லேபிள்கள்

புதன், 16 நவம்பர், 2022

முகத்திறை எமக்குக் கிடைத்த கண்ணியமே!

பெண்கள் விடயத்தில் கண்ணியமாகநடந்து கொள்ள வேண்டும் என்று கூறிய ஒரே மார்க்கம் இஸ்லாம்.

பெண்கள் உயிரோடு புதைக்கப்பட்ட காலத்தில் பெண் உரிமை பேசியது இஸ்லாம்.

பெண் திருமணத்தின் பெயரால் பல ஆண்களின் இச்சைக்கு ஆளான காலத்தில் பெண்ணிண் மானம் காத்தது இஸ்லாம்.

அடிமைகளாக நடாத்தப்பட்ட பெண்களுக்கு அவர்களது முழு உரிமையை வழங்க வேண்டும் என்று கூறிய ஒரே மார்க்கம் இஸ்லாம்.

பெண்கள் விடயத்தில் முழு உரிமையையும் , சுதந்திரத்தையும் பெற்றுக் கொடுத்த இஸ்லாம் அவர்களுக்கான பாதுகாப்பையும் சட்டமாக்கியுள்ளது.

பெண்களுக்குப் பொருப்புக்களைச் சுமத்திய இஸ்லாம் பெண்களின் உணர்வுகளையும் பலகீனத்தையும் அறிந்ததினால் சில கட்டுப்பாடுகளையும் விதிக்க மறக்கவில்லை.

பெண் பலஹீனமானவள் என்பதால் தலைமைத்துவம் வகிப்பதை இஸ்லாம் விரும்பவில்லை.

அவளின் பாதுப்பு கேள்விக்குறியாகும் என்பதால் தனியாக நடமாடும் சுதந்திரத்தை வழங்கவில்லை.

பெண் அவசரப்படக்கூடியவள் என்பதாலும் பிரரின் தொல்லைகளுக்கு அவள் ஆளாக நேரிடும் என்பதாலும் தனி ஒரு பெண்ணின் சாட்சியத்தை இஸ்லாம் அங்கீகரிக்க வில்லை.

அவளின் உடல் பாதுகாப்பை கருத்திற் கொண்டு ஆண் துணையின்றி எங்கும் தங்குவதற்கு அணுமதிக்கவில்லை. அவர்கள் நினைத்தவாறு யாருடனும் பேசுவதற்கோ, சிரிப்பதற்கோ இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

படைத்தவன் படைப்பினங்களின் பலம் பலகீனங்களை அறிந்து சமநிலை பேண இக்கட்டுப்பாடுகளை வரம்பாக போட்டுள்ளான். இந்த வரம்புகளை உடைப்போர் நிச்சியம் ஈருலகிலும் கைசேதமடைவார்கள்.

இன்று பலர் வரம்பு மீறிப் பெண்களைக் காட்சிப் பொருளாக்கி காமத்தில் அலையும் ஆண்களின் தாகத்துக்கு தீனிபோட்டுக் கொண்டுள்ளார்கள். இதில் சில பாசரையில் வளர்ந்தோர் குர்ஆன் வசனங்களைக் கூட பெண்ணின் விளம்பரப்படத்துடன் பகிர்வதை அவதானிக்கலாம்.

📌அதனால் தான் ஆண்களே..!

பெண்கள் விடயத்தில் உங்களை எச்சரிக்கிறேன்.

பெண்கள் விடயத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்.

உலகத்தில் மிகப் பெரிய பித்னா என்றால் பெண்கள் தான்.

இரண்டு பெண் பிள்ளைகளை ஸாலிஹான முறையில் வளர்த்தால்! சுவனம் கிடைக்கும் என்று இஸ்லாம் கூறுகின்றது. என்றால் பெண்கள் விடயத்தில் ஒரு ஆண் எவ்வளவு பாதுகாப்பாக இருக்க வேண்டும்???.

📌முகத்தை மறைப்பவர்களை விமர்சனம் செய்யும் ஆண்களே

அடுத்தவன் மனைவிக்கு முகம் மூடுவது சிரமம் என்று ஏன் நீங்கள் கவலைப்படுகிறீர்கள்???

