லேபிள்கள்

ஞாயிறு, 17 நவம்பர், 2013

வெந்தயம்


சின்ன விஷயங்களின் அற்புதம்!

ஒரு பெரிய கோபுரம், பார்க்கும் எவருக்கும் ஆச்சர்யத்தை உருவாக்கக் கூடியது. ஆனால், அதை எப்படிக் கட்டி இருப்பார்கள் என்று யோசித்துப்பாருங்கள். முதல் நாள் கட்டுமான வேலையின் முதல் வேலை என்னவாக இருந்திருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். ஒரு சின்னக் கல்லை அந்த இடத்தில் எடுத்து வைத்ததுதான் முதல் வேலையாக இருந்திருக்கும். இப்படி ஒவ்வொரு கல்லும் தொடர்ந்து அடுக்கப்பட்டதன் விளைவுதான் பெரிய கோபுரம். ஆரோக்கியமும் அப்படித்தான். ஒரு சின்ன செயல். அதைத் தொடர்ந்து செய்தால், கிடைக்கும் பலன் அபாரம். அப்படிப்பட்ட சின்ன விஷயங்களை & சின்னச் சின்ன செயல்களை & தொடர்ந்து செய்தால் அவற்றால் ஏற்படும் பிரம்மாண்டமான பலன்களை இதழ்தோறும் இந்தப் பகுதியில் பார்க்கப்போகிறோம்.

வெந்தயம்

இது உணவுப் பொருள் மட்டும் அல்ல. நம்முடைய பாரம்பரிய மருத்துவத்தில், ஓர் அற்புதமான கை மருந்து இது. வெந்தயம் எவ்வளவோ வகைகளில் மருந்தாகப்
பயன்படுத்தப்படுகிறது என்றாலும், வெந்தயத்தை வைத்து மிக எளிமையாக ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். அது... வெந்தயத் தண்ணீர் தயாரித்துக் குடிப்பது.

என்ன செய்ய வேண்டும்?

தினமும் படுக்கச் செல்லும் முன் ஒரு கைப் பிடி வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் இரவில் ஊறவைத்துவிடுங்கள். காலையில் எழுந்து பல் துலக்கியதும், வெறும் வயிற்றில் ஊறிய வெந்தயத்துடன் அந்த நீரை அப்படியே குடித்துவிடுங்கள்.

என்ன பலன்?

வெந்தயம் உடலுக்கு நல்ல குளிர்ச்சியைக் கொடுக்கக் கூடியது. உடல் சூட்டை அப்படியே குறைக்கும்.

வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகம். ஆகையால், மலம் நன்கு வெளியேறும். மலச்சிக்கல், மூலப் பிரச்னை உள்ளவர்களுக்குத் தீர்வு தரும்.

வெந்தய நீர், சிறுநீரைப் பெருக்கும். நீர் நன்கு பிரியும்.

வயிற்றுப்புண், வாயுத்தொல்லை, வயிறு உப்புசம் ஆகியவற்றை மட்டுப்படுத்தும்.

வாய் துர்நாற்றம், வாய்ப்புண், தொண்டைப் புண் குணமாகும்.

வெந்தயத்தில் இரும்புச் சத்து அதிகம். ஆகையால், ரத்தசோகை கட்டுப்படும்.

பித்தம் குறையும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

யாருக்கு எல்லாம் முக்கியம்?
வெயிலில் நின்று வேலை செய்யும் விவசாயிகள், கூலித்தொழிலாளிகளில் தொடங்கி உட்கார்ந்தே வேலை செய்யும் மென்பொருள் பொறியாளர்கள் வரை உடல் சூட்டை எதிர்கொள்ளும் எவருக்கும் முக்கியம்!

- ச.சிவசுப்பிரமணியன்


--
*more articles click*
www.sahabudeen.com


கருத்துகள் இல்லை:

உடலில் இரத்தம் குறைவாக இருந்தால் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்.

இரத்த சோகை காரணமாக உடல் மிகவும் பலவீனமாக தோன்றும். எப்போதும் சோர்வாக இருக்கும். அடிக்கடி தலைவலி ஏற்படும். உடலில் ரத்தம் குறைவாக இருக்கும்ப...

Popular Posts