லேபிள்கள்

புதன், 17 ஜனவரி, 2018

வருமான வரி கட்டாமல் சேமிக்க.. சூப்பர் ஐடியா!

வருமான வரி கட்டாமல் சேமிக்க.. சூப்பர் ஐடியா!
ச.ஸ்ரீராம் ரெட்டி, ஆடிட்டர்

மொத்த வருமானத்தில் இருந்து கழிவுகள் (Chapter VI-A Deductions)
1. பிரிவு 80-Cன் கீழ் கழிவுகள்:
தனிநபர் ஒருவருக்கு மிக அதிக சேமிப்பைத் தரக்கூடியது. பிரிவு 80-C ஆகும். இந்தப் பிரிவின் கீழ், பின்வரும் திட்டங்களில் முதலீடு செய்து, ஒரு நிதி ஆண்டில் ரூ.1,50,000 வரை தங்கள் மொத்த வருமானத்தில் கழிவு பெறலாம்.

அ) ஆயுள் காப்பீடு பிரீமியம் (Life Insurance Premium)
பொதுவாக ஆயுள் காப்பீடு என்றாலே எல்.ஐ.சி. தான் நம்முடைய நினைவுக்கு வரும். மாறாக, இந்தப் பிரிவின் கீழ், எந்தவொரு ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திலும் உங்கள் மீதும், உங்கள் குழந்தைகள் மீதும், உங்கள் மனைவி மீதும்
   காப்பீடு செய்து கட்டிய பிரீமியம் தொகைக்கு கழிவு பெறலாம். ஆனால், நீங்கள் கட்டிய பிரீமியம் தொகை, காப்பீட்டு தொகையில் 10% க்கு மிகாமல் இருக்க வேண்டும்.



ஆ) வருங்கால வைப்பு நிதி (PF) மற்றும் பொது வைப்பு நிதி (PPF)
பொதுவாக
  நிறுவனம் சம்பளத்தில் இருந்து 12% பிடித்தம் செய்தாலும் நீங்கள் இப்பிரிவின் கீழ் கூடுதல் கழிவு பெற்று வரி சேமிக்க விரும்பினால் 12%க்கும் கூடுதலாக பிடித்தம் செய்ய உங்கள் நிறுவனத்தை பணிக்கலாம்.

மேலும் சம்பள வருமானம் பெறுபவர் மட்டுமல்லாமல் இதர வருமானம் உள்ள தனிநபரும் பொது வைப்பு நிதியில் முதலீடு செய்வதின் மூலம் வரி சேமிக்க முடியும்.

நிரந்தர வைப்பு நிதி (fixed Deposit) போல் அல்லாமல் வருங்கால வைப்பு நிதி மற்றும் பொது வைப்பு நிதி மீதான வட்டிக்கு வரி ஏதுமில்லை என்பது கூடுதல் தகவல்.

மேற்கண்ட சேமிப்புகள் தவிர,
இ) வீட்டுக் கடன் அசல் தொகை (Housing loan repayment)
ஈ) வீட்டிற்கான பத்திரப் பதிவு செலவு (Stamp Duty payment)
உ) குழந்தைகள் கல்விக் கட்டணம் (Tuition Fees)
ஊ) தேசிய சேமிப்பு பத்திரம் (National Savings certificate)
எ) வரி விலக்குப் பெற்ற நிரந்தர வைப்பு நிதி (fixed Deposit)

போன்ற சேமிப்பு மற்றும் செலவினங்களுக்கு பிரிவு 80-Cன் கீழ் கழிவு பெற முடியும்.

''குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை."
-வள்ளுவன்

தன் கையில் பொருள் இருக்கும் போதே செய்ய வேண்டிய செயல்களை அல்லது கடமைகளை செய்வது, குன்றின் மேல் ஏறி நின்று யானைப்போர் காண்பதற்கு ஒப்பாகும்" என்பது இதன் பொருள்.

ஆகவே, வள்ளுவன் வாய்மொழிப்படி பிரிவு 80-Cன்
  கீழ் முதலீடு மற்றும் சேமிப்பு செய்து பாதுகாப்பாக வாழ்வோமாக.

2. மருத்துவக் காப்பீடு பிரீமியம் (Medical Insurance Premium) பிரிவு 80-D
"வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்."

வள்ளுவன் உரைத்தது குற்றம் கடிதல் குறித்து என்ற போதிலும், வருமுன் காப்பது எதுவாகிலும் நலம் என்கிற பொதுவான பொருள் கொள்வதில் தவறில்லை.
அவ்வகையில், தனிநபர் ஒருவர் தன் மீதும் தன் குழந்தைகள் மற்றும் பெற்றோர் மீதும் மருத்துவக் காப்பீடு செய்வதின் மூலம் தனக்கும் தன்னை சார்ந்தவர்களுக்கும் விபத்து மற்றும் உடல்நலக்குறைவால் ஏற்படக் கூடிய செலவினங்களை எளிதாக எதிர்க்கொள்ள முடியும்.

பிரிவு 80-Dன் கீழ் ரூ.25000 வரை 60 வயதுக்கு உட்பட்ட தனி நபரும் மற்றும் ரூ.30,000 வரை மூத்த குடிமக்களும் கழிவு பெற முடியும்.

மேலும் முழு உடல் பரிசோதனை செய்ய ஆகும் செலவு ரூ.5000 வரை இப்பிரிவின் கீழ் கழிவு பெறலாம்.

குறிப்பு: கழிவு பெற விரும்பும் தனிநபர் காப்பீட்டுத்தொகை காசோலை மூலமோ அல்லது கேட்பு காசோலை மூலமோ கொடுப்பது அவசியம். மாறாக பணமாக செலுத்தப்படும் காப்பீட்டுத்தொகைக்கு கழிவு பெற இயலாது.

3. ஊனமுற்ற குடும்ப உறுப்பினருக்கான மருத்துவச் செலவுகள்: பிரிவு 80DD
தங்களை சார்ந்துள்ள ஊனமுற்ற குடும்ப உறுப்பினருக்கு செலவிடும் மருத்துவச் செலவுகள் இப்பிரிவின் கீழ் கழிவுபெற தகுதி வாய்ந்தது.

இப்பிரிவின் கீழ்

அ) 40% முதல் 80% வரை ஊனமுள்ளவர்கள் - ரூ.75,000

ஆ) 80% மேல் ஊனமுள்ளவர்கள் - கழிவு பெற வழிவகை உள்ளது. - ரூ.1,25,000

தாங்கள், எவ்வித ரசீதும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. மாறாக, அரசு மருத்துவரிடம் மருத்துவ சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும். (நோயின் அளவை நிரூபிப்பதற்காக மட்டும்).

4. குறிப்பிட்ட வியாதிகளுக்கான மருத்துவச் செலவுகள் (பிரிவு 80DDB)
இந்திய குடியிருப்பு பெற்ற தனிநபர் மற்றும் அவர்தம் உறவினர்கள் (சார்புடையவர்கள் / dependent on assessee) எய்ட்ஸ், நரம்பு வியாதிகள் போன்ற சில வரையறுக்கப்பட்ட வியாதிகளால் பாதிக்கப்பட்டு இருப்பின் ரூ.40,000 வரையும் மூத்த குடிமக்களுக்கு ரூ.60,000 வரையும் மற்றும் மிகவும் மூத்த குடிமக்களுக்கு ரூ.80,000 வரையும் கழிவு அளிக்கப்படுகிறது.

இதற்காக, தாங்கள் படிவம் 10(1) யை பூர்த்தி செய்து அரசு மருத்துவரிடம் சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

உடல் ஊனமுற்றோருக்கான வரிச்சலுகை - பிரிவு 80G
பிரிவு 80 - DD ஊனமுற்ற உறவினர்களுக்கு வரிச்சலுகை அளிக்கிறது. மாறாக, பிரிவு 80G ஊனமுற்றவர் தாமே வரிக்கு உட்பட்டவராக இருப்பின் கழிவு பெற அனுமதிக்கிறது.

80 U - வருமான வரி கட்டுபவர் ஊனமுற்றவராக இருப்பின் இந்தப் பிரிவின் கீழ் வரிச் சலுகை பெறலாம்.

இப்பிரிவின் கீழ் தனிநபர் ரூ.75,000 வரையும் மற்றும் மூத்த மற்றும் மிகவும் மூத்த குடிமக்கள் ரூ.1,25,000 வரையும் கழிவு பெறலாம். இதற்காக, அரசு மருத்துவரிடம் சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

ஆயினும் 80 - DDன் கீழ் வரிச்சலுகை பெற்றிருப்பின் அதே நபருக்காக பிரிவு 80 Uன்
  கீழ் மீண்டும் ஒருமுறை கழிவு பெற இயலாது.

5. மூலதன பங்குகளில் முதலீடு (Equity Savings Scheme) பிரிவு 80 CCG
ராஜீவ்காந்தி மூலதன பங்கு சேமிப்பு திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சத்திற்கு குறைவாக வருமானம் உள்ளவர்கள் ரூ.50,000 வரை பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்து வரியைத் தவிர்க்கலாம். நீங்கள் முதலீடு செய்த தொகையில் 50% அல்லது ரூ.25,000 இதில் எது குறைவோ, அத்தொகை உங்கள் வருமானத்தில் இருந்து கழிவாக பெறலாம்.

6. கல்விக் கடனுக்கான வட்டி (பிரிவு 80E)
வரிக்குட்பட்ட தனிநபர் தன்னுடைய, தன் மனைவி மற்றும் குழந்தைகள் ஆகியோரின் கல்வி கடனுக்கான வட்டியை தன் வரிக்குட்பட்ட வருமானத்தில் இருந்து கழித்துக் கொள்ளலாம். பின்வரும் நிபந்தனைகளை கருத்தில் கொள்க.

அ) கல்விக் கடன் வரையறுக்கப்பட்ட வங்கிகளில் மட்டுமே எடுத்திருக்க வேண்டும்.

ஆ) 8 ஆண்டுகளுக்கு மட்டுமே இச்சலுகை உண்டு.
இ) இப்பிரிவின் கீழ் சலுகை பெற இந்தியாவில் பயின்றிருக்க வேண்டிய அவசியமில்லை.

மேற்கண்ட கழிவுகள் அல்லாமல்,
அ) பிரிவு 80Gன் கீழ் தாங்கள் அளிக்கும் நன்கொடைக்கு கழிவு பெறலாம். எத்தகைய அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்கிறோம் என்பதைப் பொருத்து அது முழுமையாக வரி விலக்கிற்கு உட்பட்டதா அல்லது பகுதியாக வரி விலக்கிற்கு உட்பட்டதா என்பது மாறுபடும்.

ஆ) பிரிவு 80TTA ன் கீழ் வங்கி சேமிப்பு கணக்கில் பெறப்படும் வட்டி ரூ.10,000 வரை வரிவிலக்கிற்கு உகந்ததாகும்.

இ) தங்கள் மொத்த வருமானம் ரூ.5,00,000க்குள் இருப்பின் பிரிவு 87A ன் கீழ் ரூ.2,000யை நீங்கள் கட்ட வேண்டிய வரியில் இருந்து கழித்துக் கொள்ளலாம். இது நடப்பு 2015-16 ம் நிதி ஆண்டுக்கானது.
 

ஆகவே, நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை முறையாக திட்டமிட்டு முதலீடு செய்வதின் மூலமும் வரிக் கணக்கை சமர்ப்பிக்கும் போது அனுமதிக்கப்பட்ட கழிவுகள் மற்றும் வரிவிலக்கை பயன்படுத்திக் கொள்வதின் மூலமும் வரி கட்டாமல் சேமிக்கலாம்.
http://pettagum.blogspot.com/2016/03/blog-post_29.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

விஷ ஜந்துக்கள் கடித்தால் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் குறித்து தெரிந்து கொள்ளலாம்

விஷ ஜந்துக்கள் கடித்து மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் குறித்து கீழே காணலாம். கண்ணாடி விரிய...

Popular Posts