ஆன்லைன் ஷொப்பிங்: கவனத்தில் கொள்ள வேண்டியவை
வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆன்லைன் ஷொப்பிங் என்பது அதிகரித்து வருகிறது.அவ்வாறு ஆன்லைன்மோகத்தில் திளைப்பவர்கள் சில விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்,ஒரு தளத்தில் நீங்கள் பார்க்கும் விலையை, மற்ற தளங்களிலும் விற்பனை செய்யப்படும் அதே போன்ற பொருட்களின் விலைகளுடன் ஒருமுறை ஒப்பிடவும்.
விலையில் குறிப்பிடத்தகுந்த வேறுபாடு இருந்தால் முன்னெச்சரிகையாக இருக்கவும். விற்பனையாளரைப் பற்றி நன்கு விசாரித்துக்கொள்ளவும். பொருளின் நிலையைப் பற்றிய கேள்விகள் கேட்கவும்.
போலியான பொருட்களை விற்பனை செய்யும் சில இணையதளங்கள், பிராண்டு உரிமையாளரது இணையதளத்தின் வடிவமைப் போன்றே தன்னுடைய தளத்தையும் வடிவமைத்திருப்பார்கள்.
அதே போன்ற படங்களைப் பயன்படுத்துதல் அல்லது பிராண்டினை உள்ளடக்கிய டொமைன் பெயரைப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் அசல் இணையதளத்தைப் போலவே காட்சியளிக்கலாம். ஒன்றுக்கு நாலு முறை URL பெயரை நன்கு பரிசோதிக்கவும்.
போலியான பொருட்களை விற்பனை செய்யும் இணையதளங்கள் பொதுவாக அதிகாரப்பூர்வ தோற்றத்தைக் கொண்ட URLகளைப் பயன்படுத்தும், அதில் [brand]onsale.com அல்லது official [brand].com போன்ற வாக்கியங்கள் இருக்கலாம்.
இணையதளத்தின் WhoIs பதிவைப் பார்த்தும் அந்த டொமைன் யாருக்குச் சொந்தம் என்பதை அறிந்துகொள்ளலாம்.பொருளைத் திருப்பியளிக்க அல்லது உங்கள் கணக்கில் விதிக்கப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்டணங்களைத் திரும்பப்பெற,பெரிய பரிவர்த்தனைகளின் டிஜிட்டல் அல்லது பேப்பர் நகலைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.பொருட்களை வாங்குவதற்கு முன்னர், நீங்கள் ஆர்டர் செய்த பொருள் சரியாக வந்துள்ளதான என சரிபார்த்துவிட்டு வாங்கவும்.
http://www.anbuthil.com/2016/05/Safe-online-shopping.html--
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக