லேபிள்கள்

வியாழன், 19 அக்டோபர், 2017

கரும்புள்ளிகள் கொண்ட வாழைப்பழங்களை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!

கரும்புள்ளிகள் கொண்ட வாழைப்பழங்களை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!


கரும்புள்ளிகள்
அனைத்து வகை மக்களும் எளிதில் வாங்கி சாப்பிடக்கூடிய வகையில் விலை மலிவில் கிடைக்கும் ஓர் பழம் தான் வாழைப்பழம். இத்தகைய வாழைப்பழங்களில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
பலரும் வாழைப்பழத்தில் கரும்புள்ளிகள் இருந்தால், அதனை வாங்க மறுப்போம். உண்மையில் வாழைப்பழங்களில் கரும்புள்ளிகள் ஏற்படுவதற்கு அவை நன்கு கனிந்திருப்பது தான் காரணம்.
மேலும் சாதாரண வாழைப்பழங்களை விட, இம்மாதிரியான கரும்புள்ளிகளைக் கொண்ட வாழைப்பழங்களில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளதால் ஜப்பானில் நடந்த ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
இங்கு கரும்புள்ளிகளைக் கொண்ட வாழைப்பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பட்டியலிடப்பட்டுள்ளது.ஆய்வுகளில் கரும்புள்ளிகளைக் கொண்ட வாழைப்பழத்தில் TNF என்னும் புற்றுநோய் செல்களை அழிக்கும் உட்பொருள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே இந்த வாழைப்பழங்களை உட்கொள்வதன் மூலம் புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்புடன் இருக்கலாம்.
வாழைப்பழங்கள் ஓர் சிறந்த இயற்கையான ஆன்டாசிட்டுகள். இது செரிமான பிரச்சனைகளுக்கு உதவும். கரும்புள்ளிகள் கொண்ட வாழைப்பழங்களை உட்கொள்வதன் மூலம், எளிதில் செரிமானம் நடைபெற்று வயிற்று பிரச்சனைகள் குணமாகும். மேலும் இந்த வாழைப்பழங்கள் நெஞ்செரிச்சலில் இருந்தும் உடனடி நிவாரணம் தரும்.

இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள, இரத்தத்தில் பொட்டாசியத்தின் அளவை சரியான அளவில் பராமரிக்க வேண்டும். கரும்புள்ளிகள் கொண்ட வாழைப்பழங்களில் பொட்டாசியம் அதிகமாகவும், சோடியம் குறைவாகவும் இருப்பதால், இதனை உட்கொள்வதன் மூலம், இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளலாம்.
வாழைப்பழத்தில் ட்ரிப்டோஃபேன் என்னும் அமினோ அமிலம் உள்ளது. உடல் இந்த அமினோ அமிலத்தைப் பயன்படுத்தி செரடோனினை உற்பத்தி செய்யும். செரடோனின் மனதை ரிலாக்ஸ் அடையச் செய்து நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவும்.
பொதுவாக வாழைப்பழங்கள் மலச்சிக்கலைத் தடுக்கும். அதிலும் கரும்புள்ளிகள் கொண்ட வாழைப்பழங்களில் நார்ச்சத்து இன்னும் அதிகம் இருப்பதால், இது மலச்சிக்கலுக்கு உடனடி நிவாரணம் தரும். எனவே அடுத்த முறை உங்களுக்கு மலச்சிக்கல் வந்தால், கரும்புள்ளிகளைக் கொண்ட வாழைப்பழங்களை வாங்கி சாப்பிடுங்கள்.

வாழைப்பழங்களில் கலோரிகள் அதிகமாக இருப்பதால், இதனை உட்கொண்டால் உடலின் ஆற்றல் உடனடியாக அதிகரிக்கும். மேலும் வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால், இது தசைப்பிடிப்புக்களில் இருந்து நிவாரணம் அளிக்கும். மேலும் இதில் உள்ள இதர கனிமச்சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உடலை வலுவுடன் வைத்துக் கொள்ளும்.
அல்சர் பிரச்சனை இருப்பவர்கள், கரும்புள்ளிகள் கொண்ட வாழைப்பழங்களை உட்கொண்டு வருவதன் மூலம், வயிற்றில் உள்ள புண் குணமாகி, உண்ட உணவு எளிதாக செரிமான மண்டலத்தில் செரிமானமடைந்து, கழிவுகள் முறையாக வெளியேற்றப்படும்.

வாழைப்பழங்களில் இரும்புச்சத்து ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இரும்புச்சத்து இரத்த சிவப்பணுக்களின் சீரான செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாதது. அதிலும் கரும்புள்ளிகள் கொண்ட வாழைப்பழங்களில் இரும்புச்சத்து இன்னும் அதிகம் இருப்பதால், இரத்த சோகை உள்ளவர்கள் இந்த வாழைப்பழத்தை உட்கொள்வது நல்லது.

கரும்புள்ளிகள் கொண்ட வாழைப்பழங்களில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால், அதனை பெண்கள் உட்கொண்டு வர மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகள் மற்றும் பிடிப்புக்கள் தடுக்கப்படும். மேலும் இதில் வைட்டமின் பி6 அதிகம் இருப்பதால், வயிற்று உப்புசம் ஏற்படுவது தடுக்கப்படும்
http://www.tamilyes.com/t53274-topic

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

கழிப்பறையைசுத்தமாக வைத்துக்கொள்ள எளிய குறிப்புகள்!!

  கழிப்பறையை சுத்தமாக வைத்துக்கொள்ள கவனமாக சுத்தம் செய்து துடைக்க வேண்டும் . தரையைத் துடைக்கும்போது , அனைத்து குப்பைகளையும்...

Popular Posts