அடுத்த வீட்டுப் பெண் ஹோட்டலுக்குச் சென்று சாப்பிட சிரமப்படுகிறாள் என்று நீங்கள் ஏன் நொந்து போகிறீர்கள்???

பக்கத்து வீட்டுக்காரி முகம் மூடுவதால் வெளியெங்கும் சுதந்திரமாகத் திரிய முடியாது என்பதற்காக யாரோ ஒருவனான நீங்கள் ஏன் கொந்தளிக்கிறீர்கள்??? அவரவர் தனது சக்திக்கு ஏற்ப அல்லாஹ்வை அஞ்சி நடக்க வேண்டும் என்பது அல்குர்ஆனிய போதனையாகும்.

திருமணத்தின் பின் முகம் மூட வேண்டும் என்று சொன்னதால் எத்தனையோ திருமணங்கள் கடைசி இரவில் நின்று போயுள்ளது.

முகம் மூடுவதை வாஜிபாக / இபாதத்தாக பார்த்த ஆண்கள் தனது மனைவி மார்கப்பற்றுள்ளவளாக இருக்க வேண்டும் என்பதற்காக திருமணத்தின் பின் முகம் மூடச் சொல்வதில் என்ன தவறுள்ளது..? மார்கத்தை முதலில் தனது குடும்பத்துக்கு போதிப்பது தானே முறை.?

கணவனின் கட்டளையை விருப்பமானவர்கள் செய்கின்றார்கள். வெறுத்தவர்கள் வாழ்வும் வேண்டாம், வசதியும் வேண்டாம் என்று ஒதுங்கிக் கொள்கின்றார்கள். இது அவர்களின் உரிமை.

எனவே நீங்கள் உங்களுடைய வேலையை மட்டும் பார்ப்பதே உமக்குச் சிறந்தது. தேவையில்லாமல் அடுத்தவர்களின் விருப்பங்களில் வெறுப்பேற்றி அவர்களின் தேவையற்ற சாபங்களுக்கு ஆளாகி விடாதீர்கள்.

முகம் மூடக் கூடாது என்பவர்களே!!

உங்கள் கூடப் பிறந்த சகோதரி அல்லது உங்கள் பிள்ளை அழகான ஆடையணிந்து கவர்ச்சியான தோற்றத்தில் உங்கள் முன் நின்றால் உங்களுக்கு அவள் மேல் அன்பு வரும் அவளை அனைத்துக் கொள்வீர்கள்.

ஆனால் உங்கள் பெரியம்மாவின் மகளோ, சாசச்சாவின் மகளோ, அல்லது நீங்கள் உயிருக்கு உயிராக நேசிக்கும் நண்பனின் மகளோ, உங்கள் மதினியோ கவர்ச்சியாக மாமா என்றோ, சாச்சா என்றோ மச்சான் என்றோ உங்கள் முன்நிலையில் வந்தால்??

உங்கள் பார்வையும் என்னமும் எப்படி இருக்கும்? மகளாக நினைத்து அவளை உங்களால் அனைத்துக் கொள்ள முடியுமா? அவளின் அழகை வர்ணனை செய்ய முடியுமா.? அவள் மீது உங்களுக்கு ஈர்ப்பு வராது என்று உங்களால் கூற முடியுமா??

ஒரு பொருளை கண்டுபிடித்தவன் அந்த பொருளை எப்படி உபயோகிக்க வேண்டும் அதன் தன்மைகள் என்ன? அதை சரிவர இந்த விதிமுறைகளைப் பேணி உபயோகிக்க தவறினால் அதனால் ஏற்படும் தீங்கு என்ன என்று கட்லெக்கில் விளக்கினால் அதை ஏற்றுக் கொள்ளும் நாம் ஏன் எம்மைப்படைத்தவன் போட்ட வரம்புகளை ஏற்க மறுக்கிறோம்..?

விபச்சாரத்தை நெருங்குவதைத் தடை செய்த இறைவன் முஃமின்களை நோக்கி பார்வையைத் தாழ்த்த சொல்லி விட்டு அடுத்ததாக கற்பை பேணச் சொல்கிறான். கண் விபச்சாரம் செய்யும் என்பதை விளக்கியுள்ள மார்க்கம் இஸ்லாம். தீய பார்வயைத் தடை செய்த மார்க்கம் அதற்கு துணை போவதை ஏற்றுக் கொள்ளுமா..? பாதையோரத்தில் அண்ணிய பெண்ணைக் கண்ட நபிகளார் (ஸல்) தனது மனைவியிடம் திரும்புகிறார் என்றால் நபிகளாரை விட கற்பொழுக்கம் மிக்கவர்களா நீங்கள்..?

அப்படி என்றால் அல்லாஹ் அல் குர்ஆனில் மஹ்ரம், அஜ்னபி பற்றித் தெளிவு படுத்திய அல்குர்ஆன் வசனங்களை நீங்கள் மறுத்தே ஆக வேண்டும்.

நீங்கள் உங்கள் பிள்ளைகள் என்று நினைத்த நண்பனின் மகளான அந்த அஜ்னபியான உறவின் விடயத்திலும், உங்கள் உறவு என்று நினைத்த சில நெருங்கிய உறவுகளின் விடயத்திலும் நீங்களே சறுக்கி விழும் போது எங்கள் பெண்கள் விடயத்தில் மற்ற ஆண்களின் பார்வையும், எண்ணமும் இப்படித் தான் இருக்கும் என்பதை நீங்கள் ஏன் சிந்திக்கவில்லை? இவை எமது உள்ளுணர்வுகளை அறிந்த படைத்தவனால் போடப்பட்ட வரம்புகளாகும்.

📌ஹிஜாபைப் பேணும் பெண்களை விமர்சிப்பவர்களே..!

ஒரு பெண் அவள் எந்த நிறமாக இருந்தாலும் உங்கள் முன்நிலையில் வந்து நின்றால் அவளைப் பற்றித் தப்பான எண்ணம் வராது என்று உங்களால் கூறலாமா???

ஒரு பெண்ணிண் புகைப்படம் உங்கள் கைகளில் கிடைத்தால் உங்கள் கண் விபச்சாரம் செய்யாதா.?

சொற்களாலும், பார்வையாலும், எண்ணங்களாலுமே பெண்களை வைத்து காமம் தீர்க்கும் ஆண்கள் தான் இன்று பெண்கள் மறைந்து வாழ்வதை விரும்புவவில்லை.

இஸ்லாம் உங்ளுக்கு நான்கு பெண்களைக் கட்டிக் கொள்ள அனுமதித்திருக்க உங்கள் காமப் பசிக்கு ஏன் அடுத்த பெண்களைத் தேடுகின்றீர்கள்? நான்கு பெண்களைத் தேடித் திறந்து வைத்துக் கொள்ளலாமே.

பெண் சுதந்திரத்தைப் பற்றிப் பேசும் பலர் ஏதோ ஒரு விதத்தில் படைத்தவன் போட்ட வரம்புகளை மீறி பெண்களை இலகுவாக அனுபவிக்கும் சுதந்திரத்தைப் பெறவே முயற்சிக்கின்றார்கள்.

எங்களுடைய கணவன் எங்கள் சுதந்திரத்தில் எமக்கு எந்தத் தடையுமே விதிக்கவில்லை.

நாங்கள் முகத்தை மறைத்திருக்கின்றோம். ஆனால் அவர்கள் எமக்கு எதிலுமே கட்டுப்பாடு விதிக்கவில்லை. எங்கள் கல்வி அறிவுக்குத் தடையாக வர வில்லை.

என்றாவது ஒரு நாள் அவர்கள் எங்களுடைய போனை எடுத்து வாட்ஸ்அப்பை ஆராயவில்லை. பேஸ்புக்கை நோன்டியது கிடையாது. ஏனென்றால் வலைக்குள் நிம்மதியாக நாம் உறங்கும் போது டெங்கு நுளம்போ, மலேரியாவோ எங்களைக் கடிக்க முடியாது என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

உங்கள் மனைவியின் போனை உங்களால் ஆராயாமல் இருக்க முடியுமா??
அவர்கள் மூடாத வலையில் உறங்கும் போது உங்களால் எப்படி நுளம்பு கடித்ததா என்று ஆராயாமல் இருக்க முடியும்???
உங்கள் மெஸென்ஜரை மனைவிக்குக் கொடுப்பீர்களா??
வாட்ஸ்அப்பை தடுமாற்றமின்றி உங்களால் அவர்களுக்குக் காட்ட முடியுமா???
உங்களால் முடியாது. ஏனென்றால் உங்கள் நுளம்பு வலையில் ஒட்டைகளே அதிகம்.

நாம் முகத்தை மறைக்கும் போது தேவையா சின்ன வயசுலே கிழவி போன்று என்று நக்கலடித்தவர்கள்.

இன்று ப்ரஷர் குக்கர் வெடித்து முகத்தில் காயம் ஏற்பட்டதால் முகத்தை மூடுகின்றாள்.

க்ரீம் பூசி முகத்தோல் அசிங்கமாகியதால் முகத்தை மூடுகின்றாள்.

அன்று அழகாக இருக்கும் போது நமக்கு நக்கலடித்தவர்கள் இன்று அவர்கள் அசிங்கத்தை மறைக்க முகத்தை மூடுகின்றார்கள்.

ஆனால் நாங்களோ பார்வையாலே காமத்தில் வழிந்து திரியும் ஆண்களின் பார்வையிலிருந்து பாதுகாப்புப் பெறவும். ஸாலிஹான ஆண்கள் தடுமாறாமல் இருக்கவும், கொரோனா போன்ற வைரஸ்கள் தொற்றாதிருக்கவும் முகத்தை மறைக்கின்றோம்.

ஹோட்டடலில் முகம் மூடும் பெண்களைப் பார்த்து நாய்க்குக் கூட இந்தக் கேலமான நிலை வரக்கூடாது என்றவர்களெல்லாம் இன்று எந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். ஸுப்ஹானல்லாஹ்.

நீங்கள் மாஸ்க்கை கொரோனா வைரசிடமிருந்து பாதுகாக்கவே அணிகின்றீர்கள்.

நாங்களோ கொரோனா வைரசை விடவும் மோசமான இம்மையிலும், மறுமையிலும் நம்மை கேவலப்படுத்தக் கூடிய வைரஸ்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கே அணிகின்றோம்..

நிச்சயமாக மாஸ்க் அணிவதென்பது எவ்வளவு கடினமான ஒரு செயல்???

நாம் அணியும் முகத்திறையை எவ்வளவு நாட்களானாலும் அணிந்து கொண்டே இருக்கலாம். எந்தச் சிரமத்தையுமே நாம் கண்டதில்லை.எங்கள் முகம் இன்னும் அழகாகிக் கொண்டே போகின்றது.

ஆனால் நீங்கள் அணியும் மாஸ்க்கை ஜந்து நிமிடங்களாவது அணிய முடியாது. அவ்வளவு சிரமம் என்பதை நீங்களும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றீர்கள். உங்கள் முகம் நான்கு பக்கமாகத் திரும்பியிருப்பதையும் அவதானித்திருப்பீர்கள்.

அன்று முழுமையான ஆடையை அணிந்ததால் விரட்டிய கடைகளும்.
நிப்பாட்டாமல் விரைந்து சென்ற வாகனங்களும், எங்களைப் பார்த்து அறுவருப்படைந்த வைத்தியர்களும் இன்று எங்களை கண்ணியமாக வறவேற்கிறார்கள்.

அன்று முகத்திறை அணிந்ததால் தீவிரவாதி என்று சொல்லிப் பணம் அறவிட்டவர்கள்.
இன்று முகத்தை மூடாமல் செல்பவர்களிடம் பணம் அறவிட்டு சிறையிலும் தள்ளுகின்றார்கள்.

இது எல்லாம் அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய சிறிய சோதனையே தவிர வேறில்லை. ஏனென்றால் நீங்கள் விளையாடிக் கொண்டிருப்பது ஒரு துண்டுக் கருப்புத் துணியுடனல்ல எங்களுடைய கற்ப்பில் எங்களுடைய.
வெட்க்கத்தில் எங்ளுடையஇறையச்சத்தில் எங்களுடைய பேணுதலில் அதுமட்டுமல்லாமல் எங்களுக்கு வீணாக அவதூறு கூறுகின்றீர்கள்.
எங்களைக் கேவலப்படுத்துகின்றீர்கள்._
மக்கள் மத்தியில் எங்களைக் குற்றவாளிகளாகக் காட்சிப்படுத்துகின்றீர்கள்.
அன்னியர்களின் பார்வையில் எங்களை மானபங்கப் படுத்திக் கொண்டு இருக்கின்றீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
எங்கள் விடயத்தில் நீங்கள் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்.
எங்களின் மண வேதைனையால் நீங்கள் சாதாரணமாக அணுபவித்துக் கொண்டிருக்கின்ற இந்த சாதாரண சோதனையை எங்கள் துஆக்கள் மூலம் அதிகரித்துக் கொள்ளாதீர்கள்._

இன்று முழுமையான ஹிஜாபை அணியாத எத்தனையோ பெண்கள் கண்ணியமாகத் தங்களது கற்ப்பைப் பேணிக்காத்துக் கொள்ள மிகவுமே சிரமப் படுகிறார்கள்.

தாங்கள் எத்தனை பெரிய சாதனைகள் புரிந்தாலும் கண்ணியமான அவர்கள் முகத்திறை அணியாதவர்களாக இருந்தும் தங்களது முகத்தைக் காட்ட மறுக்கின்றார்கள். அவர்களே அவர்களைப் பிரபல்யப்படுத்துவதை வெறுக்கும் போது ஏன் நீங்கள் அழைகின்றீர்கள்???

அவர்களே தங்களை அடையாளப்படுத்தி பாதாளத்தில் விழுவதை வெறுக்கும் போது சம்பந்தமே இல்லாமல் ஏனோ அவர்களை சிலர் காணத் துடிக்கின்றனர்.

தான் மறைந்திருப்பதே தனக்கான சுதந்திரம் என்று முகத்திறை அணியும் பெண்கள் மட்டுமல்ல முகம் மூடாத பெண்களுமே வாதிடும் போது ஏன் நீங்கள் அதை மறுக்க முயற்சிக்கிறீர்கள்.

நீங்கள் பார்க்கவும் ரசிக்கவும் என்றே தஸ்லீமா நஸ்ரின் போன்ற அரபுப் பெயர் கொண்ட ஒரு கூட்டம் இருக்கின்றது அவர்களின் பின்னால் அழையுங்கள். மறைந்திருப்பவர்களை வெளிப்படுத்தி பாவிகளாகி விடாதீர்கள்.

நீங்கள் எங்களைப் பார்க்க ஆசைப்படுகின்றீர்கள். நாங்களோ காட்ட மறுக்கின்றோம்.

நீங்கள் எங்களை ஆடையணிந்தும் நிர்வாணிகளாக வளம் வரச் சொல்கிறீர்கள்.
நாங்களோ நிர்வாணமாக சுற்ற முடியாது என்கிறோம்.

நீங்கள் எங்களை சுவனத்து வாடையை நுகர்வதைத் தடுக்கிறீர்கள். நாங்களோ சுவன வாடையை ஆதரவு வைக்கிறோம்.

நீங்கள் சுதந்திரம் வாங்கித் தருகின்றீர்கள் என்று கூறி எங்கள் சுதந்திரத்தைத் தடை செய்யாதீர்கள். முழுமையான ஹிஜாபுடன் உலா வந்த எங்களை முகத்திறையைக் கலட்டச் செல்லும் போது நிர்வாணமாகப் போவது போன்று தான் உணர்கின்றோம்.

ஏனென்றால் அது எங்கள் வெட்க்கத்தை அதிகரிக்கின்றது.
பாதுகாப்பை உணர்த்துகின்றது. ஏன் நீங்கள் எங்களை நினைத்து வேதனைப் படுகின்றீர்கள்??? அதில் உங்களுக்கு என்ன தேவை இருக்கின்றது???

