ஹெல்மெட் ஹைஜீன் ஒரு அலர்ட்  ரிப்போர்ட்
போலீஸ் கெடுபிடிக்குப் பயந்து ஹெல்மெட் அணிபவர்களே அதிகம்! நாம் வேண்டாவெறுப்பாக ஹெல்மெட் அணிந்தாலும், அது என்னவோ நம்மைக் காக்கும் வேலையைச் செய்துகொண்டே இருக்கிறது. கடும் வெயிலில், வியர்வையில் குளிப்போம்; தலையில் பெருகும் வியர்வை, ஹெல்மெட்டையும் நனைத்துவிடும். வண்டியை பார்க்கிங் செய்யும் இடத்தில், சுற்றுச்சூழல் பிரச்னைகளால் ஹெல்மெட் மூலம் தொற்று ஏற்படும் அபாயம் உண்டு;
 
மழைக்காலத்தில், ஈரத்தில் ஊறி, அதிகமாகப்  பாதிக்கப்படுவதும் ஹெல்மெட்தான். கவனிக்காமல்விட்டால், தலையில்  ஒவ்வாமை, பொடுகு மற்றும் முடிகொட்டுதலுக்குக்  காரணமாகிவிடும். எனவே, ஹெல்மெட்டை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும்  வைத்திருக்க வேண்டிது அவசியம்.
நம்மில் பலரும் வெளியில் கிளம்பும்போது சோதித்துப் பார்க்காமலேயே  ஹெல்மெட்டை அணிந்துகொள்கிறவர்கள்தான். இது தவறு. பொதுவெளியில் வண்டியை நிறுத்தி, ஹெல்மெட்டை  அதனுடன் வைத்துவிட்டுச் செல்வதால், அதில் அழுக்குகளும்  தூசும் படிந்திருக்கும். சிறுசிறு பூச்சிகள்கூட ஹெல்மெட்டின் உட்பகுதியில் ஏறிக்கொள்ள  வாய்ப்பு இருக்கிறது. எனவே, ஒவ்வொரு முறையும் ஹெல்மெட்டைத் தலையில்  அணியும் முன், நன்கு பரிசோதித்து, சுத்தம்  செய்துகொள்ள வேண்டியது அவசியம்.
எப்போதுமே கண்களைப் பாதுகாக்கும் வகையில், ஃபைபர்  கண்ணாடிகள் பொருத்தப்பட்ட ஹெல்மெட்டைப் பயன்படுத்துங்கள். இந்த வெயில் காலத்தில்,  இரு சக்கர வாகனங்களை ஓட்டும்போது, சூரியக்  கதிர்களால் கண்கள் பாதிப்படையும். சில நேரங்களில் புழுதி, பூச்சிகள்  கண்ணில்பட்டு பாதிப்பை ஏற்படுத்திவிடும். பளிச் என நன்றாகச் சுத்தம்செய்யப்பட்ட,  ஃபைபர் கண்ணாடி பொருத்தப்பட்ட ஹெல்மெட் அணிவது, பல்வேறு தொந்தரவுகளில் இருந்து  கண்களைப் பாதுகாக்கும்.
  
பலருக்கும் வேகமான காற்றோ, பனியோ காதில் புகுவது  தொந்தரவு தரும் விஷயம். அலர்ஜி காரணமாக,  தும்மல், சைனஸ் ஏற்படும். சளி,  தும்மல், ஆஸ்துமா, சைனஸ்,  இருமல் போன்ற தொந்தரவு உள்ளவர்கள் இருசக்கர வாகனங்களில்  செல்லும்போது, காலை, மாலை என எந்த  நேரமாக இருந்தாலும் ஹெல்மெட் அணிந்தே செல்ல வேண்டும்.
  
அதிக வெப்பத்தில், புகை,மாசு  நிறைந்த இடங்களில் வண்டி ஓட்டும்போது, முகம் கருமையாகிவிடும்.  சூரியனிடம் இருந்து வரும் வீரியம் மிக்க புற ஊதாக் கதிர்கள் இதற்கு முக்கியக்  காரணம். ஹெல்மெட் அணிந்திருந்தால், இப்படி முகம் பாதிக்கப்படுவது  தடுக்கப்படும். தினமும் குளிப்பதோடு, மூன்று முறை நல்ல தண்ணீரில்  முகம் கழுவ வேண்டும்.
ஹெல்மெட் வாங்கும்போது தாடைப் பகுதியைப் பாதுகாக்கும் வகையில், உங்களது  முகத்துக்கு ஏற்றவாறு பார்த்து வாங்க  வேண்டும். `ஹெல்மெட் போடுவதால் முடி கொட்டுகிறது' எனச் சிலர் சொல்வார்கள். அது முழுக்க உண்மை இல்லை. ஹெல்மெட் அணியாமல்  செல்பவர்களுக்கு, சூரியக் கதிர்களால் முடியில் இருக்கும்  செல்கள் பாதிக்கப்படும். சுற்றுப்புற மாசு முடியைப் பாதித்து, பொடுகை ஏற்படுத்தக்கூடும். ஹெல்மெட்டைப் சுத்தமாகப் பயன்படுத்தினால்,  தலைமுடி பாதிக்கப்படாது.
ஹெல்மெட்டை சுத்தம் செய்வது எப்படி?
ஹெல்மெட்டை சுத்தம்செய்து பயன்படுத்தினால், திடீர் ஆபத்தை மட்டும் அல்ல… முகத்தின் அழகு மற்றும் ஆரோக்கியத்தையும் காக்கலாம்.
வாரம் ஒரு நாளாவது ஹெல்மெட்டின் உட்பகுதியில் நல்ல வெயில்படும்படி வைக்க வேண்டும். துடைப்பதற்கு சுத்தமான பருத்தித் துணியைப் பயன்படுத்தலாம்.
  
ஹெல்மெட்டை சுத்தம்  செய்ய பிரத்யேக ஷாம்பு, ஸ்ப்ரேக்கள் சந்தையில் கிடைக்கின்றன.  இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒருமுறை இவற்றைப் பயன்படுத்தி  சுத்தம் செய்யலாம்.
உட்பகுதிகளைத் தனியாகக் கழற்றி எடுத்து, மீண்டும் பொருத்தும் வகையிலான ஹெல்மெட்டை வாங்குவது நல்லது. இவற்றை சோப்பு நீரில் 5 – 10 நிமிடங்கள் ஊறவைத்துக் கழுவுவது எளிது
http://www.tamilyes.com/t53483-topicஉட்பகுதிகளைத் தனியாகக் கழற்றி எடுத்து, மீண்டும் பொருத்தும் வகையிலான ஹெல்மெட்டை வாங்குவது நல்லது. இவற்றை சோப்பு நீரில் 5 – 10 நிமிடங்கள் ஊறவைத்துக் கழுவுவது எளிது
--

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக