Saturday, October 7, 2017

வாட்ஸ்ஆப்பில் புது மோசடி உஷார்

வாட்ஸ்ஆப்பில் புது மோசடி உஷார்

 இமெயில் மூலம், மொபைல் எஸ்எம்எஸ் மூலம் நடக்கும் ஆன்லைன் மோசடிகளை தொடர்ந்து இப்போது இந்த புதுவித மோசடி தலைதூக்கி உள்ளது. எப்படி நடக்கிறது இந்த மோசடி? வாட்ஸ்ஆப்பை வழக்கம் போல நீங்கள் பார்ப்பீர்கள். அதில் பலர் மூலம் வந்த தகவல்களையும், வீடியோ, படங்களையும்  அனுப்புவதில் அதிக ஆர்வம் எல்லாருக்கும் உண்டு. அதிலும், நல்ல விஷயங்கள், மருத்துவ, ஷாப்பிங் டிப்ஸ்கள் என்றால் பெண்களுக்குள் கண்டிப்பாக பரிமாறப்படுவதுண்டு.

உங்கள் நண்பர் ஒரு தகவலை உங்களுக்கு அனுப்பியிருப்பார். அதில், 'நீங்கள் இன்னும் பத்து பேருக்கு பார்வேர்டு செய்தால், பிரபல பிராண்டு குளிர்பானம் வாங்கும்போது 10 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும்; குறிப்பிட்ட சினிமா படத்துக்கு 30 சதவீதம் கழிவு கிடைக்கும் என்றெல்லாம் கூட அதில் தகவல் வரும்.
இதை பார்த்தபின் அதில் ஈர்க்காமல் இருப்பவர் யாராவது இருப்பார்களா? உடனே, அதை பத்து பேருக்கு பார்வேர்டு செய்யத்தானே கை போகும்.

அப்படி மட்டும் செய்து விட்டால், நீங்கள் அடுத்த சில மணி நேரத்தில் மொபைல் மூலம் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை இழக்கப்போவது நிச்சயம்.

நீங்கள் பார்வேர்டு ெசய்தால், அது உங்கள் நண்பர்களுக்கு போவதுடன், சலுகைகளை பெற ஒரு அடையாளம் தெரியாத வெப்சைட்க்கு 'லிங்க்' கிடைக்கும். அதை கிளிக் செய்தால் அவ்வளவுதான். உங்கள் மொபைலில் உள்ள அத்தனை 'ஆப்ஸ்'களையும் 'லபக்'கி, அவற்றில் உள்ள தகவல்களை, பாஸ்வேர்டு, கணக்கு தகவல்களை கறந்து விடும் அந்த வெப்சைட்.

அப்புறம் என்ன, உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடுவது சுலபம் தானே. நெட்பேங்கிங் வசதி மூலமோ, ஏடிஎம் மூலமோ பணத்தை கறந்து விடலாம்.

உங்கள் மொபைலில் சேமித்து வைத்துள்ள பாஸ்வேர்டுகளும் கிடைத்தால் அதனால் இன்னும் பல விபரீதங்கள் ஏற்படுவது உறுதி.வாட்ஸ்ஆப் சந்தாதாரர்கள் எண்ணிக்கை நூறு கோடியை தாண்டி விட்டது. அதிலும், தமிழ் உட்பட பல மொழிகளில் பதிவு செய்ய முடிவதால் பல
 அப்பாவி இளைஞர்கள் இதுபோன்ற மோசடிகளில் சிக்குவது எளிதாக நடக்கிறது என்று இன்டர்நெட் பாதுகாப்பு தொடர்பாக சாப்ட்வேர் உருவாக்கும் காஸ்பெர்ஸ்கி  என்ற பன்னாட்டு நிறுவன நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

No comments: