதிக்கப்பட்ட தோல் செதில்களாகவோ, சிறு பருக்கள் உடன் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கலாம். டயப்பரில் சிறுநீர் அல்லது மலம் கழிக்கும் போது, அதை நீண்ட நேரம் சுத்தம் செய்யாமல் இருந்தால் டயப்பர் ரேஷ் உண்டாகும்.
ஈஸ்ட் என்னும் தொற்றுநோயால் இது வருகிறது.தோல் அலர்ஜி தோல் அலர்ஜி உள்ள குழந்தைகளுக்கு டயப்பர் ரேஷ் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம், மேலும் அவை அடிக்கடி ஏற்படும். இவை கவனிக்காமல் விட்டால் மிக வேகமாக மோசமான பாதிப்பை உண்டாக்கி சிவப்பு புள்ளிகள், தடிப்புகள் கொண்ட புண்ணையும் ஏற்படுத்தி, இடுப்பு முதல் கால் வரை பரவகூடும். டயப்பர் ரேஷ் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதை எவ்வாறு விரைவாகவும் திறமையாகவும் கையாள்வது குறித்து அறிந்து கொள்ளது நல்லது. பராமரிப்பு முறை!
குழந்தை ரேஷஷால் கஷ்டப்படும் போது கண்டிப்பாக டயப்பர் அணிவிக்க வேண்டாம். மேலும் அதன் சருமத்தை இறுக்கி பிடிக்கும் ஆடைகளை தவிர்த்து மெல்லிய பருத்தி ஆடைகளை அணிவிப்பது நல்லது. அதிகப்படியாக ரேஷஷ் இருந்தால் ஆடை அணிவிக்காமல் மெல்லிய துணியை கட்டி விடலாம். ஒவ்வொரு முறையும் குழந்தை இயற்கை உபாதை கழித்த பிறகு வெதுவெதுப்பான நீரை கொண்டு கழுவி சருமத்தை உலர வைப்பது மிகவும் அவசியம்.தேங்காய் எண்ணெய்!
தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த நிவாரணியாக கூறப்படுகிறது. ஏனென்றால்இயற்கையாகவே பாக்டீரியா மற்றும் பூஞ்சைத்தொற்றை எதிர்த்து போராடும் தன்மை தேங்காயெண்ணெயிற்கு உண்டு. அது ஒரு இயற்கை மாய்சுரைசர் என்று கூட சொல்லலாம். அதோடு இவை பக்கவிளைவில்லாதது.
சருமத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்லும். இரவு உறங்க செல்லும் முன் குழந்தையின் அடிப்பகுதியிலிருந்து தொடைவரை வெதுவெதுப்பான நீரில் கழுவி துடைத்து, தேங்காய் எண்ணெய் தேய்க்க வேண்டும். தவிர்க்கமுடியாத சூழலில் வெளியில் செல்ல நேரும் போது டயப்பர் அணிவிப்பதற்கு முன்பு குழந்தையின் பின் பகுதி மற்றும் தொடையில் தேங்காயெண்ணெய் தடவ வேண்டும். அதன் பிறகு டயப்பர் அணிவித்தால் பாதிப்பு அதிகரிக்காது. இவையெல்லாம் தாண்டி டயப்பர் ரேஷ் அதிகமாக இருந்தால் டாக்டரை அணுகி அவர்கள் தரும் ஆயின்மெண்டை பயன்படுத்தி பாதிப்பை சரி செய்யலாம். ரேஷை தவிர்க்க குழந்தைகளின் டயப்பரை தவறாமல் மாற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
--
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக