லேபிள்கள்

செவ்வாய், 6 பிப்ரவரி, 2024

குழந்தைகளுக்கு காய்ச்சல் நேரத்தில் பின்பற்ற வேண்டியவைகள் என்ன?

இந்த வைத்திய குறிப்புகளை 1 வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு பின்பற்றலாம். குழந்தைகளின் உடல் வெப்பநிலை அதிகரிப்பது போல் உணர்ந்தால் உடனடியாக தெர்மோ மீட்டர் கொண்டு அளவிடுவது அவசியம்.

குழந்தைகளை மெல்லிய பருத்தியாடை அணியும்படி செய்வது நலம்.உடல் வெப்பநிலை மேலும் அதிகரிக்காமல் இது தடுக்கும். ஏ.சி அறையில் உறங்க வைக்காமல் ஃபேனிற்கு கீழ் உறங்கவைப்பதே நலம்.

குழந்தைகளை குளிக்க வைக்க வேண்டுமென்றால் இளஞ்சூடான தண்ணீரில் குளிக்க வைக்க வேண்டும். சாதாரண தண்ணீரில் குழந்தையை குளிப்பாட்ட கூடாது.

இரண்டு டம்ளர் தண்ணீரில் 1 டேபிள் ஸ்பூன் மல்லித்தூளை (தனியா) சேர்க்கவும். ஒரு டம்ளர் அளவிற்கு வற்றும் வரை நன்றாக காய்ச்சவும். இதனுடன் கருப்பட்டி சேர்த்து இளஞ்சூட்டுடன் குழந்தைகளுக்கு கொடுக்க நல்ல பலன் கிடைக்கும்.

ஈரத்துணி வைத்தியம்: வெது வெதுப்பான நீரில் சிறிது பருத்தி துணியை நனைக்க வேண்டும்.தண்ணீரை பிழிந்து துணியினை நெற்றி பகுதியில் சிறிது வைக்க வேண்டும்.குழந்தைகளின் உடலிலும் துடைத்து எடுக்கலாம். நீர் குளிர்ந்த நீராக இல்லாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.

காய்ச்சலின் பொழுது கஞ்சி போன்ற எளிமையான உணவினை உட்கொள்வதும் ஓய்வும் மிக மிக அவசியம். உடலின் வெள்ளையணுக்களானது நோய் கிருமிகளை அளிக்கும் வேலை செய்து கொண்டிருப்பதால், இந்த நேரத்தில் உடலுக்கு ஓய்வளிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

கருத்துகள் இல்லை:

தவறுதலாகக் கூட இந்த பொருட்களை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டாம்.. உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்து..

காலை உணவு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.. காலை உணவில் கவனம் செலுத்தாமல் , இதன் விளைவாக , அவர...

Popular Posts