லேபிள்கள்

வெள்ளி, 9 பிப்ரவரி, 2024

முட்டைகளும் அதன் நன்மைகளும்.

 பிராய்லர் கோழி முட்டைகளை விட இலகுவாக கிடைக்கக் கூடிய காடை, வாத்து, மீன் முட்டை ஆகியவற்றில் ஏராளமான சத்துக்கள் உள்ளன.

இம்முட்டைகளில் அடங்கியுள்ள சத்துக்கள்.

காடை முட்டை:

காடை முட்டை அளவில் கோழி முட்டை அளவில் பாதி தான் இருக்கும். இது ஆரோக்கியத்திற்கு உகந்தது. இதிலிருக்கு ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி பாதுகாக்கும். தோலின் நிறத்தை மேம்படுத்தும் வல்லமை கொண்டது.

கோழி முட்டைகளை விட 3 முதல் 4 மடங்கு வரை அதிகமான உணவு சத்துகள் நிறைந்துள்ளன. கோழி முட்டையில் 11 சதவீத புரதம் உள்ளது.

ஆனால், காடை முட்டையில் 13 சதவீத புரதம் இருக்கிறது. இதில், பி2 இரும்பு சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், சுண்ணாம்பு சத்து ஆகிய சத்துகள் கோழி முட்டையில் இருப்பதை விட அதிக அளவு இருக்கின்றன.

மேலும், எச்.டி.எல். என்னும் கொழுப்பு சத்து உள்ளதால் வயதானவர்களும் இதை உண்ணலாம்.

காடை முட்டையில் உடலுக்கு கேடு விளைவிக்கும் கொழுப்பு சத்து குறைந்து, மனித மூளையை இயக்கும் கோலின் என்னும் வேதியியல் பொருள் நிறைந்து உள்ளது.

குழந்தைகளுக்கு, உணவில் தினமும் இரண்டு காடை முட்டைகள் கொடுத்து வந்தால், நல்ல உடல் வளர்ச்சி பெற்று, தொற்று நோய்த் தாக்கத்திலிருந்து காப்பாற்றப்படுவார்கள்.

காடை முட்டையின் மஞ்சள் கருவில் அதிகம் காணப்படுகின்ற கோலினிஸ்ட்ரேஸ் நொதி மூலம் அல்சைமர் நோய் உருவாகும் ஆபத்தை தடை செய்கிறது.

வாத்து முட்டை:

கோழி முட்டையில் இருக்கும் புரதத்தை விட அதிகமான அளவு புரதம் வாத்து முட்டையில் இருக்கிறது. இதில் இருக்கும் மைக்ரோ பையல் தன்மை உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

உட‌ல் பரு‌க்கு‌ம், வாயுவை உ‌ண்டா‌க்கு‌ம், ம‌ந்‌தி‌க்கு‌ம், தேக‌த்து‌க்கு வ‌லிவு கொடு‌க்கு‌ம். வா‌ன்கோ‌ழி மு‌ட்டை‌க்கு‌ம் இதுவே கு‌ண‌ம். இ‌ஞ்‌சி, கொ‌த்தும‌ல்‌லி, ‌சீரக‌ம் சே‌ர்‌த்து‌ச் சமை‌க்க வே‌ண்டு‌ம்.

மீன் முட்டை:

மீன் முட்டையில் அதிகளவு ஊட்டச்சத்து இருக்கிறது. பெரும்பாலும், மீன் முட்டையை நாம் யாரும் உண்பதில்லை. மீனில் உள்ள சத்துக்களை காட்டிலும் மீன் முட்டையில் சத்துக்கள் அதிகம். இது ஆரோக்கியமானதும் கூட.

இந்த முட்டைகளில் உள்ள திரவ வடிவிலான சுரப்பியில், வைட்டமின் இ அதிகளவில் உள்ளது.

சாதாரண கோழி முட்டையை தயார் செய்வது போல், இவற்றை தயார் செய்து சாப்பிடலாம்.அதிலும், கண் நோய் சம்பந்தப்பட்டவர்கள், மாலைக் கண் நோயின் தாக்கம் உள்ளவர்கள், இதனை சாப்பிடும் நிலையில், கண் பார்வை தெளிவு பெறுகிறது. தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மாலைக் கண் நோயில் இருந்து விடுபடலாம்.

நாட்டுக் கோழி முட்டை:

நாட்டுக் கோழி முட்டை சாப்பிடுவதால் உடலின் வலிமை அதிகரிக்கும். ஆண்களுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இதை உண்பதால் இரத்த ஓட்டம் சீராகி ஆண்மை மேம்படும்.

தாய்பாலுக்கு அடுத்தபடியாக இயற்கையான முறையில் புரோட்டீன் கிடைக்கிறது என்றால் அது முட்டையில் தான். இதில் எக்கசக்க ஊட்டச்சத்துகள் உள்ளன. புரோட்டீன்

தவிர்த்து முட்டையில் வைட்டமின்கள், மினரல்களும் உள்ளன. ஒரு முட்டையில் 70 முதல் 100 கலோரி வரை உள்ளது. மனித உடல் வளர்ச்சிக்குத் தேவையான 9 அமினோ அமிலங்கள் உள்ளது.

ஒரு முட்டையில் 6.3 கிராம் புரோட்டீன் உள்ளது. இதில் வெள்ளைக்கருவில் 3.5 கிராம் புரோட்டீனும், மஞ்சள் கருவில் 2.8 கிராமும் உள்ளது.

இது மட்டுமா முட்டையின் வெள்ளைக்கருவில் குளோரின், மெக்னீஷியம், பொட்டாஷியம், சோடியம், சல்பர், ஜிங்க் உள்ளிட்ட 11 மினரல்கள் உள்ளன.

மஞ்சள் கருவில் வைட்டமின் டி, பி 12, , , கே, பி 6 உள்ளது.

முட்டை சாப்பிடுவது கண்ணுக்கு நல்லது. தினமும் முட்டை சாப்பிடுபவர்களுக்கு கண்புரை வரும் வாய்ப்பு மிகக் குறைவே ஆகும். மூளை, நரம்பு மண்டலம் மற்றும் இதயத்திற்கு சிறந்தது முட்டை.

மார்பக புற்றுநோயைத் தடுக்கும் சக்தி கொண்டது முட்டை. வாரத்திற்கு 6 முட்டை சாப்பிடும் பெண்களுக்கு மார்பக புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு 44 சதவீதம் குறைவு என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முட்டையில் உள்ள சல்பர், வைட்டமின்கள், மினரல்கள் நகம் மற்றும் முடிக்கு நல்லது.

இத்தனை குணநலன்கள் உள்ள முட்டையை பச்சையாக குடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். மஞ்சள் கருவில் கொழுப்புச் சத்து அதிகம் இருப்பதால் கொழுப்புச் சத்துள்ளவர்கள் அதை தவிர்க்கவும்.

முட்டையின் முழு குணநலன்களையும் அடைய வேண்டுமானால் வெள்ளை மற்றும் மஞ்சள் கரு ஆகிய இரண்டையும் உண்ண வேண்டும்.

செவ்வாய், 6 பிப்ரவரி, 2024

குழந்தைகளுக்கு காய்ச்சல் நேரத்தில் பின்பற்ற வேண்டியவைகள் என்ன?

இந்த வைத்திய குறிப்புகளை 1 வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு பின்பற்றலாம். குழந்தைகளின் உடல் வெப்பநிலை அதிகரிப்பது போல் உணர்ந்தால் உடனடியாக தெர்மோ மீட்டர் கொண்டு அளவிடுவது அவசியம்.