நாம் முகத்திறை அணிந்து வெளியில் சென்றாலும் வீட்டுக்குள் எங்கள் கணவனின் முன்னால் டெணிம் டீசெட் அணிகின்றோம். மேக்கப் பண்ணிக் கொள்கின்றோம்.
விதவிதமான ஆடைகளை அணிந்து அழகு காட்டுகின்றோம். அவர்களும் எங்களைத் தாராளமாக ரசிக்கின்றார்கள். அழகானவள் என்று வார்ணிக்கின்றார்கள்.
அவர்களின் ஒரே பார்வையால் நாம் வெட்கப் படுகின்றோம். நாம் மூடியதால் அவனுடனான அன்பு காதல் எதுவுமே குறையவில்லை. என்னை அவன் மட்டுமே ரசிப்பதாலும் எங்கள் முழு அழகுமே அவனுக்கே சொந்தம் என்பதாலும் அவனுடைய முழுமையான காதலையும் நாம் எதிர் பார்க்காமலே அடைந்து கொள்கின்றோம். எங்களுடைய பாசம் மூடியதால் குறையவில்லை. அதிகரித்துக் கொண்டே போகின்றது.

ஆனால் உங்கள் மனைவிமார்கள் வெளியில் செல்லும் போது ((அல்லாஹ் அருள் செய்தவர்களைத் தவிர)) விதம் விதமாக மேக்அப் போட்டு.. வழிந்து நெழிந்து நடந்தால் அங்கங்கள் தெரிய. ஆடையணிந்து எல்லா வாசணைத் திரவியங்களையும் அடித்து ஹிஜாபைப் பேனாமல் வெளி ஆண்களுக்கு அழகைக் காட்டி விட்டு டயடாக வந்து கவுனை மாட்டினால் நீங்கள் யாரை ரசிப்பது??

உங்கள் முன் அவளுக்கு ஏன் அலங்காரம்??

அடுத்த பெண்கள் மூடினால் உங்களுக்கு வழிக்கத் தான் செய்யும் ஏனென்றால் உங்கள் மனைவி அடுத்த ஆண்களுக்கு விருந்தளிக்கும் போது நீங்கள் யாரை ரசிக்க முடியும்???

உலகமே திரண்டு முகத்திறையைத் தடை விதித்தாலும் நாம் அதனைக் கழட்டி எறிய மாட்டோம். அந்தக்கட்டத்தை நாம் அடைந்த போது அல்லாஹ்வின் முன்நிலையில் அழுதது வீண் போகவில்லை.
மீண்டும் அதே வாய்கள் மூலமே எங்களை மறைக்கச் சொன்னார்கள்.

எங்களுடைய எண்ணத்துக்கு ஏற்ற கணவனையே அல்லாஹ் எங்களுக்காகப் பரிசளித்து விட்டான். அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிய வேண்டும்.

பெண் என்றால் எல்லா ஆண்களுமே தடுமாறுவார்கள். எல்லோருமே அவளை ரசிப்பதைத் தான் விரும்புவார்கள். அதனால் தான் ஆணுக்கு அல்லாஹ் உலகத்தில் நான்கு பெண்களைத் திருமணம் செய்ய அனுமதி வழங்கியிருக்கின்றான். சுவனத்திலும் பெண்களைக் கொண்டு தான் அவனை ஆசை காட்டி அடக்கியும்.வைக்கின்றான். எனவே அதனால் ஹலாலான வழியைக் கடைபிடியுங்கள்.

முகத்தை மூடாத எத்தனையோ பெண்கள் தங்கள் கற்பைப் பேணி கண்ணியமாக வாழ்கின்றார்கள். வெளியில் சுற்றுவதை வெறுத்து முடியுமானளவு மஹ்ரம், அஜ்னபி பேணி சுவனத்துப் பெண்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அல்லாஹ் அவர்களுக்கும் அருள் புரிய வேண்டும்.

🤲கற்ப்பைப் பேணி வாழத் துடிக்கும் பெண்களுக்கும் அல்லாஹ் அருள் புரிய வேண்டும்….

✍️ஆக்கம்:
ஷிபானா நவாஸ்தீன் உஸைமீனிய்யா
(
உம்மு உபாதா உஸைமீனிய்யா)

http://www.islamkalvi.com/?p=126088

--

கருத்துகள் இல்லை:

சில எளிய சமையலறைக் குறிப்புகள்

ஐடியா - 1 : சமைக்கும்போது கனம் குறைவான கரண்டியை பயன்படுத்துவது நல்லது. கனமான கரண்டியை பயன்பட...

Popular Posts