லேபிள்கள்

வியாழன், 5 அக்டோபர், 2017

ஸ்மார்ட்போன் தொலைந்தவுடன் செய்ய வேண்டியவை.!!

ஸ்மார்ட்போன் தொலைந்தவுடன் செய்ய வேண்டியவை.!!

நாம் அனைவரும் ஒரு முறையாவது போனை தொலைத்திருப்போம். ஒன்று தெரியாமல் தொலைத்திருப்போம் அல்லது யாராவது திருடி இருப்பார்கள். அந்த மாதிரி நேரத்தில் நாம் பதட்டப்படுவதால் எந்த ஒரு பலனும் இல்லை. அமைதியாக அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினால் போதும். இதனால் சில நேரத்தில் போனை கண்டு பிடிக்கலாம் அல்லது யாரும் அதை தகாதகாரியங்களுக்கு பயன்படுத்தாமல் பாதுகாத்து கொள்ளலாம். அது எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
ரிங்
உங்கள் போனுக்கு ரிங் அல்லது மெசேஜ் கொடுக்கவும்
முதலில் உங்கள் போனுக்கு ரிங் அல்லது டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பவும்.
யாரிடமாவது உங்கள் போன் இருந்தால் அவர்கள் உங்களுக்கு தொடர்பு கொள்வார்கள் இல்லையென்றால் அடுத்த முயற்சிக்கு செல்லவும்.
கடவுச்சொல்



கடவுச்சொல்லை மாற்றவும்
உங்கள் போன் தொலைந்துவிட்டால் உடனே உங்கள் கணினியில் உள்ள அனைத்து கடவுச் சொல்லையும் மாற்றிவிடவும். நம்மில் பலர் இமெயில், முகநூல், வங்கி கணக்கு போன்றவற்றின் கடவுச்சொற்களை மொபைலில் சேமித்து வைக்கும் பழக்கத்தில் இருப்போம். ஆகவே உடனே அவைகளின் கடவுச் சொல்லையும் மாற்றி விடுவது நல்லது.

டிவைஸ் மேனேஜர்
ஆண்ட்ராய்ட் டிவைஸ் மேனேஜரை பயன்படுத்தவும்
ஆண்ட்ராய்ட் டிவைஸ் மேனேஜரின் உதவியுடன் உங்களை போனை கண்டுபிடிக்க முடியும். இதில் ரிங், லாக் அல்லது போனை செயலற்று போக செய்வதற்கான ஆப்ஷன்கள் உள்ளன. இதில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி உங்கள் போனை கண்டுபிடிக்கலாம், இல்லாவிட்டால் செயலற்று போக செய்யலாம். குறிப்பு இந்த ஆப்ஷன் கருவி தொலைந்து போகும் முன் நீங்கள் எனேபிள் செய்திருந்தால் மட்டுமே வேலை செய்யும்.

சிம் பிளாக்
சிம் கார்டை பிளாக் செய்யவும்
போன் தொலைந்தவுடன் உங்கள் டெலிகாம் ஆப்ரேட்டரை தொடர்பு கொண்டு உங்கள் சிம் கார்டை பிளாக் செய்யவும். இதனால் உங்கள் போனை எடுத்தவர்கள் உங்கள் சிம் கார்டை பயன்படுத்த முடியாது. இதன் மூலம் உங்கள் சிம் கார்டை தகாத செயல்களுக்கு பயன்படுத்தப்படாமல் பாதுகாக்க முடியும்.

காவல் நிலையம்
காவல் நிலையம் செல்லவும்
போனை கண்டுபிடிக்க காவல் நிலையம் செல்வதால் ஒரு பயனும் இல்லையென்றாலும் அதை செய்வது நல்லது. உங்கள் போனை கண்டுபிடிக்க முடியாவிட்டால் உடனே அருகில் உள்ள காவல் நிலையம் சென்று புகாரை பதிவு செய்தல் அவசியம்.

கண்காணிப்பு
எல்லா கணக்குகளையும் கண்காணிக்கவும்
உங்கள் மின்னஞ்சல், முகநூல், சமூக வலைதளம் போன்றவற்றின் கணக்குகளை அடிக்கடி கண்காணிக்க வேண்டும். இதனால் யாராவது உங்கள் கணக்குகளை பார்வையிடுகின்றார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

பழங்களில் உள்ள விதைகளின் பயன்கள்

பழங்கள் சாப்பிட சிறந்த பொருட்களில் ஒன்றாகும். சுவையாகவும் இனிப்பாகவும் இருப்பதுடன் , ஒட்டு மொத்தமாக நமது ஆரோக்கியத்திற்கு அவசியமான பலவி...

Popular Posts