குழந்தைகளை மெல்லிய பருத்தியாடை அணியும்படி செய்வது நலம்.உடல் வெப்பநிலை மேலும் அதிகரிக்காமல் இது தடுக்கும். ஏ.சி அறையில் உறங்க வைக்காமல் ஃபேனிற்கு கீழ் உறங்கவைப்பதே நலம்.

குழந்தைகளை குளிக்க வைக்க வேண்டுமென்றால் இளஞ்சூடான தண்ணீரில் குளிக்க வைக்க வேண்டும். சாதாரண தண்ணீரில் குழந்தையை குளிப்பாட்ட கூடாது.

இரண்டு டம்ளர் தண்ணீரில் 1 டேபிள் ஸ்பூன் மல்லித்தூளை (தனியா) சேர்க்கவும். ஒரு டம்ளர் அளவிற்கு வற்றும் வரை நன்றாக காய்ச்சவும். இதனுடன் கருப்பட்டி சேர்த்து இளஞ்சூட்டுடன் குழந்தைகளுக்கு கொடுக்க நல்ல பலன் கிடைக்கும்.

ஈரத்துணி வைத்தியம்: வெது வெதுப்பான நீரில் சிறிது பருத்தி துணியை நனைக்க வேண்டும்.தண்ணீரை பிழிந்து துணியினை நெற்றி பகுதியில் சிறிது வைக்க வேண்டும்.குழந்தைகளின் உடலிலும் துடைத்து எடுக்கலாம். நீர் குளிர்ந்த நீராக இல்லாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.

காய்ச்சலின் பொழுது கஞ்சி போன்ற எளிமையான உணவினை உட்கொள்வதும் ஓய்வும் மிக மிக அவசியம். உடலின் வெள்ளையணுக்களானது நோய் கிருமிகளை அளிக்கும் வேலை செய்து கொண்டிருப்பதால், இந்த நேரத்தில் உடலுக்கு ஓய்வளிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

சனி, 3 பிப்ரவரி, 2024

முந்திரி சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்.

 பொதுவாக முந்திரியில் ஏராளமான சத்துக்கள் உள்ளன.இதில் இரும்புச்சத்து , ஜிங்க் , வைட்டமின் சி, மக்னீசியம், செலினியம் போன்றவையும் உள்ளன.

ஏராளமான நன்மைகளைக் கொண்ட இந்த முந்திரியை அளவுக்கு அதிகமாக சாப்பிட கூடாது. இது உடலுக்கு தீங்கையும் விளைவிக்கும்.

அதிலும் ஒரு சிலர் முந்திரியை சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும். இல்லாவிடின் இது மோசமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். தற்போது அவர்கள் யார் என இங்கே பார்ப்போம்.

உங்கள் வயிற்றில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், முந்திரி பருப்பை சாப்பிடாதீர்கள். ஒருவேளை சாப்பிட்டால், அது வயிற்று பிரச்சனையை தீவிரமாக்கிவிடும்.

முந்திரியில் கலோரிகள் அதிகமாக உள்ளன. எனவே முந்திரியை அளவுக்கு அதிகமாக ஒருவர் உட்கொண்டால், அது உடல் பருமனை உண்டாக்கும். மேலும் ஏற்கனவே உடல் பருமன் பிரச்சனையை சந்திப்பவர்கள், முந்திரியை சாப்பிட வேண்டாம்.

சிலருக்கு முந்திரி சாப்பிட்டால் அலர்ஜி பிரச்சனை வரும். அதுவும் சருமத்தில் அரிப்பு அல்லது தடிப்புகள் ஏற்படலாம். எனவே உங்களுக்கு இம்மாதிரியான சரும பிரச்சனை இருந்தால், முந்திரி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

முந்திரியில் உள்ள தைரமின் மற்றும் பீனைல்எத்திலமைன் என்னும் அமினோ அமிலங்கள், தலைவலியை உண்டாக்கும். ஆகவே அடிக்கடி தலைவலி அல்லத ஒற்றை தலைவலி பிரச்சனை கொண்டவர்கள், முந்திரியை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

ஒரு நாளைக்கு எவ்வளவு முந்திரி சாப்பிடலாம்?

ஒருவர் ஒரு நாளைக்கு ஒரு அவுன்ஸிற்கு அதிகமாக முந்திரியை சாப்பிடக் கூடாது.

திங்கள், 29 ஜனவரி, 2024

வெந்நீரில் குளிப்பவர்களை கண்ணீரில் தள்ளும் உடல் நலப் பிரச்சனைகள்.

மிகவும் சூடான நீரில் குளிப்பது ஆண்களின் பாலின ஆரோக்கியத்தை பாதித்து, அவர்களுக்கு குழந்தையின்மை பிரச்சனையை ஏற்படுத்தும் என்று பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

மிகவும் சூடான தண்ணீரில் குளிப்பதால், விந்தணுக்களின் எண்ணிக்கையும், விந்தணுக்களின் தரமும் குறைவதால் பாலின ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக, சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

கூந்தலில் கெரட்டின் புரதம் உள்ளது. இது முடியை வலுவிழக்காமலும் உடையாமலும் பாதுகாக்கிறது. ஆனால் வெந்நீரில் குளித்தால், முடி வலுவிழந்து உடையும். இதன் காரணமாக முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இது ஆண்களுக்கு வழுக்கையையும் உண்டாக்கும்.

வெந்நீரில் குளிப்பதால் தோல் வறட்சி மற்றும் தோலில் அரிப்பு போன்றவை ஏற்படலாம். ஏனெனில், வெந்நீர் அழுக்கு மற்றும் தூசியுடன் சருமத்தை பாதுகாக்கும் ஈரப்பதத்தையும் நீக்குகிறது. இதன் காரணமாக, தோல் வறண்டு போகத் தொடங்குகிறது. மேலும், இதனால் அரிப்பும் ஏற்படலாம்

வெந்நீர் சருமத்தின் ஈரப்பதத்தை மட்டுமின்றி கண்களின் ஈரப்பதத்தையும் பாதிக்கிறது. இதனால் கண்களில் வறட்சி ஏற்பட்டு, கண்களில் அரிப்பு பிரச்னை ஏற்படும். இது தவிர வெந்நீரில் குளித்தால் கண் சிவத்தல் பிரச்சனையும் வரலாம்.

குளிர்காலத்தில் வெந்நீரில் குளிப்பதால் சருமம் வறண்டு போவது மட்டுமின்றி, முகப்பரு பிரச்சனையும் அதிகரிக்கும். அதிகப்படியான வெந்நீர் முகப்பரு பிரச்சனைகளை அதிகரிக்கும்.

குளிர்காலத்தில் சூடான தண்ணீர் குளிக்க விரும்பும் அதே நேரத்தில், பக்க விளைவுகளை தவிர்க்க, நீங்கள் மிதமான சூடு உள்ள அல்லது வெது வெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். இதன் மூலம் மேலே கூறப்பட்டுள்ளது போன்ற உடல் நல பிரச்சனைகளில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

குளிர்ந்த நீர் குளியல்:

நம் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் .

காலையில் குளிர்ந்த நீரில் குளிப்பதால் விழிப்புஉணர்வு அதிகமாகும். நமது சுவாசம் ஆழமாக, நிதானமாக இருப்பதால், நம் கவனத்திறன், சுறுசுறுப்பு அதிகரிக்கிறது. செயல் வேகம் அதிகரிக்கிறது.

ஜலதோஷம் வராமல் உடலைப் பாதுகாக்கும் . குளிர்ந்த நீரில் குளிக்கும்போது ரத்தத்தில் உள்ள லிம்போசைட்ஸ் (Lymphoctes) எனப்படும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் ஆன்டிபாடி அதிகரிக்கும்.

மனஉளைச்சலையும் மனஅழுத்தத்தையும் உருவாக்கும் ஹார்மோன்களின் அளவு குளிர்ந்த நீரில் நீராடும்போது குறைகிறது.

உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாகி, நச்சுத்தன்மைகள் வெளியேறுவதற்கு வளர்சிதை மாற்றம் அவசியம். குளிர்ந்த நீரில் குளிப்பதால், இந்தப் பணி சீராக நடக்கிறது.

மூளை, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கும் .

சருமத்தை இறுகச்செய்து, வயோதிகத்தைத் தள்ளிப்போடும் .

தலையில் இயற்கையாகச் சுரக்கும் எண்ணெய் நம் கூந்தலைப் பாதுகாக்கிறது. குளிர்ந்த நீர் அதைத் தலையில் இருந்து முற்றிலும் நீக்காமல் பாதுகாப்பதால், தலை முடி உதிராமல் இருக்கும் .

கோடை காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது.

வெள்ளி, 26 ஜனவரி, 2024

துரித உணவை உண்பதின் மூலம் ஏற்படும் ஆபத்துக்கள்...!!

 *தெரிந்ததை மீண்டும் தெரிந்து தெரிந்து கொள்வோம் (பெரிய பதிவு படித்து பயன் பெறுங்க உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் மற்றவர்களுக்கு பகிரவும்*

துரித உணவை உண்பதின் மூலம் உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற வளர்சிதை மாற்றங்கள் உண்டாகலாம்.

துரித(உடனடி) உணவுகள் குளிர்விக்கப்பட்ட அல்லது உறைந்த நிலையில் இருப்பதால், சுவை குறைந்து விடுகிறது. இதைத் தவிர்க்கும்  பொருட்டு உணவுத் தயாரிப்பாளர்கள் அதன் சுவையை தக்க வைக்க சர்க்கரை, உப்பு, கொழுப்பு, நறுமணம் வண்ணங்கள் போன்றவற்றை  சேர்க்கிறார்கள். இது மனித உடலுக்கு ஊறு விளைவிக்கிறது.

துரித உணவில் உள்ள அதிக கொழுப்புகள் கடுமையாக இதயத்தை பாதிக்கும். உடனடி உணவுகல் கெடாமல் இருக்க சேர்க்கப்படும்  பதப்படுத்தும் பொருள் மற்றும் ரசாயனங்கள் உடலில் நச்சுத்தன்மையை உண்டாக்கி சிறுநீரகம், கல்லீரல் ஆகியவர்றைப் பாதிக்கும்.

வீட்டில் தயாராகும் உணவு வகைகளை விட கடைகளில் விற்கப்படும் உடனடி உணவுகள் ஊட்டச் சத்துக்கள் குறைந்தவையாக உள்ளது. துரித உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொள்வதால், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் உடல் வளர்ச்சியைக் குறைந்து நோய்  எதிர்ப்பு சக்தியில்லாமல் செய்கிறது.

துரித உணவுகள் சாப்பிடுவதாலும், உடற்பயிற்சி செய்யாததாலும், நீரிழிவு நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதில் அலட்சியம் காட்டினால்,  உடலின் மற்ற உறுப்புகள் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.

ஞாபக சக்தி குறைவு, கவனக் குறைவு திட்டமிட்டு செயல்படும் திறன் குறைவு என பல பிரச்சனைகள் ஏற்படும். தலைவலி மனச்சோர்வு,  உடல் சோர்வு, உடல் எடை அதிகரிப்பு போன்ற வியாதிகளும் உண்டாகும். நொறுக்குத்தீனி துரித உணவுக் கலாசாரத்துக்கு ஆட்பட்ட இளைஞர்களுக்கு உயிரணுக்களில் பாதிப்பு ஏற்படுகின்றன என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உயில் எழுதுவதற்கு முன்பு மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.

குடும்பத்திற்கு உணவளித்து வந்த முக்கிய நபர் அல்லது பாதுகாவலர் இறந்த பிறகு குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்படும் சண்டை சொத்து சம்பந்தமானதா...

Popular Posts