லேபிள்கள்

வியாழன், 9 மே, 2024

நாற்பது வகை கீரைகளும் அதன் பயன்களும்...!!*

அகத்திக்கீரை – ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளிய வைக்கும்.

முடக்கத்தான் கீரை – கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.

மணத்தக்காளி கீரை – வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.

முருங்கைக்கீரை – நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.

பசலைக்கீரை – தசைகளை பலமடையச் செய்யும்.

அரைக்கீரை – ஆண்மையை பெருக்கும்.

கொடிபசலைக்கீரை – வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.

மஞ்சள் கரிசலை – கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.

குப்பைகீரை – பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.

புளியங்கீரை – சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.

பிண்ணாருக்குகீரை – வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.

பரட்டைக்கீரை – பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.

பொன்னாங்கன்னி கீரை – உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.

சுக்கா கீரை – ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.

வெள்ளை கரிசலைக்கீரை – ரத்தசோகையை நீக்கும்.

வல்லாரை கீரை – மூளைக்கு பலம் தரும்.

காசினிக்கீரை – சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.

சிறுபசலைக்கீரை – சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.

புண்ணக்கீரை – சிரங்கும், சீதளமும் விலக்கும்.

புதினாக்கீரை – ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.

நஞ்சுமுண்டான் கீரை – விஷம் முறிக்கும்.

தும்பைகீரை – அசதி, சோம்பல் நீக்கும்.

முரங்கைகீரை – சளி, இருமலை துளைத்தெரியும்.

முள்ளங்கிகீரை – நீரடைப்பு நீக்கும்.

பருப்புகீரை – பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.

புளிச்சகீரை – கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.

மணலிக்கீரை – வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.

முளைக்கீரை – பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.

சக்கரவர்த்தி கீரை – தாது விருத்தியாகும்.

வெந்தயக்கீரை – மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.

தூதுவலை – ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.

தவசிக்கீரை – இருமலை போக்கும்.

சாணக்கீரை – காயம் ஆற்றும்.

வெள்ளைக்கீரை – தாய்பாலை பெருக்கும்.

விழுதிக்கீரை – பசியைத்தூண்டும்.

கொடிகாசினிகீரை – பித்தம் தணிக்கும்.

துயிளிக்கீரை – வெள்ளை வெட்டை விலக்கும்.

துத்திக்கீரை – வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.

காரகொட்டிக்கீரை – மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.

மூக்கு தட்டைகீரை – சளியை அகற்றும்.

நருதாளிகீரை – ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.



--

கருத்துகள் இல்லை:

காப்பர் தண்ணீர் குடிக்கலாமா? ஆயுர்வேதம் என்ன சொல்கிறது?

காப்பர் தண்ணீர் குடிக்கலாமா ? ஆயுர்வேதம் என்ன சொல்கிறது ? முழுமையான நல்வாழ்வைப் பேணுவதற்கு போ...

Popular Posts