லேபிள்கள்

வெள்ளி, 3 மே, 2024

தங்க நகைகள் புதிது போல ஜொலிக்க....

தங்க நகைகளை விரும்பாத பெண்கள் அரிது.

நகைகள் பிடிக்காதவர்கள் கூட, மிகச் சிறிய டிசைன்களில் தங்க நகைகளை வாங்கி அணிந்து கொள்வார்கள். தங்க நகைகளில் கல் வைத்தது, துல்லியமாக டிசைன் செய்யப்பட்டது, முத்து, பவளம் வைத்தது என பல வகைகளில் வடிவமைக்கப்படுகிறது.

அந்த வகையில் பல்வேறு டிசைன்களைக் கொண்ட தங்க நகைகள் வாங்கும் போது புதுப் பொலிவுடன் காணப்படும். ஆனால், பயன்படுத்த பயன்படுத்த அதன் பொலிவு குறைகிறது. மின்னும் தன்மை மங்குகிறது.

சரி. . . நாம் பயன்படுத்தும் தங்க நகைகள் புதிது போல ஜொலிக்க என்ன செய்யலாம்? அதுவும் வீட்டிலேயே அதனை ஜொலிக்க வைக்க முடியுமா? என்றால் முடியும்.

வாருங்கள் அதற்கென்ன வழி என்று பார்க்கலாம்.

அதாவது, நாள்தோறும் நாம் அணியும் தங்க நகைகளை அவ்வப்போது பல்துலக்கும் பேஸ்ட் கொண்டு சுத்தப்படுத்துவது மிகச் சிறந்த எளிய வழியாகும்.

பேஸ்ட் தான் பயன்படுத்த வேண்டுமா என்றால்.. இல்லை.. உங்கள் நெக்லஸ், கை வளையல், கம்மல், போன்றவற்றை வீட்டிலிருக்கும் சாதாரண குளியல் சோப்புப் போட்டும் சுத்தப்படுத்தலாம்.

இது, தங்க நகைகளிலிருக்கும் அழுக்கு போன்றவை அகற்ற உதவும். பேஸ்ட் கொண்டு சுத்தம் செய்யும் போது அதற்கு புதுப்பொலிவு கிடைக்கிறது.

சரி சோப்பு போட்டு கழுவும் போது என்ன செய்யலாம்?

ஒரு சிறிய பாத்திரத்தில் அரையளவுக்கு இளஞ்சூடான தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் சோப்பைக் கரைத்து சோப்புக் கரைசலாக மாற்றுங்கள். அதில், சிறிது துணி சோப்பு அல்லது சமையல் பாத்திரங்கள் தேய்க்கப் பயன்படுத்தப்படும் திரவ நிலை சோப்புகளை சேர்த்துவிடுங்கள்.

ஒரு 15 முதல் 20 நிமிடம் இந்த கரைசலில் உங்கள் தங்க நகையை ஊறவிடுங்கள். பிறகு குளிர்ந்த நீரில் நகையைக் கழுவி, சுத்தமான துணியால் மென்மையாகத் துடைத்து எடுங்கள். பிறகு காற்றோட்டமான இடத்தில் உலர்த்துங்கள்.

அழுக்கு படிந்திருக்கும் தங்க நகையை சுத்தப்படுத்த சின்ன பிரஷ்களைப் பயன்படுத்தலாம். ஆனால் அழுத்தி தேய்த்துவிட வேண்டாம். கவனமாகக் கையாள வேண்டும்.

தங்க நகைகளை எப்போதும் அதற்குண்டான பெட்டிகளில் பாதுகாத்து வையுங்கள்.

ஒன்றை மட்டும் நன்கு நினைவில் கொள்ளுங்கள்., தங்க நகையை சுத்தம் செய்யும் போது கொதிக்கும் தண்ணீரையோ அல்லது ப்ரிட்ஜில் வைத்திருந்த மிகக் குளிர்ந்த நீரையோ பயன்படுத்தவே கூடாது.

வெளியில் நகைகளை பாலிஷ் போட பயப்படுவோர், தங்க நகைகளை சுத்தம் செய்வதற்கென்றே இருக்கும் பேஸ்ட் போன்றவற்றை வீட்டிலேயே வாங்கி வைத்தும் பயன்படுத்தலாம்.

அதேவேளையில், விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட நகைகளை அதிக நேரம் ஊறவைத்து, பிரஷ் கொண்டு தேய்ப்பது சரியாக இருக்காது. அது கற்களின் ஜொலிக்கும் திறனைக் குறைக்கலாம்.



--

கருத்துகள் இல்லை:

பழங்களில் உள்ள விதைகளின் பயன்கள்

பழங்கள் சாப்பிட சிறந்த பொருட்களில் ஒன்றாகும். சுவையாகவும் இனிப்பாகவும் இருப்பதுடன் , ஒட்டு மொத்தமாக நமது ஆரோக்கியத்திற்கு அவசியமான பலவி...

Popular Posts